Almighty34
|
---|
1|2 |
நிர்வாகிக்கான கோரிக்கை
தொகுவணக்கம், தங்களை நிர்வாகி பொறுப்பிற்காக பரிந்துரைக்க நினைக்கிறேன். தங்களுக்கு விருப்பமா?--நந்தகுமார் (பேச்சு) 06:25, 6 ஏப்ரல் 2023 (UTC) @பயனர்:Almighty34
- @Nan: வணக்கம் ஐயா. என்னை பரிந்துரை செய்வதற்காக எண்ணியமைக்கு மிக்க நன்றி. ஆனால் நிர்வாக அணுக்கம் தற்போது எனக்கு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அடுத்த சுற்றில் பார்த்துக் கொள்ளலாம் ஐயா. நன்றி--தாமோதரன் (பேச்சு) 04:55, 7 ஏப்ரல் 2023 (UTC)
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:58, 7 ஏப்ரல் 2023 (UTC)
@Nan:, @Kanags: சரிங்க ஐயா. எனக்கு சம்மதம், நிருவாகப் பணிக்காக என்னை பரிந்துரை செய்யுங்கள் ஐயா. நன்றி--தாமோதரன் (பேச்சு) 08:51, 7 ஏப்ரல் 2023 (UTC)
நீக்கல் வார்ப்புரு
தொகுவணக்கம், ராஜகுலத்தோர் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள், நீக்கல் வார்ப்புருவை சேர்த்திருந்தீர்கள் அதனை நீக்கியுள்ளேன். அக் கட்டுரை நீக்கப்படவேண்டும் எனில் அந்தக் கட்டுரையின் முதன்மைப் பக்கத்தில் நீக்கல் வார்ப்புரு இடலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 01:58, 21 ஏப்ரல் 2023 (UTC) வணக்கம் :@Sridhar G: ராஜகுலத்தோர் கட்டுரையினை நீக்குவதற்காக நீக்கல் வார்ப்புருவை நான் இணைக்கவில்லை. ஐபி முகவரி பயனரால் எழுதப்பட்ட வெறுமை பேச்சு பக்கத்தினை நீக்குவதற்காக மட்டுமே நீக்கல் வார்ப்புருவை இணைத்தேன்.நன்றி நண்பரே --தாமோதரன் (பேச்சு) 02:29, 21 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
பரிந்துரை
தொகுவணக்கம். விக்கிப்பீடியா தொடர்பான பங்களிப்புகள் அவரவரின் விருப்பங்களின் அடிப்படையில் அமைவன என்றபோதிலும், சில பரிந்துரைகளை முன்வைக்கிறேன். இங்கு நடைபெறும் பொதுவான கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளல், ஆலமரத்தடியில் இடப்படும் கருத்துகளுக்கு ஆதரவு / எதிர்ப்பு / கருத்து / பரிந்துரை தெரிவித்தல் ஆகியன உங்களுக்கு புதிய கற்றல்களை அளிக்கும். விக்கிப்பீடியா குமுகாயத்துடன் (சமூகத்துடன்) கலந்துரையாடி பயணித்தல், குமுகாயம் முன்னெடுக்கும் முன்னெடுப்புகளில் பங்குகொள்ளுதல் ஆகியன உங்களுக்கு விக்கி நிர்வாகத்தில் மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் நன்மை தரும் என்பதால் இவற்றைத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 3 மே 2023 (UTC)
- @Selvasivagurunathan m: வணக்கம் ஐயா அழைத்தமைக்கு மிக்க நன்றி.இனி குமுகாயம் முன்னெடுக்கும் முன்னெடுப்புகளில் பங்களிப்பேன் ஐயா.--தாமோதரன் (பேச்சு) 03:31, 4 மே 2023 (UTC)
உங்களின் கவனத்திற்கு
தொகுவணக்கம். 'தேவையற்ற தொகுப்புகள்' எனும் தலைப்பின்கீழ் வரும் இந்த உரையாடலைக் கவனியுங்கள். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 15 மே 2023 (UTC)
@Selvasivagurunathan m: வணக்கம் ஐயா, வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.--தாமோதரன் (பேச்சு) 08:16, 15 மே 2023 (UTC)
பதக்கம்
தொகுசெம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் Almighty34, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டுகட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஸ்ரீதர். ஞா (✉) 15:42, 2 சூலை 2023 (UTC)
நன்றி--தாமோதரன் (பேச்சு) 05:47, 3 சூலை 2023 (UTC)
செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!
தொகுவணக்கம்.
அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!
திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
- சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
நீக்கும் முன் கவனிக்கலாம்
தொகுவணக்கம், ஏதேனுமொரு கட்டுரையை நீக்கினால் அதனை உள்ளிணைப்பாகக் கொண்டுள்ள பக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு மள்ளபுரம் ஊராட்சி என்ற வழிமாற்றியை மட்டும் நீக்குவதால், இணைக்கப்பட்ட பல பக்கங்கள் சிவப்பாகும் மள்ளப்புரம் ஊராட்சி தனித்துவிடப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 04:00, 18 நவம்பர் 2023 (UTC)
@Neechalkaran: வணக்கம் ஐயா, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன் ஐயா. தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.--தாமோதரன் (பேச்சு) 07:23, 18 நவம்பர் 2023 (UTC)
விக்கித்தரவு
தொகுகாப்பு (சமூகம்), காப்பிலியர், வொக்கலிகர் ஆகிய விக்கித்தரவுகளை சரி செய்ய முடியுமா? ~AntanO4task (பேச்சு) 06:54, 21 திசம்பர் 2023 (UTC)
@AntanO: வணக்கம் ஐயா, விக்கித்தரவுகளை சரி செய்யப்பட்டது--தாமோதரன் (பேச்சு) 07:58, 21 திசம்பர் 2023 (UTC)
நீக்கல் கோரிக்கை
தொகுவணக்கம், நீக்கல் கோரிக்கைக்கான வார்ப்புருவினை கட்டுரைப் பக்கத்திலும் அதற்கான காரணத்தினை உரையாடல் பக்கத்திலும் தெரிவிக்கவும். உதாரணம்:பாரி வேட்டை நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 05:25, 13 பெப்பிரவரி 2024 (UTC)
@Sridhar G: பாரி வேட்டை கட்டுரையினை நீக்குவதற்காக நீக்கல் வார்ப்புருவை நான் இணைக்கவில்லை. ஐபி முகவரி பயனரால் வெறுமைப்படுத்திருத்த பேச்சு பக்கத்தினை நீக்குவதற்காக மட்டுமே நீக்கல் வார்ப்புருவை இணைத்தேன். தற்பொழுது AntanO அவர்களால் பேச்சு பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. நன்றி நண்பரே--தாமோதரன் (பேச்சு) 05:53, 13 பெப்பிரவரி 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,554 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
தொகுவணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
க. ஜெயக்குமார்
தொகுவணக்கம், தாங்கள் பெயரிடல் ஒழுங்கிற்கேற்ப மாற்றியது மகிழ்ச்சி. மாற்றும் போது முந்தைய பக்கப்பெயரில் இணைத்த இணைப்புகளையும் உடன் மாற்ற வேண்டும். சிறப்பு:WhatLinksHere/கே._ ஜெயக்குமார் இதனால் அறுபட்ட இணைப்புகளைத் தவிர்க்கலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 13:28, 26 செப்டெம்பர் 2024 (UTC)
- முந்தைய பெயரை வழிமாற்றாக வைத்திருப்பதும் நல்லது. ஏனெனில் அறியப்படும் பெயர்களில் தான் தேடுதல்கள் இடம்பெறும்.--Kanags \உரையாடுக 22:15, 26 செப்டெம்பர் 2024 (UTC)
வணக்கம் ஐயா, @Kanags:, @Arularasan. G: ஐயா, இனி ஆங்கில முன்னெழுத்து உள்ள கட்டுரைகளுக்கு வழிமாற்று செய்யும் போது வார்ப்புருவிலும் திருத்தங்களைச் செய்து விடுகிறேன் ஐயா. அறியப்படும் பெயரை நீக்கம் செய்யாமல் வழிமாற்றாக வைத்திருப்பேன் ஐயா. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன் ஐயா. தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.--தாமோதரன் (பேச்சு) 02:12, 27 செப்டெம்பர் 2024 (UTC)