விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்/அளவுகோல்கள்
நல்ல கட்டுரைக்கான அளவுகோல்கள் ஆறு தரநிலைகளைக் கொண்டுள்ளது. இந்த தரங்களை உடையாதாகக் கருதப்படும் கட்டுரைகளை நல்ல கட்டுரைக்கு முன்மொழியலாம். அந்தக் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் சரிபார்க்கப்பட்டு அவை நல்ல கட்டுரையாக அறிவிக்கப்படலாம். ஒரு நல்ல கட்டுரை சிறப்புக் கட்டுரைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
அளவுகோல்கள்
தொகுகீழ்கானும் ஆறு அளவுகோல்களை மட்டும் வைத்து அவை நல்ல கட்டுரையா இல்லையா என்பதனைத் தீர்மானிக்கலாம். கட்டுரையினை மேம்படுத்தக் கூறும் மற்ற கருத்துகள் மறுஆய்வு செயல்முறையின் போது ஊக்குவிக்கப்படுகின்றன, ஆனால் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக அக் கூறுகளைக் கட்டாயப்படுத்தப்படக்கூடாது.
உடனடியாக நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்
தொகுமதிப்பாய்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே உடனடியாக நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு.
- ஆறு நல்ல கட்டுரை அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யாதபோது
- பதிப்புரிமை மீறல்கள் இருக்கும் போது
- {{சான்றில்லை}},{{தெளிவுபடுத்துக}},{{விக்கியாக்கம்}} அல்லது அதிக எண்ணிக்கையில் {{மேற்கோள் தேவை}},{{தெளிவுபடுத்துங்கள்}} போன்ற வார்ப்புருக்கள் இருக்கும் கட்டுரைகள்
- இது நிலையான உடன்பாடு எட்டப்படாத தொகுத்தற்போர் நிலவும் கட்டுரைகள்
- இதற்கு முன்னர் மதிப்பாய்வு செய்த நபர்கள் சுட்டிக்காட்டிய பிழைகள் தற்போது வரை தீர்க்கப்படாத சமயத்தில்
மேற்கானும் சூழ்நிலைகள் தவிர்த்து மற்ற அனைத்து சூழல்களிலும் கட்டுரையானது மதிப்பாய்வு செய்யப்படுவதற்கு ஏற்றதாகும். பெரும்பாலான சூழல்களில், கட்டுரையானது தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு மதிப்பாய்வு செய்பவர்கள் சுட்டிக் காட்டும் குறைகள் குறித்து தங்களது கருத்துக்களைக் கோரிக்க வைப்பவர் கூறலாம்.
நல்ல கட்டுரைகளின் ஆறு அளவுகோல்கள்
தொகுஒரு நல்ல கட்டுரை என்பது:
- நன்றாக எழுதப்பட்டவை (தெளிவான உரைநடை, சுருக்கமானது மற்றும் பொருத்தமானது, பரந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு புரிந்துகொள்ளக்கூடியது, எழுத்துப்பிழை இல்லாமை, சரியான இலக்கண நடை, விக்கிப்பீடியா:நடைக் கையேட்டில் குறிப்பிட்டளவைகளுடன் ஒத்துப்போதல் [1]
- நம்பகமான மூலங்கள் கொண்டிருத்தல், சுய ஆராய்ச்சி இல்லாதவை [2] பதிப்புரிமைச் சிக்கல் இல்லாதவை
- இது தேவையற்ற விவரங்களுக்குச் செல்லாமல் , கட்டுரைத் தலைப்புத் தொடர்பான தகவல்களைக் கொண்டிருத்தல்.
- விக்கிப்பீடியா:நடுநிலை நோக்குடன் கூடிய கட்டுரை
- தொடர்ச்சியாக தொகுத்தற்போர் நடைபெறாத கட்டுரைகள்
- பதிப்புரிமைச் சிக்கல் இல்லாத படிமம், நிகழ்படம், ஒலிக்கோப்பு வடிவம் ஆகியவற்றினைக் கொண்டு விளக்கப்பட்டிருத்தல்.
எது ஒரு நல்ல கட்டுரையாக இருக்க முடியாது?
தொகுதனித்தனி பட்டியல்கள், விக்கிப்பீடியா:வலைவாசல், ஒலிக் கோப்பு மற்றும் படிமங்கள் இவை சிறப்புப் படிமம் போன்றவற்றிற்கு வேண்டுமானால் பரிந்துரைக்கப்படலாம்
- குறுங்கட்டுரை, விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல்
- சிறப்புக் கட்டுரைகள்: ஒரு நல்ல கட்டுரை ஒரு சிறப்புக் கட்டுரையாக தரம் உயர்த்தப்படும்போது இந் நிலையினை இழக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு கட்டுரைகள் தானாகவே நல்ல கட்டுரைகளாக தரப்படுத்தப்படுவதில்லை. நல்ல கட்டுரைக்காக மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
குறிப்புகள்
தொகு- ↑ Compliance with other aspects of the [./Wikipedia:Manual_of_Style Manual of Style] or its subpages is not required for good articles.
- ↑ [./Wikipedia:Reviewing_good_articles Wikipedia:Reviewing good articles] says, "Ideally, a reviewer will have access to all of the source material, and sufficient expertise to verify that the article reflects the content of the sources; this ideal is not often attained. At a minimum, check that the sources used are reliable (for example, blogs are not usually reliable sources) and that those you can access support the content of the article (for example, inline citations lead to sources that agree with what the article says) and are not plagiarized (for example, close paraphrasing of source material should only be used where appropriate, with in-text attribution if necessary)."