படிமம் (Image) அல்லது படம் என்பது ஒரு உருவத்தை காகிதம் அல்லது எண்முறை படமாக எடுப்பது ஆகும். படிமம் என்பது நவீன இலக்கியத் திறனாய்வில் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல் ஆகும். இலத்தீன் சொற்களான இமெகோ (imago), இமித்தரை (imitari) ஆகியவற்றின் அடியொற்றிப் பிறந்தது. படிமம் என்பதன் வேர்ச்சொல் படி ஆகும். படி என்னும் சொல்லிற்கு ஒப்பு, ஓர் அளவு, குணம், உருவம், முறைமை, வேடம் போன்ற பொருள்கள் உள்ளன. அதுபோல், படிமம் என்பதற்கு வடிவம், படிமக்கலம், பிரதிமை, தூய்மை, பூதம் முதலான பொருள்கள் இருக்கின்றன. இச்சொல்லை இலக்கியத்தில் முதன்முதலாகக் கையாண்டவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் ஆவார்.[3]

படிமம், உளக்காட்சி" வரையறைகள்[1][2]
படிமம்
Faust bei der Arbeit.JPG

புகைப்படம்தொகு

புகைப்படம் (still image), பொதுவாக அனைவராலும் எடுக்கப்படுவது. ஒளிப்படம் என்பது சரியான கலைச்சொல் ஆகும்.

வரைபடம்தொகு

வரைபடம் என்பது ஒரு ஒவியரால் வரையப்படும் படமாகும். இதனை ஓவியக் கலை என்றும் கூறுவர். ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.

 
மோனாலிசா படிமம்

திரைப்படம்தொகு

திரைப்படம் (Film) என்பது பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் கான்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கோள்கள்தொகு

  1. Thomas Blount (1707). "Glossographia Anglicana Nova: Or, A Dictionary, Interpreting Such Hard Words of Whatever ..." Book from the collections of University of Michigan. Printed for D. Brown. 24 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chris Baldick (2008). The Oxford Dictionary of Literary Terms. Oxford University Press. பக். 165–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-920827-2. https://books.google.com/books?id=mp0s9GgrafUC&pg=PA165. 
  3. முனைவர் இரா. சம்பத் (1992). புதுக்கவிதையில் இலக்கிய இயக்கம். உமா பதிப்பகம், புதுச்சேரி-4 (முதற்பதிப்பு). 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமம்&oldid=3633178" இருந்து மீள்விக்கப்பட்டது