விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. சிஐஎஸ்-ஏ2கே அமைப்புடன் இணைந்து செயல்பட்டு இந்நிகழ்வு நடக்கவிருக்கிறது.

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துவதற்கான திட்டப் பக்கம் இதுவாகும். உரையாடல்களைப் பேச்சுப் பக்கத்தில் நடத்தலாம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்

நிகழ்வு

தொகு

நிகழ்ச்சி நிரல்

தொகு
எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 அமர்வுகள் காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரை 4.5
2 பகலுணவு பகல் 1.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை 1.0
3 கலையைக் காண்பதற்கானப் பயணம் பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை 3.0

முக்கிய நாட்கள்

தொகு
 • 12 ஆகத்து 2023 நிகழ்வு பற்றிய அறிவிப்பு
 • 14 ஆகத்து 2023: முன்பதிவிற்கான விண்ணப்பம் திறப்பு
 • 24 ஆகத்து 2023 28 ஆகத்து 2023: விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
 • 25 ஆகத்து 2023 02 செப்டம்பர் 2023: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு

தொகு
 • நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்குமாறு பயனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
 • தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் உள்ளிட்ட தமிழ் விக்கித்திட்டங்களில் பங்களிக்கும் பயனர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
 • குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடக்கும் நிகழ்வு என்பதாலும், வெநிஒச (FCRA) விதிமுறைகளாலும், இந்தியாவில் வசித்துவரும் பயனர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
 • ஆகத்து 14 அன்று விண்ணப்பப் படிவம் திறக்கப்பட்டு, விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 28 (அன்றிரவு 12 மணி வரை) என்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள்

தொகு
 • விண்ணப்பம் செயல்பாட்டில் இருந்த 15 நாட்கள் எனும் காலகட்டத்தில் 40 பயனர்கள் கூகுள் படிவத்தை தாக்கல் செய்திருந்தனர்.
 • வெநிஒச (FCRA) விதிமுறைகள் காரணமாக இலங்கைப் பயனர் ஒருவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை. வரவு-செலவு திட்டத்திற்குள் பயணக் கட்டணத்தை கொண்டுவர இயலாத காரணத்தால் மும்பையில் வாழும் இந்தியப் பயனர் ஒருவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை.
 • கீழே பட்டியலிடப்பட்டுள்ள 38 பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
வரிசை எண் பயனர் பெயர்
1 Arularasan. G
2 Balu1967
3 CHURCHIL JERIN
4 Deepa arul
5 Ezhilarasi
6 Gnuanwar
7 guruleninn
8 info-farmer
9 Joshua-timothy-J
10 Jskcse4
11 Karthiban Harikrishnan
12 Mohammed Ammar
13 Nethania_Shalom
14 NithyaSathiyaraj
15 Rabiyathul
16 Rukmani Purushothaman
17 S.BATHRUNISA
18 Selvasivagurunathan m
19 SivakumarPP
20 sree1959
21 Sridhar G
22 SUBHI SCHOOL- SUBHI SCHOOL
23 Thamizhpparithi Maari
24 Thavasimuthu muthukrishnan
25 Theni.M.Subramani
26 Thiyagu Ganesh
27 TNSE Mahalingam VNR
28 TVA ARUN
29 Vasantha Lakshmi V
30 Vidhyasree Mahalingam
31 இ.வாஞ்சூர் முகைதீன்
32 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
33 காருண்யாரஞ்சித்
34 கி.மூர்த்தி
35 சத்திரத்தான்
36 சா அருணாசலம்
37 பா.ஜம்புலிங்கம்
38 பிரயாணி

கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்

தொகு

1. மதிப்பூதியம் - சொந்த ஊரிலிருந்து தஞ்சாவூர் சென்று திரும்புவதற்கான பயணக் கட்டணம், சொந்த ஊரிலும் தஞ்சாவூரிலும் உள்ளூர் போக்குவரத்துக்கான செலவுகள், நிகழ்வன்று இரவுணவிற்கான செலவு.

 • பயணிக்கவேண்டிய சாலைவழிப் போக்குவரத்து தூரத்திற்கேற்ப பயணக் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.
 • மதிப்பூதியத் தொகை பயனர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது குறித்தான கூடுதல் தகவல்கள் நிகழ்வு நடைபெறும் நாளன்று தெரிவிக்கப்படும்.

2. தங்குவதற்கான அறை வசதி - செப்டம்பர் 23 (சனிக்கிழமை) மாலை முதல் செப்டம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை.

3. உணவு வசதி - நிகழ்வன்று காலைச் சிற்றுண்டி, பகலுணவு, காலை நேரத்து நொறுவை, மாலை நேரத்து நொறுவை.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

தொகு
 1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:18, 5 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
 1. --சத்திரத்தான் (பேச்சு) 05:21, 16 ஆகத்து 2023 (UTC) (தஞ்சாவூர் நிகழ்விட ஒருங்கிணைப்பாளர்)[பதிலளி]

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்

தொகு
வரிசை எண் பயனர் பெயர்
1 Arularasan. G
2 Balu1967
3 CHURCHIL JERIN
4 Deepa arul
5 Ezhilarasi
6 Gnuanwar
7 guruleninn
8 info-farmer
9 Mohammed Ammar
10 Parvathisri
11 Rukmani Purushothaman
12 S.BATHRUNISA
13 Selvasivagurunathan m
14 SivakumarPP
15 sree1959
16 Sridhar G
17 SUBHI SCHOOL- SUBHI SCHOOL
18 Thamizhpparithi Maari
19 Theni.M.Subramani
20 TNSE Mahalingam VNR
21 Vasantha Lakshmi V
22 Vidhyasree Mahalingam
23 இ.வாஞ்சூர் முகைதீன்
24 காருண்யாரஞ்சித்
25 கி.மூர்த்தி
26 சத்திரத்தான்
27 தமிழ்மைந்தன் தவசி
28 பா.ஜம்புலிங்கம்
29 பிரயாணி

செய்தித் தொகுப்பு

தொகு

அறிக்கை

தொகு

நிகழ்வில் கலந்துகொள்ள 38 பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் 29 பேர் கலந்துகொண்டனர்.

வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்வில் விக்கிப்பீடியா, பொதுவகம், விக்கித்தரவு, விக்சனரி, விக்கிமூலம் ஆகிய திட்டங்கள் குறித்து சுருக்கமான அறிமுகம் தரப்பட்டது. பயனர்கள் மற்ற திட்டங்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அறிமுகங்கள் அமைந்திருந்தன. "திரும்பிப் பார்ப்போம்" எனும் தலைப்பின்கீழ், தமிழ் மொழியில் இயங்கும் விக்கிமீடியா திட்டங்களில் நீண்ட காலமாக பங்களித்து வரும் பயனர்கள் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, அண்மையில் பங்களித்துவரும் பயனர்களும், புதிய பயனர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஒரு சுருக்கமான கலந்துரையாடல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றி உரையாற்றினார். சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக, தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாண்டுகளைக் கொண்டாடும்விதமாக தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அணிச்சல் வெட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி அமர்ந்து, ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து நண்பகல் விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர்.

பிற்பகலில் நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், தர்பார் அரங்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அனைவரும் பார்வையிட்டனர். அதன்பிறகு, அங்கிருந்து அவரவரின் இல்லங்களுக்கு பயணங்களை மேற்கொண்டனர்.

(This section is added for the benefit of non Tamil speaking members of CIS)

Out of 38 selected applicants, 29 Tamil Wikipedians participated in the event.

The event was started with welcoming address, followed by brief introduction about Wikipedia, Wikimedia Commons, Wikidata, Wiktionary and Wikisource. This was to help the participants to understand projects running under Wikimedia movement. A programme with a title “looking back” was formally presented by long-time contributors of Tamil Wikipedia and other Tamil language wiki projects. After this, users who are contributing in recent years and new users shared their experience.

An informal short discussion about development plans for next 5 years was one of the agenda in the event. Following this programme, 6 users were honoured with memento for their significant contributions.

The chief guest, Tamil scholar Dr. Mani Maran delivered a speech on literature, history and archaeology related to Thanjavur. The chief guest was honoured with memento by Tamil Wikipedians.

Towards the end, Tamil Wikipedians celebrated 20 years of Tamil Wikipedia by a cake-cutting. Group photos were taken to register the memorable event. All participants enjoyed a feast.

Site visit was started after the lunch. Participants visited the Thanjavur palace which comprises Saraswathi Mahal Library, Art Gallery and Durbar Hall. In the evening, Tamil Wikipedians started their journey to return home.