தேனி மு. சுப்பிரமணி

பெயர்: மு. சுப்பிரமணி (M.Subramani)

இடம்: பழனிசெட்டிபட்டி, தேனி

சொந்த ஊர்: செட்டிமல்லன்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டம் , தூத்துக்குடி மாவட்டம்.

மின்னஞ்சல்: msmuthukamalam@yahoo.co.in

கல்வி:

  1. பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் (M.A. - Economics)
  2. இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil - Journalism and Mass Communication)
  3. இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டயம் (P.G.D.J. & M.C - Journalism and Mass Communication)
  4. தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் சட்டத்தில் பட்டயம் (D.L.L & A.L - Labour Law and Administrative Law)

குடும்பம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் நூலாசிரியர் தேனி மு. சுப்பிரமணிக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்
  • தந்தை - சு. முத்துசாமி பிள்ளை
  • தாய் - மு. கமலம்
  • மனைவி - உ. தாமரைச்செல்வி
  • மகள் - மு. சு. முத்துக்கமலம்
  • சகோதரர்கள் - மு. செல்வராஜ், மு. சரவணக்குமரன், தேனி
  • சகோதரி - சித்ரா பலவேசம், திருநெல்வேலி

அமைப்புகளில் பொறுப்புகள்

  • தலைவர் - தேனித் தமிழ்ச் சங்கம்
  • செயலாளர் - சங்கம் தமிழ் அறக்கட்டளை, சென்னை.
  • செயற்குழு உறுப்பினர் - கணித்தமிழ்ச் சங்கம், மதுரைக் கிளை.

இணைய தளங்களில் பொறுப்பு

இலக்கிய ஆர்வம்

வெளியான தொடர்கள்

  • தினத்தந்தி நாளிதழின் செவ்வாய்க்கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலர் இதழில் “அற்புத மகான்கள்” எனும் தொடர் 57 வாரங்கள் வெளியானது.
  • தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பிலான தொடர் சனவரி 1 - 15, 2013 இதழ் முதல் 24 இதழ்களில் வெளியானது.
  • தினத்தந்தி நாளிதழின் செவ்வாய்க்கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலர் இதழில் “சாப - விமோசனக் கதைகள்” எனும் தொடர் 50 வாரங்கள் வெளியானது.
  • தினமலர் நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலரில் “அசுர வதம்” எனும் தலைப்பிலான ஆன்மிகத் தொடர் 13-10-2023 முதல் 14-6-2024 வரை 32 வாரங்கள் வெளியானது.

எழுதியுள்ள நூல்கள்

  1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.(நவம்பர்-2010)
  2. தமிழ் விக்கிப்பீடியா - மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (நவம்பர்-2010) (தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு பெற்றது)
  3. சுவையான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்-2010)
  4. மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை. (ஆகஸ்ட்-2011)
  5. மகளிருக்கான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை. (நவம்பர்-2011)
  6. அதிசயங்கள்! உலக அதிசயங்கள்! - தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை. (சூலை -2012)
  7. அற்புத மகான்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்-2013)
  8. இந்திய தேசியப் பூங்காக்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்’ 2014)
  9. உலகச் சிறப்பு தினங்கள் - விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். (ஏப்ரல்’ 2015)
  10. கேரளக் கோயில்கள் (தொகுதி 1) - தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)
  11. கேரளக் கோயில்கள் (தொகுதி 2) - தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)
  12. தமிழகக் கோயில்கள் (தொகுதி 1) - தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)
  13. பயனுள்ள 100 இணையதளங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (பிப்ரவரி’2019)
  14. கேரளக் கோயில்கள் (பாகம் 1) - தாமரை மீடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை (டிசம்பர்’2022)
  15. கேரளக் கோயில்கள் (பாகம் 2) - தாமரை மீடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை (டிசம்பர்’2022)
  16. விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க! - தாமரை மீடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை (சனவரி’2023)
  17. சாமான்யனின் சந்தேகங்கள் (பாகம் 1) - அறம் பதிப்பகம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் (ஜூலை 2023)
  18. சாப - விமோசனக் கதைகள் - தாமரை மீடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை (செப்டம்பர்’2023)
  19. அசுர வதம் - தாமரை மீடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை (சூன்’2024)


விருதுகள்

  • தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சார்பில் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய இணைய இதழியல் துறைக்கான “கலை இலக்கியச் சாதனையாளர்” விருது. (2009)
  • சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் மற்றும் தமிழ்த்திணை இணைய இதழ் வழங்கிய “தமிழ்த்திணை விருது” (2010)
  • தென் தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணைய இதழியலுக்கான “கலை- இலக்கியச் சாதனயாளர் விருது”.(2011)
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய “தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு” (2010)
  • சி. பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் இணைந்து மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடத்திய “இலக்கியம், கல்வி வளர்ச்சியில் (மலேசியா, சிங்கப்பூர்) தமிழ்ஊடகங்கள்” எனும் தலைப்பிலான 6வது இதழியல் பன்னாட்டுக் கருத்தரங்கம் வழியாக வழங்கப்பட்ட “இணையத் தேனீ விருது” (2014)
  • போடிநாயக்கனூர், ஆவடையம்மாள் அறக்கட்டளை இணையத் தமிழ்ப் பங்களிப்புகளுக்காக வழங்கிய ரூ 5000/ பரிசுத்தொகையுடனான பாராட்டுச் சான்றிதழ் (2014)
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை எனும் அமைப்பு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழில் முத்துக்கமலம் இணைய இதழ் நடத்தி, அதன் வழியாக இணையத்தில் தமிழ்ச் சேவையாற்றி வருவதைப் பாராட்டி வழங்கிய “படைப்பாக்க மேன்மை விருது” (2015)
  • தேனி, முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் வழங்கிய “கணினித் தமிழ்ச் சாதனையாளர் விருது” (2015).
  • தேனி, வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணையத் தமிழ்ச் சேவைக்கான “கணினித் தமிழ் விருது” (2017)
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை நடத்திய சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறந்த படைப்பாளருக்கான சிந்தனைச் சிகரம் விருது (2017)
  • சென்னை, அம்மா தமிழ்ப்பீடம் வழங்கிய “அம்மா குயில் விருது” (2019)
  • வடசென்னைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” (2023)
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழங்கிய தூய தமிழ்ப் பற்றாளர் விருது (2022)
  • வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகம் வழங்கிய “அதியமான் விருது” (2023)

விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகள்

கருத்தரங்கப் பங்களிப்புகள்

தேனி.எம். சுப்பிரமணி கட்டுரை வாசித்த போது எடுத்த படம்
வலைப்பூக்கள், விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடலில் முனைவர். மு. இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, அ. ரவிசங்கர், தேனி. எம். சுப்பிரமணி
  • இந்த மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் நடைபெற்ற "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த அ. ரவிசங்கர் ஆகியோருடன் தேனி.எம்.சுப்பிரமணி கலந்து கொண்ட “வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு.

பத்தாம் ஆண்டு நிறைவு விழா பங்களிப்பு

சென்னை, விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு நிகழ்வு, தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு (சனவரி 15, 2011)

பட்டறை பங்களிப்புகள்

விக்கிப்பீடியா மாணவர் மன்றம்

சென்னையில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வில் உரை.

பிற நிகழ்வுகளில் விக்கிப்பீடியா அறிமுகம்

  • திருச்சி, திருவரங்கத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப் பெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான (100 மாணவர்கள்) இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வில் “இணையத் தமிழ் படைப்பாக்கம்” எனும் தலைப்பில் உரையாற்றிய போது “தமிழ் விக்கிப்பீடியா”, “விக்சனரி” குறித்து அறிமுகம் செய்து, அதில் பங்களிப்பு செய்வது குறித்தும் உரை. (செப்டம்பர் 28, 2012)
  • சென்னை, அடையாறு, இந்திரா நகர் இளைஞர் விடுதியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப் பெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான (200 மாணவர்கள்) இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வில் “இணையத் தமிழ்” எனும் தலைப்பில் உரையாற்றிய போது “தமிழ் விக்கிப்பீடியா”, “விக்சனரி” குறித்து அறிமுகம் செய்து, அதில் பங்களிப்பு செய்வது குறித்தும் உரை. (செப்டம்பர் 28, 2012)

ஊடகங்களில் விக்கிப்பீடியா அறிமுகம்

  • தமிழ் கம்ப்யூட்டர் இதழில் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பில் தொடர் கட்டுரை ஜனவரி 1-15, 2013 இதழ் முதல் டிசம்பர் 16-31, 2013 இதழ் வரை 24 இதழ்களில் தொடர்ந்து வெளியானது.
  • தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 1-15, 2012) இதழில் “விக்சனரி இணைய அகரமுதலி - ஒரு சிறப்புப் பார்வை” எனும் தலைப்பிலும், இதன் தொடர்ச்சியாக (செப்டம்பர் 16 - 30, 2012) இதழில் ”தமிழ் விக்சனரி பயன்பாட்டு விளக்கம்” எனும் தலைப்பிலும் கட்டுரை வெளியானது. (பார்க்க:விக்சனரி பக்கம்)

விக்கிப்பீடியா குறித்த நூல்கள்

1. தமிழ் விக்கிப்பீடியா

  • தமிழ் விக்கிப்பீடியா குறித்த முழுமையான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் என்னால் எழுதப் பெற்ற நூல், சிதம்பரம், “மெய்யப்பன் பதிப்பகம்” மூலம் நவம்பர்’ 2010 -ல் வெளியானது.
  • இந்த நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் ரூபாய் முப்பது ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்துச் சிறப்பிக்கப் பெற்றது.

2. விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

  • விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்வதற்கான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய எனது இரண்டாவது நூலாக “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!” எனும் தலைப்பில் எழுதப் பெற்ற நூல், தினமலர் நாளிதழின் புத்தகப் பதிப்புப் பிரிவான “தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்” மூலம் சனவரி’ 2023 -ல் வெளியானது.
  • சென்னை, நந்தனத்தில் நடந்த 46வது புத்தக காட்சியில் (2023), பல புத்தகங்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்தது.அதில், 'விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!’ நூலும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க: தினமலர் (சென்னை) செய்தி

விக்கிப்பீடியா பங்களிப்புகள்

பயனர்கள் வழங்கிய பாராட்டுப் பதக்கங்கள்

தேனி சுப்பிரமணியம், இன்றளவில் 1000 கட்டுரைகளை தமிழ் விக்கியில் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளமையை ஒட்டி தங்களுக்கு ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்க உங்கள் நற்பணி! அன்புடன்--Kanags \உரையாடுக 22:04, 16 சனவரி 2013 (UTC)




சிறப்புப் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவின் 50,000' ஆவது கட்டுரையை எழுதியமைக்கு இந்தப் பதக்கம்!

என்றென்றும் அன்புடன் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 21 திசம்பர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் ஊடகங்களிலும் சுற்றிச் சுழன்று தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்ததைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். குறிப்பாக, தினமணி சிறுவர்மணியில் வெளியான உங்கள் கட்டுரை மிக நேர்த்தியாகவும் எங்கு எதனை எடுத்துரைக்க வேண்டும் என்பதை அறிந்தும் எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் பரப்புரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு புத்துணர்வு அளித்து வருவதை உணர முடிகிறது. --இரவி (பேச்சு) 08:46, 19 செப்டம்பர் 2013 (UTC)

பிற தகவல்கள்

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 11 மாதங்கள்,  6 நாட்கள் ஆகின்றன.
  முத்துக்கமலம் இணைய இதழ் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.

பக்கங்கள்= 5,82,552
கட்டுரைகள்= 1,69,509
கோப்புகள்= 8,920
தொகுப்புகள்= 41,35,549
பயனர்கள் = 2,38,239
சிறப்பு பங்களிப்பாளர்கள்= 260
தானியங்கிகள் = 192
நிருவாகிகள் = 32
அதிகாரிகள் = 3

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Theni.M.Subramani&oldid=4042266" இலிருந்து மீள்விக்கப்பட்டது