விக்கிப்பீடியா:மதுரை தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கணித்தமிழ்ச் சங்க மதுரைக்கிளையின் சார்பில் மதுரை மாநகரில் நடத்தப் பெற உள்ள டோவ் மல்டிமீடியா கல்வி மற்றும் தமிழ் மென்பொருள் கண்காட்சி நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகக் கருத்தரங்கம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடத்தப் பெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொண்டு அனைவரும் பயன் பெறலாம்.

நாள் மற்றும் நேரம்

தொகு

இடம்

தொகு
  • கே. பி. எசு. திருமண மண்டபம் (கௌரி ஹோட்டல் மேல் மாடியில்), புறவழிச்சாலை, மதுரை.

முன்னிலை

தொகு

விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்து கருத்துரை

தொகு
  • தேனி எம்.சுப்பிரமணி, பயனர் - நிர்வாகி, தமிழ் விக்கிப்பீடியா மற்றும் செயற்குழு உறுப்பினர், கணித்தமிழ்ச் சங்க மதுரைக் கிளை.

நிகழ்வு ஏற்பாடு

தொகு
  • கபீரியேல் நாதன், தலைவர், கணித்தமிழ்ச் சங்க மதுரைக் கிளை.

நிகழ்வு குறித்த செய்தித் தொடர்புகளுக்கு

தொகு
  • முனைவர்.க. உமாராஜ்
  • திருமதி அந்தோணி ரோஸ்லின்
  • கபிரியேல் நாதன்

பேருந்து வழித்தடங்கள்

தொகு
  1. மதுரை, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் சி-1 (பெரியார் முதல் பெரியார் வரை செல்லும் வட்டப்பாதை பேருந்து) மூலம் பயணித்து கௌரி ஹோட்டல் நிறுத்தம் என்று கூறி இறங்கலாம்.
  2. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் சி-2 பேருந்து (ஆரப்பாளையம் முதல் ஆரப்பாளையம் வரை செல்லும் வட்டப்பாதை பேருந்து) மற்றும் காளவாசல் வழியாக திருமங்கலம் செல்லும் 48AD என்ற பேருந்து மூலமும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
  3. மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து (மாட்டுத்தாவணி) வருபவர்கள், பெரியார் பேருந்து நிலையம் அல்லது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து, பின் மேல் கூறிய பேருந்துகள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்தை அடையலாம்.

நிறுத்தம்: கௌரி ஹோட்டல் நிறுத்தம் (பை-பாஸ் சாலையில்).

கலந்து கொள்வோர்

தொகு

உங்கள் பெயரை இங்கு பதிவு செய்யுங்கள் [?]. தமிழ் விக்கியில் புகுபதிகை செய்திருந்தால் உங்கள் கையொப்பம் இட்டால் போதுமானது. மேலேயுள்ள நட்சத்திரக் குறியை அழுத்தினால் உங்கள் கவனிப்புப் பட்டியலில் இக்கட்டுரைப் பக்கம் இருக்கும்.

  1. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:40, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
  2. ----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:38, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]
    (அலுவலகத்தில் ஒரு தலையாய பணி வந்துவிட்டதால், கலந்துகொள்ள இயலவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 1 ஆகத்து 2012 (UTC))[பதிலளி]
  3. --எஸ்ஸார் (பேச்சு) 09:01, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
  4. --வி. பி. மணிகண்டன், தேனி.

நிகழ்வுச் செய்திகள்

தொகு

மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கணித்தமிழ்ச் சங்கத்தின் மதுரைக் கிளைப் பொறுப்பாளர் நீதி. கபீரியல் நாதன் தலைமை தாங்கினார். கணித்தமிழ்ச் சங்க உறுப்பினர் அந்தோணி ரோஸ்லின் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், பிற விக்கித் திட்டங்கள் குறித்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி தேனி மு.சுப்பிரமணி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் எஸ்ஸார் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கணக்கு தொடங்குவதற்கும், கட்டுரைகளைத் தொடங்குவதற்குமான பயிற்சிகளைப் புதுப்பயனர்களைக் கொண்டே செய்து காண்பித்தார். ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து வந்திருந்த தமிழ் விக்கிப்பீடியா பயனர் ஸ்ரீதரன் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதால் பயனர்களுக்கு கிடைக்கும் மன நிறைவு மற்றும் இலவசமாகக் கிடைக்கும் தகவல்கள் போன்றவை குறித்து விளக்கினார்.

  • இந்நிகழ்வில் மதுரையிலிருந்து வெளியாகும் செம்மலர் இதழின் துணையாசிரியர் சோழா நாகராஜன் கலந்து கொண்டு, தன்னைப் புதிய பயனராகப் பதிவு செய்து கொண்டு செம்மலர் மாத இதழ் குறித்த கட்டுரையை உருவாக்கினார்.
  • உயிரி அறிவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற மாணவர் பூபாலன் தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னைப் பயனராக இணைத்துக் கொண்டதுடன், தன்னுடைய கல்லூரி முதுகலைப்பட்டத்திற்கான ஆய்வுத் திட்டத்திற்கு கபிலர் குறிப்பிட்ட மலர்கள் குறித்த அறிவியல் தகவல்களையும், அதற்காக எடுத்த படங்களையும் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

- இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் வி.பி. மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வின் படத் தொகுப்பு

தொகு