விக்கிப்பீடியா:மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கடந்த சில நாட்களாகத் தனிப்பட்ட சில வேலைகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அங்கே யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தைச் (Jaffna Manager's Forum) சேர்ந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தினர் நல்லூரில் உள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் (Euroville Conference Hall) 12 மார்ச்சு 2011 சனிக்கிழமையன்று இந் நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தனர். ஒரு நாள் முன்னறிவித்தலில் ஒழுங்கு செய்திருந்த போதும் இம்மன்றத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு பயனுள்ள கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.


நிகழ்வுக்குப் பொறியாளர் திரு. க. முத்துரத்தினானந்தன் தலைமை வகித்தார். பொறியாளர் திரு. தில்லைநாதனின் அறிமுக உரையைத் தொடர்ந்து "தமிழ் விக்கிப்பீடியா - ஒரு அறிமுகம்" என்னும் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நான் விளக்கம் அளித்தேன். தொடர்ந்து இது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது. யாழ் பல்கலைக்கழக வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கே. தேவராஜா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை அருகே காணலாம்.

-- மயூரநாதன் 08:30, 19 மார்ச் 2011 (UTC)

கலந்து கொண்டோர் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். மயூரநாதன் அவர்களின் வழிகாட்டுதலில் விக்கி பற்றி அறிதல் என்பது அத்துணை சிறப்பு வாய்ந்தது.--பரிதிமதி 09:44, 19 மார்ச் 2011 (UTC)
நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் தத்தமது துறைகளில் திறமையும் மிகுந்த அனுபவமும் கொண்டவர்கள், யாழ்ப்பாணச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்கள் மத்தியில் பேசக் கிடைத்தது எனக்குப் பெருமை. -- மயூரநாதன் 10:17, 19 மார்ச் 2011 (UTC)
    • யாழ்ப்பாணத்தில் முதலாவது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் மயூரநாதன் முலம் நடத்தப்பட்டமை பொருத்தமானதும், அவசியமான நேரத்தில் நிகழ்த்தப்பட்டதுமாகும். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன் யாழ். பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது விக்கிக்கு அவசியமாகும். மௌனமாக பல சாதனைகளை புரிந்து வரும் மயூரநாதன் மிகவும் அவசியமானதொரு பணியை மௌனமாகவே புரிந்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். --P.M.Puniyameen 10:13, 19 மார்ச் 2011 (UTC)
மகிழ்ச்சி மயூரநாதன். பரிதிமதி கூறியதுபோல், உங்கள் மூலமாக தமிழ்விக்கிப்பீடியா அறிமுகம் கிடைத்ததில் அவர்களும் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். --கலை 11:08, 19 மார்ச் 2011 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்கிய மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகத்தைக் கொடுத்தது யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களுக்குக் கிடைத்த பெருமை என்கிற பரிதிமதியின் கருத்து முற்றிலும் உண்மை. இனி தமிழ் விக்கிப்பீடியாவில் யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களின் பங்களிப்பு அதிகமாகலாம். எந்தவித முன்னறிவிப்புமின்றி செய்ததை விட முன்கூட்டியே அறிவித்துச் செய்திருந்தால் நிறைய அன்பர்கள் பயன் பெற்றிருப்பார்கள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:07, 19 மார்ச் 2011 (UTC)
யாழ்ப்பாணத்தில் இப்படியொரு அறிமுகத்தை நடாத்த வேண்டும் என்கிற அவா இருந்தும் அதனைச் செயற்படுத்துவது எனக்குச் சற்றுக் கடினமாக இருந்து வந்தது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கின்றது. தெரிந்திருந்தால் நிச்சயமாகப் பங்குபற்றியிருப்பேன். எவ்வாறாயினும், மயூரநாதன் அவர்களின் இவ்வாரம்பம், சமூக அளவில் அதிகம் பரிச்சயமல்லாத என் போன்றவர்கள் மேலும் விக்கிப் பட்டறைகளை நடாத்த உதவும். --சிவகோசரன் 16:10, 19 மார்ச் 2011 (UTC)
ஒவ்வொரு தடவையும் நான் யாழ்ப்பாணத்துக்கோ அல்லது கொழும்புக்கோ செல்லும்போது முன்னரே திட்டமிட்டுச் செல்ல முடியாத நிலை இருப்பதால். பிற விக்கிப்பீடியருடன் ஒருங்கிணைந்து செயலாற்ற முடியவில்லை. யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருக்கக்கூடிய தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் என்னைப்போன்ற வெளியில் இருந்து வரும் விக்கிப்பீடியர்கள் சுலபமாகத் தொடர்பு கொள்ள வசதியாக அமையும். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் பங்குபற்றியோர் சிலர் கூட்டாகச் செயற்பட ஆர்வம் கொண்டிருந்ததுடன் இதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் விருப்பம் தெரிவித்தனர். சிவகோசரன் போன்று ஏற்கெனவே தமிழ் விக்கியுடன் பழக்கமானவர்களும் அவர்களுடன் இணைந்து பங்காற்ற முடியும். இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் உங்களுக்கு அறிவிக்கிறேன். -- மயூரநாதன் 18:06, 19 மார்ச் 2011 (UTC)
மிக்க மகிழ்ச்சி மயூரநாதன், மிகவும் தேவையானது ஒன்று உரிய நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையும் விக்கிப்பீடியாவைப் பரப்புதல் அவசியமானதொன்று.--சி. செந்தி 23:06, 19 மார்ச் 2011 (UTC)

//சிவகோசரன் போன்று ஏற்கெனவே தமிழ் விக்கியுடன் பழக்கமானவர்களும் அவர்களுடன் இணைந்து பங்காற்ற முடியும்.// அப்படி ஏதாவது நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டால் எனக்கும் அறிவியுங்கள். அந்நேரம் நானும் அங்கே நின்றால் பங்கு கொள்ள முடியும்.--Kalaiarasy 00:27, 20 மார்ச் 2011 (UTC)

இலங்கையில் மற்றுமொரு விக்கிப்பீடியா அறிமுகம் நடந்தேறியிருப்பது உற்சாகத்தைத் தருகிறது. நன்றி மயூரநாதன் மேலும் பல அறிமுக நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 04:29, 20 மார்ச் 2011 (UTC)

ஆம் சிவகுமார். மயூரநாதன் நீங்கள் இதைச் சிறப்பாக நடத்தியமைக்கு நன்றிகள். உடனே ஒளிப்படங்களைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள். --உமாபதி \பேச்சு 05:52, 20 மார்ச் 2011 (UTC)
நல்ல முயற்சி. கல்விக்கு உதவும் வகையில் நாம் விக்கியை வளர்ப்பது அந்தளவு முக்கியம் பெறுகிறது. --Natkeeran 16:11, 20 மார்ச் 2011 (UTC)