உமாபதி
|
உங்களைப் பற்றிய தகவல்கள்
தொகுஉமாபதி, உங்களைப் பற்றிய டொலைபேசி எண் வசிக்கும் இடம் முதலிய தகவல்களை பொதுவில் இப்படி விடவேண்டுமா என எண்ணிப்பார்த்து முடிவு செய்யுங்கள். இன்றைய சூழலில் இப்பக்கங்களை எவரெவர் பார்க்கின்றனர் என்று கூற முடியாதில்லையா? சிறப்பு:Emailuser/உமாபதி என்ற இணைப்பை அளித்துவிட்டு கேட்பவர்களுக்கு மட்டும் தகவல்களைத் தரலாமே. -- Sundar \பேச்சு 10:43, 6 நவம்பர் 2007 (UTC)
- நன்றி சுந்தர், தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. தங்கள் சித்தப்படியே வேண்டிய மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளேன். மேலும் பல கணினி தொடர்பான கட்டுரைகளை எழுதுவதாக உள்ளேன். --Umapathy (உமாபதி) 14:07, 6 நவம்பர் 2007 (UTC)
- நன்றி உமாபதி. -- Sundar \பேச்சு 07:40, 13 நவம்பர் 2007 (UTC)
மென்பொருள் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி வருதலுக்கும், புதிய நுட்ப கட்டுரைகள் எழுதி வருதலுக்கும் நன்றி பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 17:09, 1 டிசம்பர் 2007 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த கூபா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூன் 5, 2013 அன்று வெளியானது. |
தூரயா
தொகுநிச்சியமாக, உங்கள் பரிந்துரைகள் மேலும் வரவேற்கப்படுகின்றன. நன்றி. --Natkeeran 01:59, 22 நவம்பர் 2007 (UTC)
2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்
தொகுஉமாபதி உங்களின் அமைப்புகள் பற்றிய கட்டுரைகளும், கணினிக் கட்டுரைகளும் மிகவும் பயன்பாடு மிக்கவை. சிலவற்றை நான் குறிப்புகளுக்காக பிறருக்கு சுட்டுவதுண்டு. தனிப்பட்ட நிலையிலும் பயனளித்துள்ளன. உங்களின் தமிழா, விண்டோஸ், ஐ.நா நிறுவனத் தொடர்பும் நேரடித் தகவல்களும் த.வி. கூட்டு அறிவு சேமிப்புக்கு மிகவும் வலு சேர்க்கின்றன. Wikipedia:எதிகாலத் தமிழ் விக்கிபீடியா திட்டங்கள் ஒன்றான அடிப்படைப் பிரச்சினைகள் திட்டத்திலும் உங்கள் பங்களிப்பு இருக்கும் என்று நம்புகிறேன் (மேலும் விபரங்கள் பின்னர்). நன்றி.
கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிபீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:
த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.
--Natkeeran 01:50, 5 டிசம்பர் 2007 (UTC)
நற்கீரன் அலுவலகப் பணி ஒன்று நிலுவையில் உள்ளது. முடிந்ததும் எனது கருத்துக்களைப் பகிர்கின்றேன்.--உமாபதி 11:43, 9 டிசம்பர் 2007 (UTC)
- நற்கீரன் நேற்று இரவு/இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டதில் தமிழா எ-கலப்பை என்லைட் மென்பொருளூடாகத் தானியங்கு முறையில் விண்டோஸை நிறுவும்போதே நிறுவலாம் என்பதை ஆய்ந்தறிந்துள்ளேன். தமிழா எ-கலப்பையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த முகுந்தராஜ் அனுமதி அளித்தால் அதையும் மேலேற்றிவிடுகின்கின்றேன். --உமாபதி \பேச்சு 20:45, 14 ஜனவரி 2008 (UTC)
இணைப்பு
தொகுdial-up இணைப்பையே தற்சமயம் பயன்படுத்துகிறேன். சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நேற்று முன்தினம் adsl இணைப்புச் சரியாக வேலை செய்யவில்லை என நண்பன் ஒருவன் சொன்னான். சரியாகத் தெரியவில்லை. நன்றி. கோபி 02:00, 8 டிசம்பர் 2007 (UTC)
- நன்றி கோபி, இப்போது இணைப்பு வேலை செய்கின்றது. --உமாபதி 15:31, 8 டிசம்பர் 2007 (UTC)
நன்றி
தொகுவேர்ட்ப்ரெஸ் தமிழாக்கக் குழுவுக்கான பாராட்டுக்கு நன்றி, உமாபதி. --ரவி 23:47, 13 டிசம்பர் 2007 (UTC)
பலரும் கூகிள் மட்டும்தான் சிறந்த தேடுபொறி என்று கருதி யாஹூவின் அண்மைய முன்னேற்றங்களை கண்டுகொள்ளாமல் விடும் நிலையில் நீங்கள் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்திருப்பது நிறைவளிக்கிறது. நானும் கடந்த மூன்றரையாண்டுகளாக கிட்டத்தட்ட யாஹூ தேடலை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். :-) -- Sundar \பேச்சு 04:55, 20 டிசம்பர் 2007 (UTC)
கூகிளிலும் Suggest வசதி உள்ளது குறிப்பிடத்தகது :-) . பார்க்க: http://www.google.com/webhp?complete=1&hl=en வினோத் 05:19, 20 டிசம்பர் 2007 (UTC)
- நன்றி வினோத், சுந்தர். தேடுபொறி பற்றிப் பயனர்கள் தொடர்ந்தும் பேசுவதால் அவர்களுடைய கருத்துக்களைச் சுட்டு நாம் ஆராய்ந்து கட்டுரை உருவாக்குவோம்/மேம்படுத்துவோம்.--உமாபதி 11:40, 20 டிசம்பர் 2007 (UTC)
- வினோத், யாஹூவின் தேடல் துணைவன் (search assist)ஒரு படி மேலே போய் தேடப்படும் சொற்றொடரை முடிக்க மட்டுமல்லாது இது போல் விடைகளை குழுப்படுத்தவும் செய்கிறது. மேல் தகவல்களுக்கு இப்பதிவைப் பாருங்கள். -- Sundar \பேச்சு 12:54, 20 டிசம்பர் 2007 (UTC)
கூகில் Suggest இன்னும் Development கட்டத்திலேயே உள்ளது. நிச்சயமாக சந்தேகத்துக்கு இடமின்றி Google இதை விரைவில் நிறைவான ஒன்றாக மேம்படுத்திவிடும் :-). கடந்த ஏழு வருடங்களாக கூகிளை மட்டுமே பயன்படுத்தும் கூகிளின் தீவிர ரசிகன் நான் :-)))
பி.கு: ஒரு வேளை யாஹூ என்னை வளாக நேர்காணலில் தேர்வு செய்தால் அதை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்கலாம். ஹ்ம்ம்ம்ம் வினோத் 13:59, 20 டிசம்பர் 2007 (UTC)
ரவி என்று தேடினால் யாஹூ என் வலைப்பதிவை முதலில் காட்டுகிறது. ஆனால், கூகுள் என் வலைப்பதிவில் இருந்து தொடர்பில்லாத பக்கத்தை 7வது முடிவாகக் காட்டுகிறது.எனவே, யாஹூவே சிறந்த தேடுபொறி என்று உறுதி கூறுகிறேன் ;)
உமாபதி, பெங்களூரில் மகாம்தா காந்தி பெயரில் சாலையைக் கண்டு ஏன் ஏமாற்றமடைந்தீர்கள்? பெங்களூரில் M.G.R பெயரில் சாலை இருக்கிறது என்றால் தான் ஆச்சர்யப்படுவேன். இந்தியாவில் காந்தி, நேரு பரம்பரைப் பெயர்கள் கொண்ட ஏதாவது ஒன்று எல்லா ஊரிலும் இருக்கும். --ரவி 14:49, 20 டிசம்பர் 2007 (UTC)
- ரவி, பெங்களூரில் இருந்த சாலையை எம்ஜி ரோட் என்றுதான் எல்லாரும் கூறினார்கள் பின்னர் தான் இது மகாத்மா காந்தி சாலை என்று அறிந்தேன். இப்படி ஒரு பெரியாரின் பெயரையே சுருக்கும் போது கவலைப்படாதவர்கள் தமக்கே விக்கிபீடியாவில் ஒரு பயனர் பெயர் இல்லாதவர்கள் எல்லாம் ராமானுசன், ராமானுஜன் என்றெல்லாம் சண்டையிடுவதுதான் ஏன் என்று விளங்கவில்லை. --உமாபதி 01:50, 21 டிசம்பர் 2007 (UTC)
பக்தி இலக்கியம்
தொகுஉமாபதி, பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் எக்காலப்பகுதியை சேர்ந்தவை என்று உசாத்துணைகளோடு அறிந்து பகிர முடியுமா? நன்றி. --Natkeeran 16:49, 22 டிசம்பர் 2007 (UTC)
- நற்கீரன் உடனடியாக அல்ல ஆயினும் இயன்றவரை முயன்று பார்க்கின்றேன்.--Umapathy (உமாபதி) 17:12, 22 டிசம்பர் 2007 (UTC)
இலங்கை Transliteration
தொகுஉமாபதி, Server என்பதை இலங்கையில் சேவர் என வழங்கிவந்தால், Saver என்பதை எவ்வாறு வழங்குவார் ? எ.டு. Windows Server - இ:விண்டோஸ் சேவர்;த:விண்டோஸ் செர்வர், Screen Saver - த:ஸ்கிரீன் சேவர்;இ:ஸ்கிறீன் ? வினோத் 17:35, 22 டிசம்பர் 2007 (UTC)
வினோத், இரண்டும் நானறிந்தவரையில் சேவர் என்றவாறு இலங்கை வழக்கில் வரும் server ஐ தமிழ வழக்கிற்கு மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும். --Umapathy (உமாபதி) 18:35, 22 டிசம்பர் 2007 (UTC)
Server - வழங்கி, இது பல காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு கணினியல் கலைச்சொல். "கணித்திரைச் சேமி" அல்லது திரைச் சேமி அல்லது கணித்திரை என்று இராம.கி பரிந்துரை செய்துள்ளார். --Natkeeran 18:50, 22 டிசம்பர் 2007 (UTC)
- http://groups.google.com/group/tamil_wiktionary/msg/0378243597ba6fc7?&q=Natkeeran கேளுங்கள் தரப்படும். --Natkeeran 18:51, 22 டிசம்பர் 2007 (UTC)
நற்கீரன் Server - வழங்கி என்றவாறு ஏற்கனவே கட்டுரைகளில் பயன்படுத்தியுள்ளோம். ஆயினும் இங்கே windows server மைக்ரோசாப்டின் வர்தகச் சின்னமாக இருக்கவேண்டும் ஆதலினால் மொழிபெயர்க்க இயலாது. எனினும் வழிமாற்றுப்பக்கங்களை உருவாக்கலாம். யாஹூ! தூதுவன் என்றல்லாமல் யாஹூ! மெசன்ஞ்ஜர் என்றுதான் கட்டுரை உள்ளது. இல்லையா?--Umapathy (உமாபதி) 02:00, 23 டிசம்பர் 2007 (UTC)
இணையப் பிரிவுப்பெயர்கள் ('டொமைன் பெயர்கள்) தமிழில்
தொகுஉமாபதி, நீங்கள் பயர்பாக்ஸில் இணையப் பிரிவுப்பெயர்கள் தமிழில் தெரிவதாகத் தாங்கள் சுட்டிய வலைத்தளத்தில் சென்று பார்த்தேன் - தமிழ் பட்டியலில் இல்லையே! தகவலுக்கு நன்றி. --செல்வா 22:25, 30 டிசம்பர் 2007 (UTC) நான் ஏதும் தவறான இடத்தில் பார்க்கின்றேனா என்று தெரியவில்லை
செல்வா, நான் முதலில் சோதனையில் இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 ஐக் கொண்டு பரீட்சித்ததால் உடனே பதிலளிக்க இயலவில்லை. இப்போது விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 உள்ள கணினியில் பயர்பாக்ஸ் 3 வது பதிப்பின் 2 சோதனைப் பதிப்பை நிறுவிப்பார்த்தபோது இன்னமும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட ஏற்கனவே இருந்த பதிப்பை விட முன்னேறியிருப்பதை அவதானிக்கலாம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.--உமாபதி \பேச்சு 18:07, 11 ஜனவரி 2008 (UTC)
உங்களுக்கு ஈடுபாடு இருக்கலாம்
தொகு- http://www.cybergeography.org/atlas/atlas.html
- http://ocw.mit.edu/OcwWeb/Science--Technology--and-Society/STS-067Spring-2005/Assignments/index.htm
--Natkeeran 01:25, 5 ஜனவரி 2008 (UTC)
உமாபதிபாட்
தொகுஉமாபதி, உங்கள் umapathybot க்கு bot அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மயூரநாதன் 19:58, 14 ஜனவரி 2008 (UTC)
- உமாபதி பல பக்கங்கள் சிகப்பாக தெரிகின்றன. ஆலமரத்தடியை ஒரு முறை பார்க்கவும். நன்றி. --Natkeeran 02:05, 15 ஜனவரி 2008 (UTC)
- உமாபதி வரலாறு பேணப்படவில்லை. மேலும் அலச வேண்டும். --Natkeeran 02:12, 15 ஜனவரி 2008 (UTC)
- நற்கீரன் நான் பாட் ஊடாகச் செய்த்தால் அண்மைய மாற்றங்களில் தானியங்கிகளைக் காட்டு என்று என்பதைக் கிளிக் செய்தால் நான் செய்த மாற்றங்களைக் காட்டும். --உமாபதி \பேச்சு 17:03, 15 ஜனவரி 2008 (UTC)
- வேறு ஒரு சிக்கலையும் அவதானித்துள்ளேன். சில இடங்களில் பட இணைப்பையும் மாற்றியுள்ளது. இவ்வாறானதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவருகின்றேன் முடியாவிட்டால் பக்கத்தை மீள்வித்துவிடுகின்றேன். --உமாபதி \பேச்சு 02:41, 15 ஜனவரி 2008 (UTC)
- பின்வரும் வழுவைக் கவனிக்கவும். இதில் </noinclude> என்பதை மேல் நோக்கி நகர்த்தியுள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 09:16, 16 ஜனவரி 2008 (UTC)
- டெரனஸ் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பாட் செய்த மாற்றத்திற்கு முன்னதாக <noinclude> </noinclude> இற்கு இடையில் ஏன் விக்கியிடையிணைப்பு வருகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும். --உமாபதி \பேச்சு 18:22, 16 ஜனவரி 2008 (UTC)
- <noinclude> </noinclude> என்பவற்றுக்கிடையில் இருப்பவை அந்த வார்ர்புருவில் மட்டும் காட்சிப்படுத்தப்படும் வார்ப்புரு இணைக்கப்படும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட மாட்டாது. புதிய பயனர் வார்ப்புருவில் இருந்த ஏனைய மொழி இணைப்புகள் அவ்வார்ர்புரு இணைக்கப்படும் இடங்களில் தேவையற்றது என்றப்படியால் <noinclude> </noinclude> இடையில் இடப்படும்.--டெரன்ஸ் \பேச்சு 03:46, 17 ஜனவரி 2008 (UTC)
- டெரன்ஸ், நேரம் இருந்தால் நீங்கள் இதைச் சரிசெய்து விடுவீர்களா? நான் பாட்டை இப்போதைக்கு உமாபதிபாட் ஐ இயக்குவதாக இல்லை. இயக்க முன்னர் முன்னறிவிப்பு ஒன்றைத் தருகின்றேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.--உமாபதி \பேச்சு 05:34, 18 ஜனவரி 2008 (UTC)
- உமாபதி வரலாறு பேணப்படவில்லை. மேலும் அலச வேண்டும். --Natkeeran 02:12, 15 ஜனவரி 2008 (UTC)
உமாபதிபாட் - மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு
தொகுஉமாபதிபாட்டைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புச் செய்யவிரும்புகின்றேன். என்னிடம் திருகோணமலை பற்றிய தகவல்கள் உள்ளது. மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தயவுசெய்து தயங்காமல் குறிப்பிடவு. ஆரம்பத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுதிக்கு மாத்திரம் செய்வோம். இலங்கையில் பாவிக்கப்படும் Grama Niladhari Division இல் Niladhari என்பது சிங்களச் சொல் என்பதால் ஆங்கில விக்கிபீடியாவில் இந்தியாவில் பாவிக்கப்படுவது போன்று Village Administration Division என்பதைப் பாவிப்பதாக உள்ளேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன். ப
- Trincomalee - திருகோணமலை
- Sri Lanka - இலங்கை
- Families - குடும்பங்கள்
- members - அங்கத்தவர்கள்
- village administrative division - கிராமசேவகர் பிரிவு
- Trincomalee Town and Gravets - திருகோணமலை பட்டினமும் சூழலும்
- Female - பெண்
- Male - ஆண்
- Under 18 Years - 18 வயதிற்கு கீழ்
- 18 Years & Over - 17 வயதிற்கு கூடியவர்கள் (17 வயதிற்கு மேல்)
- Buddhist - பௌத்தர்
- Hindu - இந்து
- Islam - இசுலாமியர்
- Christian - கிறிஸ்தவர்
- Other Religions - ஏனைய மதத்தவர்
- Sinhalese - சிங்களவர்
- Others - ஏனையோர்
- Other Religions - ஏனைய மதத்தவர்
- Tamil - தமிழர்
- Muslim - முஸ்லீம்
- தயவுசெய்து பயனர்:உமாபதி/வில்லூன்றி இன் அண்மைய வரலாற்றையும் கவனித்துவிட்டுக் கருத்துகள்ளை அறியத்தரவும்.--உமாபதி \பேச்சு 11:19, 20 ஜனவரி 2008 (UTC)
- சில திருத்தங்கள் செய்துள்ளேன். கிறிஸ்தவர், மதத்தவர் என்பன பன்மையிலும் கூறலாம். மற்றும், பயனர்:உமாபதி/வில்லூன்றியில் table பற்றியது: பல table ஆகப் பிரிக்காமல் ஒரே table ஆக வைத்திருக்கலாம். அதற்கு font size ஐக் குறைக்கலாம். (wikitable இல் பொதுவாக fontsizeஐ எப்படிக் குறைப்பது என்று எனக்குத் தெரியாது). எனக்குத் தெரிந்த அளவில் table ஐத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 12:16, 20 ஜனவரி 2008 (UTC)
- சிறீதர் அண்ணா திருத்தங்களுக்கு நன்றி மெட்டா விக்கியில் http://meta.wikimedia.org/wiki/Help:Table விளக்கங்கள் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு சில தினங்களின் நடைமுறைப்படுத்துகின்றேன். உங்களின் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கின்றது Table ஐயும் சரிசெய்து விட்டு ஆங்கில விக்கியிலும் கட்டுரைகளைச் சேர்த்துவிட்டு பாட்டை இயக்கலாம். --உமாபதி \பேச்சு 10:09, 24 ஜனவரி 2008 (UTC)
Re: About Your bot
தொகுதிருகோணமலைப் பட்டினம்
தொகுஉமாபதி, நீங்கள் திருகோணமலைப் பட்டினக் கிராமங்கள் பற்றிய குறுங்கட்டுரைகளை ஆக்கி வருவது அறிந்து மகிழ்ச்சி. ஊர் மக்கள்தொகை பற்றிய தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதையும் கட்டுரையில் குறித்தால் நல்லது. (உதாரணத்திற்கு பார்க்க: அக்குரணை). வட கிழக்கு மாகாண ஊர்கள் அனைத்திற்கும் காலப்போக்கில் தனித்தனிக் கட்டுரைகள் உருவாக்க வேண்டும். அதற்கு முன்னோடியாகவே அந்த அந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களின் பட்டியல்களை உருவாக்கி வருகிறேன். பார்க்க: திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல். இப்பட்டியல்களில் விடுபட்டுப் போன (உங்களுக்குத் தெரிந்த) ஊர்களை இப்பட்டியலில் சேர்த்து விடுங்கள். வார்ப்புரு:இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் அனைத்து ஊர்களுக்கும் இணைக்கப்படவேண்டும். (உங்கள் bot மூலம் இவற்றை உருவாக்கலாமா?) அதற்கான தகவல்கள் முதலில் பெறப்பட வேண்டும். இவற்றை எங்கிருந்து பெறலாம். இணையத்தளங்கள் உள்ளனவா?--Kanags \பேச்சு 23:18, 27 ஜனவரி 2008 (UTC)
- சிறீதர் அண்னா இவை உண்மையில் திருகோணமலையில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளைப் பற்றி கச்சேரியினால் வெளியிடப்பட்டவையே அவற்றை ஆதாரங்கள் என்ற பகுதியில் சேர்த்துவிடுகின்றேன். ஆங்கில விக்கியிலும் ஆதாரங்களைச் சேர்த்துவிட்டு 1-2 நாட்களின் பின்னர் உமாபதிபாட் ஐ ஏவி மொழிபெயர்ப்பைச் செய்துவிடுப் பின்னர் திருத்தங்களைச் செய்யலாம்.சோதனையில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 3 இல் விக்கி தானுலாவி (ஆட்டோ விக்கி பிரவுசர்) இயங்கவில்லை. என்னிடம் வவுனியா பற்றிய விபரங்கள் உண்டு ஆனால் அவை காலத்தால் முந்தினவை. இணையத்தளங்கள் எல்லாம் திருகோணமலையில் நானறிந்த வரையில் இல்லை aDSL வந்தால் சாத்தியமாகலாம். இப்போதைக்கு ஆமைவேக டயல்-அப் இணைப்புக்கள்தாம் திருகோணமலையில் உள்ளது. திருகோணமலைத் தகவல்களும் மாற்றமடைந்துள்ளன எடுத்துக்காட்டாக சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று நகரம் முழுவதும் இராணுவமுகாமாகியுள்ளது இதில் பொதுமக்கள் மீளக்குடியேற முடியாதுள்ளது. எனினும் இருக்கின்ற தகவல்களைச் சேர்த்துவிட்டு பின்னர் மேம்படுத்துவோம். "Something is better than nothing" இல்லையா?. ஆள்கூறுகளும் (ArcView, ArcGIS இல் பாவிக்கும் Shape files ஆக) என்னிடம் உண்டு ஆனால் அவற்றை கூகிள் ஏர்த் மென்பொருளில் சரிபார்த்துவிட்டே பதிவேற்றுகின்றேன். அப்படிச் சரிபார்க்கவியலாத இடங்களில் இருக்கின்ற தகவலைப் போடுவதாக உள்ளேன். --உமாபதி \பேச்சு 03:47, 28 ஜனவரி 2008 (UTC)
திருகோணமலை பட்டினமும் சூழலும்
தொகுஓர் மாதிரி மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. இது சரியென்றால் 32+ கட்டுரைகளை இன்றே தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துவிடுகின்றேன்.
வில்லூன்றி (Villundy) என்ற 244 E இலக்கம் உடைய கிராமசேவையாளர் பிரிவானது திருகோணமலை பிரதேச சபைப் பிரிவில் உள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.
ஆண் | பெண் | 18 வயதிற்குக் கீழ் | 17 வயதிற்கு மேல் | பௌத்தர் | இந்து | இசுலாமியர் | கிறீஸ்தவர் | ஏனைய மதத்தவர் | சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | ஏனையோர் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2191 | 2078 | 974 | 3295 | 21 | 3802 | 9 | 427 | 10 | 104 | 4043 | 9 | 113 |
உமாபதி, சில திருத்தங்களைச் செய்துள்ளேன். தமிழில் வில்லுண்டி, வில்லூண்டி, வில்லூன்றி எது சரியானது? 18 வயதிற்குக் கீழ் மற்றும் 17 வயதிற்கு மேல்--> இது சரிதானா? (17 வயதிற்கு கீழ், 18 வயதிற்கு மேல் என்றிருக்க வேண்டுமா? ஒரு குழப்பம்).--Kanags \பேச்சு 07:10, 10 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி சிறீதர், இரண்டு குடும்பம், அங்கத்தவர் என்பது கட்டுரையில் ஏற்கனவே இருப்பதால் அட்டவணையில் இருந்து நீக்கியுள்ளேன். ஆங்கிலத்தில் Under 18 Years, 18 Years & Over என்று இரண்டு Colums இருக்கின்றது எவ்வாறு தமிழாக்குவது? திருகோணமலையில் வில்லூன்றி என்றவாறுதான் அழைக்கின்றார்கள் அதைத்தான் நாம் சரியென எடுக்கவேண்டும். இடத்தின் பெயரைப் பற்றி அவ்வளாவா worry பண்ணவேண்டாம் பிழையென்றால் பக்கத்தை நகர்த்திவிடலாம். கட்டுரையின் தலைப்பைவிட உள்ளடக்கம் சரியாக உள்ளனவா என்பதுதான் முக்கியம் ஏனென்றால் நான் மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளூடாக Mailmerge செய்ய இருக்கின்றேன். --உமாபதி \பேச்சு 07:20, 10 பெப்ரவரி 2008 (UTC)
உமாபதி, Under 18 Years, 18 Years & Over என்பதற்கு 18 வயதிற்குக் கீழ், 18 வயதும் அதற்கு மேலும் என்று பெயர்க்கலாம். டெரென்சின் வார்ப்புருவையும் பாருங்கள்: வார்ப்புரு:இலங்கை இன மத அடிப்படையிலான மக்கள் தொகை அட்டவணை. அப்படி இன, மத அடிப்படையில் இரண்டு அட்டவணைகள் இருப்பதும் நல்லது. (உ+ம் பார்க்க: அக்குரணை). உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். --Kanags \பேச்சு 08:05, 10 பெப்ரவரி 2008 (UTC)
சிறீதர் அண்ணா, உங்களின் தமிழாக்கம் நன்றாகவுள்ளது அதைப் பயன்படுத்துகின்றேன். ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளை பின்னர் மாற்றிவிடுகின்றேன். --உமாபதி \பேச்சு 08:11, 10 பெப்ரவரி 2008 (UTC)
அனைவருக்கும் நன்றி முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளது. இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுதியில் உள்ள கிராமசேவகர் பிரதேசம் எல்லாவற்றையும் சேர்த்துவிட்டேன். --உமாபதி \பேச்சு 08:58, 10 பெப்ரவரி 2008 (UTC)
- உமாபதி, நான் இப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்து உங்கள் குறிப்பைப் பார்த்தேன். அதற்குள் உங்கள் கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுவிட்டன. எனினும், என்னுடைய கருத்துக்களைக் கீழே தருகிறேன்.
- பிரதேச சபைப் பிரதேசம், பிரதேச சபைப் பிரிவு போன்ற பெயர்களைக் கையாண்டிருக்கிறீர்கள் இவை Divisional secretary division என்பதைக் குறிக்கின்றன என்று நினைக்கிறேன். அப்படியானால் அது பிரதேசச் செயலாளர் பிரிவு என இருக்கவேண்டும். இது மாவட்டத்தின் (District) ஒரு துணை நிர்வாக அலகு. பிரதேச சபை என்பது வேறு. இது ஒரு உள்ளூராட்சிப் பிரிவு.
- கிராம சேவையாளர் பிரிவு அல்லது கிராம சேவகர் பிரிவு என்பதும் சரியாகத் தெரியவில்லை. இவை சிங்களப் பெயரான Grama Sevaka Division என்பதற்று ஈடான தமிழ்ப் பெயர். ஆனால் இப்பொழுது அப்பிரிவுகள் அப்பெயரால் அழைக்கப்படுவது இல்லை என எண்ணுகிறேன். அவற்றின் தற்போதைய உத்தியோகபூர்வப் பெயர் சிங்களத்தில் Grama Niladhari Divisions எனப்படுகின்றது. இது தமிழில் கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது கிராம அலுவலர் பிரிவு என அழைக்கப்படும். இங்கே பார்க்கவும்
- தலைப்பிலும் கிராம அலுவலர் பிரிவு என்பதையும் சேர்த்து எழுதுவது நல்லது. ஏனென்றால், அதே பெயரில் கிராமங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என எதுவும் இருக்கலாம். எனவே பூம்புகார் கிராம அலுவலர் பிரிவு என்பது போல முழுமையாகத் தலைப்பு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
- அட்டவணை பக்கத்துக்கு வெளியே நீண்டு செல்வதைத் தடுக்க கீழுள்ளதுபோல் செய்தால் என்ன?
பிரிவினர் | எண்ணிக்கை |
---|---|
ஆண் | 2191 |
பெண் | 2078 |
18 வயதிற்குக் கீழ் | 974 |
17 வயதிற்கு மேல் | 3295 |
பௌத்தர் | 21 |
இந்து | 3802 |
இசுலாமியர் | 9 |
கிறீஸ்தவர் | 427 |
ஏனைய மதத்தவர் | 10 |
சிங்களவர் | 104 |
தமிழர் | 4043 |
முஸ்லிம் | 9 |
ஏனையோர் | 113 |
- மயூரநாதன் 17:52, 10 பெப்ரவரி 2008 (UTC)
மயூரநாதன் தாங்கள் சொல்வது போன்ற மாற்றங்கள் செய்துவிடலாம். ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை இப்பொழுது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரிவுக்குத்தான் கட்டுரையை எழுதியிருந்தேன் ஏனைய பிரதேசச் செயலர் பிரிவுகளுக்கும் கட்டுரைகள் வரவிருக்கின்றன. இது ஆரம்பம் மாத்திரமே --உமாபதி \பேச்சு 19:27, 10 பெப்ரவரி 2008 (UTC) கீழேயுள்ளது சரியா எனப்பார்க்கவும்
வில்லூன்றி (Villundy) என்ற 244 E இலக்கம் உடைய கிராம உத்தியோகத்தர் பிரிவானது திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.
பிரிவினர் | எண்ணிக்கை |
---|---|
ஆண் | 2191 |
பெண் | 2078 |
18 வயதிற்குக் கீழ் | 974 |
18 வயதும் 18 வயதிற்கு மேல் | 3295 |
பௌத்தர் | 21 |
இந்து | 3802 |
இசுலாமியர் | 9 |
கிறீஸ்தவர் | 427 |
ஏனைய மதத்தவர் | 10 |
சிங்களவர் | 104 |
தமிழர் | 4043 |
முஸ்லிம் | 9 |
ஏனையோர் | 113 |
உங்கள் கட்டுரையைப் பின்வருமாறு மாற்றினால் நல்லது என்பது எனது கருத்து:
- 244 E இலக்கம் உடைய வில்லூன்றி கிராம அலுவலர் பிரிவு, (Villundy) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 மக்கள் வசித்து வருகின்றனர்.
மயூரநாதன் 02:37, 11 பெப்ரவரி 2008 (UTC)
இத்துடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரேச் செயலாளர் பிரிவில் உள்ள அனைத்து கிராம அலுவலர பிரிவுகளும் முதலாங்க கட்டம் முடிவுக்கு வருகின்றது. --உமாபதி \பேச்சு 06:30, 11 பெப்ரவரி 2008 (UTC)
உசாத்துணைகள்
தொகு- திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)
வார்ப்புரு:geo-stub வார்ப்புரு:திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுப்பு:திருகோணமலையில் உள்ள ஊர்களும், நகரங்களும் en:Villundy
SVG நிலப்படம்
தொகுஉமாபதி, SVG நிலப்படங்களை வரைவது எப்படி? வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய நிலப்படங்கள் இருந்தால் நல்லது. இது பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத்தரவும். மயூரநாதன் 06:19, 2 பெப்ரவரி 2008 (UTC)
- ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருளூடாகவே SVG படங்களை உருவாக்கினேன். இதற்கு இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் Shape files ஐப் பாவித்தேன். நாளை எனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவில் பகிர்கின்றேன். --உமாபதி \பேச்சு 13:59, 2 பெப்ரவரி 2008 (UTC)
ஊர்கள்
தொகுவடக்கு கிழக்கு மாகாண ஊர்களுக்கு தனித்தனியே கட்டுரைகள் அமைப்பதற்குப் பாராட்டுகள். அந்த அந்த ஊர்களைத் தகுந்த பகுப்புகளுக்குள் இடவேண்டும். உ+ம்: யாழ்ப்பாண மாவட்ட ஊர்களை பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் என்ற பகுப்புக்குள்ளும் வவுனியா மாவட்ட ஊர்களை பகுப்பு:வவுனியாவிலுள்ள ஊர்களும், நகரங்களும் etc., என்றவாறு பகுப்புகளுக்குள் இடுவது நல்லது. இப்பகுப்புக்களை பகுப்பு:இலங்கை நகரங்கள் என்ற பகுப்புக்குள்ளும் பகுப்பு:யாழ்ப்பாணம், பகுப்பு:வவுனியா என்ற தாய்ப்பகுப்புக்குள்ளும் முறையே இடலாம் என்பது என் கருத்து.--Kanags \பேச்சு 10:33, 3 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி, சிறீதர் அண்ணா அப்படியே பகுப்பைச் செய்கிறேன். அப்போதுதான் எல்லா இடங்களிலும் சீராக இருக்கும். அநேகமான இடங்களைப் பற்றி எழுதும் யோசனை இருந்தாலும் அதை உடனடியாகச் செயற்படுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆனாலும் ஒரு சில இடங்களைச் சேர்ப்பதாக இருக்கின்றேன். --உமாபதி \பேச்சு 10:40, 3 பெப்ரவரி 2008 (UTC)
மொழிப்பெயர்ப்பு
தொகுதாங்கள் AWBஐ கொண்டு, மொழிப்பெயர்ப்பதாக தெரிகிறிது. எனினும், மொழிப்பெயர்ப்புக்கு String Parsing நுன்னியதாக செய்யவேண்டுமென்பதால், தாங்கள் Perl, Python கொண்டு தானியங்கியை உருவாக்கி மொழிப்பெயர்த்லே சாலச்சிறந்தாகும். ஏனெனில் Perl மொழியில் மேம்பட்ட String Manipulation காணப்படுகின்றன. அல்லது Java'வை கொண்டு தானியங்கியை உருவாக்கலாம். AWB கொண்டு String Parsing மற்றும் Manipulation செய்தல் அவ்வளவு Efficient ஆக இருக்கும் என தோன்றவில்லை βινόδ வினோத் 11:10, 3 பெப்ரவரி 2008 (UTC)
ஆம் வினோத் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி அவ்வளவு சரியாக மொழிபெயர்ப்பு AWB இல் வரவில்லையாதலினால் மீள்வித்து விட்டேன். எப்படியாவது ஒழுங்கான மொழிபெயர்ப்பு பாட்டை உருவாக்கினால் நல்லது. --உமாபதி \பேச்சு 11:13, 3 பெப்ரவரி 2008 (UTC)
என்னிடம் இந்தி-தெலுங்கு மொழிப்பெயர்ப்புக்கான Python Script உள்ளது என நினைக்கிறேன். அதை அடிப்படையாக கொண்டு தங்களால் ஆங்கிலம் - தமிழுக்கு மொழிப்பெயர்ப்பை உருவாக்க இயலுமா ? βινόδ வினோத் 11:18, 3 பெப்ரவரி 2008 (UTC)
வினோத், Python மொழி இன்னமும் தெரியாது. இன்றும் நாளையும் இதன் நிரலாக்கம் பற்றிய தகவல்களைச் சேர்த்துவிட்டு முயற்சிப்போம்.--உமாபதி \பேச்சு 11:20, 3 பெப்ரவரி 2008 (UTC)
Javaஐ பயன்படுத்தினால் என்ன ? ஜாவா மூலம் மிக எளிதாக தானியங்கிகளை உருவாக்க இயலும். String Parsing-உம் Javaவில் ஓரளவுக்கு நன்றாக உள்ளது என நினைக்கிறேன். http://en.wikipedia.org/wiki/Wikipedia:Creating_a_bot காண்க. Java கொண்டு நான் சோதித்து பார்த்ததில் மிகவும் எளிதாக உள்ளது. βινόδ வினோத் 11:25, 3 பெப்ரவரி 2008 (UTC)
படிமங்கள்
தொகு- விக்கிப்பீடியாவின் முக்கிய அம்சம் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதாகும். அதனால் காப்புரிமை தொடர்பாக இங்கு விளிப்பாக இருப்பது முக்கியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தவி தொடங்கப்பட்ட நாள் முதல் இது தொடர்பில் பல நடைமுறைகளை கையாண்டு வருகிறேம். கட்டுரைகளை பொருத்தவரை காப்புரிமைக்குட்பட்ட உள்ளடக்கங்கள் இணைக்கப்படுவது தவியில் இல்லையென்ற அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. படிமங்களைப் பொருத்தமட்டில் இது அப்படியில்லை. இதை 2006 ஆம் ஆண்டறிக்கையிலும் உரையாடினோம். காப்புரிமக்குட்பட்ட படிமங்களை நீக்குதல், நியாயமான பயன்பாட்டில் ஒரு படிமம் வருமா எனப் பார்த்தல், படிமங்களை வகைப்படுத்தி அடுக்கி வைத்தல் என்பன முக்கியமான வேலைகளாகும். இதைத் தான் நான் செய்கிறேன். கட்டுரைகள் ஆக்க வேண்டும் தான்.... ஆனால் இதையும் யாராவது செய்யத்தானே வேண்டும். விக்கிப்பீடியாவை ஒரு உடலுக்கு ஒப்பிடலாம்...உறுப்புக்கள்தான் பயனர்கள். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலையுண்டு.:)
- காமன்சில் உள்ளப்படிமங்கள்: இது தொடர்பாக இங்கு ஒரு கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில் எப்படி அமையும் என பார்க்கலாம். ஆனால் எனது கருத்து அப்படியானால் ஏன் காமன்ஸ் என்ற ஒன்று வேண்டும்?
- நான் இங்கு நீக்கியதற்கு காரணங்கள்:
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிமங்கள் இங்கு எந்தவிதமான காப்புரிமை தகவலும் இல்லாமல் இணைக்க்ப்பட்டுள்ளமை.
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிமம் பொது உரிமத்தில் உள்ளது எனவே காமன்சில் நீக்க வாய்ப்பில்லை.
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிம ஒரே பெயரில் உள்ளது எனவே கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு வர வாய்ப்பில்லை.
- காம்ன்சில் நீக்கினால்: காம்ன்சில் பல காப்புரிமைத் தொடர்பாக விழிப்பாக இருக்கிறார்கள். எனவே காப்புரிமை மீறிய படிம்ங்கள் நீக்கப்படும். இதன் போது தமிழ் விக்கியில் நாம் காமன்ஸ் படிம இணைப்பைக் கொடுத்திருந்தால் பாட் மூலம் இணைப்பை கட்டுரையிலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது எமது வேலையை இலகுவாக்கவில்லையா? எனது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.தவியில் (மற்ற இடங்களிலும் தான் ;))யாருமே காப்புரிமைவிடயத்தில் விடயத்தில் கவலையீனமாக இருக்கக் கூடாது. --Terrance \பேச்சு 14:19, 3 பெப்ரவரி 2008 (UTC)
BOT Change
தொகுUmapathy I have listed some changes in my bot functions for Checking Images without copyright Info at Mayooranathan's User Talk:Mayooranathan including the comment you gave at my user page. Please tell you views and any improvements if needed regarding it. Thank You
I think Its better if we use bots, to look after images rather than doing it manually, Hope you agree. Terrance is doing too much of work manually around here. May be some bot functions would help him around βινόδ வினோத் 18:00, 3 பெப்ரவரி 2008 (UTC)
re: Typecasting
தொகுparseInt(), parseFloat() போன்றவை உங்களுக்கு உதவும், இங்கு தரப்பட்டுள்ள விளக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 11:49, 5 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி சுந்தர், மீண்டும் நிரலை உருவாக்கிப் பார்க்கின்றேன். --உமாபதி \பேச்சு 14:47, 5 பெப்ரவரி 2008 (UTC)
வார்ப்புரு
தொகுநானும் செய்ய வேண்டு என யோசித்தது தான். நான் ஆக்கிய வார்ப்ப்ருருவை பொருத்தமான வார்ப்புரு நோக்கி வழிமாற்றி விடவும்.--Terrance \பேச்சு 14:10, 5 பெப்ரவரி 2008 (UTC)
டெரனஸ், இதை பாட் மூலமாகவும் செய்யலாம் அல்லது ஓர் கணினி நிரலை எழுதியும் செய்யலாம். கணினி நிரல் மூலம் செய்தால் இலகுவாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். உடனடியாக மாற்றங்கள் எதுவும் செய்வதாக இல்லை. 2-3 கிழமைக்குப் பின்னர் முறைப்படி அறிவித்தல் கொடுத்துவிட்டுச் செய்கின்றேன். --உமாபதி \பேச்சு 14:45, 5 பெப்ரவரி 2008 (UTC)
Virtual PCஇல் உபுண்டு நிறுவுதல்
தொகுஉமாபதி, தற்சமயம் என்னுடைய Virutal PCஇல் உபுண்டு நிறுவ முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் Display Resolution சிக்கல்களின் காரணமாக ஏனோ Live CDஆக Execute செய்யும் Display ஏடாகூடமாக போய் ஏதோ வண்ணவண்ணமாக தெரிகிறது. இதை நிவர்த்தி செய்து Ubuntuவை Virtual PCஇல் நிறுவ ஏதேனும் வழி உள்ளதா βινόδ வினோத் 13:00, 9 பெப்ரவரி 2008 (UTC)
எனது மடிக்கணினியில் (laptop) இல் உபுண்டு நிறுவியுள்ளேன். என்னிடம் வர்ச்சுவல் பிஸி 2007 உள்ளது ஆயினும் உடனடியாக உபுண்டு நிறுவல் சீடி இல்லை. சற்றே பொறுத்திருக்கவும். நேரடியாக சீடியில் இருந்து ஆரம்பித்தால் இதே பிழை வருகின்றதா? உங்களின் வன்பொருள் (ஹாட்வெயார்) அமைப்பு யாது? (இதற்கு http://www.gtopala.com/ இல் இருந்து கிடைக்கும் System Info for Windows) என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம் அதில் ஹாட்வெயாரிற்குக் கீழ் மதர்போர்ட் என்பதனைச் சொடுக்கினால் (கிளிக் செய்தால்) மதர்போட் விபரங்கள் கிடைக்கும். --உமாபதி \பேச்சு 05:03, 10 பெப்ரவரி 2008 (UTC)
நேரடியாக எனது உண்மையான(!) பிஸியில் எந்த பிழையும் வரவில்லை, என்னுடையா பொய்யான(?) பிஸியில் இந்த குழப்பம். என்னிடத்தில் வர்ர்சுவல் பிஸி 2004 தான் உள்ளது. வர்ர்சுவல் பிஸி 2007இல் முயற்சி செய்த பிறகு, மீண்டும் பிழைகள் ஏதேனும் ஏற்படுமாயின், இங்கே தெரிவிக்கிறேன். நன்றி βινόδ வினோத் 18:10, 10 பெப்ரவரி 2008 (UTC)
மறு: திருகோணமலை பட்டினமும் சூழலும்
தொகுஉமாபதி, பல்வேறு அலுவல்களில் இதை மெய்ப்பார்க்க முடியாமல் போய்விட்டது. கனகர், மயூரநாதன் நல்ல பரிந்துரைகளைச் செய்துள்ளனர். இது நல்ல முயற்சி. நானும் இதுபோல் ஒன்றைச் செய்யத் துவங்கி இன்னும் நிறைவடையவில்லை. பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:45, 15 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி சுந்தர், நானும் அலுவலக வேலைப் பளுவால் மிகுதியை செய்யமுடியவில்லை. எப்படியாவது மிகுதியை நேரம் கிடைக்கும்போது இயன்றவரை முயற்சி செய்கின்றேன். --உமாபதி \பேச்சு 07:29, 15 பெப்ரவரி 2008 (UTC)
நூலகத் திட்டம்
தொகுநீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம்.
உமாபதி, மாணவர்களுக்கு தமிழில் ஆக்கங்களை எடுத்து செல்வது தொடர்பாக முன்னர் உரையாடி இருந்தோம். பிறருடன் கதையாடியதில் விக்கிப்பீடியா, நூலகம் ஆகியவை முக்கிய கூறுகளாக இருக்கும் என்று தெரிகிறது. நேரம் இருந்தால் சில இடுக்கைகள் தாருங்கள். நன்றி.
--Natkeeran 16:28, 3 மே 2008 (UTC)
- ஆம் நற்கீரன் நல்லதோர் முயற்சி, குறிப்பாக உயர்தரத்திற்குப் புத்தங்கள் இருப்பின் தமிழரின் கல்விநிலையை உயரச் செய்யலாம் என்றே கருதுகின்றேன். திருகோணமலையில் நான் இருக்கும் இடத்தில் டயல்-அப் இணைப்பைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். இரவு நேரத்தில் இணைப்பு மிகவும் மெதுவாகவே இருக்கின்றது. விக்கிபீடீயாவில் கூட பங்களிப்புக் குறைந்தமைக்குப் இணைப்புப் பிரச்சினைதான் பிரதான காரணம். நேரமும் குறைந்து வருவதும் உண்மைதான். மன்னிக்கவும், என்னிடம் இப்பொழுது தமிழ் நூல்கள் அவ்வளவாக இல்லை --உமாபதி \பேச்சு 02:27, 4 மே 2008 (UTC)
HotCats
தொகுHotCats இப்போது விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது :)--Terrance \பேச்சு 05:20, 19 மே 2008 (UTC)
- நன்றி டெரனஸ். :) --உமாபதி \பேச்சு 11:14, 19 மே 2008 (UTC)
- பயனுள்ள கருவி, நன்றி டெரன்சு.--சிவகுமார் \பேச்சு 11:46, 19 மே 2008 (UTC)
Reply
தொகுThank you very much for your kindness in helping me out:) Do you mind if I write in English? (I am much more proficient in it than in Tamil). I am using Windows XP at the moment. I tried setting up "e-kallapai" as you advised me, but there is no "Tamil" option under the "Input language". There are two options available under the "Keyboard layout/IME" called "Tamil99T sc" and "Tamil99Uni". I tried selecting these, but they didn't have any effect at all. I guess these are for a user to attempt typing in Latin characters with a Tamil keyboard. Again, thank you for your efforts:):) --Mohan123 12:58, 8 ஜூன் 2008 (UTC) மோஹன், ஏற்கனவே உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிந்துள்ளேன். அஞ்சல் விசைப்பலகையினைப் பாவித்துவிட்டு கருத்துக்களை அறியத்தரவும். :) --உமாபதி \பேச்சு 16:53, 8 ஜூன் 2008 (UTC)
வணக்கம் உமாபதி அவர்களே!
ஈஸ்வரதாசன் என்பவர் ஊடகத்துறையில் அறியப்பட்டவர். இலண்டனில் வாழ்ந்து வருகிறார். ஐபிசி. ரிரிஎன்.போன்றவற்றில் பணியாற்றியவர்.
- ஈசன், புதிதாக ஈஸ்வரதாசன் கட்டுரையை ஆரம்பித்துள்ளேன். அங்கே பகுப்பை இடுவதுதான் பொருத்தமானது.--உமாபதி \பேச்சு 16:53, 8 ஜூன் 2008 (UTC)
பாராட்டுகள் மற்றும் உதவி
தொகுஉமாபதி, உங்கள் அண்மைய பங்களிப்புகள் நன்று. பாராட்டுகள். ஆங்கில விக்கியிலிருந்து, அதே உரிமத்தோடு தானாக இங்கு பதிவேற்றும் முறை உங்களுக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்தால் en:Economy of ancient Tamil country கட்டுரையிலிருக்கும் சில படிமங்களை இங்கு ஏற்ற முடியுமா? பொதுக்கோப்பகத்திலிருக்கும் படிமங்களை இங்கு ஏற்ற வேண்டியதில்லை, மற்றவற்றை மட்டும் ஏற்றித் தந்தால் போதும். -- சுந்தர் \பேச்சு 16:10, 7 டிசம்பர் 2008 (UTC)
- பாராட்டுக்களுக்கு நன்றி சுந்தர். படிமங்களை அதே உரிமையோடு பதிவேற்றும் முறை எனக்கு இன்னமும் தெரியாது. http://en.wikipedia.org/wiki/Wikipedia_talk:Image_use_policy#Automated_Image_transformation_from_one_wikipedia_to_another ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு செய்தியை விட்டிருக்கின்றேன். யாராவது உதவக்கூடும். எனக்குத் தெரிந்த வழியில் முயற்சி செய்து பார்கின்றேன். --உமாபதி \பேச்சு 15:23, 8 டிசம்பர் 2008 (UTC)
வின்டோஸ் எக்ஸ்பி
தொகுவின்டோஸ் எக்ஸ்பி கட்டுரையில் உள்ள வார்ப்புருவின் அகலத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 15:16, 21 டிசம்பர் 2008 (UTC)
- வார்ப்புரு:Release date ஐப் பாவித்தவுடன் அகலம் அதிகரித்து விட்டது. அதை நீக்கிவிட்டு பழைய வார்ப்புருபோன்றே பாவித்துள்ளேன். தவிர HTML இல்
Line Break ஐயும் பாவித்துள்ளேன். --உமாபதி \பேச்சு 17:48, 21 டிசம்பர் 2008 (UTC) - வார்ப்புருவில் சில மாற்றங்கள் தேவை. ஒரு சில செய்துள்ளேன். சரிபார்க்கவும். "நிறுவனம்" என்றும் "ஆக்குநர்" என்று இருத்தல் வேண்டும். "ஆக்குகையாளர்" என்பது அவ்வளவு நன்றாக இல்லை. --செல்வா 15:52, 21 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் உமாபதி:
நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையில் இருந்து நேரடியாக பங்களிப்பதற்கு மிக்க நன்றி. கணினிக் கட்டுரைகள் பல நல்ல நீண்ட கட்டுரைகள்.
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
பயிற்சி
தொகுவணக்கம் உமாபதி...ஈழத்தில் இக்கட்டான சூழ்நிலையை நன்கு அறிவேன். எனவே இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி பற்றி நான் பேச முயற்சி செய்யவில்லை. உங்களின் தொடர் பங்களிப்புக்கு மிக்க நன்றி. --Natkeeran 23:56, 16 பெப்ரவரி 2009 (UTC)
நன்றி நற்கீரன் தமிழ் விக்கிபீடியாப் பயிற்சி வழங்குதவற்குரிய சூழ்நிலை இங்கே இல்லை. ஆயினும் மின்னஞ்சல் மூலமாக முதலுதவி சம்பந்தமான கட்டுரைகளை தெரியப்படுத்துகின்றேன். மேலும் பலர் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்ப்பார்கள் என நம்புகின்றேன். --உமாபதி \பேச்சு 00:07, 19 பெப்ரவரி 2009 (UTC)
கலைச்சொற்கள்
தொகுசர்வர், எடிசன் போன்றவற்றுக்கு இணையாக வழங்கி, பதிப்பு எனப் பயன்படுத்தலாம். இயன்றவரை தமிழிழ் தருவது நன்று. விண்டோசு இயங்குதளம் என்றுதானே சொல்கிறோம். விண்டோசு ஒப்பிரேட்டிங் சிசுட்டம் என்று செல்வதில்லை. அது போல...--Natkeeran 01:35, 23 மே 2009 (UTC)
- ஆம் நற்கீரன் செய்வோம். தாமதமாகப் பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். --உமாபதி \பேச்சு 14:08, 4 ஜூன் 2009 (UTC)
- நன்றி உமாபதி...உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். முடிந்தால் பதில் தரவும். நன்றி. --Natkeeran 23:51, 4 ஜூன் 2009 (UTC)
செகண்டு லைப்
தொகுஉமாபதி, http://en.wikipedia.org/wiki/Second_Life இது உங்களின் ஈடுபாடு வட்டத்திற்குள் வரலாம். பார்க்கவும்.--கார்த்திக் 21:20, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
தென்கச்சி
தொகுஉமாபதி, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பலத்த வேலைகளுக்கு மத்தியில் இடைக்கிடை விக்கியையும் மறக்காமல் இங்கு வந்து பங்களிப்பு செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. தென்கச்சி கோ. சுவாமிநாதன் பற்றிய விரிவான கட்டுரை ஏற்கனவே இங்கு உள்ளது. நீங்கள் தென்னகச்சி கோ. சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதிய கட்டுரையை நீக்கி வழிமாற்றியிருக்கிறேன். இவரது பெயர் தென்கச்சி, தென்னகச்சி அல்ல. இதனால் தான் நீங்கள் தேடும் போது கிடைக்கவில்லைப் போல் தெரிகிறது. நன்றி.--Kanags \பேச்சு 07:18, 19 செப்டெம்பர் 2009 (UTC)
- சிறீதர் அண்ணா, தவறுதலாகத் தலைப்பை உருவாக்கி விட்டேன். சரிசெய்தமைக்கு நன்றி. இப்போது வவுனியாவில் பணிபுரிகின்றேன். சென்றவாரம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து டயலாக் இணைப்பு வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இப்போது அவ்வளவாக வசதியில்லைத்தான் என்றாலும் மாற்றுவழிகளில் முயன்று பார்க்கின்றேன். --உமாபதி \பேச்சு 15:31, 19 செப்டெம்பர் 2009 (UTC)
வாங்கோ, வாங்கோ
தொகுநல்வரவு உமாபதி. சில காலம் இடைவெளிக்கு பின்பு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
--Natkeeran 04:37, 4 டிசம்பர் 2009 (UTC)
2010 செயற்திட்டம்
தொகுஉங்களின் பணிகளுக்கு/தடங்கல்களுக்கு மத்தியில் விக்கி பக்கம் உங்களைக் காண முடிகிறது.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இலங்கையில் விக்கி பட்டறைக்கு சாத்தியம் உண்டா?
--Natkeeran 03:12, 19 டிசம்பர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:33, 18 பெப்ரவரி 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
Ati Konanayakar temple
தொகுI am in the process of writing and article on it see here. I see you have taken at least two pics and in google maps but only one is in Wikipedia, can you kindlu load the other one as well when you have time. Thanks99.247.125.133 13:35, 11 ஏப்ரல் 2010 (UTC)
- For wikipedia projects all my photos are automatically granted for reuse. If you want you can upload it. That way you can remeber easily. I mentioned this in my panoramio page. --உமாபதி \பேச்சு 07:45, 31 சூலை 2011 (UTC)
கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
Re: About your bot
தொகுHi Umapathy, Sometime back you had asked me how Ganeshbot worked. Did you complete creating those geographic articles? Regards, Ganeshk 01:33, 19 மே 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் உமாபதி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உமாபதி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:57, 25 மே 2010 (UTC)
- ரவி, தங்கள் சித்தப்படியே யான் பக்த்தை உருவாக்கியுள்ளேன். தேவையென்றால் வேண்டிய மாற்றங்களை விரும்பியவாறு செய்யவும். --உமாபதி \பேச்சு 16:55, 27 மே 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:23, 27 அக்டோபர் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் உமாபதி. மீண்டும் நீங்கள் முனைப்புடன் பங்கேற்பது கண்டு மகிழ்ச்சி. இலங்கையில் இருந்து கூடுதல் பங்களிப்பாளர்கள் வரத் தொடங்கி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த வேளையில், உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உமாபதி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 09:00, 30 திசம்பர் 2010 (UTC)
- இரவி, ஓரளவு திருத்தியுள்ளேன். --உமாபதி \பேச்சு 01:32, 31 திசம்பர் 2010 (UTC)
நன்றி உமாபதி. சுருக்கம் கருதி சற்றுத் திருத்தியுள்ளேன். தனிப்பட்ட அறிமுகம்ச் சுருக்கமாகவும் விக்கி தொடர்பில்லாத பிற ஈடுபாடுகளைத் தவிர்த்தும் எழுதுவது நன்று. விக்கியில் தங்கள் ஆர்வப் புலங்கள், நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளுக்கான இணைப்புகளை இன்னும் விரிவாகத் தந்தால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி 12:23, 3 சனவரி 2011 (UTC)
- உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியிருக்கிறேன். இன்னும் இரு வாரங்கள் முதற்பக்கத்தில் இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:46, 31 சூலை 2011 (UTC).
- நன்றி. மிகவும் மகிழ்ச்சி :).--உமாபதி \பேச்சு 07:34, 31 சூலை 2011 (UTC)
வாழ்த்துகள்
தொகுஉமாபதி, உங்களை முதற்பக்க அறிமுகத்தில் கண்டு மகிழ்ச்சி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிக்கும் ஒருவர் என்ற வகையில் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும் சிறப்பாகப் பங்களிக்க எனது வாழ்த்துகள். புகைப்படத்தையும் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் --P.M.Puniyameen 06:01, 31 சூலை 2011 (UTC)
- நன்றி புண்ணியாமின். நான் பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணம்தான் என்றாலும் அங்கு பணிபுரியவில்லை. தவிர நான் பிறந்த இடம் அரியாலையின் கிராமப்புறப்பகுதி என்பதால் ஒழுங்கான இணைய இணைப்பும் கிடையாது. ஒரு மகிழ்சியான விடயம் என்னவென்றால் பல்வேறுபட்ட இடங்களில் இருந்து பல்வேறுபட்ட இணைப்புக்கள் ஊடாக பங்களித்தமைதான். அண்மைக்காலப் பங்களிப்புக்கள் குறைவாகவே உள்ளது. இதை நிவர்த்திசெய்யவேண்டும். --உமாபதி \பேச்சு 07:34, 31 சூலை 2011 (UTC)
பயனர் புகைப்படம்
தொகுவிக்கியில் பயனர்கள் தங்களின் புகைப்படங்களை இணைக்கலாமா. அப்படி இணைக்க வேண்டுமானால் இத்தனை வருடங்கள் விக்கியில் பங்களித்திருக்க வேண்டும் என்ற வழிமுறை ஏதேனும் உள்ளதா. என் புகைப்படத்தினை இணைக்க வேண்டுமானால் நான் என்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது. கொஞ்சம் உதவவும்.
நன்றி!.
- ஜெகதீசுவரன், விக்கிப் பயனர்கள் தங்கள் புகைப்படத்தைத் தமது பயனர் பக்கத்தில் இணைப்பதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. எவ்விதப் பங்களிப்பும் இல்லாமலேயே இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 06:28, 31 சூலை 2011 (UTC)
- சிறீதர் அண்ணா, பதிலளித்தமைக்கு நன்றி
- ).
Invite to WikiConference India 2011
தொகுHi உமாபதி,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
பாமினி எழுத்துரு
தொகுவணக்கம் உமாபதி, புதிய தட்டச்சுக் கருவியில் பாமினி விசைப்பலகையை இணைப்பதற்கான உரையாடல் இங்கு இடம்பெறுகிறது. உங்கள் மேலான பங்களிப்பும் கோரப்படுகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 10:21, 14 அக்டோபர் 2011 (UTC)
இலங்கை மாவட்டங்கள்
தொகுதங்களால் பதிவேற்றப்பட்ட அருகிலுள்ள இலங்கை மாவட்டங்களின் படத்தில் கேகாலை என்பது கேகாகலை என்று தவறாக உள்ளது. மேலும் கழுத்துறை என்று உள்ளதையும் இரத்னபுரம் என்று உள்ளதையும் முறையே, களுத்துறை, இரத்தினபுரி என்று மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு, குறிப்பிடுவதே வழக்கம் ஆகும். --மதனாஹரன் (பேச்சு) 12:47, 26 மார்ச் 2012 (UTC)
- மதனாஹரன் தவற்றை சுட்டிக்காடியமைக்கு நன்றி. புதிய தேசப்படத்தை பின்னர் பதிவேற்றிவிடுகிறேன். --உமாபதி \பேச்சு 17:43, 11 ஏப்ரல் 2012 (UTC)
- SVG கோப்புமுறை ஆர்க்ஜிஐஎஸ் இல் தகராறு பண்ணுகிறது, ஒருங்குறிப்பிரச்சினையாக இருக்கக்கூடும். புதிய கோப்பு ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் தயங்காமற் குறிப்பிடவும். தமிழ்ப் பெயர்களை மைக்ரோசாப்ட் எக்ஸெலில் தட்டச்சுச் செய்து data base joint கொடுத்துள்ளேன். ஆகவே மாற்றங்கள் செய்வது இலகுவானது. வேறேதேனும் ஆலோசனைகள் இருப்பினும் தெரிவிக்கவும். --உமாபதி \பேச்சு 05:22, 18 ஏப்ரல் 2012 (UTC)
- நன்றி உமாபதி, வரைபடம் நன்றாக வந்துள்ளது. பொதுவில் தரவேற்றியது நல்லது.--Kanags \உரையாடுக 00:03, 19 ஏப்ரல் 2012 (UTC) விருப்பம் --மதனாஹரன் (பேச்சு) 01:31, 19 ஏப்ரல் 2012 (UTC)
திருமண நல்வாழ்த்துகள்
தொகுஉமாபதி, உங்களுக்கு இரு மாதங்களுக்கு திருமணம் நடந்தது என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். மிக மகிழ்ச்சியான செய்தி. எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதே இல்லறம் அமைய நல்வாழ்த்துகள். உங்கள் திருமணப் படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.--Kanags \உரையாடுக 12:13, 15 ஏப்ரல் 2012 (UTC)
Sinhala Loanwords in Tamil
தொகுHi. Could you please review http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala and add the missing Tamil equivalents to the list if possible? Thank you very much.
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த பாம்புக் கடி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 22, 2012 அன்று வெளியானது. |
- நன்றி :).--உமாபதி \பேச்சு 03:48, 24 ஆகத்து 2012 (UTC)
நன்றி
தொகுநன்றி | ||
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:35, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)
படம் தேவை
தொகுவணக்கம், உமாபதி. நலமா? நீங்கள் அவ்வப்போது வந்து விக்கிப்பணிகளில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடுவதற்காக, ஒரு தெளிவான முகப்படம் கிடைக்குமா? நன்றி--இரவி (பேச்சு) 11:42, 2 மார்ச் 2013 (UTC)
விக்கிப்பிடியர் சந்திப்பு ஏற்பாடுகள்
தொகுகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:29, 13 மார்ச் 2013 (UTC)
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், உமாபதி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
- உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
- ஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
- விக்கித்திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
தாங்கள் நாயன்மார்கள் கட்டுரைகளை தொடங்கி, மேம்படுத்தியிருப்பதனை கண்டு மகிழ்ந்தேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:24, 5 மே 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:04, 24 சூன் 2013 (UTC)
- இரவி, நேர ஏற்பாடுதான் கூடுதல் பிரச்சினையான விடயம். பணப்பிரச்சினையை கடனட்டையை வைத்தாவது தற்காலிகமாகத் தீர்த்துவிடலாம். இன்றும் அசர்பைஜான் இற்குத் துபாய் ஊடாக இவ்வாறுதான் சென்றுகொண்டிருக்கிறேன். சென்றமுறை நீங்கள் இலங்கை வந்தபோது சந்திக்க இயலாமற் போய்விட்டது. பிறிதொரு அலுவலகம் சார்ந்த நிகழ்வொன்றை நடத்தவேண்டிய எனக்குக் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் தேதியை முன்கூட்டியே (சுமார் 1மாததிற்கு முன்னராவது) தெரிவித்தால் அலுவலத்தில் அனுமதி பெற்று முயற்சிக்கிறேன். --உமாபதி \பேச்சு 16:54, 19 சூலை 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:19, 18 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுநீங்கள் பங்களித்த காமராசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பிப்ரவரி 17, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த ஆழிப்பேரலை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 29, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த முன்னேசுவரம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் டிசம்பர் 8, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
குறுங்கட்டுரை விரிவாக்க வேண்டுகோள்
தொகுவணக்கம் உமாபதி. நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் வற்றாப்பளை மகா வித்தியாலயம், கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில் ஆகிய கட்டுரைகளை மேம்படுத்தி உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 07:45, 21 மே 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் உமாபதி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)
உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை
தொகுவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:45, 4 சூலை 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:47, 8 சூலை 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
-- இரவி
தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு
தொகுஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)
விக்கிமீடியா வியூகம் 2017
தொகுதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
தொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
தொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 14:47, 18 பெப்ரவரி 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள உமாபதி,
நலமா?
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 16:08, 24 மார்ச் 2018 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்.
2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:17, 3 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
Invitation for Wiki Loves Women South Asia 2021
தொகுWiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.
We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.
Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 22:03, 18 ஆகத்து 2021 (UTC)
How we will see unregistered users
தொகுHi!
You get this message because you are an admin on a Wikimedia wiki.
When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.
Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.
If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.
We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.
Thank you. /Johan (WMF)
18:19, 4 சனவரி 2022 (UTC)
Your advanced permissions on tawiki
தொகுHello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.
You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.
If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.
If you wish to resign your rights, please request removal of your rights on Meta.
If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.
Yours faithfully.