விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்
வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஏதேனும் நிகழ்ச்சிகள் / போட்டிகள் / வேறு எதையாவது :) செய்ய முடிந்தால் நல்ல பரப்புரை வாய்ப்பாக இருக்கும். பரிந்துரைகள் தேவை. பொறுப்பேற்பவர்களும் தேவை :)--இரவி (பேச்சு) 07:32, 9 மே 2013 (UTC)
- முதன்மையான தமிழ் இதழ்களில் கட்டுரை வடிவில் இதனை குறிப்பிடலாம். தேனியார் செய்வது போல. பயனர் சந்திப்புகளை ஆங்காங்கே நிகழ்த்தலாம். நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கு பெற முடியாதவர்கள், ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவை பத்து பேருக்கு அறிமுகப்படுத்தி அவர்களை விக்கிப்பீடியா படிப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், பங்களிப்பாளர்களாகவும் ஆக்க கூடியமட்டில் உதவலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 10 மே 2013 (UTC)
- கூடிய மட்டிலும் இதனை சிறிய அளவிலாவது உலகின் பல நாடுகளிலும் விழாவாக எடுக்க வேண்டும். அதிக ஆடம்பரம் இல்லாமல், ஆனால் தமிழ் விக்கிப்பீடியா எட்டிய நிலைகளை எடுத்து இயம்புவதும், சிறு அறிமுகங்கள் செய்வதும் தகும். கிழமை, மாத இதழ்களிலும் நாளிதழ்களிலும் கூட சிறு கட்டுரைகள் எழுத வேண்டும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது. இது வெறும் புகழ்ச்சி இல்லை உண்மை. ஒரே ஓர் எழுத்தைத் திருத்தி இருந்தாலும் அவர் இந்த கூட்டாக்கத்துக்கு உதவி செய்து சிறப்பு செய்தவர் என்று போற்றத்தக்கவர். சூன், சூலை ஆகத்து ஆகிய மூன்று மாதங்கள் உள்ளதால், ஓரளவுக்குத் திட்டமிட்டு இந்த பத்தாண்டு விழாவை அழகாகக் கொண்டாடலாம். சிம்மி வேல்சு போன்ற விக்கிப்பீடியா நிறுவன முன்னோடிகளிடம் இருந்தும் வாழ்த்துரை மடல்கள் பெறலாம். நம் குறிக்கோள், இதுகாறும் எட்டிய நிலைகளை எடுத்துக்கூறி பதிவு செய்வதும், மேலும் பலருக்கும் உந்துதல் தந்து ஈடுபாடு கொள்ளச் செய்வதும் ஆகும். --செல்வா (பேச்சு) 01:28, 17 மே 2013 (UTC)
- பத்தாண்டுகளில் த.வி இன் அடைவுகளை முன்வைக்கும் விழா, தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடவும், விக்கி அறிமுகத்தைச் செய்யவும், விக்கியை மேலும் வளர்க்கவும் உதவும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். தனிப்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல், பொது அறிமுகப் பட்டறைகள், மற்றும் சந்திப்புகள், வேறு கலை இலக்கிய நிகழ்வுகளில் அறிமுகப்படுத்துதல், மற்றும் இதழ்களில் கட்டுரை வரைதல் எனப் பல்வேறுவகையிலும் பயனர்கள் பங்களிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 17 மே 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா கடந்த 10 ஆண்டுகளில் தொய்வுகள் எதுவும் இல்லாமல் ஏறுமுகமாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்பது நம்மெல்லோரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விடயம். இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இவ்வாறான வளர்ச்சியைப் பேணிவருவன மிகச் சிலவே. இதற்காக உழைத்த ஏறத்தாழ 900 தமிழ் விக்கிப்பீடியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போதைய வளர்ச்சிவிகித அடிப்படையில் பத்தாண்டு நிறைவுக்கு முன் இது 1000ஐத் தாண்டிவிடும். புதிதாக வருபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியை மேலும் முனைப்பாக முன்னெடுத்துச் செல்வது தமிழ் விக்கியைப் பொறுத்தவரை மிகவும் வரவேற்கத் தக்க விடயமாக உள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் சூழலில், இந்தப் பத்தாண்டு நிறைவை, இதுவரை நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ளவும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்துச் சிந்திப்பதற்குமான ஒரு வேளையாகப் பயன்படுத்திக்கொள்வது பயன் தரும். கூடிய அளவு விக்கிப்பீடியர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்து பேசி அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது நல்லது. தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 08:23, 24 மே 2013 (UTC)
செப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்
தொகுபாராட்டுப் பத்திரம்
தொகுகடந்த 10 ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பலரும் பங்களிப்பினை அளித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைத் தந்துள்ள 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பாராட்டுப் பத்திரம்’ வழங்கலாம். இது குறித்த சில பரிந்துரைகள்:
- ஜிம்மி வேல்ஸ் அவர்களின் கையெழுத்தினை அதில் பெற முயற்சிக்கலாம்.
- மூத்த பயனரான செங்கைப் பொதுவன் அவர்களின் கையெழுத்தை அதில் கொண்டுவரலாம்; அவருக்குரிய பாராட்டுப் பத்திரத்தில், நாம் அனைவரும் கையெழுத்தினை இடலாம்.
- பாராட்டுப் பத்திரம் ‘lamination’ செய்யப்படல் வேண்டும்.
- சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் சிறுசிறு விழாக்களின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டப் பயனர்களுக்கு இப்பத்திரத்தினை வழங்கலாம்.
- கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய, மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பயனர்களுக்கு இந்தப் பத்திரத்தினை கூரியர் தபாலில் அனுப்பலாம்.
- பாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் என்பது மறுப்பதற்கில்லை. படித்து முடிக்கும் ஒருவருக்கு பல்கலைக்கழகம் பட்டம் தரும்போது அவர் எவ்வளவு மகிழ்வார்?! எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிலரைத் தேர்ந்தெடுத்து பாராட்டுப் பத்திரம் வழங்குவர். பெரும் உவகையுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். இதற்கு பணமதிப்பு இல்லை; உங்கள் பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்!
- பங்களிப்பு என்பது பலவாறாக இருக்கலாம். சிலர் நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பர். சிலர் மென்பொருள் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பணி செய்திருப்பர். சிலர் நிறைய பயனர்களைக் கொணர்ந்து வழிகாட்டியிருப்பர். ஆக அந்த 100 நபர்களை தேர்ந்தெடுப்பது கடினமான காரியமே. விக்கிப்பீடியாவில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மயூரநாதன், ரவி, கனகரத்தினம் சிறீதரன், செல்வா, நற்கீரன், மாஹிர், மணியன், தேனி சுப்பிரமணி, அராபத் ரியாத், கலையரசி, கார்த்திக், குறும்பன் ஆகியோரைக் கொண்ட அணிக்கு இந்தப் பொறுப்பினைத் தந்துவிடலாம்!
- அந்த 100 நபர்கள் தற்போதும் தங்களின் பங்களிப்பினைத் தருபவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
- பத்திரங்களை உருவாக்கும் செலவு மற்றும் அனுப்பிவைக்கும் செலவு இவைகளை எப்படி திரட்டுவது என்பது குறித்தும் பார்க்கவேண்டும்!
- 100 என்பது ஒரு சிறப்பு எண். 10 என்றால் குறைவான நபர்களையே பெருமைப்படுத்த முடியும். எனவேதான் 100 ஐத் தேர்ந்தெடுத்தேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 25 மே 2013 (UTC)
- மே 26, சென்னை சந்திப்பில் இதைப் பற்றி உரையாடினோம். இதைப் போன்ற ஒரு "நன்றிப் பத்திரம்"பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. கண்டிப்பாக இதைச் செய்யலாம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள 59 பேரையும் இதில் உள்ளடக்கலாம். மீதம் 41 பேரை தெரிவு செய்தால் போதுமானது. இதில் யாரேனும் விடுபடுவது போல் தோன்றினால் கூடுதல் பத்திரங்களையும் தரலாம். இதில் இறுக்கமான எண்ணிக்கை தேவையில்லை. அதே போல், ஒரு தமிழ் விக்கிப்பீடியரே அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்திடாமல் அனைவருமோ இயன்ற இன்னும் ஒரு சிலருமோ கூடிக் கையெழுத்திட்டுத் தருவது, இது அனைவருக்கும் சொந்தமான திட்டம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். திட்டத்தின் உருவாக்குனர் என்ற முறையில் சிம்மி வேல்சிடம் இருந்து கையெழுத்து பெறவும் முயல்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)
//ஒரு தமிழ் விக்கிப்பீடியரே அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்திடாமல் அனைவருமோ இயன்ற இன்னும் ஒரு சிலருமோ கூடிக் கையெழுத்திட்டுத் தருவது, இது அனைவருக்கும் சொந்தமான திட்டம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். // கையெழுத்தை தமிழ் விக்கிப்பீடியர்களில் ஒருவரோ அல்லது இருவரோ கூடினால் மூன்று பேர் கையொப்பமிடுவதுதான் பொருத்தமானது. அனைவரும் கையெழுத்திடுவதோ அல்லது ஒவ்வொரு சான்றிதழிலும் ஒவ்வொருவருமோ என்று கையொப்பமிடுவது சான்றிதழாகத் தோன்றாது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:46, 17 சூலை 2013 (UTC)
//திட்டத்தின் உருவாக்குனர் என்ற முறையில் சிம்மி வேல்சிடம் இருந்து கையெழுத்து பெறவும் முயல்வோம்//
- முதலாவதாக, திட்டத்தின் உருவாக்குனர் சிம்மிவேல்சின் கையெழுத்தை உருவ நேர்படி (facsimile) ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இரண்டாவதாக, தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்குநர் என்கிற முறையில் இ. மயூரநாதன் அவர்களைக் கையெழுத்திட்டுத் தரச் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:51, 17 சூலை 2013 (UTC)
பெண்களுக்கான கட்டுரைப் போட்டி
தொகு- பத்தாண்டு நிறைவை ஒட்டி பெண்களுக்கான தமிழ் விக்கி பங்களிப்பை ஈர்க்கும் நோக்கத்தோடு 'இந்திய உணவு வகைகள்' பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை வைத்தால் என்ன? தக்கபடி ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதில் பங்கேற்க வாய்ப்புண்டு இதன் மூலம் பங்களிக்கும் பெண்களை அப்படியே ஊக்குவித்து தக்கவைத்தும் கொள்ளலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:05, 26 மே 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 27 மே 2013 (UTC)
- பெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா? எத்தனையோ ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் பெண்களாக இருக்கிறார்களே? இவர்களையும் எப்படி ஈர்ப்பது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 27 மே 2013 (UTC)
- //பெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா?// ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் இவர்களுக்கான நேரம் குறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இது போன்ற தலைப்புகளில் பொதுவாக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். நேரம் ஒதுக்கி பஙகளிக்கவும் கூடும். அதன் மூலம் அவர்களை விக்கியில் முதலில் பங்களிக்க வைக்கலாம். அப்படியே தக்க வைக்கலாம் என்றே கூறினேன். ஆனால் கண்டிப்பாக பெண்களுக்கான் ஒரு திட்டத்தை திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். யோசிங்கப்பா யோசிங்க! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:37, 29 மே 2013 (UTC)
- யோசிக்கிறேங்க யோசிக்கிறேன் :) இப்படி ஒரு போட்டியின் மூலம் நிறைய சமையல்குறிப்புகள் தான் கிடைக்குமோ என்று ஒரு அச்சம் :) பெண்களுக்கான எந்தப் போட்டியாக இருந்தாலும் பொதுவான தலைப்புகளாக இருந்தால் நன்றாக இருக்கும். உலகின் பல்வேறு துறைகளில் உள்ள பெண் ஆளுமைகளைப் பற்றி பெண்களே எழுதும் ஒரு போட்டி வைக்கலாம். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டுள்ள தொடர் கட்டுரைப் போட்டியுடன் இன்னொரு கட்டுரைப் போட்டியையும் நடத்துவது குழப்புமோ என்று தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 18:58, 29 மே 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியர் கூடல்
தொகுதமிழ் விக்கிக்கு என ஒரு மாநாடு / விக்கிமேனியா போல் செய்யலாம் என்று சஞ்சீவி சிவக்குமார், நற்கீரன் ஆகியோர் ஆலமரத்தடியில் தெரிவித்து இருந்தார்கள். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இதனைச் செய்யலாம் என்று எண்ணி பின்வரும் பரிந்துரையை முன்வைக்கிறேன்: நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு), 2013
இடம்: சென்னை
நிகழ்ச்சி நிரல்:
முதல் நாள் - செப்டம்பர் 28.
இது தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். காலை, மாலை, இரவு / பகல் தங்குமிடத்தில், உணவு இடைவேளையில் கிடைக்கும் நேரத்தில் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் நட்புறவாடவும் நேரம் இருக்கும்.
- 10.00 - 01.00 - பயனர் அறிமுகங்கள் / உரையாடல்கள் (
- 03.00 - 05.00 - தமிழ் விக்கிப்பீடியா கடந்த பத்தாண்டுகளைப் பற்றிய அலசல், அடுத்த கட்டத்துக்கான பயனர் ஆலோசனைகள்.
இரண்டாம் நாள் - செப்டம்பர் 29
- 10.00 - 01.00 - இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2K, பிற இந்திய விக்கிமீடியா திட்ட விருந்தினர்களுடன் உரையாடல். (மேற்கண்ட அமைப்புகள், திட்டங்களில் இருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் + தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தவும், பிறரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வும் நம்மிடம் இருந்து பிறர் கற்றுக் கொள்ளவும் உதவும்.)
- 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்.
சுருக்கமான தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், கட்டுரைப் போட்டிக்கான பரிசு வழங்கல், நன்றிப் பத்திரம் வழங்கல், ஊடகங்களுக்கான கேள்வி நேரம், வாழ்த்துரை / நன்றியுரை ஆகியவற்றுக்கு இதில் நேரம் ஒதுக்கலாம்.
குறிப்புகள்:
- வழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.
- பத்தாண்டுகளில் முதல் முறையாக சிறப்பாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று செய்யும் நிகழ்வு என்பதால் நிறைய பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். குறைந்தது 30 பேராவது வர வேண்டும் என்று ஒரு ஆசை. வர விரும்புவோம் முன்கூட்டியே தெரிவித்து விட்டால், வருதற்கான பயணச் செலவு / தங்கும் செலவு ஆகியவற்றுக்கும் சேர்த்து நல்கை பெறலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.
- மலையாளம், தெலுங்கு, வங்காளம் (பெரிய / சீரான வளர்ச்சியுடைய இந்திய விக்கிகள்), ஒடிசா, அசாமிய விக்கிகளில் (தொடக்க நிலையில் உள்ள ஆனால் ஓரளவு முனைப்பான சமூகம் உள்ள விக்கிகளில்) இருந்து விக்கிக்கு இருவர் என்று அவர்களே தெரிவு செய்து விருந்தினர்களாக அனுப்பி வைக்குமாறு கோரலாம். இதே போல், ஆங்கில விக்கிப்பீடியாவில் ஈடுபாடு உள்ள இந்திய விக்கிப்பீடியர்கள் இருவர், மீடியாவிக்கி நுட்பம் அறிந்து இருவர் என்று வரக் கோரலாம். இதே போல் இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2Kஇல் இருந்தும் விருந்தினர்களை அழைக்கலாம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பு / வளர்ச்சி பற்றிய நல்ல ஒரு அறிமுகத்தைத் தர முடியும் என்பதுடன் ஒருவருக்கு ஒருவர் மற்ற விக்கிகளில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நம்ம வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்டை வீட்டார், உறவினர்களை அழைப்பது போல் இதனைக் கருதலாம். ஒரு சில விக்கிகள், அதிலும் விக்கிக்கு இரண்டு விருந்தினர் மட்டுமே என்பதற்கான காரணம், நமக்கு இருக்கிற வளங்களை வைத்து தரமான ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற நோக்கில் மட்டுமே. கூட்டம் கூடும் போது செலவு, உழைப்பு எல்லாமே கூடும்.
- முடிந்த அளவு நிகழ்ச்சிக்கான இடம் / விருந்தினர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாகப் பெற முயல வேண்டும். ஏதேனும் பல்கலை / கல்லூரியின் ஆதரவு கிடைத்தால் தோதாக இருக்கும்.
- செப்டம்பர் 29, மாலை நடக்கும் திறந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அச்சடித்து பரவலான சுற்றுக்கு விட வேண்டும்.
- சென்னையில் இருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க குறைந்தது 5 தன்னார்வலர்களாவது தேவை. நிகழ்வு நடக்கும் அன்று அவரவர் நண்பர்கள் / உறவினர்களையும் அழைத்து வந்தால் ஒருங்கிணைப்பதற்கான ஆள்வளம் கிடைக்கும். --இரவி (பேச்சு) 07:27, 29 மே 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 29 மே 2013 (UTC)
- நல்ல முயற்சி. நிறைய கூட்டுழைப்பு அவசியம். விக்கித் தொழில்நுட்பம் சார்ந்தும், தமிழ் விக்கி வளர்ச்சி முன்னெடுப்புகள் சார்ந்தும் கட்டுரைகள் அமையுமாயின் சிறப்பாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:35, 30 மே 2013 (UTC)
- சென்னையில் மட்டுமல்லாது யாழ்பாணத்திலும் நடாத்த நிகழ்ச்சி நிரல் போடவும்.:) ???????? யாழ்பாணத்திலும் நடாத்தலாம்--ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)
யாழ்பாணத்தில் தான் அதிக பங்களிப்பாளர்கள் இருக்கிறார்களே? முன்னின்று நடாத்த விளம்பரம் செய்யலாம் :) --ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)
- ஆதவன், உங்கள் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்யலாம். அங்குள்ள விக்கிப்பீடியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதற்கு இது முதலாவது வாய்ப்பாகவும் அமையும். எத்தனை விக்கிப்பீடியர்கள் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அவர்களில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். இடம் ஒழுங்கு செய்தல் போன்ற பணிகளை அங்கே இருப்பவர்கள் யாராவது செய்வது தான் வசதி. வெளியில் இருப்பவர்கள் வெளியில் இருந்து செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதுடன் நிகழ்ச்சியில் பங்குபற்றவும் முயலலாம். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதில் பங்களிக்கக்கூடியவர்கள் இங்கே தமது விருப்பத்தை வெளிப்படுத்தலாம். பின்னர், இதற்காகத் தனியான பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அங்கே விரிவாகக் கலந்துரையாடலாம். --- மயூரநாதன் (பேச்சு) 17:45, 29 மே 2013 (UTC)
- மயூரநாதனின் கருத்துகளை வழிமொழிகிறேன். யாழ்ப்பாணம் / கொழும்பு அல்லது இலங்கையின் ஏதாவது ஒரு மையப்பகுதியில் நிகழ்ச்சி நடத்தினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதற்கும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் ஒரு வார இடைவெளி இருந்தால் இரு நிகழ்வுகளிலும் யாராவது கலந்து கொள்ள விரும்பினால் ஏதுவாக இருக்கும். உரிய முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு, உத்தேச செலவுகள் பற்றி தெரிவிக்க முடியுமானால், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்தே நிதி கோர முடியும்.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)
- //வழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்//
- இது நல்ல விடயம். பொதுவான கலந்துரையாடல்களோடு, தமிழ் விக்கிப்பீடியா எதிர் நோக்குகின்ற சில முக்கியமான விடயங்களை முன்னரே அடையாளம் கண்டு அவை பற்றிக் கலந்துரையாடுவதற்கும் நேரம் ஒதுக்கலாம். இது, பங்குபற்றுவோர் முன்னரே இவை பற்றிச் சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதுடன், கலந்துரையாடல்களும் கூடிய பயனுள்ளவையாக அமையும். இன்னும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் இருப்பதால், விக்கிப்பீடியர்கள் முன்னரே திட்டமிட்டுக் குறித்த நாட்களை இதற்காக ஒதுக்கி வைக்க முடியும் என்பதால், பல தமிழ் விக்கியர்கள் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 18:13, 29 மே 2013 (UTC)
- கலந்துரையாடல் தலைப்புகளை முன்பே இனங்காணலாம் என்பது நல்ல பரிந்துரை. பலரும் பங்கேற்க வேண்டும் என்பதே நான்கு மாதங்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்கான காரணம். குறிப்பாக, தமிழ்நாடு / இந்தியாவுக்கு வெளியே உள்ளோர் வந்து கலந்து கொள்வதற்கு இந்த அவகாசம் தேவை.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)
- மாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன? விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 00:56, 30 மே 2013 (UTC)
- //தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும்// என்ற கருத்து முக்கியமானது. மாநாட்டில் பலகலை மட்ட பங்களிப்பை கூட்டக் கூடியதாக சில திட்டங்களை வகுப்பது பற்றியும் யோசிக்கலாம். எ.கா: பல்கலைக் கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் பெறத் தூண்டுவது. பல்கலைக்கழக மட்டப் போட்டிகளை நடாத்தி மாநாட்டில் பரிசளிப்பது, விக்கிப்பீடியர்கள் பல்கலை மட்டத்தில் விக்கிப் பயன்பாடு பற்றி ஆய்வு செய்வது முதலானவை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:45, 30 மே 2013 (UTC)
- தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன்
- பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஊடக ஒருங்கிணைப்புக்குச் சிறப்பான கவனம் தர வேண்டும். --இரவி
- பாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் --மா. செல்வசிவகுருநாதன்
- விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது ,தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் --Natkeeran
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:33, 30 மே 2013 (UTC)
நற்கீரன்,
//மாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். //
விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் பயன் தரும் செயற்றிட்டங்கள் செய்ய வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும். அந்த வகையிலே தான் தற்போது நடைபெறும் தொடர் கட்டுரைப் போட்டியைத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், போட்டிகளை நடத்துவதை மட்டுமே நம்முடைய ஒற்றைச் செயற்றிட்டமாக கொள்ள இயலாதே? திட்டங்களின் தன்மை, நோக்கத்துக்கேற்ப செலவும் உழைப்பும் விளைவும் மாறுபடும் அல்லவா? 2010 கட்டுரைப் போட்டிக்குச் செலவே இல்லை. ஆனால், கடும் உழைப்பைக் கோரியது. வந்த விளைவு என்ன என்று உடனடியாக அலசியிருந்தோம் என்றால் நிறைவான பதில் கிடைத்திருக்காது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா மைல்கற்களைத் திரும்பிப் பார்த்தால் 2010க்குப் பிறகு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறோம். எனவே, விளைவு என்ன என்பதை முன்கூட்டியே உறுதியாக அறுதியிடுவது என்பது பொருத்தமாக இருக்காது.
//பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன? விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. //
முழுக்க முழுக்க இணையத்திலேயே செயற்படும் திட்டங்கள் பலவும் ஆண்டுக்கு ஒரு முறையோ அவ்வப்போதோ நேரில் கூடி உரையாடுவது வழமை தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பொருட் செலவில் இந்திய விக்கிப்பீடியா மாநாடு நடந்தது. செய்த செலவுக்கும் உழைப்புக்கும் ஏற்ற விளைவு கிடைத்ததா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், அதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறிய விக்கிப்பீடியாக்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைத்தது என்று தெரிய வருகிறது. மலையாள விக்கிப்பீடியர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே விக்கி சங்கமம் நடத்தி வருகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை, விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டங்கள், பட்டறைகளுக்குக் கூட பெரும் உழைப்பைச் செலுத்துகிறோம். அதனால் என்ன பயன் என்று கேட்டால், நேரடிப் பயன் குறைவு தான். ஆனால், இதன் மூலம் புதிய பயனர்கள் வருகிறார்களோ இல்லையோ ஏற்கனவே உள்ளவர்கள் சந்தித்து உரையாடுவதன் மூலம் ஒரு வகை புரிந்துணர்வு வருகிறது. இளைய, புதிய விக்கிப்பீடியர்களுக்கு நம்பிக்கை கூடி மேலும் பல புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த வகையில் ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா சமூகத்தின் பிணைப்புக்கு நேரடிச் சந்திப்புகள் பெரிதும் உதவுகின்றன என்று உறுதியாக கூற முடியும். கடந்த பத்தாண்டுகளில் பல இடங்களில் இருந்து அரிய பங்களிப்புகளைச் செய்த அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது என்பது மிகுந்த பயனைத் தரும் என்றே உறுதியாக நம்புகிறேன்.
இந்த மாநாட்டு ஏற்பாட்டைப் பொறுத்தவரை, செலவும் உழைப்பும் தான் பிரச்சினை என்றால், அதனை எப்படிச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வோம் என்று பார்ப்போம். மற்ற பல விக்கிப்பீடியாக்களும் செய்யக்கூடிய வகையில் ஒரு எடுத்துக்காட்டாக அமையுமாறு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். இரண்டு நாட்கள் செய்வது சிக்கலாக இருந்தால், ஒரே நாளில் செய்வது போன்றும் நிகழ்ச்சி நிரலை மாற்றலாம். ஆனால், மாநாடுகளின் வெற்றி என்பது மாநாட்டு உரைகளுக்கு வெளியே கூடும் உரையாடல்களினால் தான் என்பதால், இது விக்கிப்பீடியர்கள் தங்களிடையே கூடிப் பேசுவதற்குப் போதுமான நேரத்தைத் தராது என்று நினைக்கிறேன்.
//தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். //
பயன் தரும் என்பது உண்மை தான். ஆனால், அதற்கான ஒருங்கிணைப்பு / பரப்புரையைச் செய்ய தற்போது நமக்கு நேரமும் ஆள்வளமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்னொன்று உழைப்பும் செலவும் கூடும். இந்த அடிப்படையிலே தான் விக்கிப்பீடியர்களுக்கு மட்டுமான ஒரு நிகழ்வாகவேனும் செய்வோமே என்று எண்ணினேன்.
- இரவி சொல்வதுபோல் செலவு, நேர உள்ளீடு அதிகம் ஆயினும் மாநாடுகளில் சந்தித்து ஒருவருக்கொருவர் பகர்வுகளைச் செய்வது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நீடித்த தனியாள் தொடர்புகளையும் அது வளர்க்கும். இத்தகைய தொடர்புகள் விக்கி வளர்ச்சிக்கு உறுதுணை பண்ணும் என்பது எனது கருத்து. நேரடியான முன்வைப்புகள், தொழில்நுட்ப அறிவூட்டம் நமக்குள் அவசியம் எனப்படுகின்றது. அதற்காகவே ஒரு நாளை முழுமையாக ஒதுக்குவது மற்றது. நிதி மற்றும் நேர திட்டமிடல் அவசியம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:41, 17 சூன் 2013 (UTC)
விக்கிப்பீடியர்களுக்கு இடையேயான சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை ஒழுங்கு செய்வதே நல்லது என்பது எனது கருத்து. மாநாட்டு நேரத்தில் பயனர்களுக்கு அதிக வேலைப் பழுவை ஏற்படுத்திக் கொள்ளாமல் கலந்து பேசுவதற்கு அதிகமான நேரத்தை உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்துவது பயனுள்ளது. இரண்டு நாட்களில் ஒரு நாளை சென்னைக்கு வெளியே சற்றுத் தொலைவில் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் கூட வைத்துக்கொள்ளலாம். ஒன்றாகவே ஒரு வண்டியை ஒழுங்குபடுத்திச் சென்று வரலாம். இடங்களைச் சுற்றிப்பார்த்தல், ஒளிப்படங்கள் எடுத்தல் போன்றவற்றுக்கும் ஓரிரு மணி நேரங்களைச் செலவிடலாம். 2010 விக்கிமேனியா மாநாட்டுக்குச் சென்றிருந்தபோதும், அண்மையில் வேறொரு மாநாட்டுக்காக இலண்டன் சென்றிருந்தபோதும் இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய பயன்களை நேரடியாகக் கண்டிருக்கிறேன். நீண்டகாலம் நினைவில் இருக்கக்கூடியவற்றை ஒன்றாகப் பகிர்ந்து அனுபவிப்பது பயனர்களிடையே நீண்டகாலப் புரிந்துணர்வுக்கும் அடிப்படையாக அமையக்கூடும். ---மயூரநாதன் (பேச்சு) 19:30, 17 சூன் 2013 (UTC)
- செப்டம்பர் மாதத்தில் மாநாடு நடத்துவதாயின் இப்பவே திட்டமிட்டு செயற்பட வேண்டும். நிதிவளம் கோருவதில் கால அவகாசம் தேவைப்படலாம். மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் என... பத்தாண்டு நிகழ்வுகள் குறித்து பல்வேறு இடங்களிலுமான உள்ளூர் சந்திப்புகள், பட்டறைகள், போட்டிகள் குறித்தும் கவனம் செலுத்துவோம். இலங்கையில் மட்டக்களப்பு, மலையகம், யாழ்ப்பாணம் என்பவற்றில் விக்கி அறிமுகப் பட்டறைகலை நடாத்துவது மற்றும் உள்ளூர் சிற்றிதழ்களில் த.வி குறித்த கட்டுரைகள் என்பவற்றை எழுதுதல் என்பனவும் பரப்புரையாக செய்யலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:25, 18 சூன் 2013 (UTC)
மயூரநாதனின் பரிந்துரை பிடித்திருக்கிறது. சென்னைக்கு அருகிலான வரலாற்று / பண்பாட்டு முக்கியத்துவம் உள்ள இடம் எனில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகியன போய் வரும் தூரத்தில் உள்ளன.--இரவி (பேச்சு) 06:50, 20 சூன் 2013 (UTC)
விருப்பம் -- சுந்தர் \பேச்சு 07:02, 20 சூன் 2013 (UTC)
- விருப்பம் அருமையான எண்ணங்கள்! :) --செல்வா (பேச்சு) 12:43, 24 சூன் 2013 (UTC)
மயூரநாதனின் பரிந்துரை பிடித்திருக்கிறது. விருப்பம்--Yokishivam (பேச்சு) 10:44, 5 சூலை 2013 (UTC)
- நிகழ்ச்சிக்கு நாம் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கை தேர்வு செய்யலாமே. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு விக்கிப்பீடியா மீது ஆர்வம் வருமே.மிக அருமையான நூலகம். - Vatsan34 (பேச்சு) 15:58, 8 செப்டம்பர் 2013 (UTC)
- நல்ல பரிந்துரை, வத்சன். நிகழ்வுக்கான இடம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு, மூன்று இடங்களில் அணுகியிருக்கிறோம். இயன்றால் விலையற்றுப் பெற்றுக் கொள்வது, காலையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வகுப்பறைகள் இருப்பது, projector - இணையம் வசதி இருப்பது, அருகிலேயே விலை குறைவான தங்குமிட வசதி இருப்பது என்று பல வகைகளில் பார்க்க வேண்டியுள்ளது. வரும் வாரத்தில் நிகழ்வு இடத்தை இறுதி செய்வோம். நூலகத்தில் நிகழ்வு நடத்துவதற்கான வாய்ப்பையும் பார்ப்போம்.--இரவி (பேச்சு) 17:36, 8 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்ச்சிக்கு நாம் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கை தேர்வு செய்யலாமே. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு விக்கிப்பீடியா மீது ஆர்வம் வருமே.மிக அருமையான நூலகம். - Vatsan34 (பேச்சு) 15:58, 8 செப்டம்பர் 2013 (UTC)
கலந்து கொள்வோர்
தொகுஇந்தக் கூடலில் எத்தனைப் பேர் கலந்து கொள்ள விரும்புகிறார்கள், எங்கிருந்து வர இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள், இருப்பிடம் / பயணச் செலவுக்கான தேவை என்ன என்பதை உடனடியாக அறிந்தால் தான் திட்டத்தை இறுதி செய்து முன்னெடுக்க முடியும். உங்கள் தேவைகளைக் கீழே தெரிவியுங்கள்.
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். ஓரிரு நாள் முன்பாக சென்னை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க முடியும். பயணச் செலவு தேவையில்லை. அனைத்து விக்கிப்பீடியரும் ஒரு இடத்தில் தங்குவது போன்ற ஏற்பாடு இருந்தால், அறையைப் பகிர்ந்து கொள்ள விருப்பம். --இரவி (பேச்சு) 07:04, 20 சூன் 2013 (UTC)
நான் சென்னையில் இருப்பதால் இரண்டு நாட்களும் கலந்துகொள்ள இயலும்; செலவுக்கான தேவை எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 20 சூன் 2013 (UTC)- இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. -- சுந்தர் \பேச்சு 14:49, 20 சூன் 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். தேவையாயின் ஒருநாள் முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:10, 21 சூன் 2013 (UTC)
- கலந்துகொள்ள விருப்பம். உதவித்தொகை தேவையில்லை. ஒன்றாகத் தங்குவதற்கும் விருப்பமே எனக்குரிய தங்கும் செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன். ---மயூரநாதன் (பேச்சு) 09:11, 22 சூன் 2013 (UTC)
- மலேசியாவில் இருந்து நானும் என் மனைவியும் கலந்து கொள்கிறோம். உறுதிப்படுத்துகின்றோம். விமானப் பதிவை நாளை செய்து விடுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வருகிறோம். என் மனைவி ருக்குமணிக்கு பார்வதி ஸ்ரீ துணையாக இருக்க வேண்டும். திருச்சியில் எங்களின் வழித்தோன்றல்கள், சொந்த பந்தங்கள் இருக்கின்றார்கள். இனிமேல்தான் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தாய்மண்ணில் எங்கள் பாதங்கள் படுவது பெருமை அல்ல. ஒரு பெரிய புண்ணியம்.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 06:03, 22 சூன் 2013 (UTC)
- ஒரு நாளாவது கலந்து கொள்கிறேன். உதவித்தொகைத் தேவை இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 12:28, 22 சூன் 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:50, 23 சூன் 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை. சென்னைப் புறநகரில் இருப்பதும், எதிர்பாராத வேலைகளும் தவிர நிகழ்ச்சி முன்னேற்பாடுகளில் பங்கெடுக்க வேறு தடைகளில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 17:25, 23 சூன் 2013 (UTC)
- நானும் எனது மகள் பயனர் அபிராமியும் கலந்துகொள்கிறோம். இருவருக்குமான உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 23 சூன் 2013 (UTC)
- கண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன். முன்னதாக வந்து மாநாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபடுவது சற்று கடினம். உதவித் தொகை தேவைப்படாது.--அராபத் (பேச்சு) 07:56, 24 சூன் 2013 (UTC)
- என் நிலை அறிவீர்கள். என் மனைவி துணையுடன் வந்தாக வேண்டும். இருவரும் வருகிறோம். உதவித்தொகை வேண்டாம். தங்குமிடம் தேவை. இரு நாட்களும் இருக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 12:28, 24 சூன் 2013 (UTC)
- நான் கலந்து கொள்வதில் ஆவலாய் உள்ளேன். எத்திகதிகளில் நடத்த ஏற்பாடாகிறது என்பதை முற்கூட்டியே தெரிவித்தால் நலம். இந்திய விசா எடுத்து வைத்துக் கொள்வதுநலமென நினைக்கிறேன். கொழும்பில் நடைபெற்ற விக்கிப்பீடியர் சந்திப்புக்கு வரலாம் என்றிருந்த போதிலும் அதற்கு முந்திய நாளிற்றான் இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்ததால் மிகவும் களைப்படைந்திருந்தேன். ஆதலினாற் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்விற் கலந்து கொண்டு இந்தியப் பயனர்கள் பலரையும் கண்டு, பேசி மகிழலாம் என நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:47, 24 சூன் 2013 (UTC)
- நானும் எனது மகன் கிருஷ்ணபிரசாத் ம் இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம் . உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--ஸ்ரீதர் (பேச்சு) 13:06, 24 சூன் 2013 (UTC)
- சென்னைவாசி என்பதால் உதவித்தொகை இல்லாமலேயே கலந்து கொள்கிறேன். அத்துடன் நான் சைதையில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வாடகை வீட்டில் வசிக்கிறேன். தங்குமிடம் தேவைப்படும் வெளியூர் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறேன். மூன்றாவது மாடி என்பதால் மூட்டு வலியில்லாத வெளியூர் விக்கிப்பீடியருக்கு ஏற்றதாக இருக்கும். அன்னையுடன் வசிப்பதால் வீட்டுச் சாப்பாடும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். :-) இருவர் தாராளமாக தங்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 24 சூன் 2013 (UTC)
- இருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --அரிஅரவேலன் (பேச்சு) 01:46, 25 சூன் 2013 (UTC)
இருநாளும் கலந்துகொள்கிறேன்.--ツ கிருஷ்ணாபேச்சு 03:05, 25 சூன் 2013 (UTC)- கண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.ஹிபாயத்துல்லா
- இரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--V.B.Manikandan (பேச்சு) 02:32, 27 சூன் 2013 (UTC)
- இருநாட்களிலும் பங்குபெற விருப்பம்.உதவித்தொகை வேண்டாம்.தமிழ் ஆர்வலர்களை காண வாய்பினை உருவாக்கிக் கொடுப்பதே நல்ல பயனுள்ள செயலாகும்.முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். அருண்தாணுமாலயன்
- இரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் நன்று.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 07:14, 28 சூன் 2013 (UTC)
- இருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--வெண்முகில் (பேச்சு) 10:14, 29 சூன் 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:42, 30 சூன் 2013 (UTC)
- கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு, தேவையாயின் இருநாட்கள் கூட முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் முடியும்--Yokishivam (பேச்சு) 16:14, 4 சூலை 2013 (UTC).
- இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. செப்டம்பர் 10-25 வரை இந்தியாவில் இருப்பேன். --கார்த்திக் (பேச்சு) 21:52, 4 சூலை 2013 (UTC)
இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவையில்லை.--கோ. புண்ணியமூர்த்தி (பேச்சு) 17:52, 5 சூலை 2013 (UTC)- ஒரு நாளாவது கலந்து கொள்வேன். உதவித் தொகை தேவையில்லை. --சிவக்குமார் \பேச்சு 22:10, 14 சூலை 2013 (UTC)
- இரண்டு நாளும் கலந்துகொள்ள இருக்கின்றேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. --செல்வா (பேச்சு) 15:54, 15 சூலை 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித் தொகை தேவை இல்லை. கோவையிலிருந்து இணைந்து பயணிக்க யாரும் விருப்பப்பட்டால் இணைந்து கொள்ளுங்களேன்!. --மாயவரத்தான் (பேச்சு) 03:06, 16 சூலை 2013 (UTC)
- கலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை.--பரிதிமதி (பேச்சு) 04:31, 20 சூலை 2013 (UTC)
- கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். விக்கிப்பீடியர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பாயிற்றே. உதவித்தொகை தேவையிருக்காது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:31, 30 சூலை 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவையில்லை --அஸ்வின் (பேச்சு) 07:24, 3 ஆகத்து 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்து கொள்வேன். சென்னையில் இருப்பதால் உதவித்தொகை தேவை இருக்காது. --கோ.சந்திரசேகரன் (பேச்சு) 06:04, 8 ஆகத்து 2013 (UTC)
- இரு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவை இல்லை. --சௌந்தர மகாதேவன் (பேச்சு) 14:37, 10 ஆகத்து 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இரு நாட்களும் எனது நண்பர் முனைவர் த.சுதாகர் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளார். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 15:33, 17 ஆகத்து 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இரு நாட்களும் எனது நண்பர் முனைவர் துரைமணிகண்டனுடன் நான் கலந்துகொள்ள இசைவு தெரிவிக்கின்றேன். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--சி. சிதம்பரம், முது முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி- 3. செல் நம்பர் : 9843295951 (பேச்சு) 16:31, 19 ஆகத்து 2013 (UTC)
- தமிழ் விக்கிபீடியாவில் பயனராகப் ( rssairam ) பயணத்தைத் துவக்கியுள்ளேன். சென்னையில் இருப்பதால் கலந்து கொள்வதும் எளிது. நிகழ்ச்சி விபரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீதரன், முனைவர் துரை மணிகண்டன் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டேன். நிகழிடம் காலம் நேரம் தனியாகத் தெரிவிப்பீர்களா? தொடர்பு எண் 9444297788. மின்னஞ்சல்: rssairam99@gmail.com இரண்டு நாட்கள் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்கின்றேன்.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 04:12, 25 ஆகத்து 2013 (UTC)i
- இரு நாட்களும் கலந்து கொள்கின்றேன்.தங்குமிடம் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன்.பயண பிற செலவுகளுக்கு உதவித்தொகை கிடைத்தால் நன்று.முத்துராமன் (பேச்சு) 12:03, 7 செப்டம்பர் 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். பயண உதவித் தொகைகள் தேவையில்லை. அனைத்து விக்கிப்பீடியரும் ஒரு இடத்தில் தங்குவது போன்ற ஏற்பாடு இருந்தால், அறையைப் பகிர்ந்து கொள்ள விருப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:13, 7 செப்டம்பர் 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். ஓரிரு நாள் முன்பாக சென்னை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க முடியும். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --Hareesh Sivasubramanian (பேச்சு) 20:14, 7 செப்டம்பர் 2013 (UTC)
- இரண்டு நாளும் கலந்துகொள்ள இருக்கின்றேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை.- Vatsan34 (பேச்சு) 15:55, 8 செப்டம்பர் 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன்.தங்கும் இடம் தேவை.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:05, 10 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம். உதவித்தொகை வேண்டும். அத்தொகைக் கிடைப்பின், மேலும் சில நாள் தங்கி பொதுவகத்திற்காக, சென்னையின் சில முக்கிய இடங்களை படமெடுக்க எண்ணியுள்ளேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:42, 13 செப்டம்பர் 2013 (UTC)
- இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். தங்குமிட வசதி தேவை. விஜயராணி
கலந்து கொள்வோர் (உறுதி இல்லை)
தொகு- கலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. விடுப்பு, தனிப்பட்ட வேலைகள் இடையூறாக வரலாம். உதவித்தொகை தேவை இல்லை. சென்னையில் யாராவது வழிகாட்ட முடிந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:23, 21 சூன் 2013 (UTC)
- கலந்து கொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது உறுதியில்லை. காடாறுமாதம் ஏகவில்லை எனில் கலந்துகொள்ள உதவித்தொகை அல்லது இருப்பிடம் தேவையில்லை.--மணியன் (பேச்சு) 09:28, 22 சூன் 2013 (UTC)
செப்டம்பரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது (70-80%) ஆனால் உறுதியில்லை. உதவித்தொகை வேண்டாம். செப்டம்பரில் எனக்கு வகுப்புகள் கிடையாது, எனவே இயலும். --செல்வா (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)- கலந்து கொள்ள விருப்பம். செப்டம்பர் முற்பகுதியில் தெரிந்துவிடும். உதவித்தொகை தேவை இல்லை. --Anton (பேச்சு) 13:57, 24 சூன் 2013 (UTC)
- விருப்பம். விடுப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தங்குமிடம் உள்ளது. உதவித்தொகை தேவையில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:09, 25 சூன் 2013 (UTC)
- கலந்துகொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவையில்லை.--Booradleyp1 (பேச்சு) 13:27, 26 சூன் 2013 (UTC)
- தமிழ் விக்கி மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் விருப்பம், எனினும் பல சூழ்நிலைகள் இடையூறை ஏற்படுத்துகின்றன. புதிதாகக் கனடாவில் குடியேறியபடியால் இங்கிருந்து இந்தியா வருவதற்குரிய பயணச்செலவுகள் உட்பட நேரமின்மை போன்ற சில சூழல்கள் உகந்ததாக அமையவில்லை. மாநாடு நிகழும்போது இசுகைப்பில் ஒளிபரப்பு நிகழ்ந்தால் கலந்து கொள்ளாதோர் பார்க்கலாம். (பத்தாண்டு நிறைவு நாளையிட்ட வேறு ஏதேனும் பணிகள் [படிம வேலைகள், இணைய பரப்புரைகள் போன்றவை] செய்யக் காத்திருக்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 23:36, 26 சூன் 2013 (UTC)
- கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன், எனினும் ஏதும் தனிப்பட்ட வேலைகளினால் இதற்கு இடையூறு ஏற்படுமோ தெரியவில்லை, உதவித்தொகை கிடைத்தால் கிடைத்தால் நன்று--சங்கீர்த்தன் (பேச்சு) 05:51, 28 சூன் 2013 (UTC)
- ஆகத்து மாதத்தில் இருவார விடுமுறையில் ஊர் வருவதால், மீண்டும் செப்டம்பரில் அங்கு வருவது பற்றி உறுதியில்லை. இணையவழியில் கலந்து கொள்ள முடியும். --மாகிர் (பேச்சு) 10:40, 28 சூன் 2013 (UTC)
- கலந்து கொள்ள விருப்பம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இயலாமல் உள்ளது. வேறு வகைகளில் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 11:27, 29 சூன் 2013 (UTC)
- கலந்து கொள்ள மிக விருப்பம். பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் சற்று தயக்கம். உதவித்தொகை(பயணச்செலவு/தங்குமிடம்) கிடைத்தால் நன்று. உதவித்தொகை உறுதிப்படுத்தப்பட்டால் கலந்துகொள்ள என்னாலியன்றளவு முயற்சிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 05:56, 5 சூலை 2013 (UTC)
- நல்ல முயற்சி. நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது. சில வார விடுப்பில் வந்து ஆக.5 வரையில் மட்டுமே ஊரில் இருப்பேன். --இரா. செல்வராசு (பேச்சு) 12:20, 7 சூலை 2013 (UTC)
- அலுவலகப் பணிகளில் இடையூறு இல்லாவிட்டால் நானும் மனைவியும் கலந்து கொள்ளலாம் என இருக்கிறேன். இது குறித்து பின்னர் நிலையை அறிவிக்கின்றேன். --உமாபதி \பேச்சு 16:59, 19 சூலை 2013 (UTC)
- கலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. - வைகுண்ட ராஜா (பேச்சு) 03:55, 28 சூலை 2013 (UTC)
- கலந்து கொள்ள விரும்பினாலும் கல்லூரிச் செய்முறைத் தேர்வுகள் அச்சமயத்தில் வருவதால் இயலாததாகிவிட்டது. வர முடியாதது வருத்தமளிக்கிறது. - Praveenskpillai (பேச்சு) 02,ஆகத்து, 2013 (UTC)
- நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது.--நந்தகுமார் (பேச்சு) 08:03, 3 ஆகத்து 2013 (UTC)
- அருமையான இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்கியர்களின் நேர் அறிமுகம் பெற்றிடவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் பேராவல் தான். பணிப்பளுதான் இடம் தரவில்லை. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறி, தமிழ் விக்கி புத்துணர்வு பெற்றிட உளமார வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 02:19, 23 ஆகத்து 2013 (UTC)
- அலுவலகப் பணிகளில் இடையூறு இல்லாவிட்டால், கண்டிப்பாக கலந்து கொள்வேன். சென்னையில் இருப்பதால், தங்குமிடமும் நானே பார்த்துக் கொள்கிறேன்.--ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 15:05, 07 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது --கலாநிதி 14:48, 23 ஆகத்து 2013 (UTC)
- கலந்து கொள்ள மிக விருப்பம். ஆனால் அலுவலகப் பணியினாலோ அல்லது பணியின் பொருட்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தாலோ கலந்துகொள்ள இயலாமல் போகலாம். தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை(என் வருகை குறித்து செப்டம்பரில் நிகழ்விற்கு முன்னதாக உறுதியாக கூறிவிடுகிறேன்). அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:23, 27 ஆகத்து 2013 (UTC)
- இரண்டாம் நாள் - செப்டம்பர் 29 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு கலந்து கொள்ள விருப்பம் தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை --ツ கிருஷ்ணாபேச்சு 12:07, 17 செப்டம்பர் 2013 (UTC)
- கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கிறேன். பயிற்சி வகுப்புகள் இருப்பதால் சனியன்று வர இயலாது. வேலைகள் ஏதும் இல்லையெனில், ஞாயிறன்று கட்டாயம் வருகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:47, 17 செப்டம்பர் 2013 (UTC)
கூடல் ஏற்பாடுகள்
தொகுநிறைய பேர் கூடலில் கலந்து கொள்ள விரும்புவது குறித்து மகிழ்ச்சி. இதற்கான நிதி ஆதாரம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். அந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு இற்றைப்படுத்துகிறேன்.--இரவி (பேச்சு) 07:17, 1 சூலை 2013 (UTC)
- ரவி, முதல் வரைவை எழுதி இங்கு பகிருங்கள். பிற பயனர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஓரளவு திட்டங்கள் முழுமையான/உறுதியான பின்புதான் செலவுகள் தெளிவுபெறும். சோடாவின் கருத்துக்கள் இங்கு முக்கியம். அவருக்கு அவர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள், எப்படி எழுத வேண்டும் என்று மிக நுட்பமாகத் தெரியும். --Natkeeran (பேச்சு) 13:29, 4 சூலை 2013 (UTC)
- கண்டிப்பாக சோடாபாட்டிலுடன் கலந்து பேசி, முதல் வரைவை இங்கு இட்டு தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் ஒப்புதல் பெற்றுத் தொடர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:24, 5 சூலை 2013 (UTC)
நிகழ்ச்சி நிரல் தொடர்பான சில எண்ணங்கள்
தொகுநிகழ்ச்சி நிரல் தொடர்பான ரவி, மயூரநாதன் ஆகியோரின் பரிந்துரைகள் சிறப்பாகவே இருக்கின்றன. முறைசாரா என்பதும் பெரும்பாலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையே. கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கருத்துதிர்ப்பு session ஒன்றை வைத்தால் சிறப்பாக இருக்கும். ஒரு அனுபவம் மிக்கவர் வழிகாட்டக் கூடியதாக இருந்தால் நன்று. குறிப்பான எதாவது பட்டறைகள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. பின்வருவற்றுக்கு போதிய ஈடுபாடு இருந்தால் ஒழுங்கு செய்வது பற்றி எண்ணலாம்.
- தமிழ் எழுத்துப் பயிற்சி
- ஒளிப்படவியல் (சிறந்த ஒளிப்படங்கள் எடுப்பது தொடர்பான ஒரு session)
- வரைகலை (எ.கா தமிழில் விபரணப் படங்களை எ.கா மென்பொருள் கொண்டு உருவாக்குவது எப்படி?)
- மீடியாவிக்கி/நிரலாக்கம் (இதை லினக்சு/கட்டற்ற ஆர்வலர்கள் உதவியுடன் செய்யலாம்)
- விக்கியில் பங்களிப்பு - நேரடிப் பயற்சி
- பிற
--Natkeeran (பேச்சு) 05:31, 20 சூலை 2013 (UTC)
இற்றை
தொகுதமிழ் விக்கிப்பீடியர் கூடல் தொடர்பான செய்திகளை அவ்வப்போது இங்கு இற்றைப்படுத்துகிறேன்.
- செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நிகழ்வு நடப்பது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, முன்கூட்டியே பயணச் சீட்டுகளை பதிவு செய்ய விரும்புவோர் விரைவது நல்லது.
- நிகழ்வு நடக்கும் இடம் தொடர்பாக இரண்டு மூன்று அமைப்புகளிடம் பேசி வருகிறோம். குறிப்பாக, பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வளாகத்தில் நடத்த முற்படுகிறோம். இடம் உறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.
- பயண உதவித் தொகையை நிகழ்வில் கலந்து கொள்ளும் அன்று தருவதே நடைமுறைக்கு இலகுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தியாவில் இருந்து கலந்து கொள்வோர் பன்னிருவருக்கும், இலங்கையில் இருந்து கலந்து கொள்வோர் இருவருக்கும் மட்டுமே நல்கை தொகை வேண்டியிருப்பதால் கூடுதலானவருக்கு உதவி தேவைப்படும் போது பங்களிப்புகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கலாம். இதற்கான முறையான உதவித் தொகை வேண்டல் பக்கம் பிறகு தனியாக உருவாக்கப்படும்.
- தங்குமிடத்துக்கான உதவித் தொகை நேரடியாக விடுதியின் உரிமையாளரிடம் செலுத்தப்படும். எனவே, இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. விடுதிச் செலவைப் பொருத்து எத்தனை அறைகள், எத்தனை பேர் தங்கலாம் என்று குறிப்பிட இயலும். நிகழ்ச்சி இடம் முடிவான பின், அதற்கு அருகாமையில் உள்ள விடுதியாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இது குறித்த தகவலையும் விரைவில் இற்றைப்படுத்துகிறேன்.
வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கு குறிப்பிடலாம். அல்லது, என் மின்மடல் ravidreams at gmail dot com என்பதற்கு எழுதலாம். நன்றி.--இரவி (பேச்சு)
- தமிழ் விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வுக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டமிடுதலுக்கு முன்பாகவே உறுதி செய்த அனைவருக்கும் (இந்தியா (12) + இலங்கை (2)) பயண உதவித்தொகை அளிப்பதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். புதிதாகப் பயண உதவித்தொகை கோரியிருப்பவர்கள் அனைவருக்கும் பிற செலவுகளில் ஏதாவது ஒன்றைக் குறைத்துக் கொண்டு கலந்து கொள்வதற்கான பயண உதவித்தொகை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பங்களிப்புகளின் அடிப்படையில் முன்னுரிமை என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 11 செப்டம்பர் 2013 (UTC)
- 12+2 என்பதில் மாற்றம் இருக்காது. இன்னும் கூடுதலானோர் விண்ணப்பித்தால் இயன்றவரை உதவ முனைவோம். விக்கிமீடியாவிடம் பணம் பெறும்போது இன்ன காரணத்துக்கு இவ்வளவு செலவு என்று குறிப்பிட்டே வாங்குகிறோம். செலவு மாறும்போது அதற்கான முன் ஒப்புதலும் பெற வேண்டும். உதவித் தொகையை எவ்வாறு அளிப்பீர்கள் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினார்கள். பங்களிப்புகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றே பதில் அளித்துள்ளேன். ஏனெனில், அதுவே வழமையான நடைமுறை. திட்டமிடுதலுக்கு முன்பே வருகையை உறுதி செய்தவர்கள் திட்டமிடலுக்கும் நிதித் தேவை பற்றிய மதிப்பீட்டுக்கும் உதவியாக இருந்தார்கள். பங்களிப்புகள் அடிப்படையில் பார்த்தாலும் அவர்களில் பெரும்பாலானோருக்கு உதவித் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், இப்போதே எதையும் உறுதி கூற இயலாததற்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:15, 11 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்வதற்கு உதவித்தொகை கொடுக்க முடியாமல் இருப்பது தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். நிதித்தேவையைக் கணக்கிடுவதற்கு முன்பே முழுத்தகவல்களும் கிடைத்திருந்தால் நல்லதுதான், ஆனாலும், உரிய நேரத்தில் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படுவது எதிர்பார்க்கக்கூடியதுதான். முன்னைய கணக்குப்படி உதவித்தொகைக்காக INR 74,400 கேட்டிருக்கிறோம், கூடுதலாக அதிகம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். வேறு வழியில் சரிசெய்யப் பார்க்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 18:58, 11 செப்டம்பர் 2013 (UTC)
- மயூரநாதனின் கருத்துக்கு உடன்படுகின்றேன். உதவித் தொகை கோரியபின் தனது பயண முடிவில் மாற்றம் ஏதும் இருப்பின் அத்தகைய பயனர்கள் தெரியப்படுத்துவது இதுகுறித்து முடிவெடுக்க வாய்ப்பாகலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:26, 12 செப்டம்பர் 2013 (UTC)
யாழ்ப்பாணப் பட்டறை
தொகுஏன்? மாணவர்கள் கட்டுரைப்போட்டி என்றால் விரும்பமாட்டார்கள் தான். ஆனால் விகிபீடியாவால் நடாத்தப்பட்டால் சிறப்பாக வருவார்கள். இவ்வாறு ஒன்று நடாத்தலாமே?--ஆதவன் (பேச்சு) 13:56, 29 மே 2013 (UTC)
- கட்டுரைப்போட்டியாக இல்லாவிடிலும் பட்டறை,விக்கி பங்களிப்பு போன்ற பல்வேறு வழிகளில் செய்யலாமே?--ஆதவன் (பேச்சு) 14:46, 29 மே 2013 (UTC)
- ஆதவன், 2010ல் உலகம் தழுவிய கட்டுரைப் போட்டி நடத்தினோம். அதில் மாணவர்களை ஈர்க்க பெரும் முயற்சி செய்தோம். ஆனால், அது உரிய பலனைத் தரவில்லை. அதில் இருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பட்டறை, விக்கி பங்களிப்பு என்று பல வகையிலும் மாணவர்களை ஈர்ப்பது அவசியம் தான். எப்படிச் செய்யலாம், என்ன திட்டங்கள் வகுக்கலாம் எனபதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:01, 29 மே 2013 (UTC)
- நான் நினைக்கிறேன் மாணவர்கள் வாழுமிடத்தில் பட்டறைகளுடன் சேர்த்து போட்டிகளை வைத்தாலென்ன?. வாழுமிடத்தில் நடப்பதால் பலர்பங்குகொள்ள நினைப்பார்கள்.உலகளாவிய அல்லது இணையம் மூலான போட்டிகளை நடாத்தினால் அக்கறை இல்லாமல் இருந்திருக்கக் கூடும் அல்லது சற்று தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.மாணவர்களுக்கான பட்டறை என வரவழைத்து சில விக்கிதொகுப்பு பற்றி கூறி போட்டிகளை நடாத்தலாம். மாணவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் வரவழைக்கலாம்.யாழ்ப்பான மானவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பலர் உள்ளனர்.(என்னால் சிலரை வரவழைக்க முடியும்.இதைப்பற்றிய கருத்துத் தேவை.--ஆதவன் (பேச்சு) 09:32, 30 மே 2013 (UTC)
- ஆதவன், 2010ல் உலகம் தழுவிய கட்டுரைப் போட்டி நடத்தினோம். அதில் மாணவர்களை ஈர்க்க பெரும் முயற்சி செய்தோம். ஆனால், அது உரிய பலனைத் தரவில்லை. அதில் இருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பட்டறை, விக்கி பங்களிப்பு என்று பல வகையிலும் மாணவர்களை ஈர்ப்பது அவசியம் தான். எப்படிச் செய்யலாம், என்ன திட்டங்கள் வகுக்கலாம் எனபதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:01, 29 மே 2013 (UTC)
- யாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைப்புச் செய்ய நூலகம் அறக்கட்டளை ஊடாக நான் உதவி செய்ய முடியும். இடம், ஒழுங்கமைப்பு, பரப்புரை ஆகியவற்றில் உதவ முடியும். --Natkeeran (பேச்சு) 13:40, 30 மே 2013 (UTC)
- நன்றி நற்கீரன். எனினும் ஒரு பிரச்சினை உண்டு முன்னின்று நடாத்த பயனர்கள்,தன்னார்வலர்கள் தேவையே?.இத்தேவையை யார் நிவர்த்தி செய்வார்கள்?--ஆதவன் (பேச்சு) 14:32, 30 மே 2013 (UTC)
- ஆகத்து மாதத்திற்கு பின்னான காலமாக இருப்பின் யாழ்ப்பாணம் வர முடியும். எதிர்வரும் மூன்று மாதமும் சற்று வேலைப்பழு. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:54, 31 மே 2013 (UTC)
- யாழ்பாணம் எனில் பன்கேற்க ஆவலாக உள்ளேன்--கலாநிதி 15:45, 24 சூன் 2013 (UTC)
மாணவர்கள் உள்ள இடத்துக்கே சென்று பட்டறையுடன் கூடிய போட்டி நடத்தலாம் என்பது நல்ல யோசனை. இந்த நோக்கில், பத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உடனடியாகச் செய்ய முடியாது என்றாலும் ஒரு யோசனை தோன்றியது. இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில் பலரும் அங்குள்ள பள்ளிகளில் உள்ள தேசிய அளவிலான வாதப் போட்டி (debate competion) பற்றி குறிப்பிட்டார்கள். அது போல் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக, தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். ஒருங்கிணைப்பும் ஆள்வளமும் பெரிய அளவில் தேவைப்படும் என்பது மட்டுமே...--இரவி (பேச்சு) 18:17, 8 சூன் 2013 (UTC)
- நிச்சயம் தேவைப்படும். ரவி நீங்கள் கூறுவது OK.--ஆதவன் (பேச்சு) 01:35, 9 சூன் 2013 (UTC)
பெரிய நிகழ்ச்சியாக இல்லாமல் சிறிய சந்திப்பாக ஏற்பாடு செய்யலாம்.விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம்.குனேஸ்வரன் மற்றும் கலாநிதி ஆகியவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.மேலும் சஞ்சீவி சிவகுமார் ஏற்பாடுகளை கவனிக்கலாம் என கூறியுள்ளார்.கலந்துகொள்ள விரும்புவோர் இங்கே தெரிவிக்கவும்.சிறிய பயனர் சந்திப்பாகவாவது ஏற்பாடு செய்யலாம். கருத்துக்கள் ......... -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 14:14, 17 சூலை 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலைகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக ஒரு அஞ்சல் தலை வெளியிட முயல்வோமா? சென்னை, பெங்களூரில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதால் அங்குள்ள பயனர்கள் உதவி தேவை. நல்ல அஞ்சல் தலையை வடிவமைக்க வரைகலை வல்லுனர்கள் உதவியும் தேவை. மற்ற நாடுகளில் வாழ்வோரும் இது போல் வசதி இருந்தால் முயன்று பார்க்கலாம். இது பரப்புரைக்கு ஏற்ற ஒரு செயற்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 11:21, 24 சூன் 2013 (UTC)
- எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :) நல்ல யோசனை. கண்டிப்பாக செய்யலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)
சட்டைகள்
தொகுகூடவே T-shirt ஒன்றை கொடுக்கலாமா??? இதற்கான செலவுகளை நம்மில் இயன்றவர்களே பகிர்ந்து கொள்ளலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)
- tshirt அடிப்பது நல்ல யோசனை. பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான முறையான யோசனைகளுக்கு ஆகும் செலவுகளுக்கு, விக்கிமீடியா அறக்கட்டளையிடம் மொத்தமாக நல்கை வாங்கும் வழி உள்ளதால், நியாயமான செலவு பிடிக்கும் யோசனைகளை முன்வைக்கத் தயங்க வேண்டாம். இதை வடிவமைத்து அச்சிடும் பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் நலம். பல்வேறு அளவுகளையும் உள்ளடக்கி குறைந்தது 100 சட்டைகள் அடிக்கலாம்.--இரவி (பேச்சு) 12:50, 24 சூன் 2013 (UTC)
- சென்னையிலுள்ள இம்முகவரியை அனுகினால் அவர்கள் தமிழில் கூட அடித்துத் தருவார்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:46, 24 சூன் 2013 (UTC)
- சட்டைகள் தருவது நல்ல யோசனையாகும். பார்வதி அவர்கள் கூறிய நிறுவனம் ரூபாய் 500க்கு தமிழ் மொழியிலான சட்டைகளை அடித்து தருகிறது என்று கேள்வியுற்றிருக்கிறேன். 100 என்ற பெரிய அளவில் தேவையுறுவதால் சற்று சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இணையத்தில் பழக்கமான [டிசனர்ஸ்] தனியாக வீட்டில் அச்சடித்து தருகிறார்கள். அதனால் நிறுவனத்தினை விட குறைவான விலையில் சட்டைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் கலந்துரையாடிவிட்டு மேலும் தகவல்களை நாளை தருகிறேன். அவர்களது தொலைப்பேசி எண் 9710779733. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டாலும் மகிழ்ச்சியே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 24 சூன் 2013 (UTC)
- குறைந்த செலவில் பணியை முடித்து தருவதாக கூறியிருக்கிறார். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும்?. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன?. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதைப் போன்ற உரையாடல்கலை இரவி அவர்களே அவரிடம் செய்தால் நன்றாக இருக்கும். அவருடைய கைப்பேசியின் தொடர்புகொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:15, 25 சூன் 2013 (UTC)
- இரவி, ஜெகதீசுவரன், T-shirt வடிவமைப்புக்கு இந்தப் பக்கம் உதவக்கூடும். மேலும் அவர்களிடமே குறைந்த செலவில் கிடைக்குமா எனவும் கேட்டு அறியலாம்.--அராபத் (பேச்சு) 05:33, 27 சூன் 2013 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:32, 29 சூன் 2013 (UTC)
- அராப்பத், செகதீசுவரன், பார்வதி - ஆலோசனைகளுக்கு நன்றி. சரியான தரமும் விலையும் உள்ளவாறு பார்த்துக் கொள்வோம். இதற்கான நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இது குறித்து தொடர்ந்து பேசுவோம். பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், பணிகள் உள்ளதால் இயன்ற அளவு பணிகளைப் பிரித்துக் கொண்டு பொறுப்பெடுத்துச் செய்வதே வெற்றிகரமாகச் செயல்பட உதவும். சட்டைகளுக்கான வடிவமைப்பு, தயாரிப்பு உத்தரவு முதலிய ஒருங்கிணைப்புப் பணிகளை யாராவது பொறுப்பெடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 05:50, 28 சூன் 2013 (UTC)
- வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என தெரிவியுங்கள் நண்பரே. பல்வேறு நிறுவனங்களை அனுகும் பொழுதே தரமான, விலை குறைவான சட்டைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும்?. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன?. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? என என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளன. இவற்றைக் கொண்டு நிறுவனங்களிடம் விசாரிக்க இயலாத நிலை. அத்துடன் பட்ஜெட் எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டுகிறேன். இயன்றதைச் செய்ய காத்திருக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:38, 29 சூன் 2013 (UTC)
எனக்கு பெரிய (L) அளவானதே தேவை. பலருக்கும் அவ்வாறே இருக்குமென நம்புகிறேன். கை நெடியதாக இருந்தால் மிக்க வசதியாக இருக்கும். மிக்க உயர் தரமானவையாக இருந்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 11:00, 29 சூன் 2013 (UTC)
- பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்டி பெற்ற பிறகே இதற்கான நிதி எவ்வளவு என்று உறுதி செய்ய முடியும். எனவே, அது வரை சட்டை தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசுவது இயலாத ஒன்று. அதற்கு முன்பு சட்டை வடிவமைப்பு தொடர்பான முயற்சிகளை எடுக்கலாம். இது தொடர்பாக அன்டன், தாரிக் ஆகியோர் உதவலாம். என்னென்ன அளவில் எத்தனை சட்டைகள் என்பதைத் தோராயமாகத் தான் முடிவு செய்ய வேண்டும். small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என்பது போல் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:25, 1 சூலை 2013 (UTC)
- சட்டைகள் தைத்துக் கொடுப்பதில் உதவ நான் முன்வருகிறேன். மிக நெருங்கிய நண்பர்கள் திருப்பூரில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே சில முறை இவ்வாறு மிகக் குறைந்த விலையில் பெற்றுத் தந்த அனுபவமுண்டு! .--மாயவரத்தான் (பேச்சு) 03:55, 16 சூலை 2013 (UTC)
மேலுள்ள மாடல் ஆங்கிலத்தில் உள்ளது. நாம் தமிழில் மாற்றிகொண்டால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:37, 11 செப்டம்பர் 2013 (UTC)
- தென்காசியாரே, தற்போது தமிழில்தான் வடிவமைப்பினை செய்துள்ளார்கள். மேலுள்ளது ஒரு மாதிரிக்காக அராபத் இட்டது. காண்க - சட்டைகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:43, 11 செப்டம்பர் 2013 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் வெளியான உங்களுக்குத் தெரியுமா? பகுதியிலுள்ள தகவல்களை அச்சு வடிவில் நூலாக்கம் செய்து வெளியிடலாம். விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம். விக்கிப்பீடியா குறித்த அறிமுகத்திற்கு இந்த நூல் உதவக்கூடும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:04, 1 சூலை 2013 (UTC)
விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:12, 1 சூலை 2013 (UTC)
- நல்ல பரிந்துரை. நூல் விக்கிப்பீடியா பின்பற்றும் கிரியெட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் வர வேண்டும். அதாவது, அதே நூலை யாரும் கூட திரும்ப அச்சிடலாம். படியெடுத்து இலவசமாகத் தரலாம். இதைப் புரிந்து கொண்டு பதிப்பகத்தார் யாராவது முன்வந்தால் கண்டிப்பாக நூல் வடிவம் கொடுக்கலாம். கூடல் நிகழ்வில் நூலை விற்பனைக்கே கூட வைக்கலாம்.--இரவி (பேச்சு) 08:26, 1 சூலை 2013 (UTC)
- ஆம், நல்ல பரிந்துரை, தேனி. மு. சுப்பிரமணி. கிரியேட்டிவு அளிப்புரிமையின் மற்றொரு தேவை, பங்களிப்பாளர் பெயர் பட்டியலை இணைக்க வேண்டும் என்பது. விக்கிப்பக்கங்களை நூலாகத் தொகுக்க உதவும் கருவியில் தாமாகவே பக்க வரலாற்றிலிருந்து பயனர் பெயரைப் பெற்றுத் தொகுக்கும் வசதி இருந்தது. அப்படி இயலாவிட்டால் பக்க வரலாற்றில் பங்களிப்பாளர்களைக் காணலாம் என்று ஒரு குறிப்பை மட்டும் இடலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:36, 1 சூலை 2013 (UTC)
- நல்ல யோசனை தேனி. மு. சுப்பிரமணி. பயனுள்ள விடயமாக அமையும். அதிக அளவில் மலிவுப் பதிப்புகளாக அச்சிடுவது முழுமையாக மாணவர் சமூகத்தை சென்றடைய வசதியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 1 சூலை 2013 (UTC)
- தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் விக்கிப்பீடியாவின் பெயரால் நன்கொடையாக கூட தரலாம். அதற்கு விக்கிமேனியாவினை எதிர்ப்பார்க்க தேவையில்லை, பயனர்களின் நல்கையிலேயே கூட செய்யலாம். இணையம் தாண்டி விக்கப்பீடியாவின் நோக்கங்கள் நிறைவேறும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:59, 2 சூலை 2013 (UTC)
- இதில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏன் என்றால் தமிழில் வெளிவரும் பெரும்பாலான "அறிவியல் நூல்கள்" இவ்வாறான துணுக்கு 50 வகைதான். மாற்றாக விக்கியூடகங்கள், விக்கிப்பீடியாவில் எப்படித் தொகுப்பது பற்றிய ஒரு கையேடு, அதன் ஒரு அங்கமாக சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றால் நல்லது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:56, 4 சூலை 2013 (UTC)
- நக்கீரரே தங்களுடைய கையேடு யோசனை மிகவும் அருமை. விக்கிப்பீடியாவைப் பற்றி தேனியார் எழுதிவரும் தொடர் எளிமையாக உள்ளது. அதனில் கட்டுரையை தொகுப்பது, விக்கிப்பீடியாவின் படிமம் ஏற்றுதல், கட்டுரைத் திருத்தம் போன்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். தேனியார் முடிவெடுக்க வேண்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:03, 4 சூலை 2013 (UTC)
- நூல் ஒன்று வெளியிடுவது நல்ல யோசனைதான். பத்தாண்டு நிறைவின் ஒரு நினைவாகவும் இது அமையும். எனக்கும் நற்கீரனுடைய யோசனையே கூடிய ஏற்புடையதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாவை எப்படித் தொகுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களையும், விக்கிப்பீடியாத் திட்டத்தின் உலகளாவிய முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்பவற்றையும் உள்ளடக்கிய சிறு நூலாக இது அமையலாம். அச்சில் வெளியிடுவதைவிட இது இலகுவாகவும் செலவு குறைவாகவும் இருக்குமானால் சிறப்புக் கட்டுரைகளை குறுவட்டில் படியெடுத்து ஒரு இணைப்பாக அக் கையேட்டுடன் சேர்த்து வழங்கலாம். பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தால்தான் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியும். நிகழ்வுக்கு முதல் நாள் இரவுவரை அச்சகத்தில் இருக்கும் நிலை இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 17:57, 4 சூலை 2013 (UTC)
- அச்சு நூலைப் படித்து யாரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வருவார்களா என்று எனக்கு ஐயமாக உள்ளது. ஏனெனில், இணையத்தில் அறிமுகம் உள்ளோரையே விக்கிப்பீடியாவுக்கு வரவைக்க பெரும்பாடு பட வேண்டியுள்ளது. எனினும், தமிழார்வமுள்ள இணைய அறிமுகம் இல்லாதவர்களிடையே விழிப்புணர்வு பரப்ப உதவலாம்.
- நற்கீரன் கூறியபடி, உங்களுக்குத் தெரியுமா போன்ற துணுக்கு நூல்கள் பல ஏற்கனவே அச்சில் உள்ளன. ஆனால், மயூரநாதன் சுட்டியபடி, நாம் பதிப்பிப்பது பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தவிர, அச்சு ஊடகத்தில் இல்லாத எத்தனையோ செய்திகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. வருங்காலத்தில் அவற்றைப் புத்தக வடிவில் கொண்டு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கும். செருமானிய விக்கிப்பீடியர்கள் இது போல் எத்தனையோ நூல்களை வெளியிட்டுள்ளனர். --இரவி (பேச்சு) 05:28, 5 சூலை 2013 (UTC)
- கையேடு உருவாக்கப்பட்டால், இதனை இலங்கையில் பரவலாக விநியோயம் செய்ய முடியும். இணையத்துக்கு அப்பாலேயே தமிழ்ச் சமூகம் இன்னும் பெரும்பாலும் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா இன்னும் பரந்த சமூகத்து கொன்று செல்லப் படவில்லை. இதற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியாது. இக் கையேட்டை ஒரு தொலை நோக்குப் பார்வையிலும் பார்க்க வேண்டும். மேலும் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கக் கூடியதாக வடிவமைத்தால், அங்கும் உதவும். விக்கியில் பங்களிப்பது கணிசமான நுட்பச் சிக்கலைக் கொண்டது. மேலும் எப்படி, எவ்வாறு எழுதுவது போன்ற சிக்கல்களும் உள்ளன. அவற்றைக் குறைப்பது இக் கையேட்டின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும். மேலும் ஒரு பத்தாண்டு அடையாளமாக அமையலாம். --Natkeeran (பேச்சு) 13:21, 5 சூலை 2013 (UTC)
- விருப்பம்-- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 14:56, 17 சூலை 2013 (UTC)
- கையேட்டில் தொழினுட்ப விடயங்களை உள்ளடக்குவதில் சிக்கல் உள்ளது, விக்கிப்பீடியாவை விசுவல் எடிட்டர் கொண்டு தொகுப்பதற்கு ஏற்றவகையில் மாற்றங்கொண்டு வந்திருக்கிறார்கள், ஆங்கில விக்கிப்பீடியாவி்ல் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது தமிழிலும் விரைவில் வரப்போகிறது, இந்தநிலையில் பழைய நுட்பங்களைத் தொகுத்து அதை நூலாக வெளியிடுவதில் எந்தளவு பயன்கிடைக்கும் என்பது ஐயமாக உள்ளது.--சங்கீர்த்தன் (பேச்சு) 15:39, 17 சூலை 2013 (UTC)
- நல்ல குறிப்பு. நாம் புதிய இடைமுகத்தைப் பற்றிய விபரங்களையும் சேர்க்கலாம். பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு
கையேடு
தொகுகையேடு வெளியிடும் முயற்சிக்கு அது எத்தனைப் பக்கத்தில் அமைகிறது என்பதைப் பொறுத்து செலவுகளும் ஏற்படும். உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த கௌதம் பதிப்பகம் நூல்களை மேட் அட்டைப்படத்துடன், உயர் ரக பழுப்பு நிற ஜி.எஸ்.எம். மேப்லித்தோ அல்லது புக்பிரிண்ட் (N.S. Maplitho or N.S. Bookprint) தாளில் அச்சிட்டு வழங்க கீழ்க்காணும் செலவுகள் ஆகும் என தெரிவிக்கிறது. இந்த பதிப்பக முகவரியிட்டு சர்வதேசத் தர புத்தக எண்(ISBN)ணுடன் கிடைக்கும். (பார்க்க:கௌதம் பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டுச் செலவுகள் குறித்த தகவல்)
1000 பிரதிகள்:
- டெமி (14 x 22 செ.மீ) 96 பக்கம் : ரூ. 24000
- டெமி (14 x 22 செ.மீ) 112 பக்கம் : ரூ. 27500
- டெமி (14 x 22 செ.மீ) 128 பக்கம் : ரூ. 31000
அதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.3500 அதிகம் செலவாகும்.
500 பிரதிகள்:
- டெமி (14 x 22 செ.மீ) 96 பக்கம் : ரூ. 20,000
- டெமி (14 x 22 செ.மீ) 112 பக்கம் : ரூ. 23,000
- டெமி (14 x 22 செ.மீ) 128 பக்கம் : ரூ. 26,000
அதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.3,000 அதிகம் செலவாகும்.
பக்கங்கள் 96ஐ விட குறைவதால் கட்டணத்தில் அதிக குறைவு இருக்காது. ஏனெனில் வண்ண அட்டைப்படம், அச்சுக்கூலி போன்றவற்றில் இதனால் அதிக மாற்றம் இருக்காது என்பது தான். ஆகவே 96 பக்கங்களுக்கு குறைவாக நூல்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொகை கட்ட வேண்டியிருக்கும்.
1000 பிரதிகள்:
- டெமி (14 x 22 செ.மீ) 80 பக்கம் : ரூ. 21,500
- டெமி (14 x 22 செ.மீ) 64 பக்கம் : ரூ. 19,000
500 பிரதிகள்:
- டெமி (14 x 22 செ.மீ) 80 பக்கம் : ரூ. 18,000
- டெமி (14 x 22 செ.மீ) 64 பக்கம் : ரூ. 16,000
(குறிப்பு: கையெழுத்து பிரதியாக இருந்தால் அதற்கு டைப்பிங் கட்டணமாக பக்கத்திற்கு (டெம்மி அளவு) ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.)
நூலில் இடம்பெறும் புகைப்படம் ஒவ்வொன்றிற்கும் கீழ்க்கண்ட கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
- அரை பக்கம் முதல் ஒரு பக்க படம் வரை (நூல் அளவில்) - ரூ.100
- அரை பக்கம் அல்லது அதற்கு சிறிய படம் (நூல் அளவில்) - ரூ.70
மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தல்
தொகுமாநாட்டில் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பிலான கருத்துக்களையும் ஆர்வங்களையும் இங்கு பதிவுசெய்யுங்கள். பலரது விருப்பத்துறைகள், வேண்டுகோள்களை பெற்றபின் திட்டப்பக்கத்தில் முடிவான முன்வைப்புகளுக்கான பட்டியலை தயாரித்து இடலாம்.
சஞ்சீவி சிவகுமார் கருத்து
தொகு- பின்வரும் விடயங்கள் தொடர்பில் சமர்ப்பிப்புகள் இடம்பெறுவது பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.
- . கிறியேற்றிவ் கொமன்சு பதிப்புரிமை வார்ப்புருக்கள் பற்றிய விளக்கங்கள்.
- . விக்கிச் செய்தி தொடர்பிலான சவால்களும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:46, 1 சூலை 2013 (UTC) \--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:56, 2 சூலை 2013 (UTC)
- வழக்கமான மாநாடு என்ற பெயரில் நடத்தினால், கட்டுரை, ஆய்வு என்பது போன்ற குழப்பம் வருகிறது என்று தான் கூடல் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு அரங்குக்கு வெளியே பண்பாட்டுச் சுற்றுலாவாக நடக்க வாய்ப்புண்டு. அரங்கில் அமர்ந்து விக்கிப்பீடியா நுட்பங்கள் குறித்து பேசுவதற்கு இருக்கும் ஒரே நேரம் இரண்டாம் நாள் காலை மட்டுமே. கலந்து கொள்ளும் பலரும் புதிய விக்கிப்பீடியா நுட்பங்கள், வழிகாட்டல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்கள். எனவே, அந்த நோக்கில் சில அமர்வுகளை ஒழுங்குபடுத்த இயலும். இது unconference போல அமைவது சிறப்பாக இருக்கும். --இரவி (பேச்சு) 13:15, 4 சூலை 2013 (UTC)
- கட்டுரை, ஆய்வு போன்றவற்றை விடக் கூடலில் கலந்து கொள்வோர் ஒரு முறைசாராத சூழலில் தமது கருத்துக்களைப் பகிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது நல்லது. விக்கிப்பீடியாவின் அடிப்படைகள் தொடர்பில் ஓரிருவர் முதலில் விளக்கம் அளிக்கலாம். என்னென்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று பயனர்களிடையே ஒரு இணக்கப்பாட்டை முதலிலேயே ஏற்படுத்திக்கொண்டால் கலந்து கொள்ளும் பயனர்கள் முன்னரே இவ்விடயங்கள் பற்றிச் சிந்தித்து ஆயத்தமாக வரமுடியும். இதனால், கூடிய அளவு பயனர்கள் பயனுள்ள வகையில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். பயனர்கள் அறிந்து கொள்ள விரும்பும் விடயங்கள் தொடர்பில் கூடிய புலமை உள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இருந்தாலும் அத்தகையவர்களை இனங்கண்டு அழைப்பதும் பயனுள்ளதாக அமையக்கூடும். குறிப்பாக சில மலையாள விக்கிப்பீடியர்கள் இந்த வகையில் உதவக்கூடும். தொடக்கத்தில் பயனர்கள் எல்லோரும் தங்களை முறையாக ஏனையோருக்குச் சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால் நல்லது. பண்பாட்டுச் சுற்றுலாவின் போதுகூட இதைச் செய்யலாம். ---மயூரநாதன் (பேச்சு) 04:25, 5 சூலை 2013 (UTC)
- கலந்துரையாலினூடான கருத்துக்களை நான் புரிந்து கொண்டதில் தவறு நேர்ந்துள்ளது. ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதற்கு பதில் பயனுள்ள மார்க்கங்களாக ஏனையவை அமையுமாயின் அதுவும் வரவேற்கக் கூடியதே! தீர்க்கமான முடிவுகளைத் தரக்கூடிய கருத்தாடல்கள், நுட்பப் பயிற்சி என்பன பயனளிக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 15 சூலை 2013 (UTC)
சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா?
தொகு//திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்//
தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் திட்டம் உள்ளதா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:12, 4 சூலை 2013 (UTC)
செய்தால் நன்றாக இருக்கும். நம் விக்கியிலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்த யாரோ பங்களித்த மாதிரி ஞாபகம். அவர் மூலம் அந்நிறுவன்த்தில் இருந்த தமிழ் அறிஞர்களை அழைக்க முயன்றால் நன்று. தமிழறிஞர்கள் எந்தெந்த வகை கட்டுரைகளை தேடுகிறார்கள் என பேசச் சொல்லலாம். மேலும் சிலவற்றையும் கேட்டுப் பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 4 சூலை 2013 (UTC)
- அரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம். மற்றபடி தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை அழைப்பது சிறப்பான பலனைத் தரும் என எண்ணுகிறேன். புகழ் பெற்றவர்கள் வரும் பொழுது ஊடகத்தின் கவனமும் ஈர்க்கப்பட இது வழிவகுக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:32, 4 சூலை 2013 (UTC)
- இரண்டாம் நாள் மாலையில் 03.00 - 05.00 ஆகிய இரண்டு மணி நேரமே திறந்த அழைப்பு. இதில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கும் ஊடகங்களும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தருதல், நூல் வெளியீடு / பாராட்டுப் பத்திரம் வழங்கல் / இன்னும் வேறு பணிகள் போக எஞ்சுவது கொஞ்ச நேரமே. வழக்கமான சிறப்பு நிகழ்ச்சி போல் சிறப்பு விருந்தினர்கள், பேருரை என்று போனால் நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி முடிப்பதில் சிரமம் வரலாம். அப்படியே சிறப்பு விருந்தினராக யாரையாவது அழைப்பது என்றால் திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்றோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தால் அவர்களைக் கவனிப்பதிலேயே கவனம் இருக்கும். ஒருத்தரைக் கவனித்து ஒருத்தரைக் கவனிக்கவில்லை என்ற குறைபாடுகள் வரும். இவரை அழைத்து அவரை ஏன் அழைக்கவில்லை என்ற சாய்வுகள் வரும்.
- 2010ஆம் ஆண்டு நடந்த கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நல்ல விழிப்புணர்வைத் தந்தது. அதற்கு அரசு, அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இந்த பத்தாண்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வைப் பல்வேறு இடங்களில் கொண்டு சேர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். எனவே, யாரையும் ஒதுக்கத் தேவையில்லை. இந்த அடிப்படையில் அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தோரை, தனிப்பட்ட முறையில், நட்பு நோக்கில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வந்தால் பிரச்சினை இல்லை. சிறப்பு விருந்தினர் என்று அறிவிப்பது, பேச நேரம் ஒதுக்குவது ஆகியன மட்டுமே சிக்கலாகத் தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 13:12, 4 சூலை 2013 (UTC)
நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:43, 4 சூலை 2013 (UTC)
- "அரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம்". "திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும்". --Natkeeran (பேச்சு) 13:57, 4 சூலை 2013 (UTC)
விருப்பம்--Yokishivam (பேச்சு) 10:55, 5 சூலை 2013 (UTC)
- நல்ல தமிழ்ப் பேச்சாளரான திரு சகாயம், இ.ஆ.ப., போன்றவர்களை அழைக்கலாம் --மாயவரத்தான் (பேச்சு) 03:57, 16 சூலை 2013 (UTC)
இந்த நிகழ்வு தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான அறிமுகக் கூடலாக மட்டும் இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்தியினைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைப்பதே நல்லது. இதற்கு இரண்டாம் நிகழ்வின் மாலை (3.00 முதல் 5.00 மணி) நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம். அமைச்சர்/அரசு அதிகாரிகளை அழைத்தால் கூட்டம் நடத்தப் பெற்ற நிகழ்வு குறித்த செய்தி பல்வேறு ஊடகங்கள் வழியாகத் தமிழ்நாடு முழுவதும் சென்றடையும். அமைச்சராக இருப்பவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அமைச்சரைத் தவிர்க்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். அரசு அதிகாரிகளை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை.
- மாயவரத்தான் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்பட்ட, நேர்மைக்குப் பெயர் பெற்ற அரசு அதிகாரி உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை அழைக்கலாம்.
- விக்கிப்பீடியா குறித்து முழுமையாகத் தெரிந்தவரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு “விக்கி கன்யா” எனும் பெயரில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையினை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்திக் கொடுத்தவருமான கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் இ. ஆ. ப., அவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம்.
- தமிழ் மேல் ஆர்வம் கொண்ட தமிழ்நாடு அரசுச் செயலாளர் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் வெ. இறையன்பு இ.ஆ.ப., கி. தனவேல் இ.ஆ.ப., போன்றவர்களை அழைக்கலாம்.
- சென்னையிலிருக்கும் தமிழறிஞர்கள் சிலரையும் அழைக்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ள பாராட்டுப் பத்திரங்கள், கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் போன்றவற்றை இவர்களைக் கொண்டு வழங்கலாம்.
நாம் மட்டுமே கூடிக் கலந்து கொள்ளும் நிகழ்வு முதல் நாள் முழுக்க இருக்கிறது. மறுநாள் விக்கிப்பீடியா தொடர்புடைய அமைப்புகளின் விருந்தினர்கள் நிகழ்வு காலையில் முடிந்த பின்பு மாலை (3.00 முதல் 5.00 மணி) நிகழ்வினைச் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு நடத்தினால் நிகழ்ச்சியின் செய்திகள் ஊடகங்களுக்கு எளிதில் செல்லும் எனக் கருதுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:22, 17 சூலை 2013 (UTC)
- எந்த சிறப்பு அழைப்பாளரும் இல்லாமலேயே தகுந்த ஊடக வெளிச்சத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவது போல ஆகிவிடும் என்று அஞ்சுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் மீது மதிப்பு கொண்டு கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளட்டும். நேரம் கிடைத்தால் ஓரிரு மணித்துளிகள் வாழ்த்துரை வழங்கச் சொல்வதில் பிரச்சினை இல்லை. யாரோ ஒரு சிறப்பு விருந்தினரின் கையில் பரிசு பெறுவதை விட உடன் பணியாற்றிய பங்களிப்பாளர் கையில் பரிசு பெறுவதே எனக்கு மகிழ்ச்சியாக இருகும். நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை. பங்களிக்கத் தான் ஆட்கள் தேவை.--இரவி (பேச்சு) 13:46, 17 சூலை 2013 (UTC)
- இரவியுடன் உடன்படுகிறேன். ஊடக வெளிச்சம் பெற விரும்பினால் பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தலாம். விக்கிமீடியா/விக்கிப்பீடியாவிலிருந்து சிலர் பத்திரிக்கையாளர்களை ஒரு உணவு இடைவேளையில் அழைத்து உணவளித்து அவர்களுடன் உரையாடலாம். நமது சிறப்பியல்புகளை ஒரு அறிக்கையில் தரலாம். Press club தொடர்புகொண்டால் உதவி புரிவர்.--மணியன் (பேச்சு) 14:21, 17 சூலை 2013 (UTC)
//யாரோ ஒரு சிறப்பு விருந்தினரின் கையில் பரிசு பெறுவதை விட உடன் பணியாற்றிய பங்களிப்பாளர் கையில் பரிசு பெறுவதே எனக்கு மகிழ்ச்சியாக இருகும்.// தங்களுடைய மகிழ்ச்சியோ அல்லது என்னுடைய மகிழ்ச்சியோ இங்கு ஒரு பொருட்டில்லை. 100 பேருக்குப் பாராட்டுப் பத்திரங்கள் அளிக்கிறோம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறோம் என்றால் அவர்களின் விருப்பங்களையும் அறிவதே சிறப்பானது. நம்முடைய எண்ணங்களை அனைவரிடத்திலும் செலுத்துவது சரியானதாக இருக்காது.
//நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை. பங்களிக்கத் தான் ஆட்கள் தேவை.// ஆசிரியரின் மகனாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுதான் பிற ஆசிரியர்களிடமும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? சில இடங்களில் தேவைக்கேற்ப நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பு:இங்கு சிறப்பு விருந்தினர்கள் சிலர் பெயரை அடையாளத்திற்குத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். (அவர்களும் அழைத்தவுடன் வந்துவிடும் நிலையும் இல்லை.) இவர்கள் அனைவரையும் தவிர்த்து வேறு யாரை வேண்டுமானாலும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:20, 17 சூலை 2013 (UTC)
- சுப்பிரமணி, ஊடக ஒருங்கிணைப்பு குறித்து மணியனின் பரிந்துரை சிறப்பானது. வழிமொழிகிறேன். மற்றபடி, ஒரு பங்களிப்பாளராக நீங்கள் உங்கள் கருத்தை முன்வைப்பது போலவே என் கருத்தையும் முன்வைப்பதற்கான உரிமை எனக்குண்டு. நான் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொல்கிறேன். இது போல் திட்டத்துக்குத் தொடர்பே இல்லாத சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவது அரசியல் கலக்கவும் காக்கா பிடிக்கவுமே வழி கோலும். விக்கிப்பீடியா இயக்கமே இது போன்று அதிகார மையங்களுக்கு உட்படாமல் புதிய அணுகுமுறையில் கட்டியெழுப்பிய ஒரு திட்டமே. இந்தத் திட்டத்தின் கொண்டாட்டத்திலும் வழக்கமான அதிகார மையங்களை வைத்துத் தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா பற்றி பல இடங்களில் பரப்புரை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்தும் சிறிது சிறிதாகவும் இயல்பாகவும் நேர்மறையாகவும் செய்ய வேண்டும். --இரவி (பேச்சு) 14:48, 17 சூலை 2013 (UTC)
- மணியனின் பரிந்துரை எனக்கும் ஏற்புடையதுதான். நானும் ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக இருந்தவன் என்கிற முறையில் அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பொதுவான இடத்தில் பகிர விரும்பவில்லை, தங்களுடைய தொலைபேசியில் தெரிவிக்கிறேன்)--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:59, 17 சூலை 2013 (UTC)
விக்கிமீடியா அறக்கட்டளையில் நிதி ஒதுக்கீடு கோரிக்கை
தொகுபத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக இது வரை வந்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்ட எண்ணியுள்ளேன். அதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டைக் கீழே காணலாம். அனைவரின் கருத்தையும் அறிந்த பிறகு, தகுந்த மாற்றங்களைச் செய்து, சூலை 22 அன்று அறக்கட்டளையிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளேன். நன்றி.
தொகைகள் அனைத்தும் இந்திய ரூபாய்களில். எஞ்சும் தொகை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
- நிகழ்ச்சிக் கூடம் - இலவசமாகப் பெற முயல்வோம்.
- பயணப் படி - 44,400. உதவித் தொகை தேவைப்படுவோர்; இலங்கை - 30,000 (இருவருக்கு மட்டும் போய் வர விமானச் செலவுக்கு 15,000.); தமிழகம் - 14,400 (ஒருவருக்கு 1,200 என்ற கணக்கில் 12 பேருக்கு)
- உறைவிடப் படி - 30,000 (ஒரு நாளைக்கு 1,500 * 2 நாட்கள் * 10 அறைகள். இதற்கும் யாராவது புரவலர்கள் கிடைக்கிறார்களா எனப் பார்க்கலாம். பல்கலைக்கழக விருந்தினர் அறைகள் போல்.)
- பாராட்டுப் பத்திரம் - 10,000 (100 பத்திரங்கள், அச்சிடல், lamination, அஞ்சல் செலவு)
- தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் - 15,000 (300 உரூபாய் மானியத்துடன் 50 சட்டைகள். வேண்டுவோர் கூடுதல் விலை கொடுத்தும் வாங்கலாம். விற்பனைத் தொகை அறக்கட்டளைக்குத் திருப்பித் தரலாம்.)
- தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலைகள் - 1,000
- உணவு - 3,000 (100 பேருக்குத் தலா 30 ரூபாய். ஞாயிறு மாலை நிகழ்வுக்கான சிற்றுண்டிச் செலவுக்கு மட்டும்)
- பண்பாட்டுச் சுற்றுலா - 10,000 (ஆகக்கூடிய வண்டி வாடகை. 40 பேர் செல்லும் அளவில்)
- கட்டுரைப் போட்டி - 30,000 (கூடுதல் எண்ணிக்கைக்கு 15,000 + நீளமான கட்டுரைகளுக்கு 15,000). பதிப்பாளர்கள் யாராவது இதற்குப் புரவலராக இருக்க முன்வருகிறார்கள் என்று தேடிப் பார்க்கலாம்.
- இதர எதிர்பாரா செலவுகள் - 10,000
- ஆக மொத்தம்: 1,53,400 இந்திய உரூபாய்.--இரவி (பேச்சு) 18:03, 16 சூலை 2013 (UTC)
- \\உணவு - 3,000 (100 பேருக்குத் தலா 30 ரூபாய். ஞாயிறு மாலை நிகழ்வுக்கான சிற்றுண்டிச் செலவுக்கு மட்டும்)\\ ஞாயிறு மாலை எல்லோரும் ஊருக்கு கிழம்பும் அவசரத்தில் சிற்றுண்டியா? :) மீதமாவதை தவிர்க்க வேண்டுமெனில் சனி அன்றே கொடுத்து விடலாமே?
ஒருவேளை ஞாயிறு தான் என உறுதியாகிவிட்டால் பார்சல் வசதி உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:15, 17 சூலை 2013 (UTC)
- இலங்கையிலிருந்து இருவருக்கான போக்குவரத்துச் செலவு இந்திய ரூபாய்களில் சுமார் 20,000 போதுமானது. நிதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் நிதியின் அளவில் தங்கியிருக்குமாயின் 20,000 என மாற்றலாம்? --சிவகோசரன் (பேச்சு) 10:28, 17 சூலை 2013 (UTC)
- விக்கிப்பீடியா கையேடு அச்சிடுதலுக்கான செலவையும் இதில் சேர்ப்பது பொருத்தமா. இந்த நிதியில் ஒரு விழுக்காட்டை தமிழ் விக்கியர்கள் திரட்டுவது பொருத்தமாக, பொறுப்புடைமையாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 13:04, 17 சூலை 2013 (UTC)
நற்கீரன், கையேட்டுக்கான செலவை இதில் சேர்க்கலாம். உத்தேச செலவைத் தெரிவியுங்கள். சிவகோசரன், உள்ளூர் பங்கேற்பாளர்களைப் போலன்றி, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நிறைய சில்லறை செலவுகள் வரும். சொந்த ஊரில் இருந்து விமான நிலையம் வருதல், விசா, இதர செலவுகள் என. அண்மையில் இலங்கை சென்று வந்த அனுபவத்தில் குறைந்தது 15,000 ரூபாயாவது இருந்தால் தான் நிறைவான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று உணர்கிறேன். தென்காசி சுப்பிரமணியன், நல்ல தரமான ஒரு தேநீர் - சமோசா வாங்கினாலே 30 ரூபாய் ஆகிவிடும் :) இது நிகழ்வு நடக்கும் போது கொடுப்பதற்குத் தான்.--இரவி (பேச்சு) 13:40, 17 சூலை 2013 (UTC)\
- நற்கீரன், முதலில் நல்கை எவ்வளவு கிடைக்கிறது என்று பார்ப்போம். அதன் பிறகு புரவலர்களைப் பெறும் வழிகளைப் பார்ப்போம். எஞ்சும் தொகையை அறக்கட்டளைக்குத் திரும்பத் தரலாம். அல்லது, வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 13:49, 17 சூலை 2013 (UTC)
- எனது சில கருத்துக்கள்: நிகழ்ச்சிக் கூடத்திற்கும் நல்கை பெறுதல் நல்லது. வேண்டுமானால் பின்னர் திருப்பித் தந்துவிடலாம்; விக்கிப்பீடியாவிற்கு நன்கொடை வழங்கத் தூண்டும் பதாகைகளை வைக்கலாம்; நிகழ்ச்சி அன்று காலை பத்திரிக்கைகளில் (இன்றைய நிகழ்ச்சிகளில் இலவசம் என்றாலும்) வரி விளம்பரம் தருவதற்கு ஒரு தொகை கேட்கலாம்.--மணியன் (பேச்சு) 14:30, 17 சூலை 2013 (UTC)
- மேலும் ஒரு எண்ணம்: நமது பத்தாண்டுகள் நிறைவை ஓரிட, ஓரிருநாள் கொண்டாட்டமாக இல்லாது பலவிடங்களில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு நாட்டில்/ஊரில் இந்தக் கொண்டாட்டங்களை நடத்தலாம். பெரியளவில் இல்லாவிட்டாலும் உள்ளூர் விக்கிபீடியர்கள் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடலாம். இதனால் அனைவரும் பங்கேற்கும் வகையிலும் பரவலாகவும் இருக்கும்.--மணியன் (பேச்சு) 14:39, 17 சூலை 2013 (UTC)
- விருப்பம் அனைவராலும் அனைத்திலும் பங்குபெறமுடியாது.எனினும் அருகில் உள்ளவர்கள் (மட்டக்களப்பெனில் யாழ்,கொழும்பு போல) பங்கு கொள்ள இயலும்.//உள்ளூர் விக்கிபீடியர்கள் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடலாம்.// மிக நல்ல கருத்து. -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 14:47, 17 சூலை 2013 (UTC)
- நிதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் நிதியின் அளவில் தங்கியிருக்குமாயின் பயணப் படியைக் சிறிது குறைத்தல் ஏற்புடையதே. காரணம் பங்குபற்றுபவர் ஒரு சிறு தொகையைத் தன் சொந்த செலவில் பார்த்துக் கொள்ளலாம். கூடம் முதலானவற்றையும் நல்கை விண்ணப்பத்தில் சேர்ப்பதும் இலவசமாகக் கிடைத்தால் வேறு திட்டங்களில் அதை பயன்படுத்தவும் முடியும். உள்ளூர் மட்ட கொண்டாட்டங்களை சிறிய அளவிலாவது முன்னெடுக்க வேண்டும். பட்டறைகளையும் நடாத்தலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:23, 17 சூலை 2013 (UTC)
- நற்கீரன் சொல்வது போல விக்கிப்பீடியர்கள் பணம் திரட்ட வேண்டும் எனில் சொல்லுங்கள், என் பங்குக்கு நானும் கொஞ்சம் தர இயலும். தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவுக்காகவே விடுப்பு எடுத்துக்கொண்டு வருகின்றேன். உங்களை எல்லாம் சந்திக்க இருக்கும் ஆர்வம் அலைமோதுகின்றது :) இந்நிகழ்ச்சியைக் கூடிய அளவு சிறப்பாகவும் நினைவில் நிற்குமாறும் செய்வோம். மணியன் கூறியது போல, ஆண்டுமுழுவதும் பல இடங்களில் கொண்டாடி மேலும் சிறப்புகள் கூட்டுவோம், நல்ல கருத்து. உலகெங்கிலும் (கனடா, ஆத்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் வரும் ஓராண்டில் நிகழ்ச்சிகள் நடத்தி மேலும் பல நல்ல பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம்). ஒரே முடுக்கத்தில் 100,000 கட்டுரைகளை விரைவாகவும் சிறப்பாகவும் தாண்டவேண்டும். வெறும் கட்டுரை எண்ணிக்கைக்காகக் கூறவில்லை (எண்ணிக்கை மட்டும் தரமோ நற்பயனோ ஆகாது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்). விக்கிப்பீடியா முத்திரை பதித்த சட்டைகள், பொருள் (காப்பிக்குவளை போன்றவை) எதுவாக இருந்தாலும், விற்பனைக்குத் தந்தாலும், பிழையில்லாமல் தமிழில் அச்சடித்துத் தரவேண்டும். விக்கி பட்டறைகளில் பின்னாள்களிலும் பங்குபெறுவோருக்குப் பயன்படுமாறு ஓரளவுக்குப் போதுமான எண்ணிக்கையில் தருவியுங்கள். --செல்வா (பேச்சு) 21:44, 17 சூலை 2013 (UTC)
- ஆம் பின்னாளில் பட்டறைகளில் கலந்துகொள்வோருக்குக்கும் சேர்த்து அடித்தால் நன்று.//ஒரே முடுக்கத்தில் 100,000 கட்டுரைகளை விரைவாகவும் சிறப்பாகவும் தாண்டவேண்டும்// விருப்பம் -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 16:32, 18 சூலை 2013 (UTC)
வணக்கம் ரவி. முன்மொழிவை ஆங்கிலத்தில் (முடிந்தால் தமிழிலும்) இங்கு முன்வைத்தால் பயனர்கள் கருத்துக் கூற உதவியாக இருக்கும். காலம் தாழ்த்தினால் எமது நேர இலக்குக்கு நல்கை பெற முடியாமல் போகலாம். --Natkeeran (பேச்சு) 13:23, 30 சூலை 2013 (UTC)
- நற்கீரன், எனது பணிப்பளுவினால் ஏற்படும் தாமதத்துக்கு வருந்துகிறேன். இன்று முனுமொழிவை எழுதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:05, 1 ஆகத்து 2013 (UTC)
நூல் வெளியீடு
தொகுநடைபெற இருக்கும் பத்தாவது ஆண்டு விழா சென்னையில் நடப்பது அறிந்து மகிழ்ச்சிக் கொள்கிறேன். முனைவர் துரை.மணிகண்டன் ஆகிய நானும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளேன். இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் ஒருநாள் அல்லது தொடக்க நாள் நிகழ்வில் நானும்(முனைவர் துரை.மணிகண்டன்) த.வானதியும் “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற நூலை எழுதியுள்ளோம். அந்த நூலை மலேசியாவில் நடைபெறும் 12 ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வெளியிட நினைத்திருந்தேன். சில தவிற்க இயலாத காரணத்தால் மலேசியா செல்ல இயலவில்லை. எனவே இங்கு நடைபெறும் விக்கிப்பீடியா நிகழ்வில் இந்த நூலை வெளியிடலாம் என்று எண்ணுகின்றேன். அதற்கு விக்கிப்பீடியா அன்பர்களின் ஒத்துழைப்புத் தேவை.கருத்துரைக்க வேண்டுகின்றேன்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 16:52, 14 ஆகத்து 2013 (UTC)
- விக்கிப்பீடியரான உங்களின் நூலை விக்கிப்பீடியர்களின் கூடலில் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இரண்டாம் நாளை மாலை நிகழ்வே இதற்குப் பொருத்தமாக இருக்கும். மற்ற நிகழ்ச்சிகளுக்கான நேரத்தையும் கருத்தில் கொண்டு, கால் மணி நேரத்துக்குள் வெளியீடு, நூல் பற்றிய பேச்சு இருக்குமானால் நன்று.--இரவி (பேச்சு) 16:36, 21 ஆகத்து 2013 (UTC)
விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:33, 22 ஆகத்து 2013 (UTC)
நூலின் தொடர்பான விளம்பரத்தை கைப்பிரதியாக முதல் நாளே கொடுத்துவிட்டால் ஓரளவு வெளியீடு, நூல் பற்றிய பேச்சுக்கான நேரத்தைக் குறைக்கலாம் என தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:32, 22 ஆகத்து 2013 (UTC)
நூலை வெளியிட அனுமதி வழங்கிய விக்கிப்பீடியா நிர்வாகிகள் திரு.ரவி,திரு.தேனியார்,திரு.தென்காசி சுப்பிரமணி போன்ற மற்றும் பலருக்கு எமது நன்றி. ஐயா ரவி சொல்லியதுபோல 15 நிமிடம் நூல் வெளியீட்டு நிகழ்வு போதும். நூல் தேவைப்படுவோர் நூல் வெளியீட்டுத் தினத்தன்று 100 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வழங்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நூலைப்பற்றிச் செய்தியை விக்கிப்பீடியா நிர்வாகிகள் தெரிந்துகொள்ள வசதியாக http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D) இந்தப் பகுதியில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 11:39, 26 ஆகத்து 2013 (UTC)122.174.107.225 11:36, 26 ஆகத்து 2013 (UTC)
இந்த விழாவில் 'எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2' என்ற மின்னூலை வெளியிட விரும்புகிறேன். 5 அல்லது 10 நிமிடங்கள் போதும். முதல் பாகம் இங்கே - http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1
--Tshrinivasan (பேச்சு) 19:33, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நல்ல முயற்சி. விக்கியின் கட்டற்ற இலக்குகளோடு இணைந்த குனூ/லினக்சு தொடர்பான மின்னூல் பற்றிய அறிமுகம் இடம்பெறுவது மிகப் பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 23:39, 20 செப்டம்பர் 2013 (UTC)
நல்கை விண்ணப்பம் கருத்து வேண்டல்
தொகுவரைவு நல்கை விண்ணப்பத்தை இங்கு காணலாம். இது தொடர்பான திருத்தங்கள், கருத்துகளை வரவேற்கிறேன். ஏற்கனவே தீர உரையாடியதன் படியான விண்ணப்பம் என்பதாலும், நாட்கள் குறைவாக இருப்பதாலும், இன்னும் 48 மணி நேரத்தில் இந்த நல்கை விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளை முன்பு வைக்க எண்ணியுள்ளேன். தொடர்ந்து பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான பணிகளை விரைந்து முடுக்கி விட முனைகிறேன். இது வரை ஏற்பட்ட கால தாமதத்துக்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:15, 21 ஆகத்து 2013 (UTC)
- நல்கை விண்ணப்பம் சிறப்பாகவுள்ளது இரவி. உங்களுக்கும் அதைத் திருத்தி உதவிய நற்கீரனுக்கும், பவுலுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:42, 23 ஆகத்து 2013 (UTC)
- ரவி, குறிப்பாக எப்பொழுது அனுப்ப உள்ளீர்கள் ? குறைந்தது ஐந்து பேரை திட்டக் குழுவில் சேர்க்கவும். பெயரை conference, celebration, gathering எதாவது ஒன்றை உறுதி செய்து எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம். --Natkeeran (பேச்சு) 13:21, 23 ஆகத்து 2013 (UTC)
- இன்று பகலிலேயே அனுப்புவதாக இருந்தேன். விண்ணப்பத்தின் வடிவம் மாறுபட்டதால் இற்றைப்படுத்தி திங்கள் மாலை (இந்திய நேரம்) அனுப்பலாம என்று இருக்கிறேன். meetup என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் கூடுதலானோரை ஒருங்கிணைப்புக் குழுவில் சேர்க்க முனைகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:04, 23 ஆகத்து 2013 (UTC)
பங்களிப்பாளர் அடையாள அட்டை
தொகுஇலங்கையிலும் இந்தியாவிலும் பல கோயில்களில் உட்பிரகாரங்களில் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் தேவை கருதி அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது பெரும்பாலும் சாத்தியமானது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடியதாக ஓர் அடையாள அட்டையை பங்களிப்பாளர்களின் தேவைக்கேற்ப வழங்க முடியுமா? இங்கு தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி தரப் பயனர்களில் ஒருவர் கையொப்பமிடல் வேண்டும். மாதிரி அடையாள அட்டையின் முன்/பின் பக்கத் தோற்றங்களைப் படத்தில் காணலாம்.
பெயர், முகவரி மற்றும் 'This user contributes to Tamil Wikipedia since DD-MM-YYYY', Bureaucrat user, Tamil Wikipedia என்பன ஆங்கிலத்திலும் இருத்தல் அவசியம். --சிவகோசரன் (பேச்சு) 07:01, 26 ஆகத்து 2013 (UTC)
நல்ல யோசனை தான். இதை கல்வெட்டுகள் போன்றவற்றை படம் எடுப்பதற்கு நான் பயன்படுத்திக் கொள்வேன். சன்யாசிப்புடவுக் கல்வெட்டு இருக்கும் இடம் செல்ல தடையுள்ளது. ஆனால் பத்திரிக்கைக் காரர்களை புகைப்படம் எடுக்க வன அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். இதைப் போன்ற அடையாள அட்டை இருந்தால் சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:18, 26 ஆகத்து 2013 (UTC)
- ஆம் , பல நிறுவனங்கள் இப்படி உள்ளன. விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:41, 26 ஆகத்து 2013 (UTC)
- இப்படி ஒரு அட்டைக்கான தேவை புரிகிறது. இருந்தாலும், தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இதனைச் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன:
- தமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு இணையத்தளம். சட்டப்படிச் செயல்படும் ஒரு அமைப்பு அன்று. இங்கு நிருவாகிகள், அதிகாரிகள் என்ற அணுக்கத்துடன் இருப்பவர்கள் இந்த அமைப்பின் தலைவர்கள் அல்ல. எனவே, விக்கிப்பீடியா சார்பாக அடையாள அட்டையில் கையெழுத்து போடும் சட்ட அடிப்படையிலான தகுதியும் இல்லை.
- தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் மீதும் நம்பகம் உண்டு. ஆனால், அட்டை தொலைந்து போனால் அதனை எப்படி கையாள்வது, எளிதில் நகல் எடுக்கக்கூடிய இந்த அட்டையின் முறைகேடான பயன்பாட்டை எப்படி எதிர்கொள்வது போன்ற சூழ்நிலைகள் குறித்து தெளிவில்லை.
- இந்தியா போன்று உள்ளூர் விக்கிமீடியா கிளை அமைந்துள்ள நாடுகளில் அந்தக் கிளையின் உறுப்பினராகச் சேர்ந்து உறுப்பினர் அடையாள அட்டை கோரலாம். இவை சட்ட அடிப்படையிலான அமைப்புகள். ஏதேனும் சிக்கல் வந்தால் அதனை அணுகுவதற்கான நிதி, சட்ட ஆதாரம் உள்ளவை. உள்ளூர் கிளை இல்லாத இலங்கை போன்ற நாடுகளில், தேவைப்படும் இடங்களில் விக்கிப்பீடியா இயக்கத்தைப் பற்றி விளக்கிக் கூறி தங்களின் மற்ற அடையாள அட்டைகளைக் காட்டலாம். அதுவும் உதவவில்லை என்றால், http://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM திட்டங்கள் போன்றவற்றின் மூலம் முறையாக அணுக முயலலாம். --இரவி (பேச்சு) 21:30, 26 ஆகத்து 2013 (UTC)
- நன்றி இரவி. இதிலுள்ள சிக்கல்களை அறிவேன். புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ள பல இடங்களில் உள்ளவர்களிடம் விக்கிப்பீடியா குறித்துப் பேசிப் புரியவைத்தல் கடினமானது. எனினும் ஓர் அடையாள அட்டை காட்டப்பட்டால் அதன் நம்பகத்தன்மை/வழங்கியவரின் அதிகாரம் குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தும் நோக்கில் ஓர் அட்டையின் அவசியத்தை எண்ணியே இதனை முன்மொழிந்தேன். எவ்வாறாயினும், தற்போது வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள பாராட்டுப் பத்திரம் இதற்கு உதவும் என்று எண்ணுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 07:15, 28 ஆகத்து 2013 (UTC)
- பெரும்பாலும், ஏதாவது ஒரு அட்டையைக் காட்டினாலும் அதை மதிப்பார்கள், அதன் அதிகாரத்தை எடை போட மாட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், அதன் காரணமாகவே அத்தகைய அட்டையை வழங்கும் நிறுவனம் இன்னும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று கருதுகிறேன். பாராட்டுப் பத்திரம் இதற்கு உதவியாக இருக்கும் எனில் மிக்க மகிழ்ச்சி. செய்வோம்.--இரவி (பேச்சு) 12:20, 29 ஆகத்து 2013 (UTC)
பத்தாண்டுச் சின்னம், பரப்புரை, பயிற்சி ஒழுங்குபடுத்தல்கள்
தொகுகுறிக்கப்பட்ட நாள் நெருங்கி வருகிறது. எனவே இரண்டாம் நாள் நிகழ்வுக்கான பரப்புரைகளைத் தொடங்கலாம் என்று நினைக்கிறென். அதற்கு பயன்படும் வண்ணம் ஒரு பத்தாண்டுக் கொண்டாட்ட சின்னம் ஒன்று உருவாக்கினால் நன்று. சிறப்பிதழ் ஆசிரியர் ஒருவரும் இது பற்றி கேட்டு இருந்தார். நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட வேண்டும். என்ன மாதிரிப் பயிற்சிகள் ஒழுங்குபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிகளை யார் வழங்குவார்கள்?--Natkeeran (பேச்சு) 23:50, 11 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்புத் தேவைகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள் பக்கத்தில் பட்டியல் இடலாம். பத்தாண்டு சின்னத்துக்கான தேவையைச் சேர்த்துள்ளேன். பயிற்சிகளுக்கான பக்கத்தை இங்கு துவங்கியுள்ளேன். --இரவி (பேச்சு) 07:35, 12 செப்டம்பர் 2013 (UTC)
- சிறிய வடிவில் ஒரு குறிசொல் ஒன்றை நிர்ணயித்துவிட்டால் சமூகத் தளங்களில் பரப்புரையைத் தொடங்களாம். எனது சில பரிந்துரைகள் #tawi10 #tintawi (Tin anniversary of Tamil Wikipedia) --நீச்சல்காரன் (பேச்சு) 16:28, 12 செப்டம்பர் 2013 (UTC)
- :: #tawiki10 எனது பரிந்துரை. --Natkeeran (பேச்சு) 17:16, 12 செப்டம்பர் 2013 (UTC)
- :: #tawiki10 விருப்பம்--மணியன் (பேச்சு) 18:33, 12 செப்டம்பர் 2013 (UTC)
- :: #tawiki10 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 22:51, 12 செப்டம்பர் 2013 (UTC)
- :: #tawiki10 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:05, 12 செப்டம்பர் 2013 (UTC)
- :: #tawiki10 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 08:07, 13 செப்டம்பர் 2013 (UTC)
- #tawiki10 எனும் குறியீடு உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். முகநூல் மற்றும் டுவிட்டேரில் இனி தினமும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு சாதனைகளை எடுத்துரைக்கிறேன். நிகழ்ச்சி பற்றி கூறலாமா? கூட்டம் அதிகமாகிவிடுமா? - Vatsan34 (பேச்சு) 16:02, 19 செப்டம்பர் 2013 (UTC)
- சமூக வலைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவை கணினி பயன்படுத்துவோரை ஈர்க்கும் வல்லமையுடையவை. ஆனால் கணினியின் பயன்பாட்டில் இல்லாதவர்களுக்கும், வலைப்பூக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் இல்லாதவர்களுக்கும் விக்கிப்பீடியாவின் கொண்டாட்டத்தினை கொண்டு செல்ல FLYERS, FLEX BOARD போன்றவையே உதவும். சென்னையில் படித்த மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மின்சார இயில்களில் ஸ்டிக்கர் போன்றவற்றை ஒட்டி பரப்புரை செய்யலாம். காலம் குறைவாக இருப்பினும் முடிந்தளவு முயற்சிக்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:11, 18 செப்டம்பர் 2013 (UTC)
- செகதீசுவரன், மின்சார தொடர்வண்டியில் விளம்பரம் ஒட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்லவா ;) இணையத்தில் உலாவாத மக்களைக் குறி வைத்தே ஊடகச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவே போதுமானதாக இருக்கும். நிகழ்வு அரங்கில் 200 பேர் அளவில் மட்டுமே அமரலாம். வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள், குழும மடல்கள், விக்கிப்பீடியா தள அறிவிப்புகள் மூலமாகவும் தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவுமே இவர்களை வர வைக்க முடியும் என்றே கருதுகிறேன். பெரும் மக்களைக் கூட வைக்க வேண்டிய நிகழ்வுகளுக்கே நீங்கள் சொல்லும் உத்திகள் சரிப்பட்டு வரும்.--இரவி (பேச்சு) 08:17, 19 செப்டம்பர் 2013 (UTC)
- \\மின்சார தொடர்வண்டியில் விளம்பரம் ஒட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்லவா\\ உண்மைதான் நண்பரே. வெறும் பரப்புரை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளம்பரம் செய்யாமல் பெண்களுக்கு பிரட்சனையென்றால் அழைக்கும் எண், புகைப்பிடிக்காதீர்கள் போன்ற சட்டம் வழிமுறைகள் போன்றவற்றை இணைத்து விளம்பரம் செய்யலாம். மின்சார ரயில் நிலையம் முழுவதும் இதுபோன்ற யுத்தி விளம்பரங்கள் உள்ளன. அவைகள் சட்டத்துக்கு புறம்பானவையாக இல்லை. மேலும் வோடோ போன் விளம்பரங்களை இரயில் போலிசாரே ஒட்டிச் சென்றார்கள். நாமும் அம்முறையை வருங்காலத்தில் பயன்படுத்தலாம். ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.. :-) நிகழ்வுக்காக அல்லாமல் விக்கிப்பீடியாவின் பரப்பரைக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:16, 19 செப்டம்பர் 2013 (UTC)
சிறப்புச் சொற்பொழிவு வரிசையில் உரைநிகழ்த்துதல்
தொகுசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 அன்று மாலை 5 மணிக்குச் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அடுத்த வளாகத்தில் உள்ளது), தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஓர் உரை ஒன்றை நிகழ்த்துகின்றேன். ஆர்வம் உடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். உரையின் சுருக்கம் முதலான செய்திகளைக் கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள அறிவிப்பில் காணலாம்.
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/_xsJOBeHE_s
நிகழ்ச்சி ஒளிப்பதிவு + பரப்புரைப்பாக நேர்காணல் ஒளிப்பதிவுகள்
தொகுஇரு நாள் நிகழ்ச்சியை இயன்ற வரை தொழில்முறையாக ஒளிப்படம் எடுப்பதும் ஒளிப்பதிவு செய்வதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன். நிகழ்வுக்கு நேரில் வர இயலாதவர்களும் இவற்றைப் பார்க்கலாம் என்பதுடன் ஆவணப்படுத்தல், பரப்புரை முயற்சிகளுக்கும் உதவும். குறிப்பாக, 2012 விக்கிமேனியாவில் பூங்கோதை அளித்த நேர்காணல் போல் பல்வேறு பயனர்கள் கூட்டாகவும் தனியாகவும் தரும் நேர்காணல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பயனர்களை முன்னிறுத்தி செய்யும் தள அறிவிப்புப் பரப்புரைகள் போன்றவை நல்ல பயன் தருகின்றன. ஆனால், இவற்றுக்கு ஏற்ற படங்கள் இல்லாமல் இருப்பதே பெருங்குறையாக இருந்து வருகிறது. விக்கிமீடியா நல்கைக்கு விண்ணிப்பிக்கும் போது, இதற்கான செலவை உள்ளடக்காமல் விட்டு விட்டேன். தற்போது அனைவரின் ஏற்பும் இருந்தால் கூடுதல் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ள முனையலாம். நன்றி.--இரவி (பேச்சு) 21:09, 18 செப்டம்பர் 2013 (UTC)
- ஆவணப்படுத்தல் மற்றும் பரப்புரைக்காகவும் கட்டாயம் ஒளிப்பதிவு செய்தல் வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:14, 18 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--குறும்பன் (பேச்சு) 04:06, 19 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 19 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--Tshrinivasan (பேச்சு) 19:51, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்ச்சி ஒளிப்பதிவு அவசியமற்றது என்று கருதுகிறேன். காரணம் 1) திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு எடுக்கப்பட்டவைகளைப் போல சில காலங்களில் முடங்கிவிடும். நிகழ்வுகளை நினைவுகூறவும், பகிரவும் புகைப்படங்களே போதுமானது. 2) பயிற்சி ஒளிபதிவுகள் நிகழ்வரங்கில் எடுக்கப்பட்டால் எவ்வளவு தெளிவாகவும், ஒலியுடனும் இருக்குமென தெரியவில்லை. அதற்குப் பதிலாக சிறந்த ஒளி ஒலி அமைப்புடன் பயிற்சி காணொளிகளை மென்பொருள் (VIDEO RECORD) மூலம் நாமே உருவாக்கி பதிவேற்ற வேண்டும். மற்றபடி தள அறிவிப்புப் பரப்புரைகளை முழுவதுமாக வரவேற்கிறேன். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் மாணவர்களிடம் முறையான பயிற்சியளித்து எதற்காக தாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்றோம், அவர்களைப் போன்ற மாணவர்கள் பங்களிக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு பங்களிப்பதற்கு விக்கிப்பீடியாவில் எந்த அளவு வாய்ப்புள்ளது போன்றவற்றை பதிவு செய்து பரப்புரை செய்யலாம். இதே போல பெண்களுக்கும், ஒவ்வொரு துறை வல்லுனர்களுக்கும் ஏற்ற படி மாற்றி பரப்புரைக்கு பயன்படுத்தலாம். அதற்கு விக்கிப்பீடியாவிற்குள் குறு விவாதங்களை முன்வைத்து தீர்வு காண வேண்டியது அவசியம். எதற்காக மற்றவர்கள் விக்கிப்பீடியாவிற்கு வர தயங்குகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த கூடல் நிகழ்வில் சிறு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இந்தப் பணிக்கு அவசரம் காட்டவேண்டாம். சிறப்புற கட்டமைத்த பின்பு காணொளிகளை தயார் செய்யலாம் என்பது என் எண்ணம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:25, 20 செப்டம்பர் 2013 (UTC)
- செகதீசுவரன், பல முக்கிய கூடல் நிகழ்வுகளிலும் ஒளிப்பதிவு செய்வது வழமை. நிகழ்வுக்கு வர இயலாதவர்கள் காணவும் வருங்காலத்தில் காணவும் உதவும். பரப்புரை நோக்குக்காள ஒளிப்பதிவாளரை அழைக்கும் போது இதற்கு மட்டும் தனிச்செலவு என்றில்லை. பிறகு, தனித்திட்டம் ஒன்றின் மூலம் நிகழ்பட வழிகாட்டிகளைத் திறம்பட உருவாக்கிக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 20:47, 20 செப்டம்பர் 2013 (UTC)
- இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 21 செப்டம்பர் 2013 (UTC)
- செகதீசுவரன், பல முக்கிய கூடல் நிகழ்வுகளிலும் ஒளிப்பதிவு செய்வது வழமை. நிகழ்வுக்கு வர இயலாதவர்கள் காணவும் வருங்காலத்தில் காணவும் உதவும். பரப்புரை நோக்குக்காள ஒளிப்பதிவாளரை அழைக்கும் போது இதற்கு மட்டும் தனிச்செலவு என்றில்லை. பிறகு, தனித்திட்டம் ஒன்றின் மூலம் நிகழ்பட வழிகாட்டிகளைத் திறம்பட உருவாக்கிக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 20:47, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்வு ஒளிப்பதிவு வழமையென்றால் அதனை செய்யுங்கள். \\தனித்திட்டம் ஒன்றின் மூலம் நிகழ்பட வழிகாட்டிகளைத் திறம்பட உருவாக்கிக் கொள்ளலாம்\\ இக்கருத்தினை பெரிதும் வரவேற்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:22, 21 செப்டம்பர் 2013 (UTC)
நிதி ஒதுக்கீடு
தொகுஇது தொடர்பாக பல்வேறு ஒளிப்படக்காரர்களின் தேதிகளைப் பெற முயன்ற பின், தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியில் வென்றவர்களில் ஒருவரை வைத்து ஏன் இதனைச் செய்யக்கூடாது என்று எண்ணி அவர்களைத் தொடர்பு கொண்டிருந்தேன். இப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருந்த செகதீசு இப்பணியைச் செய்து தர முன்வந்திருக்கிறார். மூன்று பேர் கொண்ட அவர்களது குழு இதனைத் தொழில்முறையாகச் செய்து வருகிறது. அவர்களின் திறன் பற்றி அறிந்து கொள்ள http://jasanpictures.com/ , https://www.facebook.com/jasan.pictures பார்க்கலாம். இம்முயற்சியை மேற்கொள்ள முக்கியக் காரணம்: 1. நிகழ்வுக்கு வர இயலாதவர்களும் நிகழ்வைக் காண வேண்டும். 2. 10 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வைச் செய்கிறோம். பல ஆண்டுகளுக்கும் நினைவில் நிற்குமாறு ஆவணப்படுத்த வேண்டும். 3. தொழில்நேர்த்தி மிக்க படங்கள் நமது பரப்புரைக்குப் பெரிதும் உதவும்.
இதற்கான செலவு குறித்த எனது உரையாடலை கீழே தருகிறேன். நேரமின்மை காரணமாக இதனைத் தமிழில் தர இயலாமைக்கு வருந்துகிறேன். பல்வேறு ஒளிப்படக்காரர்களிடம் பேசிய முறையில் இது வழக்கமாக இத்தொழில்துறையில் உள்ள செலவு என்றே தெரிகிறது. விக்கிப்பீடியா என்பதற்காக அவர்களின் செலவுகளைக் குறைத்தே தந்திருக்கிறார்கள். இது கூடுதல் செலவாகத் தோன்றினால், ஞாயிறு காலை நடக்கும் பயிற்சிகளை மட்டும் தொழில்முறையாகப் படம் பிடிக்காமல் நமது தன்னார்வலர்களைக் கொண்டு படம் பிடிக்கலாம். எனது iPad miniயின் ஒளிப்பதிவு இதற்கு ஒத்து வரும். விக்கிமீடியா அறக்கட்டளையிடம் கோரிய நிதி இதற்கான ஒதுக்கீடு இல்லை என்பதால் இதற்கான செலவைப் பெற்றுக் கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறேன். இன்று மாலைக்குள் இந்நிதி ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவித்தால் ஒளிப்படக்காரரை உறுதி செய்ய இயலும்.
Hi Jagadeesh,
Here are my requirements:
- Promotional summary video for two day event like your Marathon video. It can have two versions - one with background music capturing moments and one with inspiring or funny audio clips to project the team spirit.
- 5 minute interviews with 20 Wikipedians. I will require each video as clips with good sound quality. Then I will require 5 summary videos mixed from all these interviews for sample questions like:
-Where are you from? ( Canda, UAE, Lanka..)
-What do you do? (teacher, student, engineer...)
-What is your dream for Tamil Wikipedia?
-Why do you contribute?
-How has Wikipedia improved your?
These concept based videos will illustrate Tamil Wikipedia's purpose and diversity.
Following are videos in full length format for second day event:
- 09.00 - 12.30 - Workshops.
- 03.00 - 05.30 - Celebrations.
You can shoot them by fixing the camera in one location focused on the stage and occasionally focusing on the audience.
You may use the 12.30 to 03.00 break, before and after event breaks to shoot some concept based videos I mentioned above.
Please give me a starting price for 2 day video coverage which will include some of these requirements.
And give me cost for each item adding to that base price so I can understand how the cost works and which we can assign priority too. For example how will the cost increase if we take more than 20 interviews.
Here are some sample shots we like to give you an idea of what we are expecting:
User interviews -
https://commons.wikimedia.org/w/index.php?title=File%3AThe_Impact_of_Wikipedia_Poongothai_Balasubramanian.webm (top class and professionally done by Wikimedia foundation)
http://vimeo.com/73856540 - okayish interview done by a volunteer.
For profile photos check the pictures at
http://wikimediafoundation.org/wiki/Staff_and_contractors
(You can see more pictures by clicking the "See the team" picture near each photo)
Thanks,
Ravi
அவர்களின் பதில் கீழே:
Hi Ravi,
Below would be our cost break up, we have given the best offer considering the grant and donations which is being used to cover the 2 day event.
Photography - 20,000 Covering the entire event with member portfolio similar to the sample you provided. (Out put will be in digital format only)
Seminar Video: 10,000 2 sessions on Sunday, which will be 5000 each. You guys can decide which one you wish to cover or both the events. (output will be couriered to you as DVD)
Promotional Video + member interview: 20,000 Promotional video need not be exactly 5 mins as we discussed, the time duration can even be more. We would edit it to be amicable with all the happenings around.
Members interview, will be given as separate footage of each individual and a edited version collating all of them together. We can even accommodate even if its going to be more than 20 members without any cost Variation. All we seek is the cooperation from them to shoot when ever possible in these 2 days as the lunch break timing won't be enough.
Output will be in HD quality and DVD will be couriered to you.
Regards, Jagadeesh. S
வேண்டுகோள்
தொகுவிக்கியின் பத்தாம் ஆண்டு கொண்ட்டாத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் திருச்சியிலும் (குறிப்பாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்) பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். --Mm nmc