தொகுப்பு

தொகுப்புகள்


1

அரசு, பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் குறித்த கொள்கைதொகு

வணக்கம். பன்னாட்டுச் சூழல், தமிழ் தொடர்பான பல தன்னார்வ முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர், முன்னாள் ஆசிரியர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:28, 25 பெப்ரவரி 2013 (UTC)

கண் முன் மலேசியாதொகு

தெள்ளு தமிழில் கண் முன் மலேசியாவைக் கொண்டு வருவதற்கு நன்றிகள் பல.--பரிதிமதி (பேச்சு) 05:19, 3 மார்ச் 2013 (UTC)

படிமங்கள்தொகு

முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு, உங்கள் கட்டுரைகளில் பொருத்தமான படங்களை இணைப்பது நல்லது தான். ஆனாலும் அளவுக்கதிகமாக இணைப்பது தேவையற்றது என நினைக்கிறேன். குறிப்பாக தனுஜா ஆனந்தன் பக்கத்தில் உள்ள படங்களில் ஏறக்குறைய அனைத்துமே காப்புரிமையுள்ள படிமங்களாக இருக்கின்றன. இவை எவற்றுக்கும் நியாயப் பயன்பாடு பொருந்தாது. அத்துடன் இவற்றை இவ்வாக்கம் குனூ கட்டற்ற ஆவண உரிமத்தின் 1.2வது பதிப்பு அல்லது அதற்கு பிந்திய பதிப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இவ்வாவணத்தை இதே அளிப்புரிமையுடன் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, அச்சிட, பகிர அனைவருக்கும் உரிமை உண்டு. என அனுமதி வழங்கியிருக்கிறீர்கள். அது எவ்வாறு எனப் புரியவில்லை. உங்கள் சொந்தப் படங்கள் என்றால் எத்தனையும் தரவேற்றலாம். ஆனால் இணையத்தில் எடுத்த படங்களை இங்கு அளவுக்கதிகமாகத் தருவது உகந்ததல்ல.--Kanags \உரையாடுக 07:43, 7 மார்ச் 2013 (UTC)

தனுஜா ஆனந்தன் பக்கம்தொகு

நன்றி, கனகு அவர்களே. இனி வரும் காலங்களில் முடிந்த வரையில், படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். உண்மையில் சில படங்களுக்கு, குனூ கட்டற்ற ஆவண உரிமத்தின் 1.2வது பதிப்பு அல்லது அதற்கு பிந்திய பதிப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது தவறுதான். அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறேன். தவறுகளைச் சுட்டிக் காடியமைக்கு நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 09:46, 7 மார்ச் 2013 (UTC)

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்தொகு

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனும் கட்டுரையைத் திருத்தத் தொடங்கியுள்ளேன். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதன் தலைப்பு. ’கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ என்பது மிகச் சரியான தமிழாக்கச் சொல். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை.

ஆனால், மலேசியாவில் உள்ள ஊடகங்கள் ’கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ என்று அழைப்பது இல்லை. மலேசிய நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ’கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்’ என்றுதான் அழைக்கின்றன.

பழைய தலைப்பிலேயே விட்டுவிடுவோமா இல்லை ’கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்’ என்று பின்னர் மாற்றம் செய்வோமா. தங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 11:41, 7 மார்ச் 2013 (UTC)

சிறப்பானதொரு தொழில்நுட்ப ஆச்சரியத்தைப் பற்றிய சிறப்பான பக்கம் இது; கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் என்ற பெயரில் வழிமாற்று (redirect) வைக்கலாம்! இப்போதைய தலைப்பை மாற்ற வேண்டாமே!--பரிதிமதி (பேச்சு) 03:39, 8 மார்ச் 2013 (UTC)

தலைப்பு மாற்றம் வேண்டாம்தொகு

நன்றி. இப்போதைக்கு தலைப்பை மாற்ற வேண்டாம். அப்படியே விட்டுவிடுவோம். போகப் போக மக்களின் சொல் பழக்கத்திற்கு வந்துவிடும். ஏன் என்றால், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனும் சொல்தொடர் மிகச் சரியான, மிகநேர்த்தியான சொல்தொடர் ஆகும். இன்த மாதிரியான சொற்களைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 03:56, 8 மார்ச் 2013 (UTC)

தொகுப்புகள் எண்ணிக்கைதொகு

வணக்கம். தங்களின் அண்மைய கட்டுரைகள் விரிவாகவும் தனித்துவம் மிக்கதாகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி. வழமைக்கு மாறாக இக்கட்டுரைகளில் தொகுப்பு எண்ணிக்கை கூடுதலாக இருப்பதைக் காண முடிகிறது. ஒரு வேளை, அடிக்கடி தொகுத்துச் சேமிப்பதற்கான தொழில்நுட்பத் தேவை (மின்வெட்டு, உலாவியில் பிரச்சினை.. போல) இருக்கிறதா என அறிய விரும்புகிறேன். இல்லாவிட்டால், தேவையான படிமங்களைப் பதிவேற்றி விட்டு கூகுள் மடல் பெட்டியில் ஒரு வரைவை விரிவாக எழுதி வைத்துக் கொள்வது தொகுப்புகளைச் சேமித்து வைத்துக் கொள்ள உதவும். விக்கிப்பீடியாவில் தொகுக்கும் போது அளவு குறைந்த தொகுப்புகளை "இது ஒரு சிறு தொகுப்பு" என்ற பெட்டியைத் தெரிவு செய்து சேமிப்பதும் நன்று. இதன் மூலம் அண்மைய மாற்றங்களைக் கவனித்து வரும் மற்ற பயனர்கள் சிறு தொகுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு புதுப்பங்களிப்பாளர்கள், புகுபதியா பங்களிப்பாளர்களின் தொகுப்புகளைக் கண்காணிக்க உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 14:50, 8 மார்ச் 2013 (UTC)

அன்பு ரவி அவர்களுக்கு, அதிவிரைவு இணையத் தொடர்பைப் பயன்படுத்துகிறேன். மின்வெட்டு என்பது இங்கு கேள்விப்படாதச் சொல். ஏன் விட்டு விட்டு வருகிறது என்று கேட்டு இருந்தீர்கள். நான் எழுதும் கட்டுரையின் பகுதிகளை Notepadஇல் தட்டச்சு செய்து, பின்னர் அதை விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்கிறேன். இந்த முறை எனக்கு எளிதாகத் தெரிகின்றது. வழக்கமாகவும் போய்விட்டது. ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கினால், அதைச் சின்னதாக முடித்துவிட முடியும். பல குறும் கட்டுரைகளை உருவாக்கவும் முடியும். அந்த முறை எனக்கு சரிபட்டு வரவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 15:43, 8 மார்ச் 2013 (UTC)
notepadல் எழுதி ஒட்டுகிறீர்கள் என்பது எனக்குச் செய்தி. உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அவ்வாறே செய்யுங்கள். நேரடியாக விக்கிப்பீடியாவிலேயே தொகுத்தால் இங்கு உள்ள தொகுப்புப் பெட்டியில் உள்ள பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துவது கூடுதல் வசதியாக இருக்கும். அப்புறம், சிறு தொகுப்புகள் குறித்து நான் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன். மலேசியா குறித்த உங்கள் விரிவான கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. தொடர்ந்து அவ்வாறே பெரிய கட்டுரைகளைத் தாருங்கள். நான் கூற வந்தது என்னவென்றால் ஒரே கட்டுரையின் அடுத்தடுத்த தொகுப்புகள் சிறிய அளவுடையனவாக இருந்தால் தொகுப்புப் பெட்டிக்கு கீழே உள்ள"இது ஒரு சிறு தொகுப்பு" என்ற பெட்டியைத் தெரிவு செய்யலாம். விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Help:Minor_edit பாருங்கள் (இதனைத் தமிழாக்க முயல்கிறேன்).
இன்னொரு விசயம்: உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டு கொண்டே போகிறது. இது உங்கள் பக்கத்தைக் காணும் சில பயனர்களுக்கு வசதிக் குறைவாக இருக்கலாம். பேச்சுப் பக்க உரையாடலைப் பரணுக்கு நகர்த்தினால் நன்றாக இருக்கும். விவரங்களுக்கு, உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு பார்க்கவும். இது குறித்து உதவி தேவையென்றால் தெரியப்படுத்துங்கள். நன்றி--இரவி (பேச்சு) 16:05, 8 மார்ச் 2013 (UTC)

பெட்ரோனாஸ் கோபுரங்கள்தொகு

பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டுரையை விரிவு படுத்தத் தொடங்கியுள்ளேன். உலகில் உயர்ந்த கோபுரங்களில் இதுவும் ஒன்று. 1998லிருந்து 2004 வரை, 6 ஆண்டுகளுக்கு உலகின் உயர்ந்த கோபுரமாக வாகை சூடி விளங்கியது. முறையான விளக்கங்கள் புகுத்தப்பட வேண்டும். ஒரு தமிழர் உருவாக்கியது.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 16:52, 8 மார்ச் 2013 (UTC)

விக்கிசெய்திதொகு

வணக்கம் முத்துகிருஷ்ணன், விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டம் விக்கிசெய்தி இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். மலேசியா பற்றிய செய்திகளை அங்கு பகிர உங்களை அழைக்கிறேன். ஏற்கனவே வெளிவந்துள்ள மலேசியச் செய்திகளை மலேசியப் பகுப்பில் பார்க்கலாம். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:20, 21 மார்ச் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:38, 21 மார்ச் 2013 (UTC)

மலேசிய விக்கி செய்திகள்தொகு

நன்றி, கனகு அவர்களே, ஒரு நாளைக்கு ஒரு சின்னச் செய்தி, ஒரு சின்ன தகவலைச் சொல்லலாம். மலேசியாவைப் பற்றி நிறைய இருக்கின்றன. உடனடியாகக் களத்தில் இறங்கி விடுகிறேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 09:28, 21 மார்ச் 2013 (UTC)

இந்திய மடற்குழுமத்தில் உங்களைப் பற்றிய செய்திதொகு

வணக்கம். நீங்கள் சிறையில் இருந்தபடியே விக்கிப்பீடியர்களுக்கு இட்ட செய்தி என்னை நெகிழச் செய்தது. இதனைப் பற்றி இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன். பார்க்க: http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2013-March/009584.html . பலரும் உங்கள் விக்கி ஈடுபாடு உந்துதல் அளிப்பதாக கருத்து தெரிவித்தார்கள். இதற்கு வந்த மறுமொழிகளை http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2013-March/thread.html பக்கத்தில் இருந்து படிக்கலாம். --இரவி (பேச்சு) 18:31, 27 மார்ச் 2013 (UTC)

  விருப்பம்.--Kanags \உரையாடுக 22:19, 27 மார்ச் 2013 (UTC)
  விருப்பம் --Natkeeran (பேச்சு) 23:59, 27 மார்ச் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:12, 28 மார்ச் 2013 (UTC)
  விருப்பம்--Anton (பேச்சு) 05:53, 28 மார்ச் 2013 (UTC)
  விருப்பம்--மணியன் (பேச்சு) 07:53, 28 மார்ச் 2013 (UTC)

நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சிகள்தொகு

நன்றி. நன்றி. அன்பு ரவி அவர்களுக்கும், என் நெஞ்சைத்தை ஈரமாக்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும். மறுபடியும் நன்றிகள். சிபில் கார்த்திகேசுவின் கல்லறை இங்கே ஈப்போ கோனாலி சாலையில்தான் இருக்கிறது. என் வீட்டில் இருந்து மூன்று கி.மீ.

ஈப்போவில் இருக்கும் பலருக்குகூட அந்த கல்லறையைப் பற்றி தெரியாது. அதைப் பற்றி மலேசியாவின் ‘மயில்’ மாத இதழில் எழுதினேன். இப்போது பலர் அங்கு சென்று சிபில் கார்த்திகேசுவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சிபில் கார்த்திகேசுதொகு

மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத இந்தியர்களில் சிபில் கார்த்திகேசுவும் ஒருவர். இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மண்ணின் மைந்தர். அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.

அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். வேதனையான தூரல்கள். சிபில் கார்த்திகேசு பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். அதைப்பற்றி கார்த்திகேசு எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன்.

கமுந்திங் தடுப்புக் காவல்தொகு

ஒருவரை கமுந்திங் தடுப்புக் காவலில் வைப்பது பெரிய விசயம் அல்ல. ஆனால், வெளியே வருவதுதான் சிம்ம சொப்பனம். எனக்கு எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் சிலரை நன்கு தெரியும்.

அன்பர்களே, நடந்த முடிந்த அந்த நிகழ்ச்சியை மறுபடியும் நினைத்துப் பார்க்க வேண்டாம். வேதனைகள் ஆர்ப்பரிக்கும். நாம் தொடர்ந்து நம்முடைய விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். என்னைப்பற்றி இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் பகிர்ந்து கொண்ட அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் நன்றி கூறுகின்றேன். மறுபடியும் ரவி அவர்களுக்கு நன்றிகள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 10:59, 28 மார்ச் 2013 (UTC)

சஞ்சிக்கூலிதொகு

அன்பு கனகு, ரவி, நற்கீரன் அவர்களுக்கு, வணக்கம். சஞ்சிக்கூலி எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறேன். இதில் ஓர் ஐயப்பாடு. எழுதிக் கொண்டு இருக்கும் போது இதை ஏன் ஓர் ஆய்வுக் கட்டுரையாக எழுதலாமே என்று எண்ணம் ஏற்பட்டது. அதை ஒரு வரலாற்று ஆவணமாக அமைக்க வேண்டும் என்பது ஒரு சின்ன ஆசை. தவிர சஞ்சிக்கூலி எனும் தலைப்பு சரியாக இருக்குமா இல்லை //சஞ்சிக்கூலிகள்// சரியாக அமையுமா?மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 02:12, 31 மார்ச் 2013 (UTC)

விக்கிப்பீடியாவில் நேரடி ஆய்வுக் கட்டுரைகளுக்கு இடம் இல்லை. இது தொடர்பாக நம்பகத்தன்மை மிகுந்த இதழ்கள், ஆய்விதழ்கள், நூல்களில் வெளிவந்துள்ள தகவல்களைச் சுட்டி தொகுத்து எழுதலாம்.--இரவி (பேச்சு) 08:12, 2 ஏப்ரல் 2013 (UTC)

சஞ்சிக்கூலி என்ற தலைப்பே பொருத்தம்தொகு

ஒரு முக்கியமான கட்டுரை. மலேசியாவில் போல், இலங்கை, ஆப்பிரிக்கா, நடு அமெரிக்கா, பர்மா எனப் பல பகுதிகளுக்கும் இந்தியர்கள்/தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த போது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் பெருந்தொகையினர் குடியுரிமை இழந்தனர். இன்றும் பல ஆயிரக் கணக்காணோர் குடியுருமை இல்லாமல் உள்ளதாக அறிய முடிகிறது. இதே போல பார்மாவில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். ஆப்பிரிக்காவில் தமிழர்கள் தமது மொழியை இழந்துவிட்டனர். நடு அமெரிக்காவில் தமது முழு அடையாளங்களையுமே துலைத்துவிட்டனர். --Natkeeran (பேச்சு) 03:28, 31 மார்ச் 2013 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Ksmuthukrishnan!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 06:57, 2 ஏப்ரல் 2013 (UTC)

நன்றிதொகு

அன்பு ரவிக்கு நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 12:14, 12 ஏப்ரல் 2013 (UTC)

விக்சனியில் மலாய்தொகு

அன்புள்ள மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு அன்பு வணக்கம்! விக்சனரி சொற்களுக்கான திட்டம், ஓர் அகராதி. அங்கே மலாய் மொழியின் பல ஆழ்ந்த சொற்களையும் அவற்றின் பயன்பாட்டையும் விளக்கிக் கூறுங்கள். பொதுவழக்கில் உள்ள பல சொற்களையும் சேருங்கள். விரைவில் ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். நான் சில சொற்களை சேர்த்துள்ளேன். அவற்றையும் திருத்துங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:43, 12 ஏப்ரல் 2013 (UTC)

பெட்ரோனாஸ் கோபுரங்கள்தொகு

பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டுரைக்கு மறுவடிவம் கொடுக்கின்றேன்.--ksmuthukrishnan 12:23, 12 ஏப்ரல் 2013 (UTC)

மலேசியத் தேர்தல்தொகு

அன்பு விக்கிப்பீடியர்களுக்கு, மலேசியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய தொகுதி புந்தோங். காலை 10 மணிக்கு நானும் என் மனைவி ருக்குமணியும் வாக்களித்து வந்தோம். பிள்ளைகள் மதியத்தில் வாக்களிப்பார்கள். என் குடும்பத்தில் பத்து வாக்குகள் உள்ளன. இந்த நாட்டிலேயே அதிகமான தமிழர்கள் வாக்காளர்களாக உள்ள சட்டமன்றத் தொகுதி புந்தோங் ஆகும். இந்தத் தொகுதியில் 22,907 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளர்களாக ஐவர் போட்டியிடுகின்றனர். பாக்காத்தான் ராக்யாட் சார்பில் சிவ. சுப்பிரமணியம். பாரிசான் நேசனல் சார்பில் சிவராஜா. சுயேட்சைகளாக இருதயம் செபஸ்தியர், கால்வான் சிங், முகமட் பாஸ்ரி சாபி.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு எம். குலசேகரன் போட்டியிடுகிறார். 65 விழுக்காடு சீனர்கள் உள்ள இடம். போன தேர்தலில் குலசேகரனைத் தேர்ந்தெடுத்தார்கள். பக்கத்தில் இருக்கும் பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதிக்கு வி. சிவகுமார் போட்டியிடுகிறார். பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர். பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிதான். இருவரும் வெற்றி பெறுவார்கள். இந்தியர்களுக்கு இரண்டு இடங்கள் உறுதியாக இருக்கின்றன.

போன முறை நாடாளுமன்றத்தின் 222 இடங்களில் இந்தியர்களுக்கு 15 இடங்கள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை கூட வேண்டும். குறையக்கூடாது. இந்தத் தேர்தலில் பாக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றால், இந்திய ஒருவர் நாட்டின் துணைப் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

பதக்கம்தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒவ்வொரு கட்டுரையையும் விரிவாகவும் அரிய தகவல், படிமங்களுடன் எழுதும் உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பெருமளவு உயர்த்தவல்லது. அதிலும், மலேசியாவைப் பற்றிய தகவல் இணையத்திலும் அச்சிலும் இப்படி ஒருங்கே கிடைப்பது அரிது. இதனை எண்ணி மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன். அன்புடன்... இரவி (பேச்சு) 15:35, 10 மே 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்.--Kanags \உரையாடுக 13:03, 11 மே 2013 (UTC)

நன்றிகள்தொகு

வணக்கம். சிறந்த உழைப்பாளர் பதக்கம் வழங்கியமைக்கு மிகவும் நன்றி. முடிந்த வரையில் மலேசியாவைப் பற்றி நிறைய எழுத வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

ஆனால், இடையிடையே மகள், மகன்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். தமிழர் திருவிழாக்கள், சங்கங்களின் அழைப்புகள், திருமணங்கள் போன்றவற்றிலும் கலந்து கொள்ள வேண்டும். தவிர, ஒரு சில அரசியல் நண்பர்களையும் பார்க்க வேண்டும். நேரம்தான் போதவில்லை. இருப்பினும், நம்முடைய விக்கிப்பீடியாவிற்கு சேவை செய்வதையே மிகப் பெருமையாகக் கருதுகிறேன். மீண்டும் நன்றிகள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 12:31, 11 மே 2013 (UTC)

மலேசிய வானொலிப் பேட்டிதொகு

வணக்கங்க. மலேசிய வானொலிப் பேட்டி பற்றிய உங்கள் குறிப்பைக் கண்டேன். இது தொடர்பாக சோடாபாட்டில் தன்னுடைய பேச்சுப் பக்கத்தில் தெரிவித்திருப்பதையே வழிமொழிகிறேன். இது குறித்து செல்வசிவகுருநாதனின் கருத்தை அடுத்து எனது மறுமொழியை இடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:25, 1 சூன் 2013 (UTC)

மலேசிய வானொலி பேட்டிதொகு

அன்புள்ள சகோதர்களுக்கு, நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.

அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.

யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:44, 1 சூன் 2013 (UTC)

செல்வசிவகுருநாதன் குறிப்பாக என்ன சொன்னார் எந்த இடத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை, முத்துக்கிருட்டிணன். ஒருவேளை போதிய பங்களிப்பு இல்லை என்ற கருத்தில் சொல்லியிருக்கலாம். எது எப்படியோ நீங்கள் உரிமையுடன் தொடர்ந்து பங்களிக்க முடிவெடுத்தமை கேட்டு மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:40, 1 சூன் 2013 (UTC)

முத்துக்கிருஷ்ணன், இந்த விடயம் தொடர்பிலான உங்கள் கருத்தை மிகவும் பண்பான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் நன்றிகள். செல்வசிவகுருநாதனும் தனது விளக்கத்தை அதே பண்புடன் கொடுத்துள்ளார். மலேசியாவில் இருந்து நீங்கள் அளித்துவரும் பங்களிப்புக் குறித்து நாம் எல்லோரும் நன்கு அறிந்திருப்பதுடன், மலேசியத் தமிழர்களின் பிரதிநிதியாக மலேசியா தொடர்பான தலைப்புக்களில் கட்டுரைகளைத் தமிழ் விக்கிக்கு அளித்து வருவதையிட்டு மகிழ்ச்சியும் அடைகிறோம். அண்மையில், கொழும்பில் இடம்பெற்ற தமிழ் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம் ஒன்றில் பயனர் இரவி பேசும்போது, மலேசியாவில் இருந்து பங்களிப்பவராக உங்கள் படத்தையும் காட்டி அறிமுகம் செய்தார். முகம் அறியாமல் இணைய வழியாகச் செயற்படுகின்ற ஒரு சூழலில் இவ்வாறான விடயங்கள் நடந்துவிடுகின்றன. எனவே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வழக்கம் போலவே தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள். உங்கள் பங்களிப்புத் தமிழ் விக்கிக்கு மிகவும் தேவையானது. --- மயூரநாதன் (பேச்சு) 09:28, 1 சூன் 2013 (UTC)

முத்துகிருஷ்ணன், உங்கள் ஆதங்கம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேராசிரியர் செல்வா விக்கியில் சிலகாலம் பங்களிக்காமல் இருந்ததால் சிலவேளைகளில் உங்களைப் பற்றியோ வேறு பயனர்களைப் பற்றியோ மறந்து போயிருக்கக் கூடும். நேரடி உரையாடலில் இவ்வாறான தவறுகள் நிகழுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கும். உங்கள் ஒருவரின் பங்களிப்புகள் நூறு பயனர்களின் பங்களிப்புக்கு சமனானது என்பது எனது கணிப்பு. இதனை நமது பயனர்கள் எல்லோரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். செல்வா அவர்கள் தனது பதிலைத் தெரிவிப்பார் என நம்புகிறேன். எது இருந்தாலும் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நீங்கள் கூறியது ஆறுதலைத் தருகிறது. உங்கள் ஆங்கில விக்கிக் கட்டுரையை மேலோட்டமாகப் படித்துப் பார்த்ததில் மிக நன்றாகத் தரமாகவே எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 12:24, 1 சூன் 2013 (UTC)
ஏதோ பிறழ உணர்ந்து இருப்பதாக நினைக்கின்றேன். மலேசிய மின்னல் பண்பலையினர் முத்துநெடுமாறன் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு ஒரு 5-6 மணித்துளிகளோ என்னவோதான் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய பொதுவான கருத்துகளைக் கேட்டார்கள். இது தொலைபேசிவழி நடந்தது (இரவு என் நேரம் ~11:45) மலேசியாவில் இருந்து யாரும் பங்களிக்கவில்லை என்று நான் கூறவில்லை!! யாரேனும் இந்த நேர்காணலைப் பதிவு செய்திருந்தால் அருள்கூர்ந்து பகிருங்கள். எப்படி விக்கிப்பீடியா திட்டம் தொடங்கத் தோன்றியது என்று கேட்டார்கள். அதற்கு நான் மயூரநாதன் 2003 இல் தொடங்கி, அவரோடு இன்னும் சிலர் சேர்ந்து வளர்த்தெடுத்தார்கள் என்றும் நான் 2006 இல் தான் சேர்ந்தேன் என்று குறிப்பிட்டேன். இதுவரை 500 உக்கும் மேலானவர்கள் பங்களித்திருக்கின்றார்கள் என்றும் தமிழ் விக்கிப்பீடியாவில் இயக்குநர் என்று யாரும் இல்லை என்றும், எல்லோரும் பங்களிப்பாளர்களே, நிருவாகிகள் என்பவர்கள் தளத்தைப் பராமரிப்பது, மராமத்து வேலைகள் செய்வது, ஒழுங்குகள் செய்வது போன்றவற்றைச் செய்வார்கள் என்றும் கூறினேன். தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் பங்களிக்கலாம் என்னும் கருத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்திலேயே இக்கருத்து எழுதப்பட்டிருப்பது பற்றியும் கூறினேன், ஆனால் மலேசியாவைப் பற்றியோ, அங்குள்ள பங்களிப்பாளர்கள் பற்றியோ எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை, சொல்லும் சூழல் கேள்விகளில் இல்லை. மிக மிகச் சுருக்கமாக 5 மணித்துளிகளோ அதைவிடக் குறைவான நேரமோதான் இது நடந்தது. பயனர் முத்துக்கிருட்டிணன் அவர்களின் பங்களிப்புகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். சிறிது வாய்ப்பு இருந்திருந்தாலும் கட்டாயம் விரிவாகக் கூறியிருப்பேன். கேள்வி கேட்பவர்கள் கேட்கும் திசையில் கருத்துகளைச் சொன்னேன். அந்த நேர்காணலில் முன்னுரையாகவோ பின்னுரையாகவோ நிகழ்ச்சியாளர் என்ன சொன்னார்கள் என்பதை நான் அறியேன். என்னிடம் ஒலிப்பதிவு ஏதும் இல்லை. இந்த நேர்காணல் முன்னறிவிப்பு, திட்டமிடல் ஏதும் இன்றி நடந்தது. 2011 இல் மலேசியாவில் பேராசிரியர் குமரன் அவர்கள் அழைப்பின் பேரில், நான் கலந்துகொண்ட ஓர் ஆய்வரங்குக்கு வந்தபொழுது, அவர் ஏற்பாடுகள் செய்திருந்த அறிமுகங்களில் பயனர் முத்துக்கிருட்டிணன் அவர்கள் அளித்துவரும் நல்ல பங்களிப்புகளைப் பற்றிப் பல இடங்களில் சொன்னேன். வந்திருந்த சிலரும் அவரை தெரியும் என்றும் கூறினர். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. என்று ஏன் கூறுகின்றீர்கள் என்று எனக்குச் சிறிதும் விளங்கவில்லை! ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ இப்படி நான் கூறியதற்கு அருள்கூர்ந்து சான்று காட்டுங்கள். மின்னல் வானொலியினரிடம் இருந்து ஒலிப்பதிவு ஓன்றை நான் பெறமுடிந்தால், பகிர்கின்றேன். நான் அப்படிக் கூறவில்லை என்றுமட்டும் உறுதியாகக் கூற இயலும். உங்கள் பங்களிப்புகளை நான் நன்கு அறிபவன். உங்களுக்கு எதனாலோ வருத்தம் ஏற்பட்டுள்ளது என்று அறிந்து நான் வேதனைப் படுகின்றேன்.--செல்வா (பேச்சு) 16:26, 1 சூன் 2013 (UTC)

Message from selvasivagurunathanதொகு

Dear Sir,
I have not provided any interviews to any section of media! Please check once again. I was in malaysia for a period of 2 months; But i never talked to anybody about the wiki. We only talked to each other twice through telephone during that period - that also purely personal! (since i"m travelling, I couldn't send this message in our mother tongue_ browsing through mobile phone)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:07, 1 சூன் 2013 (UTC)

ஓ.. அண்மையில் மலேசிய வானொலி ஒன்றுக்குப் பேட்டி அளித்ததாக செல்வா தனது பேசுபுக்கு பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஒருவேளை செல்வக்குமாரையும் செல்வசிவகுருநாதனையும் குழப்பிக் கொண்டீர்களோ.. அவரது பேச்சுப் பக்கத்தில் கேட்டுப் பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 09:49, 1 சூன் 2013 (UTC)

குரல் ஒலிப்பதிவுதொகு

வணக்கம். selvasivagurunathan பேட்டி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். நல்லது. மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி அவர்களுடன் பேசினேன். பேட்டியை விக்கிப்பீடியாவுக்கு அனுப்பலாமா?--ksmuthukrishnan 05:33, 2 சூன் 2013 (UTC)

வணக்கங்க.. செல்வசிவகுருநாதன் பேட்டி கொடுக்கவில்லை. பேட்டி கொடுத்தவர் செல்வா. அவரும் தம்முடைய விளக்கத்தை இதே பேச்சுப்பக்கத்தில் இதற்கு மேலே கொடுத்துள்ளார். அருள் கூர்ந்து ஒரு முறை அதைப் படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று யாரும் எண்ணவில்லை. உண்மையில் உங்கள் பெயர் விடுபட்டுப் போனது அனைவருக்கும் வருத்தமே. தங்களால் இயலுமெனில், நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுக் கோப்பை விக்கிப்பீடியாவில் பதிவேற்றித் தாருங்கள். விக்கிப்பீடியா பற்றிய ஒரு பேட்டியை அனைவரும் கேட்பதும், ஆவணப்படுத்தி வைப்பதும் நன்றே. மற்றபடி, என்ன நடந்தது என்று உண்மை அறியும் நோக்கில் இந்த ஒலிப்பதிவைக் கோரவிரும்பவில்லை. நன்றி.--இரவி (பேச்சு) 06:29, 2 சூன் 2013 (UTC)

கவளச் சோற்றில் முழு பூசணிக்காய்தொகு

வணக்கம். ஒரு கவளச் சோற்றில் ஒரு முழு பூசணிக்காயை மறைகின்ற கலை எனக்குத் தெரியாது. மன்னிக்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் 20,000 தொகுப்புகள். 800 கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் என்று மலேசியாவிற்கு வந்து சொன்னது வேறு யாராக இருக்க முடியும்? சொல்லுங்கள்.

மலேசியாவில் யாரும் எழுதவில்லை என்று சொன்னதுதான் நமக்கு பெரிதாகப்படுகிறது. பிரச்னை இதனுடன் ஒரு முடிவிற்கு வருகிறது. தவிர, நான் தமிழ் மொழியில் எழுதுகிறேன், அவர் ஆங்கிலத்தில் பதில் தருகிறார். இப்படி எல்லாம் ஆங்கில மொழியைக் கேவலப்படுத்தக் கூடாது. என் தாய்மொழிதான் எனக்கு பெரிசு. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 06:49, 2 சூன் 2013 (UTC)

1) செல்வ. சிவகுருநாதனும் (செல்வ. சிவகுரு) பேராசிரியர் செ. இரா. செல்வக்குமாரும் (செல்வா) இரு வேறு விக்கிப்பீடியர்கள். இருவரும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள். 20000 தொகுப்புகள் 800 கட்டுரைகள் செய்திருப்பவர் என நீங்கள் குறிப்பிடுபவர் செல்வா. அவர் எதையும் எங்கும் மறைக்கவில்லை. மேலே தெளிவாக எங்கு என்ன பேட்டியளித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். மீண்டும் மேலுள்ள அனைத்தையும் படிக்க வேண்டுகிறேன்.
2) வெளியூர் பயணத்தில் இருக்கும் செல்வ. சிவகுரு, தமிழ்த் தட்டச்ச வசதியில்லாத நிலையில் தனது கைபேசி கொண்டு ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இதைத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இது யாரையும் எம்மொழியினையும் கேவலப்படுத்துவதற்கன்று. வேகமாக விளக்கமளிக்கவே.--சோடாபாட்டில்உரையாடுக 06:59, 2 சூன் 2013 (UTC)

சொல்வது எல்லாம் உண்மைதொகு

சரி. ஒலிப்பதிவை அனுப்பி வைக்கிறேன். பிரச்னை இத்துடன் ஒரு முடிவிற்கு வருகிறது.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 07:18, 2 சூன் 2013 (UTC)

நன்றிகள் ஆயிரம்தொகு

இந்த மாதிரி உங்களுடன் சண்டைகள் போட்டு வாழ்வது எனக்கு பிடிக்கின்றது..மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 12:03, 2 சூன் 2013 (UTC)


மலேசியா, மலேசியத் தமிழர்தொகு

மலேசியா, மலேசியத் தமிழர் பற்றி உங்கள் கட்டுரைகள் ஊடாக நிறைய அறிந்து கொண்டேன், நிச்சியமாக, இணையத்தில் இவ்வாறான ஒரு தொகுப்பு உங்களால் இங்கு சாத்தியமானது. மலேசிய அரசியல், கல்வி, கலை நிகழ்வுகளை ஒரு தேர்ந்த பத்திரிகையாளர் பார்வையில் இங்கு நீங்கள் சேர்த்து இருப்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, வரலாற்றாளர்களுக்கு இவை முக்கியம்.

பயனர்:En என்ற பயனரும் மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் போன்ற சில கட்டுரைகளைப் பங்களித்து இருந்தாலும் அவர் நெடுங்காலம் தொடரவில்லை. தொடர்ச்சியாக மிக விரிவான கட்டுரைகளைத் தந்து ஒரு அடித்தளத்தை உருவாக்கித் தந்துள்ளீர்கள்.

சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள், தமிழ் உணர்வுடனும், மொழியையும் பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் மலேசியாவில் நாம் விக்கியை இன்னும் பரந்து எடுத்துச் செல்ல வேண்டும். பரப்புரை, அறிமுகப்படுத்தல் பணிகளை விரிவாகச் செய்ய வேண்டும். அதற்கான திட்டமிடலிலும் செயற்பாட்டிலும் உங்களின் உதவி முதன்மையாக அமையும். உங்களைப் போன்று மேலும் பல பத்து விக்கியர்கள் மலேசியாவில் இருந்து வர வேண்டும். அதுவே எம் அவா. --Natkeeran (பேச்சு) 22:01, 2 சூன் 2013 (UTC)

நற்கீரனின் சொல் வளங்கள்தொகு

நன்றி தலைவரே. உங்களின் கருத்துகளைக் கேட்டு மனம் லேசாகத் தடுமாறுகின்றது. மலேசியாவைப் பற்றி ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை எழுத முடிவு செய்துள்ளேன். எழுதுகின்றேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 00:25, 3 சூன் 2013 (UTC)


நிச்சியமாக தலைவர் கிடையாது ஐயா. சக பங்களிப்பாளர். தென்னாப்பிரிக்கா, மொரிசியசு போல் அல்லாமல் மலேசியாவில் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது மொழியையும் அடையாளத்தையும் பேணி வருவது கண்டு பெருமை. தமிழ் சொல்லிசையில் மலேசியாக் கலைஞர்கள் முன்னோடிகள், இன்றும் முன்னிற்கு நிற்பவர்கள். உறுமி மேளத்தில் புதுமைகள் செய்தவர்கள். தமிழ்நாடே தமிழ்க் கல்வியை தொலைத்து நிக்கும் இத் தருணம், தொடர்ந்து போராடி இன்னும் பேணுபவர்கள். அம்பிகா, தேவராஜ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களை கொண்டவர்கள். அவர்களைப் பற்றி நாம் இன்னும் விரிவாக உலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களின் செயற்பாடுகளையும் கற்றல்களையும் நாம் உங்களின் கட்டுரைகளின் ஊடாகத்தான் அறிந்து கொள்கிறோம்.
மலையகத் தமிழர்கள் பற்றி விக்கியிலும் சரி இணையத்திலும் சரி மிக சொற்பமாகவே அறியக் கிடைக்கிறது. சுமார் ஒரு மில்லியன் மலையகத் தமிழர்கள் உள்ளார்கள். ஆவர்களுக்குப் பின்னால் வலி சுமந்த வரலாறு உண்டும். தனித்துவமான வாழ்வியலுல் உண்டு. ஆனால் அவர்களைப் பற்றி விரிவாக விக்கியில் யாரும் எழுதவில்லை. ஆனால் எழுத வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அது போல பல சமூகங்கள், பல தலைப்புகள். --Natkeeran (பேச்சு) 02:05, 3 சூன் 2013 (UTC)

Malaysian Indian Dilemmaதொகு

Malaysian Indian Dilemma எனும் நூல் 1986ஆம் ஆண்டு மலேசியாவில் தடை செய்யப்பட்டது. எழுதியவர் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இரண்டு வருடங்கள் சிறையிலும் வைக்கப்பட்டார். இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால், அதே நூலை மலேசியப் பிரதமர் நஜீப் இந்த மாதம் வெளியீடு செய்கிறார். எழுதியவர் யார் என்று கண்டுபிடியுங்கள். அதற்காக, மலேசியாவைப் பற்றிய ஒரு புதிய கட்டுரையை இப்போதே தொடங்குகின்றேன். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 02:43, 3 சூன் 2013 (UTC)

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:19, 4 சூன் 2013 (UTC)

வலி சுமக்கும் வரலாறுதொகு

http://ksmuthukrishnan.blogspot.com/2013/06/blog-post.html இந்தத் தலைப்பில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். இதை எப்படி திருத்தி நம்முடைய விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வரலாம். உங்கள் கருத்துகள் தேவை. (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)

நல்லெண்ண நம்பிக்கை கொள்ளுங்கள்தொகு

வணக்கங்க.. பல்வேறு களங்களில் உங்கள் பங்களிப்பின் சிறப்பை எடுத்துரைத்துள்ளேன் என்ற உரிமையுடன், அண்மைய உங்கள் சில உரையாடல்கள் பற்றி கருத்துரைக்க வேண்டிய கடமையும் எனக்கு உண்டு.

 • மலேசிய வானொலிப் பேட்டியில் உங்கள் பெயர் விடுபட்டது குறித்த உங்கள் வருத்தத்தைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், இது தொடர்பாக நீங்கள் விக்கிப்பீடியாவில் உரையாடிய விதம், அணுகுமுறை உகப்பாக இல்லை.
 • மலேசிய வானொலிப் பேட்டி அளித்தது செல்வக்குமார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக செல்வசிவகுருநாதன் என்று தவறுதலாக குறிப்பிட்டுப் பல்வேறு பக்கங்களில் கருத்திட்டுள்ளீர்கள். அவர் முறையான பதில் அளித்தும் அதன் நன்னோக்கைப் புரிந்து கொள்ளாமல் "ஆங்கிலத்தில் எழுதி விட்டார்", என்கிறீர்கள். இது எனக்குப் பொறுப்பான ஒரு செயலாகப் படவில்லை. நானாக இருந்தால், தவறுதலாக செல்வ சிவகுருநாதன் பெயரைக் குறிப்பிட்டதற்கு முதலில் அவரின் பேச்சுப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து இருப்பேன்.
 • செல்வா மலேசிய விக்கிப்பீடியர்களைப் பற்றிய கேள்வியே வரவில்லை என்கிறார். ஒரு பேச்சுக்கு யாரோ ஒருவர் கொடுக்கும் பேட்டியிலும் கூட இவ்வாறு பெயர் விடுபட்டது என்றாலும் அது மிகவும் இயல்பான, தற்செயல் நிகழ்வாகவே இருக்கும். செல்வாவுக்குப் பதிலாக செல்வசிவகுருநாதன் என்று நீங்கள் தவறுதலாக குறிப்பிட்டது போலவே யார் ஒருவருக்கும் இது போன்ற தடுமாற்றம் வரலாம் அல்லவா? எனவே, எந்த ஒரு விக்கிப்பீடியரின் செயற்பாடு குறித்தும் நல்லெண்ண நம்பிக்கை கொள்ளுங்கள். இது விக்கிப்பீடியா சமூகம் தழைப்பதற்கான அடிப்படைத் தேவை.
 • செல்வா மிகப் பொறுமையாக விளக்கம் அளித்த பின்னும், மரியாதையின் நிமித்தம் கூட நீங்கள் அவருக்கு மறுமொழியிடவில்லை. இது தகுமா?
 • உங்களை நோக்கிய உரையாடல்களை முழுமையாகப் படித்து, முறையான மறுமொழி அளித்து விட்டு, வேறு புலம் குறித்த கருத்துப் பகிர்வைத் தொடருங்கள். இல்லாவிட்டால், உங்களை மதித்து உரையாடுவோரின் நேரமே வீண்.
 • ஒரே விசயம் குறித்து பல்வேறு பக்கங்களில் பதியாதீர்கள். இதன் மூலம் அதற்கு வரும் எதிர்வினைகளும் கருத்துகளும் பல்வேறு பக்கங்களில் சிதறுகிறது. அனைவரும் அண்மைய மாற்றங்களைக் கவனிக்கிறார்கள் என்பதால், ஒரு பக்கத்தில் கருத்திட்டாலே போதும். உரிய விசயங்களுக்கு அனைவரும் கவனித்துக் கருத்தளிப்பர்.
 • உணர்ச்சியவயமான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள முனையுங்கள். நம் ஒவ்வொருவரின் பங்களிப்பைக் காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியா திட்டமும், அதன் மூலம் சமூகத்துக்குக் கிடைக்கும் பயனும் பெரிது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்விக்கிப்பீடியாவுக்கு மலேசியாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது என்று மகிழ்வதற்குப் பதிலாக, உங்கள் சார்ந்த பிரச்சினையாக கவலை கொள்ளவே வித்திட்டது.
 • எப்படி ஒவ்வொருவரும் கட்டுரையைத் தொடங்கலாமோ அது போலவே பரப்புரைகளும் அறிமுகங்களும் நாம் ஒவ்வொருவருமே செய்ய இயலும். அது போல் ஏற்கனவே பல அறிமுங்களை நீங்கள் செய்துள்ளீர்கள். மலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகத்துக்கான முகமாக நீங்கள் திகழும் போது, இன்னொரு விக்கிப்பீடியர் உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்று வருந்துவது தகுமா?

உங்கள் பங்களிப்புச் சிறப்பு, அனுபவம் ஆகியவற்றை முன்னிட்டு மேற்கண்டது போன்ற கருத்துகளைச் சொல்லாமல் விடுவோம் என்று கருதினேன். ஆனால், கவளச் சோற்றில் முழு பூசணிக்காய், சண்டை போட பிடித்திருக்கிறது போன்ற சொல்லாடல்கள் ஏற்புடையதாக இல்லை. இறுதியாக, தேவையே இல்லாமல் உங்கள், உங்கள் மனைவியின் சாதி அடையாளங்களை வெளிப்படுத்துவது, தமிழ் விக்கிப்பீடியா போன்ற பொதுக்களத்தில் அண்டை இனத்தின் மீதான பழிச்சொற்களை வீசுவது ஆகியன மிகவும் விரும்பத்தகாத செயல். ஒரு நிமிடம், உங்கள் பயனர் கணக்கை வேறு யாரேனும் கைப்பற்றி தகாத முறையில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றியது. இதைக் கண்டிக்காமல் விட்டால் தமிழ் விக்கிப்பீடியாவில் இது மிகவும் தவறான ஒரு முற்காட்டாகி விடும் என்று அஞ்ச வேண்டியுள்ளது.

எனது மேற்கண்ட கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தேவையற்றவற்றை விடுத்து வழமை போல் பங்களிக்க வேண்டுகிறேன். வழக்கத்துக்கு மாறான சற்று கடுமையான எனது கருத்துக்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:54, 3 சூன் 2013 (UTC)

// ஒரு நிமிடம், உங்கள் பயனர் கணக்கை வேறு யாரேனும் கைப்பற்றி தகாத முறையில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றியது. // எனக்கும் அவ்வாறே தோன்றியது. இப்படியும் எழுதக்கூடியவரா இவர் என்றெண்ணினேன். -- சுந்தர் \பேச்சு 10:35, 3 சூன் 2013 (UTC)

உலகத் தமிழர்கள் பாதுகாப்புதொகு

நம்முடைய தமிழர் இனம் பாதுகாக்கப்பட வேன்டும் என்பதற்காக ஓர் இணையத்தளத்தை உருவாக்கி இருக்கிறேன். முகவரி: http://www.worldtamilarprotectionsecretariat.org/ (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 19:38, 3 சூன் 2013 (UTC)

இரவி, சுந்தர் அவர்களுக்குதொகு

அன்புள்ள தம்பிகள் இரவி, சுந்தர் அவர்களுக்கு, வயது கூடுகிறது. அதனால், வாழ்க்கையின் வழிகளும் கூடுகின்றன. வலிகளும் மிஞ்சுகின்றன. தம்பி செல்வகுருநாதனுக்கு கைப்பேசி அழைப்புகள் விடுத்தேன். அவர் மறுமொழி கொடுக்கவில்லை. சென்ற ஆண்டு அவர் மலேசியா வந்து இருந்த போது, அவருடைய கைப்பேசி எண்களை எனக்குக் கொடுத்து இருந்தார்.

ஆக, கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பார்க்கும் போது தவறு செய்தவர் யார் என்று நினைக்கிறீர்கள். இந்த உங்கள் அண்ணன் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான். அந்த மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். தண்டனையை நானே கொடுத்துக் கொள்கிறேன். முப்பது நாட்களுக்கு முப்பது கட்டுரைகள். மலேசியாவைப் பற்றி அழகான கட்டுரைகள். கூடுதலாகத் தண்டனை கொடுக்கலாம் என்று நினைத்தால் அதையும் ஏற்றுக் கொள்கிறேன். (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 20:01, 3 சூன் 2013 (UTC)

வணக்கங்க.. எனது வேண்டுகோளை கனிவுடன் புரிந்து கொண்டதற்கு நன்றி. மறுப்புக்குரியதாக நான் குறிப்பிட்டிருந்த உங்கள் பேச்சுப் பக்கக் குறிப்பை நீக்கியதற்கும் நன்றி. தண்டனை, மன்னிப்பு ஆகியவை தமிழ் விக்கிப்பீடியாவில் தடை செய்யப்பட்ட சொற்கள் :) வேண்டுமானால், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அளிக்கும் பரிசாக, அடுத்த 30 நாட்களில் 30 கட்டுரைகள் எழுதித் தாருங்கள். ஏற்றுக் கொள்கிறேன். கூடவே, 2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டீர்கள் என்றால் நாங்களும் உங்களுக்குப் பரிசு கொடுக்க முடியும் :) பி. கு. செல்வசிவகுருநாதன், செல்வா ஆகியோரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் பேச்சுப் பக்கங்களிலேயே உங்கள் செய்தியை இடலாமே?--இரவி (பேச்சு) 06:40, 4 சூன் 2013 (UTC)

செல்வசிவகுருநாதனிடமிருந்து... தன்னிலை விளக்கங்கள்...!தொகு

வணக்கம் ஐயா!
இரண்டு நிகழ்வுகள் குறித்து என்னுடைய தன்னிலை விளக்கத்தைத் தர நான் கடமைப்பட்டுள்ளேன்.

நிகழ்வு 1:

கடந்த மே 31 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு எங்களின் சொந்த ஊர் நோக்கிச் சென்றேன். ஜூன் 1 அன்று அப்பாவின் இல்லத்தில் நண்பகல் 12 மணிக்கு... எனது கைப்பேசி வழியாக நமது தமிழ் விக்கிப்பீடியாவினை உலாவுதல் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அண்மைய மாற்றங்கள் மூலம் தகவல் அறிந்துகொண்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை... அதற்குள் பலவித ஊகங்கள் எழும்பத் தொடங்கியிருந்த நிலையில் என்னுடைய தகவலைப் பரிமாற எண்ணினேன். என்னிடம் மடிக்கணினி கிடையாது. ஊரில் இருக்கும் ஒரேயொரு 'வலை உலா மையம்', மின் தடங்கலினால் இயங்கவில்லை என்பதனையும் அறிந்தேன். கைப்பேசியிலிருந்த இணையதள வசதியினை பயன்படுத்த முடிவு செய்தேன். கைப்பேசியில் தமிழ் தட்டச்சு செய்து பார்த்ததில்லை; எனவே ‘ஆபத்துக்கு பாவமில்லை’ என்ற எண்ணத்தினாலேயே ஆங்கில மொழியில் தகவல் பதிந்தேன்.

நிகழ்வு 2:

நான் கடந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்திலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்திலும் மலேசியாவில் அலுவலகப் பணிக்காக தங்கியிருந்தேன். நான் அங்கிருப்பதை உங்களுக்கும் தெரிவித்து, முடிந்தால் தங்களின் இல்லத்திற்கு வருவதாக சொல்லியிருந்தேன். நாமும் இருமுறை தொலைபேசியில் பேசினோம். அந்நிலையில் எனக்கு திடீரென நிறைய அலுவலக ரீதியான பிரச்சனைகள் வந்துவிட்டன. உடன் பணிபுரியும் நண்பர், உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் அவரின் பொறுப்புகளையும் நானே செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெப்ரவரி 2 அன்று நான் இந்தியா திரும்பினேன். அதற்குப்பிறகு வீட்டில் வேறு பிரச்சினைகளை கையாளவேண்டிய சூழலில் வெளியுலக வாழ்க்கையில் ஏதும் செய்ய இயலவில்லை. விக்கியிலும் எனது பங்களிப்பு குறைந்தது. மீண்டும் இந்த மே மாதம் முதற்கொண்டு இங்கு பங்களித்து வருகின்றேன். மலேசியாவிலிருந்து கிளம்பும்போது நான் உங்களிடம் தெரிவிக்காமல் வந்துவிட்டேன். அது தவறென்று இப்போது உணர்கின்றேன்; தங்களின் பேச்சுப் பக்கத்திலாவது தெரிவித்திருக்கலாம். ஆனால், இது 'உணராமல் செய்த பிழை' ஆகும்; சூழ்நிலை சந்தர்ப்பங்களின் காரணமாக விடுபட்டுப் போன ஒரு விடயம்! இதற்காக தனிப்பட்ட முறையில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இவ்விதம் எவரிடமும் நடக்காது பார்த்துக் கொள்கிறேன். என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:01, 5 சூன் 2013 (UTC)

நெஞ்சத்தின் சுமைகள்தொகு

திருச்சி வானவில் பண்பலை வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பார்வதியின் நேர்காணல்
வணக்கம் ஐயா!. தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுடைய பங்களிப்புகள் மதிப்பிட முடியாதது. ஆலமரத்தடி பகுதியில் திருச்சி வானவில் பண்பலை வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நேர்காணல் நிகழ்ச்சியில் சிபில் கார்த்திகேசுவின் கல்லறைக்கே நேரில் சென்று தரவுகளைச் சேகரித்த தங்களது சேவை பற்றி நினைவு கூர்ந்துள்ளேன். கேட்டுவிட்டுக் கருத்து கூறுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:03, 21 சூன் 2013 (UTC)
வணக்கம் முத்துக்கிருஷ்ணன், ஏற்கனவே இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்கள். எவரும் மலேசியாவுக்கு வந்து பேட்டி கொடுக்கவில்லை. கனடாவில் இருந்து நேரடியாகத் தொலைப்பேசி ஊடாகவே பேட்டி கொடுக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் செல்வா கூறியிருக்கிறார். அவரும் நீங்கள் கூறியவாறு எதனையும் கூறவில்லை என விளக்கம் தந்துள்ளார். ஆனாலும், மலேசியாவில் இருந்து பெரும் பங்களிப்பை வழங்கி வரும் தங்களைப் பற்றி அவர் எதுவும் கூறாதது எனக்கும் வருத்தமே. உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. பார்வதிசிறீ, மற்றும் பல பயனர்கள் உங்கள் பங்களிப்பைப் பற்றி ஏற்கனவே பல ஊடகங்களில், மாநாடுகளில் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். வரும் செப்டம்பரில் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியர்களின் மாநாடு பெரிய அளவில் இடம்பெற ஒழுங்கு செய்யப்படுகிறது. நீங்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.. விக்கியில் உங்கள் பங்களிப்பை அருள் கூர்ந்து தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 22:58, 21 சூன் 2013 (UTC)

கட்டுரைக் வேண்டுதல்தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில்:

 • மலேசியாவில் தமிழ் விக்கியூடகங்களின் தேவையும் வாய்ப்புக்களும்

400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:06, 18 ஆகத்து 2013 (UTC)

சென்னை வருகையை உறுதிப்படுத முடியுமா?தொகு

வரும் 28, 29 தேதிகளில் சென்னை விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த முடியுமா? தங்குமிட ஏற்பாடுகளைத் திட்டமிட வசதியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 19:05, 13 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் உங்கள் மனைவியும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:57, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை --இரவி (பேச்சு) 21:14, 21 செப்டம்பர் 2013 (UTC)

இந்திய தேசிய இராணுவம் பற்றி முக்கியத் தகவல்கள் தேவைதொகு

என் முகநூல் நண்பர் ஒருவர் இந்திய தேசிய இராணுவத்தை பற்றி அதில் பணி செய்த என். என். பிள்ளை என்பவர் எழுதிய நூல்களில் இருந்து தகவல்கள் கொடுத்தார். அது நான் கேள்விப்பட்ட விடயங்களுக்கு நேர் மாறாக இருக்கிறது. அதை கீழே தருகிறேன்

//1) சுபாஷ் ஜப்பானியர்களின் கைப்பாவையாக இருந்தவர். 2) ஜப்பான் ராணுவத்தின் கடைநிலைச் சிப்பாய் கூட சுபாஷை மதிக்கவில்லை. 3) சுபாஷ் ராணுவம் தொடர்பாக ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். 4)இந்தியாவைக் கைப்பற்றும்போது இந்திய மக்கள் ஜப்பானியருக்கு எதிராக திரும்பாமல் இருக்க ஒரு பொம்மை ஆட்சியாளராக சுபாஷை வைக்காலாம் என்[அதே ஜப்பானியரின் திட்டமாக இருந்தது. 5)சுபாஷையே மதிக்காத ஜப்பானிய ராணுவத்திற்கு அவரின் ஆர்மி மீது இளக்காரம் மட்டுமே இருந்தது. 6) போரில் இந்திய தேசிய ராணுவம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை கொஞ்சம்கூட ஜப்பானியரிடம் இல்லை. 7) ஜப்பான் ராணுவத்திற்கு காவல்வேலை, கருவிகளை பழுதுபார்த்தல், ஓட்டுநர் வேலை, கட்டுமான வேலைகள் போன்ற ஏராளமான வேலைகளுக்கு அவர்களுக்கு ஆள் தேவைப்பட்டது. ஆகவே தங்கள் ராணுவத்துக்கான ஒரு சேவகர்க்கும்பலாகவே அவர்கள் இந்திய தேசிய ராணுவம்த்தை நடத்தினார்கள். 8)ஜப்பானியர் இந்திய தேசிய ராணுவத்தை போரில் ஈடுபடுத்தவேயில்லை. 9)சுபாஷின் ராணுவமும் ஜப்பானிய ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட பெரும்பாலான போர்களில் சுபாஷின் ராணுவம் வெறும் உதவியாளர்பட்டாளமாகவே இருந்தது. 10)மொத்தம் மூன்று போர்முனைகளில் சுபாஷின் ராணுவம் நேரடியாக பீட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்டது.சுபாஷின் வீரர்கள் வெள்ளைக்கொடியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்களை நம்பாமல் பிரிட்டிஷ் ராணுவம் அவர்களை சுட்டு வீழ்த்தியது. பலர் திரும்பி ஓடிவந்தார்கள்.இது வெட்கக்கேடு என்று சொல்கிறார். 11)ஒரு இடத்தில்கூட சுபாஷின் ராணுவம் உண்மையாகப் போரிடவில்லை. சுபாஷின்ராணுவ வீரர்கள் பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர். 12) இவை அனைத்தயும் பார்த்து கண்ணீர்விட்டு செய்வதறியாமல் கதறுகிறார் சுபாஷ். மேலே உள்ள விஷயங்கள் அனைத்தும் என்.என்.பிள்ளை தன் சுயசரிதையில் எழுதியவை. //

வேண்டுகோள்.

இது பற்றி உண்மை நிலவரம் தெரியவில்லை. நீங்கள் இதுபற்றி மலேசியத் தமிழ் இந்திய தேசிய இராணுவ வீரர்களிடம் இருந்து தகவல்களை பெற்று தந்தால் நன்றாக இருக்கும். இது மிக முக்கியமானது என்பதால் விரைவில் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:00, 24 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:50, 27 செப்டம்பர் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்தொகு

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)

மீண்டும் வருகதொகு

வணக்கங்க, மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து வழமை போல் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:23, 2 நவம்பர் 2013 (UTC)

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Surrender japanese.jpgதொகு

 

படிமம்:Surrender japanese.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:15, 4 திசம்பர் 2013 (UTC)

கே. எஸ். பாலச்சந்திரன் நல்ல ஒரு நண்பர்தொகு

கே. எஸ். பாலச்சந்திரன். காலமாகி விட்டார். என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்முடைய தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் துணையாக நின்றவர். மனம் வலிக்கின்றது ஐயா. நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 28.02.2014 - 4.24am MST

பதிப்புரிமை மீறல் - படிமங்கள்தொகு

நீங்கள் பதிவேற்றிய 1000க்கு மேற்பட்ட படிமங்கள் பதிப்புரிமை மீறல் கொண்டிருக்கின்றன. வலைத்தளங்களில் இருந்து பிரதி செய்யப்பட்ட இங்கு பயன்படுத்த முடியாது. மிக அவசியம் என்றால் மாத்திரம் நியாயமான பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த முடியும். பதிப்புரிமை மீறல் அல்ல அற்ற உங்கள் படிமங்களைக் குறிப்பிடுங்கள். அவை தவிர்த்து மற்றவை நீக்கப்படும். பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். நன்றி. --AntonTalk 08:30, 9 ஏப்ரல் 2014 (UTC)

தவறுகள் தவிர்க்கப்படும்தொகு

அன்பு சகோதரர் திரு.அந்தோன் அவர்களுக்கு, வணக்கம். நான் பதிப்பேற்றிய படிமங்களில் பல படிமங்கள் பதிப்புரிமை மீறல் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. எதிர்வரும் காலங்களில் முடிந்தவரை பதிப்புரிமை பெற்ற படிமங்களை பதிவேற்றுகிறேன். நன்றி.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)05.46, 10 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம். பதிலுக்கு நன்றி. பதிப்புரிமை மீறல் பற்றிய சரியான புரிந்துணர்தல் இல்லாாததால் பதிவேற்றியுள்ளீர்கள். பதிப்புரிமை பெற்ற படிமங்கங்களை பொதுவில் பதிவேற்றி விடுங்கள். இது தொடர்பில் வேறு ஏதும் உதவி தேவை எனில் குறிப்பிடுங்கள். --AntonTalk 08:24, 10 ஏப்ரல் 2014 (UTC)

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்தொகு

வரும் வார இறுதியில், மலேசியா, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். பார்க்க: விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம். நன்றி.--இரவி (பேச்சு) 09:30, 25 மே 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாமைதொகு

அன்பு ரவி அவர்களுக்கு, வணக்கம். உங்களுடைய அழைப்புக் கடிதத்தைப் படிக்கும் போது, நான் ஈப்போ பொது மருத்துவமனையில் இருந்தேன். கடந்த 17.05.2014 விடியல்காலை 3.00 மணிக்கு, திடீரென்று நெஞ்சுவலி. குளியல் அறையிலேயே விழுந்து விட்டேன். தலையில் லேசான அடி. மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. செய்து பார்த்தார்கள். மூளைப் பாகத்தில் இரத்தம் கட்டியாகி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

எதிர்வரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்கு நாள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் எங்கேயும் வெளியே போக முடியவில்லை. போகக் கூடாது என்று வேறு குடும்பத்தார் தடுத்து விட்டார்கள். திங்கட்கிழமை காலையில்தான் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருக்கிறேன். நீங்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கும் போது மருத்துவமனையில்தான் இருந்தேன். இருந்தாலும் மருத்துவமனையில் இருந்து புதிய பார்வை நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்பினேன்.

மருத்துவமனையில் இருக்கும் போது என் மனம் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சியைச் சுற்றியே வலம்.வந்தது. நீங்கள் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியதாக நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். வாழ்த்துகள். விரைவில் நான் உங்களையும் மற்ற விக்கிப்பீடியா அன்பர்களையும் சந்திக்கிறேன். தங்களின் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். உடல்நலம் சீரடைந்ததும் தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) 03.06.2014 12.49 Malaysia Time

மலேசியா வந்தும் உங்களைச் சந்திக்க இயலாததும் தமிழ் விக்கிப்பீடியா நிகழ்வுகளில் நீங்கள் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கும் வருந்துகிறேன். தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டு இயன்ற போது பங்களியுங்கள். சிங்கப்பூர், மலேசியாவில் நடந்த மூன்று நிகழ்வுகளிலும் உங்கள் பங்களிப்பைச் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினேன். உங்கள் பயனர் பக்கத்தைக் காட்டி அதில் இருந்து சில எடுத்துக் கட்டுரைகளைக் காட்டிப் பேசினேன். மலேசியா பற்றி விரிவான கட்டுரைகள் பல இருந்ததை வியப்புடன் கண்டார்கள். உங்களை ஏற்கனவே அறிந்த பலர் வந்திருந்தார்கள். மலேசியத் தமிழர்களிடம் இப்போது தான் முதல் முறை நேரடியாக உரையாடுகிறேன். தீராத தமிழார்வத்துடன் பலரைக் கண்டதில் மகிழ்ச்சி. வருங்காலத்தில் இன்னும் பலர் மலேசியாவில் இருந்து பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அன்புடன்--இரவி (பேச்சு) 08:41, 3 சூன் 2014 (UTC)
முத்துகிருஷ்ணன் ஐயா, நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.--Kanags \உரையாடுக 09:05, 3 சூன் 2014 (UTC)
நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 09:21, 3 சூன் 2014 (UTC)
உடல் நலம் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் தக்க சிகிச்சை பெற்று நன்கு ஓய்வெடுத்து புத்துணர்வுடன் புதிய பகிர்வுகளைத் தாருங்கள் ஐயா --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 09:37, 3 சூன் 2014 (UTC)
விக்கிப்பீடியா அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் உடல்நலம் பேண, வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் கட்டுரையைத் தொடங்கி இருக்கிறேன். நன்றி.-(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) 09.56 6 சூன் 2014 12.49 (MST)

பதிப்புரிமை மீறல் - படிமங்கள்தொகு

ஐயா, மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் ழுதுகுகளைப் பாருங்கள். நேற்று வந்த காளான்கள் ஒரு முதியவரிடம் பாட்டி கதை பேசுகின்றன,.

வணக்கம், Ksmuthukrishnan!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntonTalk 20:00, 9 சூன் 2014 (UTC)

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்தொகு

வணக்கம் முத்துகிருஷ்ணன், நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்--நந்தகுமார் (பேச்சு) 15:24, 4 சூலை 2014 (UTC)

மீள்வருகை வரவேற்புதொகு

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நீங்கள், பல மாதங்களுக்குப் பிறகு வந்து மெர்லிமாவ் ‎ கட்டுரை வரைந்துள்ளீர்கள். உங்கள் பங்களிப்பைக் காண மகிழ்ச்சியாய் உள்ளது இயன்றவாறு தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி-- mohamed ijazz(பேச்சு) 07:13, 9 அக்டோபர் 2014 (UTC)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:52, 9 அக்டோபர் 2014 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:25, 9 அக்டோபர் 2014 (UTC)
  விருப்பம்--குறும்பன் (பேச்சு) 00:51, 10 அக்டோபர் 2014 (UTC)
  விருப்பம் மலேசியப் புவியியலைப் பற்றி பல்வேறு தகவல்களை எழுதி விரிவாக்குகிறீர்கள். மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:27, 10 சனவரி 2015 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Ksmuthukrishnan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:09, 30 திசம்பர் 2014 (UTC)
உடல் நலம் தேறி மீண்டும் வந்து முனைப்புடன் பங்களிப்பதற்கு என் உளங்கனிந்த நன்றியை் தெரிவித்துக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 07:04, 13 சனவரி 2015 (UTC)

:மிகவும் நன்றி ஐயா. வயதாகி வருகிறது. உடலும் லேசாகத் தளர்ந்து வருவதை உணர முடிகிறது. அதற்குள் முடிந்த வரையில் விக்கிப்பீடியாவில் மலேசியாவைப் பற்றிய தகவல்களை நிறைய சேகரித்து வைக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்முடைய பேரப் பிள்ளைகளுக்கு மிகவும் பயன்படும். சரி. நலம் விசாரித்தமைக்கு மறுபடியும் நன்றிகள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்,(பேச்சு) --ksmuthukrishnan 07:33, 13 சனவரி 2015 (UTC)

  விருப்பம் உங்கள் உழைப்பு, ஈடுபாடு, நோக்கத்துக்குத் தலை வணங்குகிறேன். தொடர்க உங்கள் பணி ! --இரவி (பேச்சு) 07:47, 13 சனவரி 2015 (UTC)

மலாய் மொழிதொகு

வணக்கம். மலேசியாவில் வாழும் தமிழர்கள் மலாய் மொழியை, மலாயு மொழி என்று அழைப்பது கிடையாது. மலாய் மொழி என்றுதான் அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசும் போது மலாய் மொழியை Malay Language என்பார்கள். Melayu Language என்று அழைக்க மாட்டார்கள்.

மலாய் என்பது ஓர் இனத்தைக் குறிப்பதாகும். தமிழில் அந்த இனத்தைச் சார்ந்தவர்களை மலாய்க்காரர்கள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் Malay People or Malay race. மலாயு என்றாலே அது இனத்தைச் சார்ந்து போகிறது. மொழியைச் சார்ந்து போவது இல்லை. மலாய் மொழி என்பதே சரியான தேர்வு. தவிர, பேச்சு வழக்கில் மலாய் மொழி எனும் தொடர்ச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படும்.

இருப்பினும், எழுதும் போது மலேசிய மொழி என்றே சொல்வார்கள். எழுதுவார்கள். அதிகாரத்துவமாக மலேசிய ஊடகங்களில் மலேசிய மொழி என்றே பயன்படுத்தப் படுகிறது.Bahasa Malaysia

மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளிலும், மலாய்க் கல்லூரிகளிலும் 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறேன். அதனால், மலாய் மொழியைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும்.

எதிர்காலத்தில் நம்முடைய பதிவுகளில் மலாய் மொழி அல்லது மலேசிய மொழி என்று பதிவு செய்வதை முன்னெடுக்கிறேன். தங்களின் கருத்துகளையும் தெரிவியுங்கள். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்,பேச்சு --ksmuthukrishnan 11:22, 9 சனவரி 2015 (UTC)

பேச்சு:மலாயு மொழி பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் ஐயா.--Kanags \உரையாடுக 11:29, 9 சனவரி 2015 (UTC)

நந்தகுமார் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார்தொகு

நந்தகுமார் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள். --இரவி (பேச்சு) 12:27, 22 சனவரி 2015 (UTC)

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடுதொகு

வணக்கம் ஐயா! அண்மையில் நடைபெற்ற இந்த மாநாடு குறித்து இக்கட்டுரையை தங்களால் மேலும் விரிவுபடுத்த இயலுமெனில், செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்; அனைவருக்காகவும் இறைவனைப் பிராத்திக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 3 பெப்ரவரி 2015 (UTC)

கட்டுரை விரிவாக்கம்தொகு

நன்றி ஐயா. கண்டிப்பாக விரிவாக்கம் செய்து தருகிறேன். சென்ற வாரம் 'உலகத் தமிழ்க கவிதை பெருவிழா'வை ஈப்போவில் நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து 30 கவிஞர்களை வரவழைத்தோம். அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து வேண்டி இருந்தது. இன்றுதான் இல்லம் திரும்பினேன். தங்களின் பிரார்த்தனைக்காக மிகவும் நன்றி ஐயா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு --ksmuthukrishnan 08:58, 3 பெப்ரவரி 2015 (UTC)

Translating the interface in your language, we need your helpதொகு

Hello Ksmuthukrishnan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:08, 8 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 26 சூலை 2016 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global surveyதொகு

 1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
 2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia surveyதொகு

(Sorry for writing in English)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 16 மார்ச் 2017 (UTC)

Translating Ibero-America is back! Come and join us :)தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:36, 12 சூன் 2017 (UTC)

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்தொகு

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:44, 19 சூன் 2019 (UTC)

வேண்டுகோள்தொகு

 1. நீங்கள் தொகுத்த மலாயா என்ற கட்டுரையை ஆஙகில விக்கியுடன் இணைத்து உதவுங்கள். --Muthuppandy pandian (பேச்சு) 12:37, 14 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ksmuthukrishnan&oldid=2815782" இருந்து மீள்விக்கப்பட்டது