பயனர் பக்கம் உரையாடல் பங்களிப்புக்கள் மின்னஞ்சல் பதக்கங்கள் மணல்தொட்டி
உருவாக்கியவை:- கட்டுரைகள் வார்ப்புருக்கள் படிமங்கள் கருவிகள் மேலதிகமானவை

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகு


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு


முதற்பக்க வலைவாசல் அறிவிப்புதொகு


பதக்கம்தொகு

Peace Barnstar Hires.png செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆசிய மாதம், விக்கிக்கோப்பை என்று அடுத்தடுத்து பெரும் பொறுப்புகளை முன்னுவந்து எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரையும் உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வது சிறப்பு. இது போன்றபணிகளைச் செய்வோர் மிகச் சிலரே. ஆனால், இது மிகவும் இன்றியமையாத பணி. என் உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். --இரவி (பேச்சு) 10:43, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி, இரவி அவர்களே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:08, 8 திசம்பர் 2016 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள் தம்பி!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:12, 8 திசம்பர் 2016 (UTC)
அண்ணாவுக்குத் தம்பியின் நன்றிகள், பரீட்சையில் மிளிர என் வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:22, 8 திசம்பர் 2016 (UTC)


👍 விருப்பம், வாழ்த்துக்கள் நண்பா!! உங்கள் பணி தொடரட்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 11:50, 31 திசம்பர் 2016 (UTC)
நன்றி,மாதவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 22:50, 31 திசம்பர் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்புதொகு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:09, 8 திசம்பர் 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று இரவி அவர்களே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:12, 8 திசம்பர் 2016 (UTC)

உரையாட வேண்டும்தொகு

தங்களுடன் நான் உரையாட வேண்டும். சிறிது நேரம் Hangouts இல் இணைய முடியுமா?-- மாதவன்  ( பேச்சு ) 12:21, 11 திசம்பர் 2016 (UTC)

வாருங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:30, 11 திசம்பர் 2016 (UTC)

கோப்பை விதிதொகு

இருக்கும் கட்டுரையில் 50 அல்லது 100 வார்த்தைகள் அல்லது 15 ... வரிகள் சேர்த்தால் அது போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?--குறும்பன் (பேச்சு) 20:23, 16 திசம்பர் 2016 (UTC)

தாங்கள் போட்டியில் பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றேன். மேலும் இப்போட்டியானது கட்டுரை உருவாக்கத்தையே முதன்மையாக கொண்டுள்ளது. ஆம்! இப்போட்டிக்காக FOUNTAIN கருவி உருவாக்குநருடன் தொடர்பு கொண்டேன். போட்டிக்காக கட்டுரை உருவாக்கத்தை மையப்படுத்தியே கருவி இடைமுகம் வடிவமைக்கப்படுள்ளது. மேலும் இப்போட்டிக்காக உருவாக்கப்படும் கட்டுரைகளை விக்கியில் இடம்பெறும் மாபெரும் போட்டிகளான கட்டுரை ப்போட்டிகளில் (நீங்களும் பங்குபற்றினீர்கள்) விரிவாக்க வழிவகை செய்யலாம் என நினைக்கின்றே. எனவே அருள்கூர்ந்து நீங்கள் பல பல கட்டுரைகளை உருவாக்குநீர்கள் எனநம்புகின்றேன். விரும்பின் விரிவாக்கத்திற்கெனெ இன்னோர் மாதத்தில் போட்டி நடாத்தலாம். அது பற்றி கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. (@Kurumban: நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:05, 17 திசம்பர் 2016 (UTC)

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 09:55, 17 திசம்பர் 2016 (UTC)

யாழ்ப்பாணம் (வானூர்தி)தொகு

யாழ்ப்பாணம் (வானூர்தி) கட்டுரையை ஆ.வி.யில் உருவாக்கியதற்குப் பாராட்டுக்கள். ஆயினும் அங்கு அக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை கேள்விக்கு உட்படலாம். ஆகவே, குறிப்பிடத்தக்கமைக்குரிய விடயம் சான்றுகளுடன் சேர்க்கப்பட வேண்டும். முடிந்தால் அங்கு சேர்த்துவிடுங்கள். பின்னர் உரைதிருத்தம் செய்துவிடுகிறேன். --AntanO 02:08, 24 திசம்பர் 2016 (UTC)

சில பகுதிகள் இணைத்துள்ளேன்.--AntanO 02:36, 24 திசம்பர் 2016 (UTC)
@AntanO: அவர்களே, தற்போது மாத முடிவு ஆகையால் இணைய வேகம் குறைவாகவே உள்ளது. விக்கி, கூகுள் தவிர வேறு எந்த வலைத்தளங்களுக்கும் செல்லமுடியவில்லை. தாங்கள் தக்க இணையச்சான்றுகளை மென்மேலும் அங்கு இட்டு உதவ வேண்டுகின்றேன். மேலும் கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:11, 24 திசம்பர் 2016 (UTC)

எமினெம்தொகு

எமினெம் கட்டுரையில் இலக்கணப் பிழைகள் உள்ளன. அதனை முதற்பக்கக் கட்டுரையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். பரிந்துரைத்துவிட்டு செய்யுங்கள். --AntanO 03:22, 29 திசம்பர் 2016 (UTC)

அத்துடன் எமினெம் கட்டுரையில் நிறைய அளவுக்கதிகமான சிவப்பு இணைப்புகள் உள்ளன. ஆங்கில எழுத்துக்கள் நிரம்பவே உள்ளன. இவற்றைக் காட்சிப்படுத்துவதிலும் பார்க்க (வேறு உகந்த கட்டுரைகள் இல்லாவிட்டால்) பழைய கட்டுரையை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:37, 29 திசம்பர் 2016 (UTC)
அன்ரன் அவர்களே, தற்போது எமினெம் கட்டுரையை மாற்றி ஏ. ஆர். ரகுமானை இட்டுள்ளேன் ஆட்சேபனை இருப்பின் வேறொரு தகுந்த கட்டுரையை இட்டு விடுங்கள். கருத்துக்கு நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:34, 29 திசம்பர் 2016 (UTC)
தற்போதும் முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள் என்பதற்கு ஏற்ப இல்லாது இருப்பதைக் காணலாம். பரவாயில்லை, அக்கட்டுரை இருக்கட்டும். முடியுமானால் பரிந்துரைப் பகுதியில் கட்டுரைகளை பரிந்துரையுங்கள். அங்கு தேவையுள்ளது. --AntanO 03:06, 31 திசம்பர் 2016 (UTC)
நன்றி அன்ரன் அவர்களே, அத்துடன் விக்கிக்கோப்பைக்காக பயனர்கள் உருவாக்க்கும் விரிவான சிறந்த கட்டுரைகளை வாராவாரம் தவறாது இடப் பரிந்துரைக்க்கின்றேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:35, 31 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--AntanO 02:10, 4 சனவரி 2017 (UTC)

Questionதொகு

Are you willing to create a project which will teach Tamil? I'm dying to learn Tamil and I'm looking for anyone interested. thanks! --Atcovi (பேச்சு) 00:28, 1 சனவரி 2017 (UTC)

Let us keep this discussion at our talk page, ok? Thanks! --Atcovi (பேச்சு) 00:38, 1 சனவரி 2017 (UTC)
Atcovi Where? here or in meta--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:42, 1 சனவரி 2017 (UTC)
Sorry bad wording of me. At meta, thanks. --Atcovi (பேச்சு) 00:44, 1 சனவரி 2017 (UTC)

மீண்டும்தொகு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. நன்றி.--Kanags \உரையாடுக 11:30, 3 சனவரி 2017 (UTC)

நன்றி, அப்படியே ஆகட்டும் கனகு ஐயா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:06, 3 சனவரி 2017 (UTC)

உதவிதொகு

கிழக்கு கடற்கரைச் சமவெளி என்று ஒரு கட்டுரையை உருவாக்கி பின்னர் அதை கிழக்கு கடற்கரைச் சமவெளிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தினேன். விக்கிக்கோப்பைக்கான எனது பங்களிப்பில் பதிவேற்ரம் செய்ய இயல்வில்லை. article not found என வருகிறது. உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 07:45, 7 சனவரி 2017 (UTC)

@கி.மூர்த்தி:கிழக்கு கடற்கரைச் சமவெளிகள் என்பதை நான் சமர்ப்பிக்க முனைந்த போது, ஏனைய கட்டுரைகளை சமர்ப்பிக்கும் போது தோன்றும் "ADD" எனும் வார்த்தை தோன்றும் பெட்டி தோன்றியது. ஆனால் அதை என்னால் சமர்ப்பிக்க முடியாது. நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும். முயற்சியுங்கள். அவ்வாறு சமர்ப்பிக்க இயலாவிடின் அக்கட்டுரைகான புள்ளிகளை இன்னொரு கட்டுரைப்புள்ளியுடன் இணைத்துவழங்குகின்றேன். முயற்சி பயனளிக்காவிடின் மட்டுமே. அவ்வாறு முயற்சி பயனளித்தால் இங்கு தெரிவிக்கவும். நன்றி. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:35, 7 சனவரி 2017 (UTC)++
ஸ்ரீஹீரன் இப்பொழுது சரியாகி விட்டது . நன்றி அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 10:10, 7 சனவரி 2017 (UTC)

15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் போட்டிகள்தொகு

வணக்கம்! உங்களின் திறன்நிறைந்த செயலாக்கங்களுக்கும், சிந்தனைகளுக்கும் எனது பாராட்டுகள். 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் போட்டிகள் குறித்து உரையாடுவதற்கு, திட்ட பக்கமொன்றினை ஆரம்பித்து விடுங்கள். பலதரப்பட்ட விடயங்கள் குறித்து அங்கு விவாதிக்க இயலும். ஆலமரத்தடியில் விரிவாக உரையாடுவதில் சிரமங்கள் இருக்கக்கூடும் என்பது எனது கருத்து; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 13 சனவரி 2017 (UTC)

தங்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல துணைத் தலைப்புகளை இட்டு, விரிவாக உரையாடலாம். தேவைப்படும்போது பக்கத்தின் தலைப்பினை நகர்த்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டிற்கு இங்கு காண்க! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:32, 13 சனவரி 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே தாங்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க இங்கு Endorsements பகுதிக்கு சென்று உங்கள் ஆதரவையும், மேலதிக கருத்துகளை ஆங்கிலத்தில் பதியவும் வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:18, 13 சனவரி 2017 (UTC)

மிகக் கடினமான பணிகளை உள்ளடக்கிய மாபெரும் திட்டமென்றாலும், உங்களுடைய முனைப்புத் திறனானது உங்களுக்கும் தமிழ் விக்கிக்கும் வெற்றியினை ஈட்டித் தரும் என நம்புகிறேன். என்னால் இயன்ற உதவியினை செய்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 13 சனவரி 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அத்துடன் உங்கள் ஆதரவு அங்கு தேவைப்படுகின்றது. இதுவே நான் முதலாவதாக உங்களிடம் போட்டிக்காகக் கேட்கும் உதவி என் ந்மபுகின்றேன். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. நன்றி! தாங்களும் போட்டியில் பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:24, 13 சனவரி 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் அவர்களே, அங்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:32, 13 சனவரி 2017 (UTC)

தனிப்பட்ட முறையில் சில கருத்துகள்:

 1. தங்களின் பெருமளவு நேரத்தை இந்தப் பணி எடுத்துக்கொள்ளும். தங்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் உங்களால் நேரம் செலவிட முடியுமா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 2. நீங்கள் நிறைய உரையாட வேண்டியிருப்பதால், அதிகளவு எழுத்துப்பிழைகள் ஏற்படுகிறது. பிழையின்றி எழுதுவது ஒரு ஒருங்கிணைப்பாளருக்கு இன்றியமையாதது. இங்குகூட பரவாயில்லை; ஆனால் விக்கிமீடியா போன்ற அனைத்துலக அரங்கில் பிழையின்றி எழுதுவது மிகவும் முக்கியமானது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். திட்டப் பக்கத்தில் உரிய திருத்தங்களை பிறர் மேற்கொள்ள இயலும். ஆனால் ஒருவரின் பேச்சில் மற்றவர் திருத்துவது நடைமுறையன்று அல்லவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 13 சனவரி 2017 (UTC)

போட்டியில் பங்குபற்றுவதில் எனக்கு இப்போது விருப்பமில்லை. உங்களுக்கு உதவிடும் வகையில் சில பணிகளை செய்திட விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 13 சனவரி 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே, இப்போட்டிக்கான முன்னேற்பாடுகளை முறையாக செய்வேனானால் இப்போட்டியை வெற்றிகரமாக, எனது கல்விக்கு இடையூறு இன்றி நடாத்த முடியும் என நான் நம்புகின்றேன். நிச்சயமாக, நான் எழுத்துப்பிழைகளுடன் உரையாடுவது என்னிடம் உள்ள மிகப்பெரிய குறை:- காரணம் வேகமாக பொறுமையின்றி தட்டெழுத்து செய்வது. ஏன் உங்களுக்கு இடும் இப்பதிலையும் கூட வேகமாகத் தான் தட்டெழுத்திடுகின்றேன். தாங்கள் சுட்டிக்காட்டிய எனது குறை எனக்குள்ளும் இருந்தது. இனிவரும் காலங்களில், இல்லை, இன்றிலிருந்தே உரையாடல்களில் கவனத்துடன் உரையாடுவேன் என நானாகவே திடசங்கற்பம் பூண்டு எனது பதிலை முடித்துக்கொள்கின்றேன். போட்டிக்கான முன்னேற்பாடுகளில் தங்கள் உதவி தேவைப்படின் கேட்கின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:57, 14 சனவரி 2017 (UTC)

உதவிதொகு

பன்வாரியா என்ற கட்டுரையை தவறுதலாக banharia என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைத்து விட்டேன். பன்நரிஅ என்ற சரியான கட்டுரையுடன் இணைக்க உதவி வேண்டும் அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 16:08, 13 சனவரி 2017 (UTC)

ஆங்கிலக் கட்டுரைதொகு

ஆங்கிலத் தலைப்பில், முழுக்க ஆங்கிலத்தில் உள்ளடக்கத்துடன் பயனர் ஒருவர் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 06:57, 15 சனவரி 2017 (UTC)

Kanags அவர்களின் ஆலோசனைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 15 சனவரி 2017 (UTC)

தொடராப் பக்கங்கள்தொகு

விக்கிக்கோப்பை போட்டியினை நன்றாக நடத்துகின்றீர்கள். இதேபோல் மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பில்லாத கட்டுரைகளுக்கும் கவனம் தேவைப்படுகின்றது. இங்கு பார்க்க. 1338 கட்டுரைகள் தொடர்புகள் இல்லாமல் உள்ளன. இவற்றை இற்றைப்படுத்தினால் விக்கிப்பீடியாவின் தரம் உயரும். --அஸ்வின் (பேச்சு) 13:15, 25 சனவரி 2017 (UTC)

அஸ்வின் அவர்களே! தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. அந்தவகையில் தாங்கள் கூறியதை ஓர் திட்டம் ஊடாக முன்னெடுக்கலாம் என எண்ணுகின்றேன். விக்கிக்கோப்பை முதலில் முழுமையாக முடிவடையட்டும். பின் திட்டமிடுவோம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:43, 25 சனவரி 2017 (UTC)

வேண்டுகோள்தொகு

கழுதைப்பிட்டித் துறை பற்றிய கட்டுரைத் தேவை. ஏனெனில், கழுதைப்பிட்டி-மூலிகை உஅறிருவாக்கலில், அந்த இடத்தில் மூன்று முக்கிய மூலிகைகள் அறிந்தேன். ்முடிந்தால், அங்குள்ள இத்தாவரத்தின் படங்களையும் இணைத்தால் நலம். இது தமிழர் பகுதி தானே? யாரேனும் மாணவர் சென்று படங்கள் எடுப்பின், அதற்கு என்னால் ஓரளவு நல்கையுதவி செய்ய முடியும். இதுபோன்ற உதவிகளைப் பெற்றே, நானும் வளர்ந்துள்ளேன். அதனால், தயக்கம் வேண்டாம். தமிழர் சார்ந்த ஆவணம் மிக மிக முக்கியம். ஆவலுடன் ..--உழவன் (உரை) 14:11, 25 சனவரி 2017 (UTC)

தவலுழவன் ஐயா அவர்களே, தாங்கள் கூறும் மூலிகையை இன்றே நான் காண்கின்றேன். தகவலுக்கு நன்றி. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:56, 25 சனவரி 2017 (UTC)

விக்கித் திட்டங்கள்தொகு

வணக்கம் ஸ்ரீஹீரன். உங்களின் ஊக்கத்தையும் ஆற்றலையும் வரவேற்கிறேன். சில செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்கும் போது, போதிய தயாரிப்பில் ஈடுபட்டு முன்னெடுப்பது அதனை வெற்றிகரமாக நகர்த்த உதவும். குறிப்பாக பரந்த பயனர்களின் உள்ளீடுகளைப் பெற்று, கூட்டாக ஒரு செயற்திட்டத்தை தயாரித்தல் நன்று. குறிப்பாக தற்போது செயற்பட்டுக் கொண்டு இருக்கும் பயனர்களின் உள்ளீடுகள், முன்னர் இத்தகைய செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடத்திய பயனர்களின் உள்ளீடுகள் (சோடாபொட்டில், ரவி, சிவகுமார்).

போதிய ஆதரவு இல்லையே என்று நீங்கள் ஆதங்கம் அடையக் கூடாததே என்பதே என் கருத்தின் நோக்கம். தனிப்பட்ட நோக்கில், தற்போது நூலகம் சார் பணிகளில் நிறைய நேரம் எடுத்துச் செயற்படுவதால் விக்கியில் பங்களிப்புச் செய்ய முடியவில்லை. நன்றி. --Natkeeran (பேச்சு) 15:27, 26 சனவரி 2017 (UTC)

வேண்டுகோள்தொகு

எனது இரண்டு கட்டுரையின் புள்ளிகள் நீக்கவும்

 1. நீ மட்டும்தான் இரண்டு முறை வாழ்வாய்
 2. இடிப்பந்து

அவை பெயர் மாற்றம் செய்துள்ளேன். மேலும் அவற்றுக்கு புள்ளிகள் பெற்று உள்ளேன் . தவறுக்கு வருந்துகிறேன் நன்றி.

புதுவைபிரபு 10:35, 29 சனவரி 2017 (UTC)

எனினும் அவை கட்டுரைகளாகத் தானே உள்ளன. ஆகையால் புள்ளிகள் இடலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:41, 29 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை 2017 ஒருங்கிணைப்பாளர் பதக்கம்தொகு

Barnstar Barnstar Hires.png விக்கிக்கோப்பை 2017 ஒருங்கிணைப்பாளர் பதக்கம்
விக்கிக்கோப்பை 2016 ஆரம்பித்தபோது காணப்பட்ட சூழலால், அவ்வருடத்துடன் விக்கிக்கோப்பை நின்றுவிடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வருடம் விக்கிக்கோப்பைக்கு உயிர்கொடுத்த உங்களுக்கு, மற்றவர்வகளைவிட அதிக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் கடமை எனக்குள்ளது. தனியாளாக, நுட்பங்களைச் சேர்த்து போட்டியை நன்கு முடித்துவைத்த உங்கள் செயல்களுக்குப் பாராட்டுகள். மேலும், முதலாவதாக பதக்கம் அளிக்கும் வாய்ப்பு எனக்கே கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி. விக்கி சமூகம் சார்பாக இப்பதக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன். --AntanO 09:53, 4 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 09:59, 4 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 11:16, 4 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:39, 4 மார்ச் 2017 (UTC)
பதக்கமிட்ட அன்ரன் ஐயா, மற்றும் விருப்பம் தெரிவித்த Arulghsr, Kanags, நந்தகுமார் ஆகியோருக்கு என் நன்றிகள்! தங்கள் ஊக்கமும் உதவியும் எபோதும் இருந்தால் போதும். மீண்டும் நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:43, 4 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள் நண்பா!!-- மாதவன்  ( பேச்சு ) 13:50, 4 மார்ச் 2017 (UTC)
நன்றிகள் நண்பா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:06, 4 மார்ச் 2017 (UTC)
உங்களது அயரா முயற்சிகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:23, 6 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம் இது செயற்கரிய செயல். வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 04:26, 6 மார்ச் 2017 (UTC)
சிறியோன் என் மீது செலுத்தும் அன்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றியைத் தவிர என்னால் எதுவும் தரவோ கூறவோ முடியாது! நன்றி! இரவி, பூங்கோதை அம்மையார்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:05, 6 மார்ச் 2017 (UTC)

உங்கள் பார்வைக்குதொகு

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள்-\\இப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை 26,000 பைட்டு அளவைத் தாண்டும் மட்டும் விரிவாக்குங்கள். நீங்கள் விரிவாக்கும் கட்டுரையில் குறைந்தது உங்களால் 7500 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\\

ஸ்ரீஹீரன், இரண்டிலும் சேர்க்கப்படவேண்டிய பைட்டுகளின் எண்ணிக்கை முரண்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 14:05, 6 மார்ச் 2017 (UTC)

Yes check.svgY ஆயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:32, 6 மார்ச் 2017 (UTC)

[விக்கிப்பீடியா பேச்சு:மாபெரும் தமிழ் விக்கிப்பீடியாப் போட்டிகள்] - இங்கு உள்ள சகல பகுதிகளையும் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி நீக்கல் வார்ப்புருவைச் சேர்த்துவிடுங்கள். --AntanO 16:02, 6 மார்ச் 2017 (UTC)

ஐயா Yes check.svgY ஆயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:06, 6 மார்ச் 2017 (UTC)

நன்றிதொகு

உங்கள் ஊக்கத்துக்கும், ஆர்வத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி. விரைவில் விரிவான தகவல்களைப் பகிர்கிறேன். --Natkeeran (பேச்சு) 19:04, 7 மார்ச் 2017 (UTC)

நன்றி ஐயா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:30, 8 மார்ச் 2017 (UTC)

தாரா விக்கிதொகு

தாரா வேறு, காளி வேறு. தவறாக இருந்த காளி படத்தை நீக்கிவிட்டு, தாரா படத்தை இணைத்துள்ளேன். விக்கியில் தவறான தகவல்களை நீக்க உங்கள் ஒத்துழைப்பையும் கோருகின்றேன்.

Yes check.svgY ஆயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:08, 15 மார்ச் 2017 (UTC)

வேண்டுகோள்தொகு

ஸ்ரீஹீரன் பரணேற்றவும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தைத் தாருங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:04, 16 மார்ச் 2017 (UTC)
Muthuppandy pandian அவர்களே பரணேற்றல் என்பது உரையாடிய உரையாடல் பகுதிகளை ஓர் தொகுப்பாக மாற்றுதல் ஆகும். எடுத்துக்காட்டாக பிறபயனர்களின் பேச்சுப்பக்கத்தின் மேல் பாருங்கள், ஆவணத் தொகுப்புகள் என இருக்கும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:05, 16 மார்ச் 2017 (UTC)
Yes check.svgY ஆயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:07, 16 மார்ச் 2017 (UTC)
ஸ்ரீஹீரன் தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்குபெற நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதனால்தான் போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொள்ளாமல் இருந்தேன். சரி இந்த முறை பங்குபெறுகிறேன். அதோடு என்னால் முடிந்த அளவு கட்டுரைகளை பதிவேற்ற முயற்சிக்கிறேன். மேலும் நீங்கள் செய்த பரணேற்றத்திற்கு நன்றியை முதற்க்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 11:24, 16 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி! பதிவு செய்யுங்கள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:12, 16 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் ஒழுங்கமைப்பாளர்களின் பங்குதொகு

//இங்கு உங்கள் பெயரைப் பதிவு செய்த பின்னர் போட்டி தொடர்பான மேலதிக விடயங்கள், துணுக்குகள், வழிகாட்டுதல்கள் போன்ற அறிவிப்புகளை உடனுக்குடன் உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைப்புக் குழுவினர் இடுவர்.// இதில் என்னால் உதவ முடியுமாயின், என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள். எனது BOT வேலை செய்ய மறுக்கிறது. நீச்சல்காரனிடம் கேட்டுள்ளேன். அது வேலை செய்யத் தொடங்கினால், இவ்வாறான விடயங்களை இலகுவாகச் செய்யலாம் என நினைக்கிறேன்--கலை (பேச்சு) 07:58, 1 ஏப்ரல் 2017 (UTC)

நிச்சய்மாக கலை, ஓரிரு நாட்களில் ஓர் அறிவிப்பு ஒன்றை இடவேண்டியுள்ளது. தாங்கள் நிருவாகி தானே. ஆகையால் இப்பட்டியல் மூலம் Massmessagedelivary செய்ய முடியும் என நம்புகின்றேன். தங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் நன்றி. இவ்விடயத்தின் அன்ரனும் உதவி செய்வார் என தன் பேச்சுப்பக்கத்தில் கூறினார். மீண்டும் நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:02, 1 ஏப்ரல் 2017 (UTC)
இந்த Massmessagedelivary எப்போதும் நான் செய்ததில்லை. எப்படிச் செய்வதென்றும் தெரியவில்லை. புதுபதிகை செய்த நிலையில், இதற்கான ஏதாவது அழுத்தி உள்ளதா எனப் பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை. Kanags! உதவ முடியுமா?--கலை (பேச்சு) 08:18, 1 ஏப்ரல் 2017 (UTC)
Kanags, கலை தற்போது தேவையில்லை, கனக்ஸினால் முடியுமென நம்புகின்றேன். எனினும் அன்ரனிடமேயே உதவியினைக் கேட்போம். உதவ முன்வருவதற்கு நன்றி! புதுப்பயனர்களின் போட்டிக்காக உருவாக்க வேண்டிய தமிழர்களின் பெருமை கூறும் கட்டுரைகளின் பட்டியலினை உருவாக்கித் தருவதற்கு வேண்டுகின்றேன். மீண்டும் நன்றிகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:23, 1 ஏப்ரல் 2017 (UTC)
இந்த Massmessagedelivary எப்படிச் செய்வது என்றறிய, செயற்படுத்திப் பார்க்க எனக்கும் ஆவல். அதனால்தான் கேட்டேன். தொடர்பங்களிப்பாளர் போட்டியில் செல்வா கூறிய முக்கியமான தமிழர்களில், அனேகமானவர்களுக்கு இங்கே கட்டுரை இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவற்றையும் விரிவாக்கலாமே என்றுதான் செல்வா கேட்டார். எனவே அவற்றை புதுப்பயனர்களின் கட்டுரைப் போட்டியில் இணைக்க முடியாதுதானே? அவர்கள் புதிதாக ஆக்கும் கட்டுரைகளைத்தானே கருத்தில் கொள்வீர்கள்? விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில்தான் அவற்றைச் சேர்க்க வேண்டுமென நினைக்கிறேன். செல்வாவிடமும் இதில் உதவி கேட்க வேண்டும்.--கலை (பேச்சு) 09:25, 1 ஏப்ரல் 2017 (UTC)
கலை அவர்களே! புதுப்பயனர் போட்டிக்கான விதிமுறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் முற்கூட்டியே ஒரு பட்டியலை உருவாக்கி வைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஆகவே தான் தங்களிடம் உதவியை நாடினேன். நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:46, 1 ஏப்ரல் 2017 (UTC)
கலை :-- சிறப்பு:MassMessage-- மாதவன்  ( பேச்சு ) 13:56, 1 ஏப்ரல் 2017 (UTC)
மிகவும் நன்றி மாதவன் --கலை (பேச்சு) 14:59, 1 ஏப்ரல் 2017 (UTC)
மிகச் சிறப்பு மாதவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:57, 1 ஏப்ரல் 2017 (UTC)

ஸ்ரீஹீரன்! அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியலிலிருந்தே, இங்கு போட்டிக்கான கட்டுரைகளின் பட்டியல் எடுக்கப்பட்டது ஆயின், அந்த முதன்மைப் பட்டியல் எங்கே இருக்கிறது? அதை ஒரு தடவை பார்த்து வேறும் கட்டுரைகளை இணைக்கலாமா எனப் பார்ப்பதற்காகக் கேட்கிறேன். நன்றி.--கலை (பேச்சு) 10:22, 15 ஏப்ரல் 2017 (UTC)

மேல் விக்கியில் List of Wikipedias by sample of articles, List of sample articles ஆகியவற்றைப் பாருங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:32, 15 ஏப்ரல் 2017 (UTC)
தேடினேன். கிடைக்கவில்லையே. தயவுசெய்து இணைப்பை இங்கே தர முடியுமா?--கலை (பேச்சு) 08:54, 17 ஏப்ரல் 2017 (UTC)

ஒரு கட்டுரையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பதாக நினைத்து, வேறொரு கட்டுரைக்கு குறியிட்டுவிட்டேன். அந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை மாற்ற வழியுண்டா?--கலை (பேச்சு) 05:01, 9 மே 2017 (UTC)

கேள்விகள் சிலதொகு

@Shriheeran:

 • செங் ஹே கட்டுரை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறியலாமா?
 • சட்டம், அரசியல் சட்டம் ஆகிய இரு கட்டுரைகளும், ஈடிட்ட வரிகள் 11500 ஐத் தாண்டவில்லை. அவ்வாறாயின், அதனை நாமே சிறிது விரிவாக்கி 11500 வந்த பின்னர் ஏற்றுக்கொள்ளலாம் என்று உரையாடியிருக்கிறோம்தானே? அதில் மாற்றம் உண்டா? 10000 தாண்டினாலே ஏற்றுக்கொள்ளலாமா? நீங்கள் ஏற்றுகொண்டிருப்பதனால் கேட்கிறேன்.
 • ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரையை, குறிப்பிட்ட காலத்திற்காவது இன்னொருவர் விரிவாக்கம் செய்யாமலிருக்க என்ன செய்யலாம்?

--கலை (பேச்சு) 18:59, 9 மே 2017 (UTC)

@Shriheeran: நேற்று நான் கேட்ட மேலுள்ள கேள்விகளை நீங்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. தயவுசெய்து பார்த்து பதில் அளியுங்கள். அது நடுவர் பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒருவர் மட்டும் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டால் போதும் என நினைத்தேன். ஆனால் அனைத்தையும் குறிப்பதே இலகுவானதாக இருக்கும்போல் உள்ளது. அதனால் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

 • மணி.கணேசனால் விரிவாக்கப்பட்ட இசை கட்டுரை 9666 ஈடிட்ட வரியுருக்களின் அளவையே எட்டியுள்ளது. என்ன செய்யலாம்?
 • மேலும் உலோ.செந்தமிழ்க்கோதையால் விரிவாக்கம் செய்யப்பட்ட கோள் கட்டுரையில் குறிப்புக்கள் இடப்பட்ட விதத்தில் ஏதோ தவறுள்ளது. பார்த்துத் திருத்த முடியுமா?
 • நீங்கள் விரிவாக்கிச் சமர்ப்பித்துள்ள கெய்ரோ கட்டுரைக்கு உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்படவில்லை. அத்துடன் 26000 பைட்டுக்களை அடையவுமில்லை.
 • நீங்கள் விரிவாக்கிச் சமர்ப்பித்துள்ள துபாய் கட்டுரையும் 26000 பைட்டுக்களை அடையவில்லை.
 • அனைவருக்கும் கூறப்பட்ட பொது விதிகளையே (அதாவது போட்டியாளர் 6000 பைட்டுக்களைப் போட்டிக் காலத்தில் சேர்ப்பதுடன், மொத்த பைட்டுக்கள் 26000 ஐத் தாண்டும்வரை விரிவாக்க வேண்டும்) பின்பற்றுவோம். அப்படிச் செய்து, போட்டியாளர்கள் சமர்ப்பித்த பின்னரும் ஈடிட்ட வரியுருக்களின் அளவு 11,500 க்கு மேல் வராவிட்டால் (அனேகமாக இந்நிலையில் ஈடிட்ட வரியுருக்களின் அளவு 11,500 ஐ அண்மித்துவிடும் அல்லது 10000க்குமேல் வந்துவிடும்), அதனை நடுவர்கள் விரிவாக்கிவிட்டு ஏற்றுக்கொள்வதா அல்லது போட்டியாளர்களுக்கு அறிவிப்பதா?
 • சமர்ப்பிக்கப்பட்டுள்ள இசை கட்டுரையும் 9666 ஈடிட்ட வரியுருக்களின் அளவையே கொண்டுள்ளது.

நன்றி.--கலை (பேச்சு) 21:31, 10 மே 2017 (UTC)

கலை,

 • செங் ஹே - தவறாக முதல் சொடுக்கியது, சரி செய்தாயிற்று
 • இசை - 10,000த்தைத் தாண்டச் செய்தாயிற்று
 • கெய்ரோ, துபாய் கட்டுரைகள் வரியுரு அளவைக் கடந்ததால், நானே விரிவாக்கியதால் தற்போது சமர்ப்பித்தேன். அவற்றை விரைவில் விரிவாக்கும் எண்ணம் உள்ளது.
 • 10,000 வரியுருக்களுக்கு மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். இறுக்கம் தேவையில்லை. 11,500 ஒரு Satety தான்.
 • தவறுகளை அவதானிப்பதர்கும், சுட்டிக்காட்டுவதர்கும் பாரட்ட்டுகளும் நன்றிகளும்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:38, 11 மே 2017 (UTC)
 • முற்பதிவு செய்த கட்டுரையை இன்னொருவர் விரிவாக்கிக்கொண்டு இருந்தால் உடனே அவருக்கும், முற்பதிவு செய்தவருக்கும்.

பின்வருமாறு பேச்சுப்பக்கத்தில் அறிவுறுத்த வேண்டும்.

விரிவாக்குபவருக்கு:- நீங்கள் [[பயனர்:____|____]] என்பவர் ஏற்கனவே போட்டிக்காக முற்பதிவு செய்துள்ள [[____|____]] எனும் கட்டுரையை விரிவாக்குகின்றீர்கள்! அருள்கூர்ந்து அக்கட்டுரையை விரிவாக்குவதைத் தவிர்க்க வேண்டுகின்றேன்.
முற்பதிவு செய்பவருக்கு: நீங்கள் ஏற்கனவே போட்டிக்காக முற்பதிவு செய்துள்ள [[____|____]] எனும் கட்டுரையை [[பயனர்:____|____]] என்பவர் விரிவாக்கிக்கொண்டிருக்கின்ரார். 26,000 ஆவது பைட்டைச் சேர்ப்பவரின் பெயரிலேயே அக்கட்டுரை கணக்கெடுக்கப்படும் என்பதை ஞாபகமூட்டுகின்றேன். நீங்களும் விரைந்து அக்கட்டுரையில் 26,000 பைட்டைச் சேர்க்க முனையுங்கள்! அல்லது முறபதிவை நீக்குங்கள்! அல்லது அப்பயனருக்குக் கூறுங்கள்! நன்றி!

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:47, 11 மே 2017 (UTC)

ஸ்ரீஹீரன் //கெய்ரோ, துபாய் கட்டுரைகள் வரியுரு அளவைக் கடந்ததால், நானே விரிவாக்கியதால் தற்போது சமர்ப்பித்தேன். அவற்றை விரைவில் விரிவாக்கும் எண்ணம் உள்ளது.// எதற்கும் விதி முறைப்படி விரிவாக்கம் முடிந்த பின்னர் சமர்ப்பித்தால் இலகுவாக இருக்கும்.
//முற்பதிவு செய்த கட்டுரையை இன்னொருவர் விரிவாக்கிக்கொண்டு இருந்தால் உடனே அவருக்கும், முற்பதிவு செய்தவருக்கும். பின்வருமாறு பேச்சுப்பக்கத்தில் அறிவுறுத்த வேண்டும்.//அனேகமாக நான் பார்க்கும்போது கட்டுரை விரிவாக்கம் ஆரம்பித்து, முற்றாக விரிவாக்கப்பட்டிருக்கும்.--கலை (பேச்சு) 05:06, 11 மே 2017 (UTC)

கலை பயனரை அறிவுறுத்துவது தவிர வேறு வழியில்லை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:17, 11 மே 2017 (UTC)
சரி.
//10,000 வரியுருக்களுக்கு மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். இறுக்கம் தேவையில்லை. 11,500 ஒரு Satety தான்.// ஏற்றுக்கொள்வதில் பிரச்சனையில்லை. சிலசமயம் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், 26000 மொத்த பைட்டுக்களைத் தாண்டியும் இருக்கும் ஒரு கட்டுரை, 10000 ஐவிடக் குறைந்த வரியுருக்களைக் கொண்டிருந்தாலும் விதிகளின்படி அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஏற்றுக்கொள்ள முன்னர் 11500 ஐத் தாண்டும்வரை நாமே விரிவாக்கிவிட்டால் நல்லது எனத் தோன்றுகிறது. 10000 வரை மட்டுமே இருந்தால், ஏதாவது சில திருத்தங்களை யாராவது செய்யும்போது, அது 10000 இற்குக் கீழேயும் வருவதற்கான சந்தர்ப்பமுண்டு. அதைத் தவிர்த்தல் நலமல்லவா? அல்லது இந்த வரியுருக்களையும் கவனிக்கும்படி போட்டியாளர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். --கலை (பேச்சு) 16:36, 11 மே 2017 (UTC)
உங்கள் சித்தம் கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 11 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன்! உங்களுடைய கெய்ரோ கட்டுரைக்கு நான் நடுவர் பணியைப் பயன்படுத்தி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் அது ஏற்றுக்கொள்ளவில்லை என்று காட்டுகிறதே. அது எவ்வாறு?--கலை (பேச்சு) 19:56, 12 மே 2017 (UTC)
தெரியவில்லை கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:25, 13 மே 2017 (UTC)
சரி பரவாயில்லை. கட்டுரையின் மொத்த பைட்டளவை 26000 க்குமேல் உயர்த்திவிடுங்கள். நானும் ஏற்றுக்கொண்டதாய் மாற்றிவிடுகிறேன் ஸ்ரீஹீரன். --கலை (பேச்சு) 08:19, 13 மே 2017 (UTC)
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:21, 13 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன்! வரியுருக்களின் அளவு 10000 அடையாத கட்டுரையையும் ஏற்றுக்கொள்கிறீர்களா? அதனை நாமே விரிவாக்கம் செய்துவிட்டு ஏற்றுக் கொள்ளலாம் என்பதில் மாற்றம் உண்டா? எ.கா. படைத்துறை - ஈடிட்ட வரியுருக்களின் அளவு: 9165.6 --கலை (பேச்சு) 08:31, 13 மே 2017 (UTC)
குறித்த பயனரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர் விரிவாக்குவார் என்ர நம்பிக்கையில் ஏற்றுக்கொண்டேன் கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:35, 13 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன் ! விதிக்கேற்ப கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சரியான விளக்கம் இல்லாவிடின், அதனை மேலும் விரிவாக்குவதற்கான வேண்டுகோள் ஏன் என்ற எண்ணம் ஏற்படச் சாத்தியம் உள்ளதால் இந்த முறை எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்பது தெரியாது. எதற்கும் கட்டுரை 11500 வரியுருக்களைத் தாண்டிய பின்னர் ஏற்றுக் கொண்டால் விரிவாக்கப்படும் அனைத்துக் கட்டுரைகளும், முக்கியமான கட்டுரைகளாக அடையாளப்படுத்தப்படும் என்பது எனது எண்ணம்.--கலை (பேச்சு) 11:50, 13 மே 2017 (UTC)
சரி! எனது எண்ணம் கட்டுரை ஒழுங்காக இருந்தால், 11500 எல்லாம் தேவையில்லை, 10,000 கடந்தாலே போதும் என்பதுதான். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:42, 13 மே 2017 (UTC)

ஸ்ரீஹீரன்! எல்லாவற்றுக்கும் நீங்கள் மிகவும் அவசரப்படுவதுபோல் தெரிகிறது. படைத்துறைக் கட்டுரை இன்னும் 11500 வரியுருக்களைத் தாண்டவில்லை. ஆனால் உமாசங்கரின் பக்கத்தில் சென்று, //நாமே விரிவாக்கியுள்ளோம்// என்று போட்டு விட்டீர்களே? Face-smile.svg. போட்டி தொடர்பற்ற இன்னுமொரு கேள்வி. ஒவ்வொரு கட்டுரையிலும் முதற் பந்தியின்மேல், மூலத்தைத் தொகு என்று ஒரு பொத்தான் முன்னர் தெரிந்தது. தற்போது அதைக் காணோம். அது இருந்தால், முதற்பந்தியை மட்டும் திரந்து தொகுக்கலாம். விருப்பத் தேர்வுகளில் தேடிப் பார்த்தேன். காணவில்லை. உங்களுக்கு அது எங்கிருக்கிறது என்று தெரியுமா? --கலை (பேச்சு) 15:57, 13 மே 2017 (UTC)

அவசரம்! அது ஒருபுறம் இருக்கட்டும். மூலத்தைத் தொகுவை விருப்பத்தேர்வுக்கெல்லாம் சென்று தெரிவுசெய்யவேண்டாம். இலகு வழி- கட்டுரைப் பக்கத்தை அடைந்ததும், மூலத்தைத் தொகு பக்கத்திற்கு செல்ல "Alt+Shift+e" இவற்றை ஒரே நேரத்தில் அழுத்தினாலே போதும். பொத்தானைத் தேடி அலைந்து கிளிக் செய்ய வேண்டியதில்லை. அவசரப் படவில்லை, பயனரைத் தேற்றுவதற்காகவே அவ்வாறான நடவடிக்கை. அவரை சோர்ந்து போக விடாமல் நம்பக்கம் வைத்திருக்க வேன்டும் அல்லவா! அத்தோடு 10,000 அளவிற்கு மேல் இருந்தாலே போதும். அக்கட்டுரை துப்புரவு, விக்கியாக்கம், அல்லது பிற பிரச்சினையுடன் இருந்தால் மட்டுமே (Safety) 11,500, இது என் சொந்த எண்ணம். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:06, 13 மே 2017 (UTC)


ஸ்ரீஹீரன்!
 • சரி. 10000 வரை இருந்தாலே போதுமானது எனக் கொள்ளலாம். ஆனாலும் சில கட்டுரைகள், விதிக்கேற்ப இருந்தபோதிலும் 10000 இற்குக் குறைவாகவே உள்ளன. அவற்றை தற்போதுள்ள நிலையில், நாமே 10000/11500 க்கு உயர்த்திவிட்டு ஏற்றுக்கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால், அதிகளவில் கட்டுரை வர ஆரம்பித்தால் இது சாத்தியமாகுமா எனத் தெரியவில்லை. எனவே எனது ஆலோசனை என்னவென்றால், போட்டியாளர்கள் அனைவரின் பேச்சுப் பக்கத்தில் இந்த வார்ப்புருவைச் சேர்த்துவிடுவது. இது ஒரு விதிபோல இல்லாமல், அவர்களது கட்டுரை, முக்கிய கட்டுரையாக அமைவதற்கான ஒரு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும். போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துப் பயனர்களின் பேச்சுப் பக்கத்திலும் இடுவதானாலும் இடலாம். அதற்கேற்ப சில மாற்றம் செய்திருக்கிறேன். இங்கே பாருங்கள்.
 • நான் மூலத்தைத் தொகு என்பது தொடர்பில் கேட்ட கேள்வியை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். முழுக் கட்டுரைக்கும் பொதுவான மூலத்தைத் தொகு என்ற பொத்தானையோ, அல்லது துணைத் தலைப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மூலத்தைத் தொகு என்ற பொத்தானையோ கண்டு பிடித்து அழுத்துவதில் சிரமம் எதுவுமில்லை. ஆனால் பொருளட்டம் வருவதற்கு முன்னர், கட்டுரையின் அறிமுகப் பகுதியை மட்டும் திறந்து தொகுப்பதற்கான பொத்தானைத்தான் கேட்டேன். நீங்கள் கூறியிருக்கும் "Alt+Shift+e" முழுக் கட்டுரையையும் தொகுப்பதற்கான தொகுத்தல் பெட்டியைத்தான் திறக்கிறது.
--கலை (பேச்சு) 19:03, 13 மே 2017 (UTC)

கலை,

 • அனைவருக்கும் இடாது குறித்த பயனருக்கு இடுவோம்.
 • கட்டுரையின் அறிமுகப் பகுதியை மட்டும் திறந்து தொகுப்பதற்கான பொத்தான் ஒன்று இருக்கின்றதா? தெரியவில்லையே
 • போட்டியினை சிறப்பாக நடாத்துவதற்கும், நடுவர் பணியைத் திறம்படச் செய்வதற்கும் நன்றிகள்.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:46, 14 மே 2017 (UTC)

கலை,
விருப்பத்தேர்வுகள் --> கருவிகள் ---> தோற்றம் --->கட்டுரைகளின் முதல் பத்திக்கு அருகே [தொகு] இணைப்பை ஏற்படுத்தல் - இங்குள்ள பெட்டியில் தெரிவு (டிக்) செய்யுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:10, 14 மே 2017 (UTC)
நன்றி பூங்கோதை! நான் விருப்பத் தேர்வுகளில் கருவிகளில் தேடாமல் தொகுத்தல் பொத்தானை அழுத்தித் தேடினேன். அதுதான் கிடைக்கவில்லை Face-smile.svg.
சரி ஸ்ரீஹீரன்! முயற்சிக்கிறேன். ஏற்கனவே முடிந்தவற்றை இனி மீண்டும் தேட முடியாது. இனிமேல் வருபவற்றைப் பார்க்கலாம். அதுசரி, உங்கள் பேச்சுப் பக்கத்தில் இலகுவாக துணைத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கக்கூடிய பொருளடக்கம் ஏன் தெரியவில்லை?--கலை (பேச்சு) 08:03, 14 மே 2017 (UTC)
ஏனெனில் நான்__NOTOC__ என்பதை இங்கு பயன்படுத்துவதனால்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:28, 14 மே 2017 (UTC)
அதற்கு ஏதாவது விசேச காரணம் உண்டா ஸ்ரீஹீரன்? ஏனெனில் பொருளடக்கம் இருந்தால் இலகுவாக துணைத்தலைப்பில் தேடலாமே. ஒவ்வொரு முறையும் எங்கே எனக்கான செய்துயுள்ளது என்று தேட வேண்டியுள்ளது Face-smile.svg --கலை (பேச்சு) 17:04, 14 மே 2017 (UTC)

முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரை இன்னொருவரால் விரிவாக்கம் செய்யப்படல்தொகு

ஸ்ரீஹீரன்! கட்டுரைக்கான முற்பதிவு செய்யும் பக்கத்தில் உலோ.செந்தமிழ்க்கோதைக்கு, இது மயூரநாதனால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக்க வேண்டாம், விரிவாக்கப்படின் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறியிருக்கிறீர்கள். அதனை விரிவாக்கம் செய்தலைத் தவிர்த்தல் நல்லது என்று கூறலாமே தவிர, விரிவாக்கப்படின் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறுவது சரியல்ல என நினைக்கிறேன். ஏனெனில், அவ்வாறு ஒருவரைத் தடை செய்தலோ, அல்லது விரிவாக்கினால் ஏற்றுக்கொள்ளாமல் விடுவதோ குறிப்பிடப்பட்ட விதிகளில் இல்லை. எனவே அதனை மாற்றியமையுங்கள். அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட சில கட்டுரைகள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன Face-smile.svg. --கலை (பேச்சு) 15:44, 25 மே 2017 (UTC)

நிகோலாய் Noskovதொகு

ஹலோ அன்பே Shriheeran! நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov (Nikolai Noskov) பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும்? நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும்! நன்றி! --178.66.102.253 08:53, 1 ஏப்ரல் 2017 (UTC)

நம்மளுக்கு இந்தி மொழி தெரியாது! தமிழில் உருவாக்கின்றேன். நன்றி நண்பா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:56, 1 ஏப்ரல் 2017 (UTC)
:) :) :p 👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 14:06, 1 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரைதொகு

வணக்கம், கட்டுரை ஒன்று கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லாத பட்சத்தில், அக்கட்டுரைத் தகவல்களை முற்றாக நீக்க வேண்டாம். பதிலாக, அதற்கு delete வார்ப்புருவை சேர்ந்து ஏன் நீக்கப்பட வேண்டும் எனக் காரணமும் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 23:29, 8 ஏப்ரல் 2017 (UTC)

நான் Template adding Tool ஒன்றை பயனபடுத்துவதாலேயே இந்த சிக்கல். மேலும் நிருவாகிகளின் கண்ணுக்கு எட்டாமல் போய்விடும் என்பதற்காகவே வார்ப்புரு இடுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:18, 9 ஏப்ரல் 2017 (UTC)

மீளமைத்தல்தொகு

இவ்வாறான இடங்களில் மீளமைப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Reverting --AntanO 08:46, 10 ஏப்ரல் 2017 (UTC)

தகவலுக்கு நன்றி அன்ரன், மேலும் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்கின்ரேன். ஆனால் அம்மாற்றத்தில் நான் மீளமைத்தல் சுருக்கத்தைக்கொடுக்காமலே எவ்வாறு மீளமைத்தல் எனக்கண்டுகொண்டீர்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:48, 10 ஏப்ரல் 2017 (UTC)
விருப்பத்தேர்வு > அறிவிப்புக்கள் > "Edit revert" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும். --AntanO 08:54, 10 ஏப்ரல் 2017 (UTC)
புரிந்துகொண்டேன், நன்றி, அன்ரன் அவர்களே. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:58, 10 ஏப்ரல் 2017 (UTC)

சுற்றுக்காவல் - இரண்டாவது முறையாகதொகு

24 செப்டம்பர் 2015 சுற்றுக்காவல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை பிரதி செய்கிறேன்.

 • பதிப்புரிமை மீறல் விடயங்கள் உள்ளதா?
 • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருக்கிறதா?
 • தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறதா?
 • மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரையா?
 • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா?
 • விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருக்கிறதா?

இவை இல்லையெனின், தகுந்த வார்ப்புருக்களை இணைத்துவிடுங்கள் அல்லது தேவையான திருத்தத்தைச் செய்துவிடுங்கள்.

நிற்க, வழக்குரைஞர் நூலகம் என்ற சுற்றுக்காவலுக்குட்படுத்தப்பட்ட கட்டுரை தமிங்கில தலைப்பைக் கொண்டிருந்தது. சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பு என்ற சுற்றுக்காவலுக்குட்படுத்தப்பட்ட கட்டுரை பகுப்பு, உசாத்துணை என்பவற்றுள்ளன. அத்துடன் கட்டுரையில் நேரடியாக வெளிணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. --AntanO 02:43, 15 ஏப்ரல் 2017 (UTC)

நினைவூட்டியமைக்கு நன்றி அன்ரன், இனிமேல் இவாறு நடவாமல் பார்த்துக்கொள்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:58, 15 ஏப்ரல் 2017 (UTC)
இவ்வறிப்பிற்குப் பின்னும் பயனற்ற சுற்றுக்காவல்கள் செய்துள்ளீர்கள். எ.கா: அண்ணா நகர் டவர் பூங்கா வெறுமனே இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி என்பதைத் சொடுக்குவது நோக்கமல்ல. சுற்றுக்காவல் பற்றி தெளிவில்லாவிட்டால், தயவுசெய்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது தொடர்ந்தால் இவ்வணுக்கத்தை மீளப்பெறுவது பற்றி சிந்திக்க நேரிடலாம். நன்றி. --AntanO 02:33, 19 ஏப்ரல் 2017 (UTC)
Antan, புரிகின்றது. அங்கு சான்றுகள் எதுவும் இல்லையெனும் போதும், தலிப்பு ஒவ்வாததாக இருக்கும் போது யான் சுற்றுக்க்காவல் செய்தமை தவறே. உரைதிருத்தம் மட்டுமே செய்தேன். மேலும் விக்கித்தரவிலும் இணைதேன். அத்துடன் ஒரு கட்டுரைக்கு புகைப்பட சான்றாக அமையுமா? என்பது நெடுநாள் சந்தேகம்அ அத்துடன் கட்டுரைகள் பற்றி தெளிவற்ற நிலை ஏற்படும் போது நிச்சயம் தங்களின் பேச்சுப்பக்கத்தில் கவனத்திற்குக் கொண்டுவருவேன் நன்றி! -ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:40, 19 ஏப்ரல் 2017 (UTC)
எனக்கு தெளிவில்லாத கட்டுரைகளை சுற்றுக்காவல் செய்ததாகக் குறிப்பதில்லை. மற்றவர்களின் கவனம் பெறுவதற்காக விட்டுவிடுவதுண்டு. ஒளிப்படங்கள் சான்றாகாது. ஆனால் அவசிய தேவை இருப்பில் குறிப்பில் அல்லது வெளியிணைப்பில் சேர்க்கலாம். --AntanO 02:47, 19 ஏப்ரல் 2017 (UTC)
பதிலுக்கு நன்றி, மேலும் எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும். வேகமாக தட்டச்சு செய்வதன் விளைவே அது! நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:13, 19 ஏப்ரல் 2017 (UTC)

பகுப்பு சேர்த்தல்/நீக்கல்தொகு

பகுப்பு மாற்றங்களை தானியங்கி கொண்டு செய்யலாம். --AntanO 06:58, 17 ஏப்ரல் 2017 (UTC)

அப்படியே ஆகட்டும், எல்லாம் ஓர் ஆர்வக்கோளாறு தான்! இதோ நிறுத்துகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:06, 17 ஏப்ரல் 2017 (UTC)

10 ஆம் வருட சின்னத்தில் மாற்றம் எதற்கு?தொகு

இங்கு 10 ஆம் வருட சின்னத்தை 15 ஆக மாற்றும்படி கேட்டுள்ளீர்கள். 10 ஆம் வருட சின்னத்தில் மாற்றம் எதற்கு? 15 ஆம் வருட சின்னம் உருவாக்க தமிழ் விக்கிச் சமுக ஒப்புதல் உள்ளதா? --AntanO 13:45, 18 ஏப்ரல் 2017 (UTC)

Antan 10 ஆம் வருட சின்னத்தைப் போல 10 ஆம் வருட சின்னத்தையும் அமைத்துத்தரவே வேண்டினேன். தவிர மாற்ற வேண்டும் என்றல்ல. //15 ஆம் வருட சின்னம் உருவாக்க தமிழ் விக்கிச் சமுக ஒப்புதல் உள்ளதா?// விளக்க முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:29, 18 ஏப்ரல் 2017 (UTC)
//Please change 10 to 15 as we are going to celebrate our 15th anniversary// இதற்கு என்ன அர்த்தம்? --AntanO 14:31, 18 ஏப்ரல் 2017 (UTC)
10 இன் வடிவமைப்பை 15 என மாற்றி புதிய ஒன்றை வடிவமைத்துத் தருக என்பதே அர்த்தம். அங்கே பதில் அளித்தாயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 18 ஏப்ரல் 2017 (UTC)
தயவுசெய்து தெளிவாக உரையாடுங்கள். சிந்தனைக்கும் கருத்தை மொழியூடாக வெளியிடலிலும் கவனம் தேவை. --AntanO 02:35, 19 ஏப்ரல் 2017 (UTC)

யாழ் பயில் களம் நிகழ்வுதொகு

இந்நிகழ்வில் விக்கிப்பீடியாவில் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள். மேலும், ஆலமரத்தடியில் மாநில அளவிலான தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தொடர்பான உரையாடலில் நீங்கள் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்த விளக்கங்களை வழங்கலாம்.

எடுத்துக்காட்டு:

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வர்ணனை நடையிலோ, ஆராய்ச்சி வடிவிலோ எழுத வேண்டாம் என வலியுறுத்துங்கள்.

பேச்சுப்பக்கத்தில் விடுக்கும் செய்திகளுக்கு பதில் அளிப்பது பற்றிக் கற்றுக்கொடுங்கள். மேலும் அதனை தவறாது செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.

சான்றிணைப்பது தொடர்பிலும் விளக்கவும்.

குறிப்பிடத்தகைமை கொண்ட கட்டுரைகளையே நாம் வரவேற்கின்றோம் என்பதை தெளிவுபடுத்துங்கள்

தீக்குறும்பு மற்றும் இதர தடை செய்யப்படுவதற்கான சாத்தியங்களினை எடுத்துரைக்கவும்.

ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு கட்டுரைகளை மொழிபெயர்ப்பது எப்படி? அதற்கான இலகு வழிமுறைகள்.

அத்தோடு தமிழ் விக்கிப்பீடியா 15 ஆம் ஆண்டுகளை அடையும் தருணம், கொண்டாட்டம் என்பவற்றைப் பற்றியும் குறிப்பிடலாம்.

--சிவகோசரன் (பேச்சு) 16:37, 18 ஏப்ரல் 2017 (UTC)

சிவகோசரன், இங்குள்ள அனைத்தையும் எடுத்துரைக்க நேரம் போதாது! மேலும் மயூரநாதன் அவர்கள் தொலைபேசியில் இது பயிற்சிப்ப்ட்டறை அல்ல எனக்கூறியது ஞாபகம். தற்போது தொலைபேசியில் உரையாடலாமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:44, 18 ஏப்ரல் 2017 (UTC)

மீண்டும்தொகு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. நன்றி.--Kanags \உரையாடுக 10:03, 21 ஏப்ரல் 2017 (UTC)

Kanags, யான் ஒருபோதும் மறப்பதில்லை. எனினும் எனது இணைய வேகம் சற்றும் தாமதம் என்பதால் Load ஆகிக்கொண்டே இருக்கும். ஆகையால் பிறகு இணைப்போம் என்று சலிப்பு ஏற்பட்டு விட்டுவிட்டு செல்வது வழக்கம். ஓரிரு பகுப்புக்களுக்கு அவ்வாறே செய்தேன். இனிமேல் நடவாது இருக்க முயற்சி செய்கின்ரேன். தங்கள் பேச்சுப்பக்கத்தில் இது பற்றி அறிவித்து உதவி கேட்டதை மறந்தீர்கள் போலும்! அறிவித்தமைக்கும் நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 21 ஏப்ரல் 2017 (UTC)
இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். குறிப்பாக நாட்டின் பகுப்பையும் சேருங்கள். சாரணர் அமைப்புக் கட்டுரைகளில் இந்த மாற்றங்களைக் கவனத்தில் எடுங்கள்.--Kanags \உரையாடுக 23:46, 21 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி, அவ்வாறே செய்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:29, 22 ஏப்ரல் 2017 (UTC)

சிறுகோள்தொகு

சிறுகோள்கள் பற்றிய கட்டுரைகள் ஒரே உள்ளடக்கங்களையே கொண்டு உள்ளன. இவற்றை பட்டியலாக உறுவாக்குதலே உகந்தது.--−முன்நிற்கும் கருத்து Aswn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஓய்த்து, இயரார்த்து போன்ற சொற்களை எவ்வாறு தமிழில் பெயர்த்தீர்கள்? இவை ஆங்கிலத்தில் oiththu, Iyarartu என இருக்குமா? அல்லது வேறா? வேற்று மொழிக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்க்கும் போது பின்வருமாறு எழுதப்பட வேண்டும் என்பது விக்கி விதி:

//3895 இயரார்த்து (3895 Iyararttu) என்பது ஒரு சிறுகோள் ஆகும்.// இவ்வாறு எழுதப்பட வேண்டும். இங்கு நான் இயரார்த்து என்பது (விக்கித்தரவில் இன்னும் இணைக்கப்படாததால்) இவ்வாறு தான் இருக்கும் என நானே அனுமானித்த ஆங்கிலச் சொல்லாகும். நீங்கள் தொடங்கிய அனைத்துக் கட்டுரைகளையும் திருத்தி எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:26, 22 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி இது செந்தமிழ்கோதை மொழி பெயர்த்தது. அத்துடன் இவ்வாறான 500 மேற்பட்ட கட்டுரைகள் பல ஒரு வரியில் 10 க்கு மேற்பட்ட விக்கிகளில் உள்ளன. தமிழிலும் அவ்வாறு இருப்பது தகாது. பட்டியலாக ஏற்கனவே உள்ளது. அந்தவகையில் நமது விக்கி மற்றையவற்றைப்போல இருக்கக்கூடாதா என்ன? ஆனால் இவற்றை எப்படியும் பல நாட்களின் பின்னர் விரிவாக்கி விடுவேன் என நம்புகின்றேன். அத்துடன் இவ்வாறான கட்டுரைகளை விக்கித்தரவில் இணைப்பதும் சிரமமான பணி அவற்றை இணைத்து உதவுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:32, 22 ஏப்ரல் 2017 (UTC)
ஆங்கிலப் பெயர் தெரியாமல் இணைக்க முடியாது. கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போதே ஆங்கிலப் பெயரையும் சேர்த்து எழுதியிருக்கலாமே. ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து தானே மொழிபெயர்த்தீர்கள்?--Kanags \உரையாடுக 12:37, 22 ஏப்ரல் 2017 (UTC)
[5] This is the link and I have linked until 3117 paris. Please link the remaing--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:44, 22 ஏப்ரல் 2017 (UTC)
இக்கட்டுரைகளை நீக்கிவிட்டு பட்டியலாகத் தாருங்கள். ஒரே தகவல் தலைப்பு மட்டுமே மாறியுள்ளது. இவ்வாறான கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 12:51, 22 ஏப்ரல் 2017 (UTC)

மேற்கோள்தொகு

ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டபடி மேற்கோள்கள் சில இங்கு https://ta.wikipedia.org/s/65z8 இணைத்துள்ளேன். இருப்பினும் பக்கத் தலைப்பில் உள்ள மேற்கோள் குறித்த எச்சரிக்கை நீங்கவில்லை. --தேமொழி (பேச்சு) 08:11, 27 ஏப்ரல் 2017 (UTC)

@தேமொழி:, கட்டுரையில் தொகுப்புப் பக்கம் சென்று {{சான்றில்லை}} என உள்ளதை நீக்குங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:37, 27 ஏப்ரல் 2017 (UTC)

சான்றில்லை வார்ப்புரு இணைப்புதொகு

நீங்கள் இணைக்கும் வார்ப்புரு சில தடவை இரண்டு மூன்றாவது தடவையாக வார்ப்புருவை இணைக்கிறது. இழை பாருங்கள். மூன்று தடவை உள்ளது. தவிர ஏற்கனவே மேற்கோள் உள்ள கட்டுரைகளுக்கும் நீங்கள் வார்ப்புருவை இணைக்கிறீர்கள். இதுபற்றி ஆலமரத்தடியிலும் குறிப்பிட்டுள்ளேன். எனவே இதனைச் சரியாகப் பார்த்துவிட்டுச் செய்யுங்கள். நன்றி. கலை

அங்கு பதில் அளிக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:11, 29 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedia-LKதொகு

WikimediaSrilanka-Usergroup - Logo-Vertical.svg

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman 10:53, 30 ஏப்ரல் 2017 (UTC)

Thank you for the info Rehman, I have subscribed the mailing list. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:31, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:ஆரம்பம்-ஞாபகமூட்டல்-அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:57, 30 ஏப்ரல் 2017 (UTC)

தானியங்கி செயற்பாடுதொகு

வணக்கம், உங்கள் தானியங்கி செய்துள்ள மாற்றத்தைப் பாருங்கள். இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு கண்டறிவது? உங்கள் தானியங்கி அணுக்கத்தை இடைநிறுத்துவதற்கு பரிந்துரைக்கவுள்ளேன்.--Kanags \உரையாடுக 09:59, 1 மே 2017 (UTC)

03:10, 29 ஏப்ரல் 2017 அன்று இடம்பெற்ற தொகுப்பு, பரிந்துரைக்காதீர்கள், ஆர்வக்கோளாறில் செய்த தொகுப்புகள் சிக்கலில் மாட்டியது கவலையளிக்கிறது, நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:04, 1 மே 2017 (UTC)
பாருங்கள், Kanags,இவற்றில் ஒரு தொகுப்பு மட்டுமே அவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது வழமையாக இடம்பெறுவதே. தடுத்தமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:06, 1 மே 2017 (UTC)
ஆர்வக்கோளாறு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஏனையோருக்குப் பளு ஏற்றக்கூடாது. தானியங்கியின் தொகுப்புகளை நீங்கள் சரி பார்ப்பதில்லையா? தானியங்கி ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்கே அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவையென்றால் மீண்டும் அனுமதி கோர வேண்டும்.--Kanags \உரையாடுக 10:19, 1 மே 2017 (UTC)
இது போன்ற தவறுகளின் முதலில் சோதனை செய்யப்பட்டவை சரியாக இருந்து பின்னர் பிழையானால் என்ன செய்வது? எனக்கு நேர்ந்ததும் அதுதான். எது எவ்வாறாயினும், இனிமேல் இவ்வாறு வராமல் பார்த்துக்கொள்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:46, 1 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன் இதைப் பாருங்கள். மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையிலும் தங்களது தானியங்கி {{சான்றில்லை}} வார்ப்புருவை இட்டுள்ளது. இம்மாதிரி இதுவரை தவறாக வார்ப்புரு இடப்பட்டவற்றை சரிசெய்ய இயலுமா? நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:34, 2 மே 2017 (UTC)
இரா. பாலா, தவறாக வார்ப்புரு இடப்பட்ட வற்றை சரிசெய்து திருத்தி விட்டேன், அவற்றுள் தப்பிப்பிழைத்த கட்டுரைகளைக் கண்டால் கூறுங்கள் அல்லது கூறாமல் மீளமையுங்கள், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:45, 2 மே 2017 (UTC)

பதிவை நீக்குதல்தொகு

எழுதிய ஒரு பதிவை நீக்குதலைவிட, அப்பதிவைக் கீறலாம் (<s></s> ). அதன் பின்னர் அதற்குரிய விளக்கத்தைக் கீழே கொடுக்கலாம். எல்லோரும் வரலாற்றுப்பக்கத்தைப் பார்க்கமாட்டார்கள். ஏற்கனவே இருந்த போட்டியில் மாற்றம் வரப்போகின்றது எனும் அறிவிப்பு எங்கே என்று சிலர் குழம்பலாம்.

எ.கா: முக்கிய குறிப்பு: "கட்டுரைகளை 26,000 பைட்டு அளவைத் தாண்டும் வரையிலும் விரிவாக்க வேண்டும்" எனும் விதி ஓரிரு நாட்களில் மாற்றத்திற்கு உள்ளாகலாம். சந்தேகங்களை இங்கு வினவுங்கள். - போட்டியில் மாற்றம் இல்லை.--சி.செந்தி (உரையாடுக) 15:46, 6 மே 2017 (UTC)
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:58, 6 மே 2017 (UTC)

பழங்கணக்குதொகு

Shriheeran! பழங்கணக்கின் கடவுச்சொல் மறந்து போனது.--PARITHIMATHI (பேச்சு) 16:47, 8 மே 2017 (UTC)

சான்றுதொகு

வெளியிணைப்பு சான்றாகாது. --AntanO 03:00, 9 மே 2017 (UTC)

அதிலிருந்தும் சான்று பெறலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:38, 10 மே 2017 (UTC)

நீக்கல்தொகு

கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், நீக்கல் போன்ற வார்ப்புருவினால் அச்சமுறுவதாகவும் கருத்துக்கள் தெரிவித்ததால் சில கட்டுரைகளில் இருந்து நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். நீங்களும் கட்டுரைகளை ஒரு மாதத்திற்கு நீக்க வேண்டாம் என்றுவிட்டு, நீக்கல் வார்ப்புரு இடுவது குழப்பமாகவுள்ளது. --AntanO 02:49, 10 மே 2017 (UTC)

தகவலுக்கு நன்றி அன்ரன் அக்கட்டுரைப் பார்த்தவுடனேயே நீக்க வேண்டும் போல் இருந்தது. ஆதலால் தான். நீக்க வேண்டாம் என்று தானே சொன்னேன். நீக்கல் வார்ப்புரு இடவேண்டாம் என்றா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:38, 10 மே 2017 (UTC)
நீக்கல் வார்ப்புரு இருந்தால் நீக்கப்படலாம்.--AntanO 09:48, 10 மே 2017 (UTC)
ஓ! சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:58, 10 மே 2017 (UTC)
கட்டுரைகளை நகர்த்தும்போது, அதுதொடர்பான விளக்கத்தை பயனருக்குத் தெரிவியுங்கள். அல்லது கட்டுரையை மீண்டும் உருவாக்கிவிடுவார்கள். --AntanO 10:33, 10 மே 2017 (UTC)
அன்ரன் பார்க்க, [6]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:34, 10 மே 2017 (UTC)
👍 விருப்பம்--AntanO 10:35, 10 மே 2017 (UTC)

பயனர் வழிகாட்டல்தொகு

பயனர் வழிகாட்டலைச் செய்வதற்கு நன்றி. மின்னல் கருவியில் உள்ள வார்ப்புருக்களைச் தமிழாக்கம் செய்தால் எளிதாகப் பயன்படுத்திவிடலாம். --AntanO 12:31, 10 மே 2017 (UTC)

அன்ரன் இது என் நெடுநாள் ஆசை! வார்ப்புருக்களை மொழிபெயர்ப்பு செய்யலாம், இடைமுகத்தை மொழிபெயர்த்தால் உதவியாக இருக்கும். ஆங்கிலச் சுருக்கக்குறியீடுகள் வாசிக்கவே கடினமாக உல்ளது. அருள்கூர்ந்து விரைந்து மொழிபெயர்க்குக.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:34, 10 மே 2017 (UTC)
இன்றிரவு மெதுவாக ஆரம்பிக்கிறேன். முழுவதும் மொழிபெயர்த்துவிட்டால், நேர்த்தியாகவும் அறிவிப்புக்கு எளிதாகவும் இருக்கும். --AntanO 12:36, 10 மே 2017 (UTC)
அன்ரன் அவ்வார்ப்புருக்கள் இருக்கும் இணைப்புக்களைத் தாருங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:38, 10 மே 2017 (UTC)
விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பயனர் பேச்சுப் பெயர்வெளி - இங்கு காணலாம். சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில உருவாக்க வேண்டியும் வரலாம். --AntanO 12:48, 10 மே 2017 (UTC)
பொதுவாக, பயனர் அறிவிப்பு வார்ப்புருக்கள் {{uw- என்று தொடங்கும்.--AntanO 12:50, 10 மே 2017 (UTC)
தகவலுக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:52, 10 மே 2017 (UTC)

தசாவாதாரம் vs தசாவதாரம்தொகு

புதிய பயனர் உருவாக்கிய தசாவாதாரம் பக்கத்தை பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாக ஆக்கியுள்ளீர்கள். ஏற்கனவே தசாவதாரம் உள்ளது என்பதைக் கவனிக்க. அவரது பக்கத்தலைப்பு எழுத்துப் பிழை உடையது. எனவே அது மே 2017 கட்டுரைகளுடன் இருக்கட்டும் அல்லது நீக்குவதென்றால் நீக்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 11:39, 11 மே 2017 (UTC)

ஓ! கவனிக்கவில்லை சுட்டியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:58, 11 மே 2017 (UTC)

பகுபத உறுப்புகள்தொகு

பகுபதஉறுப்புகள் கட்டுரை நீக்கப்படவேண்டும். ஏற்கனவே பகுபத உறுப்புக்கள் என்னும் கட்டுரை இருக்கிறது. பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. அதனால் நன்னூல் கட்டுரையுடன் இணைக்கச் சொல்லியிருக்கிறீர்கள். பார்க்கவும். -இரா. செல்வராசு (பேச்சு) 14:11, 11 மே 2017 (UTC)

இரா. செல்வராசு அவர்களே, சுட்டியமைக்கு நன்றி, திருத்தியுள்ளேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:52, 11 மே 2017 (UTC)

போட்டிக் கட்டுரை முற்பதிவுதொகு

ஸ்ரீஹீரன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (கெய்ரோ - சமர்ப்பிக்கப்பட்டது ஆனால் நிறைவு செய்ய வேண்டும், நைரோபி, ஜேம்ஸ் குக்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

 1. ஜகார்த்தா
 2. மார்க்கோ போலோ
 3. அங்கோர் வாட்
 4. சென் பீட்டர்ஸ்பேர்க்
 5. புறா
 6. தெகுரான்
 7. சென் பீட்டர்ஸ்பேர்க்
 8. கேப் டவுன்
 9. திமிஷ்கு ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். நன்றி.--கலை (பேச்சு) 17:46, 1 சூன் 2017 (UTC)


வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட கெய்ரோ, நைரோபி, ஜேம்ஸ் குக் கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த மார்க்கோ போலோ, புறா, தெகுரான் ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் முன்னர் முற்பதிவு செய்த திமிஷ்கு கட்டுரையும் பட்டியலில் உள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 11:51, 11 சூன் 2017 (UTC)

காரைக்கால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படாதுதொகு

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் நான் விரிவாக்கிய எனது ஊரான காரைக்கால் பற்றிய கட்டுரை ஏன் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறுங்கள்.--wiki tamil 100 (பேச்சு) 06:31, 6 சூன் 2017 (UTC)

wiki tamil 100, அது போட்டிக்காக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் இல்லை என்பதனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அப்பட்டியலில் உள்ளகட்டுரைகளை மட்டும் வொரிவாக்குங்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:08, 6 சூன் 2017 (UTC)

ஸ்ரீஹீரன்! ஒரு கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், குறிப்பில் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கொடுத்துவிடுங்கள். அது பயனருக்கு இலகுவாக விளக்கத்தைக் கொடுக்கும். நன்றி.--கலை (பேச்சு) 21:15, 6 சூன் 2017 (UTC)

கெய்ரோ கட்டுரைதொகு

நீங்கள் விரிவாக்கம் செய்ய ஆரம்பித்து, விதிப்படி 26000 பைட்டுக்கள் வர முன்னரே கெய்ரோ கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தீர்கள். ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனை தற்போது அருளரசன் விரிவாக்கம் செய்துள்ளார். ஏற்கனவே உங்கள் பெயரில் பதிவாகி உள்ளதனால், அவரால் சமர்ப்பிக்க முடியவில்லைப் போலுள்ளது. இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம்? அவரது கணக்கில் அந்த