இராபர்ட் காடர்ட்
இராபர்ட் ஹட்சின்ஸ் காடர்ட் (Robert Hutchings Goddard, அக்டோபர் 5, 1882 - ஆகஸ்ட் 10, 1945) ஒரு அமெரிக்க அறிவியலாளர், இயற்பியல் வல்லுநர், பேராசிரியர் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆவார். இன்றைய ராக்கெட் அறிவியல் பங்களிப்பாளர்களில் இவர் மிக முக்கியமானவர். ராக்கெட் அறிவியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் (Liquid Fueled Rockets) கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆராய்ச்சியின் பகுதியாக, 1926 மார்ச் 16 அன்று இவரது குழுவினர் செலுத்திய ராக்கெட்டே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டாகும். காடர்ட் மற்றும் அவரது குழுவினர் 1926க்கும் 1941க்கும் இடையிலாக மொத்தம் 34 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளனர். அவற்றில் சில அதிக உயரமாக 2.6 கி.மீ ( 1.6 மைல்) -க்கும், அதிக வேகமாக 885 கி.மீ/மணிக்கும் (மணிக்கு 550 மைல் ) பறக்கக்கூடியனவாக இருந்தன.[1][2][3]
இராபர்ட் காடர்ட் Robert H. Goddard | |
---|---|
பிறப்பு | வூஸ்ட்டர், மாசசூசெட்ஸ் | அக்டோபர் 5, 1882
இறப்பு | ஆகத்து 10, 1945 பால்ட்டிமோர், மேரிலாந்து | (அகவை 62)
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | வூல்ஸ்ட்டர் பாலிடெக்னிக் கல்விக்கழகம், கிளார்க் பல்கலைக்கழகம் |
பணி | பேராசிரியர், ராக்கெட் அறிவியலாலர், இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் |
அறியப்படுவது | முதலாவது திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்தமை |
பெற்றோர் | ஃபானி லூயிஸ் ஒயிட், நாஹும் காடர்ட் |
வாழ்க்கைத் துணை | எஸ்தர் கிஸ்க் |
பிள்ளைகள் | எவருமில்லை |
இளமைப்பருவம்
தொகு1882 இல், அமெரிக்க மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் (Massachusetts) சார்ந்த வொர்செஸ்டர் நகரத்தில் (Worcester), நாஹம் டேன்போர்டு காடர்ட் (Nahum Danford Goddard ) (1859-1928) என்பவருக்கும் பேனி லூயிஸ் ஹாயிட் (Fannie Louise Hoyt) (1864-1920) அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் ராபர்ட் காடர்ட்.
படிப்பு
தொகுவொர்செஸ்டர் பாலிடெக்னில் பயின்ற ராபர்ட் காடர்ட், 1908 இல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். படிப்பிற்குப் பின், அங்கேயே ஓராண்டு காலம் பயிற்றுநராகப் பணியாற்றினார். பின், வொர்செஸ்டர் நகரிலேயே க்ளார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பயின்று 1910இல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1911இல் தனது அறிவியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஓராண்டு காலம் க்ளார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபின், 1912இல் தொடர் ஆய்வுகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பால்மர் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார்.
மேரிலாந்து மாநிலத்தின் கிரீன்பெல்ட் நகரத்திலுள்ள நாசாவின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிக்கூடமான காடர்ட் விண்வெளி ஊர்தி மையம் (The Goddard Space Flight Center GSFC), ராபர்ட் காடர்ட்டின் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Robert H. Goddard". New Mexico Museum of Space History. பார்க்கப்பட்ட நாள் January 25, 2023.
- ↑ "Sea Sky"..
- ↑ "Archives". The Smithsonian Institution. Archived from the original on 2012-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-06-06..