வாருங்கள்!

வாருங்கள், PARITHIMATHI, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மதனாகரன் (பேச்சு) 15:39, 15 சூலை 2016 (UTC)Reply

 

வணக்கம், PARITHIMATHI!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 01:35, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

May 2017

தொகு

  Hello, PARITHIMATHI, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 04:45, 9 மே 2017 (UTC) ஆறு கணக்குகள் உண்டல்லவா?--PARITHIMATHI (பேச்சு) 04:48, 9 மே 2017 (UTC)Reply

காண்க: விக்கிப்பீடியா:கைப்பாவை --AntanO 04:54, 9 மே 2017 (UTC)Reply
இங்கு policy on multiple accounts குறித்தும் blocked from editing குறித்தும் பக்கங்கள் சிவப்பு இணைப்பாக உள்ளனவே?--PARITHIMATHI (பேச்சு) 05:07, 9 மே 2017 (UTC)Reply
en:Wikipedia:Sock puppetry - இங்கு விபரங்கள் உள்ளன. ஆறு கணக்களுக்கும் உள்ள தொடர்பை ஒவ்வொரு பயனர் பக்கத்திலும் {{User alternative account}} வழியாக இணைத்துவிடுங்கள்.--AntanO 05:13, 9 மே 2017 (UTC)Reply

account creator

தொகு

@Shanmugamp7:, பயிலரங்களுகளில் பயனர் கணக்குகளை உருவாக்க ஏதுவாக இவருக்கு account creator உரிமை வழங்க முடியுமா? பரிதிமதி, இந்த அணுக்கம் கிடைத்த பிறகு உங்கள் கணக்கில் இருந்து மற்ற பயனர்களுக்கு கணக்குகளை உருவாக்கித் தர முடியும். இதன் மூலம் ஒரே நாளில் ஒரே ஐ.பி.யில் இருந்து பல கணக்குகளை உருவாக்கும் தடையை எதிர்கொள்ளலாம்.

https://ta.wikipedia.org/wiki/Special:CreateAccount - இதில் "தற்காலிகமாக எழுந்தமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துக, அதை குறித்துள்ள மின்னஞ்சலுக்கு அனுப்புக" என்றிருப்பதைத் தெரிவு செய்க. அவர்கள் கடவுச் சொல் உங்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு மட்டும் மின்மடலில் போகும்.

கருப்புபட்டியலை புறக்கணிக்கவும், ஏமாற்றுதல் சரிபார்த்தலை புறக்கணி

என்ற பெட்டிகளையும் தெரிவு செய்யுங்கள்.

@Parvathisri:, வேறு யாருக்கு இந்த அணுக்கம் தேவைப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி. --இரவி (பேச்சு) 11:08, 9 மே 2017 (UTC)Reply

ஒரு வாரத்திற்கு கணக்கு உருவாக்குவோர் அணுக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. @Parvathisri and Ravidreams: இப்போது பயனர் அணுக்கம் நீக்குதலை தானியக்கமாகவே அமைக்க இயலும் என்பதால் யார் யாருக்கு எவ்வளவு நாள் வேண்டும் என கூறினால் உதவியாக இருக்கும்.--சண்முகம்ப7 (பேச்சு) 13:49, 9 மே 2017 (UTC)Reply

நன்றி சண்முகம், இரவி. இவர்களுக்குத் தேவைப்படலாம். இரா.பாலா, ஹிபாயத்துல்லா, உலோ செந்தமிழ்க்கோதை, தியாகு கனேஷ்.

நான் சிறப்புப்பக்கத்துக்குச் சென்று பயனர் கணக்குகளை உருவாக்கியுள்ளேனே. இது வேறு அணுக்கமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 21:00, 9 மே 2017 (UTC)Reply

@Shanmugamp7 and Parvathisri:, சிறப்புப் பக்கத்தில் இருந்து புதிய பயனர் கணக்கை உருவாக்குவது அனைத்து நிருவாகிகளுக்கும் இயல்பாகக் கிடைக்கும் அணுக்கம். மற்றவர்கள் இதே வசதியை உரிய காரணங்களை முன்னிட்டு வேண்டிப் பெற்றுக் கொள்ளலாம். சண்முகம், யார் யாருக்கு இதனை அளிக்கலாம் என்பதைத் திட்டப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். --இரவி (பேச்சு) 22:47, 24 சூன் 2017 (UTC)Reply

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:32, 13 மே 2017 (UTC)Reply

துப்புரவுப் பணியில் உதவி தேவை

தொகு

வணக்கம். ஆசிரியர்களுக்கான பயிற்சியை அடுத்து இம்மாதம் குவியும் புதிய கட்டுரைகளின் துப்புரவுப் பணிக்கு உதவி தேவை. பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் உரிய வழிகாட்டலும் வழங்க வேண்டியுள்ளது. நன்றி. --இரவி (பேச்சு) 14:32, 15 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:02, 31 மே 2017 (UTC)Reply

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

தொகு

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:51, 25 சூன் 2017 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மூன்று நாட்களும் திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்குத் தக்க வழிகாட்டியாகத் திறம்பட செயலாற்றி ஊக்குவித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:07, 8 சூலை 2017 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி. மிகவும் மிகவும் ... மன நிறைவு தந்த ஒரு செயல்பாடாக அமைந்தது. PARITHIMATHI (பேச்சு) 17:59, 8 சூலை 2017 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

கவனிக்க

தொகு

கரும் நாரை என்னும் கட்டுரை இருக்கும் போது, ஏன் தேவையில்லாமல் இன்னொரு பக்கம் உருவாக்குகிறீர்கள்?? விரிவாக்கம் செய்வதென்றால், இக்கட்டுரையில் விரிவாக்கம் செய்யுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:45, 26 மார்ச் 2020 (UTC)

தலைப்பைப் பரிசீலனை செய்து கருநாரை என்று மாற்ற வகை செய்ய வேண்டும். [ஆதாரம் -- கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 158:1. பி. என். எச். எஸ்.]. தற்போது வழிமாற்று செய்ய இயலவில்லை (பூட்டப்பட்டுள்ளது). இதே போல், பல தலைப்புகள் எவ்விதத் தரவுகளுமின்றி நேரடி மொழிபெயர்ப்பாகவோ தவறான வழங்கு பெயர்களாகவோ உள்ளன. ஒவ்வொன்றாக சரி செய்ய விருப்பம். உதவி தேவை.--~~ PARITHIMATHI (பேச்சு) 15:13, 12 மே 2021 (UTC)Reply

Translation request

தொகு

Hello.

Can you translate and upload the article en:List of birds of Azerbaijan in Tamil Wikipedia?

Yours sincerely, Karalainza (பேச்சு) 11:30, 22 ஏப்ரல் 2020 (UTC)

கூஸ் வாத்து

தொகு

கூஸ் வாத்து என்ற கட்டுரையைக் கவனியுங்கள். கட்டுரைகளின் பேச்சுப்பக்கம் கவனிக்கப்படாமல் போகலாம் என்பதால் பயனர் பேச்சுப்பக்கத்திலும் குறிப்பிடுங்கள். (பயனர் பேச்சு:Mereraj) --AntanO (பேச்சு) 09:33, 25 ஏப்ரல் 2020 (UTC)

பேச்சுப்பக்கங்களில் குறிப்பிடுதல் தோடர்பாக

தொகு

ஒரு கட்டுரையின் பெயரை மாற்றுதல் தொடர்பாக அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுவது மட்டும் செய்தால் அது கவனிக்கபடாமல் போகலாம். கட்டுரையின் துவக்கத்தில்

{{தலைப்பை மாற்றுக}}

என்ற வார்ப்புருவை இடுவது நலம்--அருளரசன் (பேச்சு) 00:03, 6 சூன் 2021 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் PARITHIMATHI,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

மொழிமுதல் எழுத்துக்கள்

தொகு

கவனியுங்கள் மொழிமுதல் எழுத்துக்கள் --சா அருணாசலம் (பேச்சு) 05:17, 18 சனவரி 2022 (UTC)Reply

தகுந்த பகுப்புகள்

தொகு

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளைத் தகுந்த பகுப்புகளினுள் சேர்த்து விடுங்கள். இல்லையேல், விக்கிக் கட்டுரைகளை எழுதுவதில் எவ்விதப் பயனும் இல்லை.--Kanags \உரையாடுக 01:20, 23 சனவரி 2022 (UTC)Reply

பயனர் கார்தமிழ் தொடர்பாக

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) இங்கு உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். --AntanO (பேச்சு) 15:49, 5 மார்ச் 2022 (UTC)

பயனர் பேச்சு:Thamizhpparithi Maari எனக் கருதி இங்கு தவறுதலாக இடப்பட்டது. செய்தியை மீளப்பெறுகிறேன். நன்றி. --AntanO (பேச்சு) 08:32, 6 மார்ச் 2022 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

தொகு

வணக்கம், தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை எழுதியும் விக்கித் தொடர்பான பயிற்சிகள் நடத்தியும் விக்சனரி போன்ற சகோதரத் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/PARITHIMATHI பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:31, 25 ஏப்ரல் 2022 (UTC)

பகுப்பாக்கம்

தொகு

விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும் --AntanO (பேச்சு) 02:35, 10 செப்டம்பர் 2022 (UTC)

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 03:15, 10 செப்டம்பர் 2022 (UTC)

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,325 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

தொடர்-தொகுப்பு 2024

தொகு

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:PARITHIMATHI&oldid=4059522" இலிருந்து மீள்விக்கப்பட்டது