தொகுப்பு

தொகுப்புகள்


1, 2, 3, 4

உங்களுக்குத் தெரியுமா திட்டம்

தொகு


முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

தொகு

நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:48, 31 சனவரி 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Shanmugamp7!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)

அறிக்கைத் தகவற்பிழைகள்

தொகு

அறிக்கை உருவாக்கிவருவதைக் கண்டு மகிழ்ச்சி. ஆனால், அதில் // இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் சூர்யப்பிரகாசும், பயனர் பூராட்லிபி யும் பதிவேற்றினர்.// - நான் ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றவில்லை. அவர் தனியாகவே பதிவேற்றினார். நான் குறைந்தது 800 புகைப்படங்கள் மட்டுமே பதிவேற்றினேன். :) //இப்பட்டறையில் சூர்யபிரகாஷ் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.// - நான் சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டறையில் கலந்துகொள்ளவில்லை. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:07, 8 பெப்ரவரி 2013 (UTC)

சுட்டியமைக்கு நன்றி சூர்யா, திருத்தியுள்ளேன். ஏதேனும் பிழைகள் அல்லது சேர்க்க/ நீக்க வேண்டியது இருந்தால் நீங்களே திருத்தலாம் :) --சண்முகம்ப7 (பேச்சு) 01:44, 9 பெப்ரவரி 2013 (UTC)

எனது கட்டுரை கணக்கில் வரவில்லை

தொகு

திரு சண்முகம் ஐயா அவர்களே, விக்கி தமிழில் போயர் எனும் கட்டுரையினை எனது கம்ப்யூட்டர் முகவரியிலிருந்து துவக்கிய காரணத்தினால், போயர் கட்டுரை எனது premloganathan கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, தாங்கள் தயவுகூர்த்து இதனை சரிசெய்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன். நன்றி --Premloganathan (பேச்சு) 11:51, 14 பெப்ரவரி 2013 (UTC)

மன்னிக்கவும், இப்போது இதற்கு எதுவும் செய்ய இயலாது என்றே கருதுகிறேன். கட்டுரையை துவங்கியவுடன் கேட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு மீண்டும் உங்கள் கணக்கிலிருந்து தொடங்கும் படி கூறியிருக்கலாம். இப்போது பல பயனர்கள் பங்களித்து உள்ளதால், அவர்கள் பங்களிப்பு அழிந்துவிடும் என்பதால் நீக்க இயலாது. புரிதலுக்கு நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 12:28, 14 பெப்ரவரி 2013 (UTC)

இந்துவரை இந்தக்கட்டுரையில் என்னைத்தவிர மற்ற யாருடைய பங்களிப்பும் இல்லை, ஒரே ஒரு சேர்கை மட்டும் -தேனி.எம்.சுப்பிரமணி அவர்களின் ஆசிரியரை தற்கால குறிப்பிடத்தக்கவர்கள் பகுதியில் கள்ளிப்பட்டி ஆசிரியரை இணைத்துள்ளார், தங்களால் இயலுமாயின் முயற்சிக்கலாம். நன்றி--Premloganathan (பேச்சு) 12:57, 14 பெப்ரவரி 2013 (UTC)

சிறு தொகுப்பேயாயினும் கட்டுரையில் இதுவரை ஐந்து பேர் பங்களித்துள்ளனர், மேலும் கட்டுரை தொடங்கி இவ்வளவு நாட்கள் கழித்து (நான்கு மாதங்களுக்கு மேல் ) அதனை நீக்கிவிட்டு எழுதுவது சரியானதாக தோன்றவில்லை, மேலும் இது விக்கி கொள்கைகளுக்கு முரணானது என்றே கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:02, 14 பெப்ரவரி 2013 (UTC)

இணைப்பு

தொகு

வணக்கம். திருச்சேறை கட்டுரையை திருச்சேறை சாரநாத பெருமாள் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். உள்ளடக்கத்தை சரி செய்துவிட்டேன்.--Booradleyp (பேச்சு) 16:11, 21 பெப்ரவரி 2013 (UTC)

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 22 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 14:01, 22 பெப்ரவரி 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்பு

தொகு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:36, 21 மே 2013 (UTC)Reply

என்ன செய்யலாம்

தொகு

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:39, 23 மே 2013 (UTC)Reply

சிவத்தலங்கள் நீக்கம் குறித்தான வேண்டுகோள்

தொகு

வணக்கம் நண்பரே, தாங்கள் சில சிவத்தலங்களின் தேவையற்ற பேச்சுப் பக்கங்களை நீக்கியிருப்பதைக் கண்டேன். மகிழ்ச்சி. தங்களுடைய பங்களிப்பு [[:பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்] என்பதில் மிகவும் தேவைப்படுகிறது. முன்பு கட்டுரையை தொடங்கியவர் கோயில் பெயரில் கட்டுரையை தொடங்காமல் ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். உதாரணமாக திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்ற கட்டுரையை திருப்பைஞ்ஞீலி என்ற ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். அவற்றினை உரிய பெயருக்கு நகர்த்தும் வேலையில் நான் ஈடுபட்டுள்ளேன். எனினும் ஊரில் பெயரில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் விரிவாக எழுதப்பெறக் கூடிய ஒன்றாகும். அவை வழிமாற்றுப் பக்கங்களாக இருப்பதால் அப்பணி செய்யப்படாமல் போகலாம். எனவே அருள்கூர்ந்து அப்பக்கங்களை இனம் கண்டு நீக்க வேண்டுகி்றேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 22 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)Reply

விக்சனரி-வார்ப்புரு-மாற்றம்

தொகு

வார்ப்புரு பேச்சு:Wiktionary இங்கு ஒரு சிறு மாற்றம் தேவை. மாற்றுக்கருத்து இருக்காது என்பதால், மாற்றலாமா?--≈ உழவன் ( கூறுக ) 13:16, 21 சூலை 2013 (UTC)Reply

மாற்றலாம் என்றே கருதுகிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:12, 22 சூலை 2013 (UTC)Reply

மேற்கோள்

தொகு

subst மேற்கோள் எப்படி பயன்படுத்த வேண்டும் எனக் கூற முடியுமா? என் சமீபத்திய பங்களிப்புகளை பார்க்கவும். என்னால் முடியவில்லை. எந்த இடத்தில் தவறு செய்தேன் எனவும் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 22 சூலை 2013 (UTC)Reply

நீங்கள் பயன்படுத்திய முறை சரியே, அந்த வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளதால் subst வேலை செய்யவில்லை. உங்கள் பயனர் வெளியில் அந்த வார்ப்புருவை உருவாக்கி substitute செய்து பாருங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 17:11, 22 சூலை 2013 (UTC)Reply

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு

தொகு

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:44, 30 செப்டம்பர் 2013 (UTC)

சென்னை நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கான காப்புரிமைச் சான்று விளக்கு குறித்த வழிகாட்டல்

தொகு

சண்முகம், சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவுக்கான காப்புரிமை குறித்து சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இது தொடர்பாக, என்ன மாதிரி காப்புரிமை துறப்பை அறிவிக்க வேண்டும், எங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வழி காட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 09:08, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் இரவி, காமன்ஸின் இருக்கமான காப்புரிமை கொள்கை பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவு மற்றும் படங்கள் தொழில் முறை கலைஞர்களால் நமக்காக எடுக்கப்பட்டாலும் படம் எடுத்தவருக்கே அதன் காப்புரிமை உண்டு என்பார்கள். ஒளிப்பதிவு செய்தவர்களிடம் இருந்து அனுமதி அல்லது காப்புரிமை நமக்குதான் உள்ளது என்பது போல ஒரு கடிதம் வாங்கி வைத்தல் நலம். மேலும் படங்களை நம் சொந்த ஆக்கம் என்றும் பொதுவில் பதிவேற்ற இயலாது. இத்தகைய அனுமதி அதற்கு உதவியாக இருக்கும். புகைப்படம் எடுத்த நிறுவனத்திடமிருந்து யாருக்காக வேலை செய்தார்கள், யாரிடம் காப்புரிமை உள்ளது என்றோ அல்லது பொதுவில் பதிவேற்றதற்கு ஏற்ற உரிமத்தில் வெளியிடுவதாகவோ அனுமதி பெறுதல் நலம். இதை படங்களை பதிவற்றிய பிறகு permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். -- --சண்முகம்ப7 (பேச்சு) 18:50, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
CC SA-3.0வில் வேண்டி பெறுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கான attribution அவர்களுக்குப் போக வேண்டும் என்பதால் நமது பயனர் கணக்கில் இருந்து ஏற்ற முடியாது அல்லவா? அவர்கள் பயனர் கணக்கில் இருந்தே ஏற்றுவது பொருத்தமாக இருக்குமா?--இரவி (பேச்சு) 04:36, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
நாமே பதிவேற்றலாம், அதற்கு custom templateகளை உருவாக்கிக் கொள்ளலாம். எ கா commons:Template:Wikimania 2011 video or Commons:Template:Acrofan.com--சண்முகம்ப7 (பேச்சு) 05:22, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆகா ! அப்படியே செஞ்சிடுவோம்--இரவி (பேச்சு) 05:26, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்--இரவி (பேச்சு) 14:37, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

கடந்த 30 நாட்களின் முனைப்பான பங்களிப்பாளர்கள் தரவு

தொகு

கடந்த 30 நாட்களில் முனைப்பாக பங்களித்தவர்கள் தரவு பல நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்போதாவது தான் மாறுகிறது. முன்பு அடிக்கடி மாறி வந்தது. இதைப் பற்றி துப்பு துலக்க முடியுமா? பார்க்க: https://meta.wikimedia.org/wiki/Talk:List_of_Wikipedias#How_often_is_the_active_users_stats_updated.3F --இரவி (பேச்சு) 05:29, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:57, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:28, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர் பெயர் மாற்றம் குறித்து இன்னுமொரு சந்தேகம்

தொகு

வணக்கம் சண்முகம், தாங்கள் என் பயனர் பெயர் மாற்றல் குறித்தான கேள்விக்கு சோடாபாட்டிலின் பேச்சுப் பக்கத்தில் உடனடி பதில் தந்தமைக்கு நன்றி. எனக்கு இன்னுமொரு சந்தேகம் என் பயனர் பெயரை தமிழ்விக்கியில் மாற்ற விண்ணப்பபித்து அது ஏற்கப்பட்டு மாற்றப்பட்டால், அம்மாற்றம் தமிழ் விக்கிஷனரி, காமன்ஸ் விக்கி, ஆங்கில விக்கி, உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மாறுமா மாறாதா? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:05, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

மாறாது. பார்க்க m:Global rename policy--சண்முகம்ப7 (பேச்சு) 14:35, 30 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி சண்முகம். படித்து அறிந்தேன், நான் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவில்லை. என் தற்போதைய பயனர் பெயரிலேயே தொடர்கிறேன். -அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:01, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

சீர்திருத்தங்கள்

தொகு

சண்முகம் இதனைக் கொஞ்சம் கவனியுங்கள். சிலவற்றைத் திருத்திவிட்டேன். மிகப் புதிய எங்கு உள்ளதெனக் கண்டறிய முடியவில்லை. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#வரலாறு பக்கத்தில் உள்ளவை --Anton·٠•●♥Talk♥●•٠· 06:52, 2 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 07:48, 2 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 08:04, 2 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு

தொகு

வணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)Reply

Hello, can you help to get this done? Regards, Nemo (பேச்சு) 14:59, 3 திசம்பர் 2013 (UTC)Reply

இணைப்பு குறியீடு உதவி வேண்டும்

தொகு

ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target="_blank") திறக்க என்ன செய்ய வேண்டும்? அதாவது HTML இல் <a href="URL" target="_blank">Word</a> என்று கொடுப்பதை விக்கி முறைப்படி எழுதுவது எப்படி? - Uksharma3 (பேச்சு) 16:45, 30 சனவரி 2014 (UTC)Reply

இதனை உங்கள் Special:Mypage/Common.jsல் சேர்த்து பாருங்கள். உங்களுக்கு மட்டும் வெளியிணைப்புகள் புதிய சாளரத்தில் திறக்கும். அனைவருக்கும் வேண்டுமானால் Mediawiki:Common.jsல் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு mw:Snippets மற்றும் mw:Snippets/Open external links in new window. உதவிய User:PiRSquared17க்கு நன்றி :P.--சண்முகம்ப7 (பேச்சு) 02:22, 31 சனவரி 2014 (UTC)Reply

நன்றி சண்முகம். ஆனால் எனக்கு இவ்வளவு செய்ய இயலாது. [url|blank|LINKWORD] என்பது போல ஏதும் செய்ய முடியுமா என்றுதான் நினைத்தேன். நன்றி. வணக்கம். -Uksharma3 (பேச்சு) 02:55, 31 சனவரி 2014 (UTC)Reply

சண்முகம், நீங்கள் குறிப்பிட்ட நிரலை Special:Mypage/Common.js இலா அல்லது Special:Mypage/vector.js இலா சேர்க்க வேண்டும்?--Kanags \உரையாடுக 08:51, 31 சனவரி 2014 (UTC)Reply
நீங்கள் வெக்டர் தோல் (default skin) உபயோகிப்பவர் எனில் vector.jsல் சேர்க்கலாம். Special:Mypage/Common.jsல் சேர்த்தால் அனைத்து தோல்களிலும் (Skin) வேலை செய்யும்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:19, 31 சனவரி 2014 (UTC)Reply

Tweet செய்வதில் சிக்கல்

தொகு

ஒரு கட்டுரைப் பக்கத்தில் இருந்துகொண்டு கருவிப்பெட்டியில் உள்ள T யை சொடுக்கும்போது Twitter Popup window வருகிறது. அதில் கட்டுரைத் தலைப்புடன் URL http://tawp.in/r/4ja3 என வருகிறது. ஆனால் tawp.in என்ற தளம் இல்லை என அறிவிப்பு வருகிறது. அதனால் கட்டுரைகளை TWEET செய்வதானால் manual ஆக அதில் வரும் உரலியை எடுத்துவிட்டு கட்டுரையிலுள்ள உரலியைக் கொடுக்கிறேன். - Uksharma3 (பேச்சு) 03:24, 31 சனவரி 2014 (UTC)Reply

 Y ஆயிற்று with the help of PiRSquared, Thanks PiRSquared17 :)--சண்முகம்ப7 (பேச்சு) 18:09, 1 பெப்ரவரி 2014 (UTC)
No problem. PiRSquared17 (பேச்சு) 18:34, 1 பெப்ரவரி 2014 (UTC)

Working fine! Thank you. Follow me on Twitter - Uksharma3 (பேச்சு) 01:59, 2 பெப்ரவரி 2014 (UTC).

ஒரு பக்கம் மிகவும் நீண்டிருந்தால் கீழே சென்ற ஒருவர் உடனடியாக மேலே செல்வதற்குரிய குறியீடு எவ்வாறு கொடுக்கவேண்டும் என தயவு செய்து அறியத் தருவீர்களா? நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 13:42, 4 பெப்ரவரி 2014 (UTC)

ஒரு பக்கத்தின் உட்தலைப்பிற்கு செல்ல [[பயனர் பேச்சு:Shanmugamp7#உங்களுக்குத் தெரியுமா திட்டம்]] என்பது போல பயன்படுத்தலாம். உடனடியாக மேலே செல்ல இயலுமா என சரியாக தெரியவில்லை. தேடிப்பார்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:09, 4 பெப்ரவரி 2014 (UTC)

என் தம்பி ஒரு கருவியை உருவாக்கியுள்ளான் பார்க்க பயனர்:L.Shriheeran/goToTop.js இக் கருவியை நெறியத்தோலில் நிறுவிப் பாருங்கள். மிக நன்றாக உள்ளது. அல்லது நான் உருவாக்கிய பயனர்:Shrikarsan/Floater.js இலும் இவ்வசதி உள்ளது. விரைவில் அனைத்துக் கருவிகளையும் அறிமுகப்படுத்துகிறோம். ஏனைய எனது கருவிகளைக்காண இங்கு பாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:25, 17 பெப்ரவரி 2014 (UTC)

வாக்கு

தொகு

மேலாளர் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்துள்ளேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 02:48, 10 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 10 பெப்ரவரி 2014 (UTC)

கருவிகள் பற்றி

தொகு

நான் உருவாக்கிய விருப்பம்&ஆயிற்று கருவியை மீடியாவிக்கி பக்கத்தில் உருவாக்கி விருப்பத்தேர்வுகளில் இணைத்தால் பயனர்களுக்கு உதவியாக அமையும். நிர்வாகிகளால் மாத்திரமே மீடியாவிக்கி பக்கங்களை உருவாக்க முடியும். தாங்கள் அவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி உதவ முடியுமா?!--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:49, 17 பெப்ரவரி 2014 (UTC)

கண்டிப்பாக கருவியாக இணைக்கலாம் ஸ்ரீகர்சன். அதற்கு ஆலமரத்தடியிலேயே மற்ற பயனர்களின் கருத்துகளையும் கேளுங்கள். சில நாட்கள் கழித்து எதிர்ப்பு ஏதும் இல்லையெனில் கருவியாக்கி விடலாம். பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)/தொகுப்பு01#mw:Reference_Tooltips--சண்முகம்ப7 (பேச்சு) 14:08, 17 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி அண்ணா அனைத்துக்கருவிகளையும் வெளியிட்ட பின் வாக்கெடுப்பு நடாத்தலாம் என நினைக்கின்றேன். நீங்களும் என் கருவிகளை செயற்படுத்திப்பார்த்து ஆலோசனைகளை வழங்குங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:27, 17 பெப்ரவரி 2014 (UTC)

 

வணக்கம் Shanmugamp7! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:47, 17 மே 2014 (UTC)Reply

தானியங்கி

தொகு

வணக்கம் சண்முகம், அண்மைக் காலமாக Rotlink என்ற பயனர் தமிழ்விக்கியில் பங்களித்து வருகிறார். இவர் வேற்று மொழிப் பயனர். இவரது பங்களிப்புகள் deadlink களைக் கண்டுபிடித்து அவற்றுக்கிணையான archive.org இணைப்புகளைத் தேடி சேர்க்கிறார். இது நல்ல முயற்சி என்றே எனக்குப் படுகிறது. ஆனாலும், இப்பயனரை ஆங்கில விக்கியில் நிரந்தரமாகத் தடை செய்துள்ளனர் போல் தெரிகிறது. எதற்காகத் தடை செய்தனர் என அறிய முடியவில்லை. ஏனைய விக்கிகளிலும் இவர் தடை செய்யப்பட்டுள்ளாரா என்பதை அறியலாமா? archive.org இணைப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. இது பற்றி அறிய முடியுமா?--Kanags \உரையாடுக 20:38, 27 ஆகத்து 2014 (UTC)Reply

இது nerdrage போலக் காணப்படுகிறது. நல்ல முயற்சியும் முன்னறிவிப்பின்றி தானியக்கமாக செயல்படுவது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது. இங்கும் அவர் முறையான அறிவிப்பின்றி/அனுமதி பெறாமல் தானியங்கியை இயக்குகிறார்.--மணியன் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)Reply
இரவி அல்லது சுந்தர் கவனிக்க.--Kanags \உரையாடுக 07:58, 28 ஆகத்து 2014 (UTC)Reply
இவர் பத்துக்கும் மேற்பட்ட விக்கிகளில் தடை செய்யப்பட்டுள்ளர் [1] Special:centralauth/Rotlink. காரணம் அனுமதியில்லாத தானியங்கி பயன்பாடே. இணைய ஆவணகம் (archive.org) தொடர்பான இணைப்புகள் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றே கருதுகிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 09:22, 28 ஆகத்து 2014 (UTC)Reply
சண்முகத்தின் கருத்துப்படிபார்த்தால் நாம் அந்தக்கணக்கை தடைசெய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். முறைப்படி தானயங்கி அணுக்க விண்ணப்பமொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 04:27, 30 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Shanmugamp7!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:27, 30 திசம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் சண்முகம், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:27, 16 சனவரி 2015 (UTC)Reply
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:50, 30 சனவரி 2015 (UTC)Reply

நன்றி

தொகு

பெயரை மாற்றியமைக்கு நன்றி.-- C.K.MURTHY  ( பேச்சு  )

பெயரை மாற்றகோரிக்கை

தொகு

அன்புள்ள சண்முகம் அவர்களே எனது பயனர் பெயரை Arularasan என்று மாற்ற விரும்புகிறேன். மாற்ற இயலுமா உதவுங்கள் ArulghsrArulghsr (பேச்சு)Arulghsr (பேச்சு) 03:56, 19 மார்ச் 2015 (UTC)

Special:CentralAuth/Arularasan படி எற்கனவே உள்ள கணக்கு பெயர் மாற்றப்பட வேண்டும். இது குறித்து கொள்கை முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் இது போன்ற வேண்டுகோள்கள் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிற மேலாளர்களுடன் உரையாடி, ஒருமித்த கருத்து இருந்தால் உங்கள் பெயரை மாற்ற முயல்கிறேன். உங்கள் வேண்டுகோளை இங்கு அல்லது இங்கு இட இயலுமா?--சண்முகம்ப7 (பேச்சு) 04:44, 19 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)Reply

தானியங்கிக்கான வழு எப்போது பதியப்படும்? விரைந்து செய்தால் நலம். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:38, 21 மே 2015 (UTC)Reply
@தினேஷ்குமார் பொன்னுசாமி : வரவேற்பிற்கு என்ன வார்ப்புரு பயன்படுத்துவது, கையொப்பமாக random user name இடுவது எனில் யார் யார் பெயரை இடுவது குறித்த முடிவுகளை எடுத்து, அதற்குரிய மீடியாவிக்கி தகவல்களை உருவாக்கிவிட்டால் உடனடியாக வழு பதிந்து விடலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 21 மே 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 7 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 25 சூலை 2015 (UTC)Reply

குறிப்பை நீக்கியமை

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்பான உரையாடல் குறித்து நீங்கள் இட்ட குறிப்பை ஏன் நீக்கினீர்கள் என் அறிய முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 03:05, 10 ஆகத்து 2015 (UTC)Reply

அதில் உள்ள சில விவரங்களை முறையான அறிவிப்பு வெளிவந்த பின் வெளியிடுவது நல்லது என அறிந்தேன். அதனால் முழுமையாக நீக்கி விட்டேன். இரவியுடைய அறிக்கை வந்த பிறகு என்னுடைய கருத்தை மீண்டும் சேர்ப்பேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 03:23, 10 ஆகத்து 2015 (UTC)Reply

பதிலளித்தமைக்கு நன்றி. நீக்கும்போது தொகுப்புச் சுருக்கத்தில் எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கி விட்டீர்கள். அதனால் தான் கேட்டேன். --மதனாகரன் (பேச்சு) 03:33, 10 ஆகத்து 2015 (UTC)Reply

யாரு அது முதல் பக்கத்துல சண்முகமா........?

தொகு

வாழ்த்துக்கள். எப்ப முதல் பக்கத்தில் வந்ததுன்னு தெரியல. ஆனா நானிப்போ தான் பாக்குறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 8 அக்டோபர் 2015 (UTC)Reply

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:36, 8 அக்டோபர் 2015 (UTC)Reply
நன்றி தென்காசியாரே. நானே ரொம்ப நாளைக்கப்புறம்தான் பார்த்தேன் :P--சண்முகம்ப7 (பேச்சு) 12:52, 8 அக்டோபர் 2015 (UTC)Reply

மொத்தமான செய்தி அனுப்புதல்

தொகு

இங்கு மொத்தமான செய்தி அனுப்புதல் செயற்பாட்டில் உள்ளதா? அல்லது வழு பதியவேண்டுமா? --AntanO 06:49, 6 நவம்பர் 2015 (UTC)Reply

As you can see below, it is enabled but you may not be able to send messages crosswiki, you can only do that from meta i guess (sorry for English)--சண்முகம்ப7 (பேச்சு) 07:01, 6 நவம்பர் 2015 (UTC)Reply
எனக்கு Your message delivery to 0 pages has been queued. என்ற செய்திதான் வந்தது. --AntanO 08:44, 6 நவம்பர் 2015 (UTC)Reply
Use the following format for linking pages {{#target:பயனர் பேச்சு:Shanmugamp7}} ex:பயனர்:Shanmugamp7/test--சண்முகம்ப7 (பேச்சு) 09:14, 6 நவம்பர் 2015 (UTC)Reply
  நன்றி!--AntanO 09:30, 6 நவம்பர் 2015 (UTC)Reply

Test

Interview request

தொகு

Hello,
Currently at CIS-A2K, we are working on a handbook called "Indic Wikipedia Policies and Guidelines Handbook" where we are discussing a number of things such as: Creating new policies, Modifying existing ones; and to explain these we had to discuss Village Pump, Consensus etc. The book is in English, but we hope to translate and print the book in a few Indian languages.

Now I am eager to include your views and opinion in this handbook (Ravi suggested me your name). Could you please join this survey? Both phone/skype/hangout and email conversation are okay, Please send me an email to tito@cis.india.org

Regards. --Titodutta (பேச்சு) 09:41, 17 நவம்பர் 2015 (UTC)Reply

Hi, Titodutta, is that correct email id?, mail delivery is getting failed. DNS Error: Address resolution of cis.india.org. failed: Domain name not found--சண்முகம்ப7 (பேச்சு) 07:16, 23 நவம்பர் 2015 (UTC)Reply

கையொப்பம்

தொகு

சண்முகம், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--Kanags \உரையாடுக 11:53, 24 நவம்பர் 2015 (UTC)Reply

[2]  Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 12:26, 24 நவம்பர் 2015 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

Syum உங்களிடம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கட்டுரை நகர்த்துதல் பற்றி கூறியதை அறிந்தேன். உங்களது இணைய இணைப்பு நிலைப்பற்றிய ஐயம் இருந்ததால், அவரிடம் கோரினேன். வேறொன்றுமில்லை. இனி ஒரு திட்டத்தில் இருந்து, பிற திட்டத்திற்கு யாரும் இதுபோல நகர்த்தா வண்ணம், மீடியாவிக்கியிலேயே செய்ய அடிகோலுங்கள். நேரம் இருக்கும் போது இங்குள்ள பல கருவிகள் (விரைவுபகுப்பி, தொடுப்பிணைப்பி, பயிற்சிப்பகுதி (மணல்தொட்டி), உலகநேரங்காட்டி)அனைத்துத் தமிழ் திட்டங்களிலும் அமையவும் ஆவண செய்யுங்கள். உங்களை நேரில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன். மீண்டும் சந்திப்போம், வணக்கம்.--உழவன் (உரை) 11:51, 16 திசம்பர் 2015 (UTC)Reply

Geographical Indications in India Edit-a-thon

தொகு

Hello,

 

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --Titodutta (பேச்சு) 21:01, 22 சனவரி 2016 (UTC)Reply


image

தொகு

நண்பரே Infobox ல் புகைப்படம் ஏற்றுவது எப்படி ? https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D இந்த பக்கத்தில் https://commons.wikimedia.org/wiki/File:Writer_jeyamohan.jpg# இந்த புகைப்படத்தை ஏற்ற முயல்கிறேன் , முடியவில்லை - arangasamy

 Y ஆயிற்று[3]--சண்முகம்ப7 (பேச்சு) 10:44, 26 சனவரி 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 27 சூலை 2016 (UTC)Reply

கவனிக்க

தொகு
தமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--சண்முகம்ப7 (பேச்சு) 06:42, 13 திசம்பர் 2016 (UTC)Reply
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)Reply

கருப்புப்பட்டியல்

தொகு

MediaWiki:Spam-blacklist த.வி.யில் இயங்குநிலையில் உள்ளதா? கவனியுங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com --AntanO 03:08, 17 பெப்ரவரி 2017 (UTC)

 Y ஆயிற்று Special:diff/2188355--சண்முகம்ப7 (பேச்சு) 05:41, 17 பெப்ரவரி 2017 (UTC)
  விருப்பம் --AntanO 19:39, 17 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:53, 7 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

Account creator - திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி

தொகு

அன்புள்ள சண்முகம், 10, 11, 12 மே 2017 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள "திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி"கென பல பயனர் கணக்குகளைத் தற்காலிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உதவ இயலுமா? மேலும் ஏதேனும் ஒரு நாள் பயிற்சிக்கு வர இயலுமா? (நீங்கள் சென்னையில் உள்ளீர்கள் அல்லவா?)--PARITHIMATHI (பேச்சு) 16:47, 9 மே 2017 (UTC)Reply

Account creator அணுக்கம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இனி எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம். கணக்குகளை உருவாக்குவதில் ஏதேனும் உதவி தேவைப்படின் கூறுங்கள். இப்பயிற்சி குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் அறியப்பெற்றேன், இப்போது அலுவலகத்தில் விடுப்பு பெறுவது மிகக் கடினம், வேலை முக்கியமான தருணத்தில் உள்ளது. மாலை நேரங்களில் அல்லது வார இறுதியில் என்னாலியன்ற உதவிகளை செய்ய இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 17:02, 9 மே 2017 (UTC)Reply
மிக்க நன்றி. உதவி தேவையெனில் (மாலை நேரங்களில்) கேட்கிறேன். தொ.பேசி எண் தர இயலுமா? அல்லது என் எண் 9444517552 இதற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். நன்றி--PARITHIMATHI (பேச்சு) 02:29, 10 மே 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

தொகு

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:47, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள சண்முகம்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:27, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Vandalism

தொகு

This IPv6 it's vandalizing by >1h. (Kanags, AntanO,Parvathisri, செல்வா) --Wim b 13:11, 25 அக்டோபர் 2018 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் சண்முகம்!. ஆங்கில விக்கிப்பீடியாவில் தொகுக்க முற்படும்போது -The IP address that you are currently using has been blocked because it is believed to be an open or anonymizing proxy. To prevent abuse, these proxies may be blocked from editing Wikipedia. என்று வருகிறது. தைடையை நீக்க உதவி செய்யவும் --கி.மூர்த்தி (பேச்சு) 10:35, 17 சனவரி 2019 (UTC)Reply

@கி.மூர்த்தி:நீங்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இணைய வழங்குநர்கள் Dynamic IP முகவரிகளையே பயன்படுத்துவர், எனவே உங்கள் Routerஐ மறுதொடக்கம் செய்தால் இப்பிரச்சினை சரியாகலாம். ஒருவேளை உங்கள் இணைய வழங்குநர் Network sharing device பயன்படுத்தினாலோ, நீங்கள் Proxy IP பயன்படுத்தினாலோ பார்க்க en:Wikipedia:IP_block_exemption#Used_for_anonymous_proxy_editing, தடை செய்தியை முழுமையாக மின்னஞ்சல் செய்தால் அறுதியிட்டுக் கூற இயலும். --சண்முகம்ப7 (பேச்சு) 13:30, 17 சனவரி 2019 (UTC)Reply

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்

தொகு

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:34, 19 சூன் 2019 (UTC).Reply

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:57, 19 சூன் 2019 (UTC)Reply

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

உதவி

தொகு

வணக்கம் சண்முகம், நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. தங்களிடம் இருந்து ஒரு தொழினுட்ப உதவி தேவை. மின்னல் அல்லது Twinkle கருவில் அண்மையில் செய்யப்பட்ட சில மாற்றங்களினால், கட்டுரைகளின் வரலாற்றுப் பகுதியில், பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு பகுதியில் "Restore this version" (இப்பதிப்பிற்கு மீளமைக்க) என்ற மீளமைப்புக் கருவி காணாமல் போய்விட்டது. முடிந்தால் அதனை மீட்டுத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:32, 16 பெப்ரவரி 2021 (UTC)

வணக்கம் @Kanags:, எப்போதிலிருந்து இந்த பிரச்சினை உள்ளது என கூற இயலுமா?. இக்கருவியின் அண்மைய பதிப்பை ஆங்கில விக்கியில் இருந்து எடுத்து புதுப்பித்தால் "Restore this version" இணைப்பு வருகிறது, ஆனால் வேலை செய்யவில்லை. இது ஒரு சிக்கலான பல பகுதிகளைக் கொண்ட கருவி, என்னால் சரி செய்ய இயலுமா என தெரியவில்லை. முயன்று பார்க்கிறேன், சரி செய்ய இயலவில்லையெனில் இது குறித்து வேறு யாரிடமாவதுதான் உதவி கேட்க வேண்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 10:54, 17 பெப்ரவரி 2021 (UTC)
நன்றி சண்முகம். இதனைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 20:27, 17 பெப்ரவரி 2021 (UTC)
வணக்கம் @Kanags:, இப்போதைக்கு அனைத்து மின்னல் தொடர்பான கருவிகளையும் ஆங்கில விக்கியில் இருந்து புதுப்பித்துள்ளேன். அனைத்து செயல்பாடுகளும் சரியாக நடப்பது போல தெரிகிறது. நீங்களும் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுஙகள். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக தமிழாக்கம் செய்து விடுகிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 10:18, 18 பெப்ரவரி 2021 (UTC)
மிக்க நன்றி சண்முகம். அருமை. இப்போது வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 10:31, 18 பெப்ரவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

தொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Invitation for Wiki Loves Women South Asia 2021

தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


 
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 21:57, 18 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் Shanmugamp7,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

How we will see unregistered users

தொகு

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

Your advanced permissions on tawiki

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. Superpes15 (பேச்சு) 23:14, 7 பெப்பிரவரி 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=3884760" இலிருந்து மீள்விக்கப்பட்டது