தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8 9 10 11
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.



உங்களுக்குத் தெரியுமா? அறிவிப்புத் திட்டம்

தொகு

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு

புதிய பதக்கம்

தொகு

அண்ணா இந்தப் பதக்கத்தையும் இணைத்து உதவுவீர்களா? --  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:53, 2 நவம்பர் 2013 (UTC)Reply

இணைக்கிறேன். நன்றி :)
ஸ்ரீ, இவ்வார்ப்புருவின் பயன்பாடு சைவ சமயக் கட்டுரைகளில் சிறப்பாகப் பங்களிப்பவர் என்று நினைக்கிறேன். எனவே தலைப்பை அவ்வாறு மாற்றி இணைக்கிறேன். உங்கள் விருப்பம் அறிய ஆவல். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:12, 2 நவம்பர் 2013 (UTC)Reply

தங்கள் சித்தம் என் பாக்கியம். ஆனால் ஒரு சிறு சந்தேகம் இணைத்த பின் தேவையேற்படின் தலைப்பை நிர்வாகிகளால் மாற்றமுடியுமா?--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:18, 2 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி ஸ்ரீ. தலைப்பை யார் வேண்டுமானாலும் மாற்றலாம். நீங்கள் உருவாக்கிய வார்ப்புருவின் உள்ளே "சிறந்த சைவ சமயி" என்பதை மாற்றினால் முடிந்தது. நான் இதைச் செய்துவிடுகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:22, 2 நவம்பர் 2013 (UTC)Reply
 Y ஆயிற்று -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:26, 2 நவம்பர் 2013 (UTC)Reply

அண்ணா பெயரை சைவ சமயப் பங்களிப்பாளர் பதக்கம் என மாற்றியுள்ளேன். ஏனெனில் பதக்கத்தின் பெயர் மிக நீளமாக உள்ளது. இங்கும் மாற்றி விடுங்கள்.வார்ப்புரு:சைவ சமயம் தொடர்பான கட்டுரையில் சிறப்பான பங்களிப்பிற்கான பதக்கம் என்ற வழிமாற்றுப் பக்கத்தையும் நீக்கிவிடுங்கள்.

வழிமாற்றுப் பக்கங்களை தேவையில்லையெனில் பயனர்களால் நீக்க முடியுமா? அது எவ்வாறு?--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:36, 3 நவம்பர் 2013 (UTC)Reply

முடியாது ஸ்ரீ. அது ஒரு பக்கத்தை நீக்குவதற்கு ஒப்பாகையால் நிர்வாக அணுக்கம் பெற்றவர்களால்தான் முடியும். நன்றி -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:51, 3 நவம்பர் 2013 (UTC)Reply

அண்ணா நீங்களே இங்கு பெயரை சைவ சமயப் பங்களிப்பாளர் பதக்கம் என மாற்றி வார்ப்புரு:சைவ சமயம் தொடர்பான கட்டுரையில் சிறப்பான பங்களிப்பிற்கான பதக்கம் என்ற வழிமாற்றுப் பக்கத்தையும் நீக்கிவிடுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:13, 3 நவம்பர் 2013 (UTC)Reply

அப்பெயர் சமயம் குறித்ததாக உள்ளதென்பதால்தான் அவ்வாறு மாற்றினேன். நீங்கள் செய்த திருத்தத்தை மீட்டமைக்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:45, 3 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி அண்ணா--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:16, 3 நவம்பர் 2013 (UTC)Reply

மொழிபெயர்க்காத கட்டுரைகள்

தொகு

சூரியா, மொழிபெயர்க்கப்படாத கட்டுரைகளை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. இக்கட்டுரையை ஒரு சில நாட்களில் மொழிபெயர்த்து உதவுங்கள். இல்லையேல் மொழிபெயர்க்காத பகுதிகளை நீக்கி விடுங்கள். பின்னர் ஆங்கில விக்கியில் இருந்து பகுதி பகுதியாக மொழிபெயர்த்து சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:23, 9 நவம்பர் 2013 (UTC)Reply

தொகுப்புப் பெட்டி உதவி

தொகு

புரூவிட்டை மீட்டு நிரல் நிபுணர் என புரூவ் செய்தவரே, தொகுத்தல் பெட்டியின் கீழ் காணப்பட்ட {{Reflist}} போன்ற சிலபல வார்ப்புருக்கள் காணாமல் போயுள்ளன. அவற்றை வெட்டி ஒட்டி பழகிப்போய் இப்போது மீயுரை tagsஏ மறந்து விட்டன ;) அவற்றையும் கண்டு பிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகளுக்கு ஈடான நன்றிகளை வழங்குவேன். உங்கள் புரூவிட் இரசிகன் --மணியன் (பேச்சு) 20:06, 21 நவம்பர் 2013 (UTC)Reply

ஆண்டு நிறைவுகள்

தொகு

நல்லது. முதற்பக்கத்தில் கூடிய வரை ஆங்கில எழுத்துகளைத் தவிர்க்கவும். தகவலைச் சுருக்கமாகத் தாருங்கள். பட இணைப்புள்ள தகவலுக்கு மட்டும் குறித்த கட்டுரையை தடித்த எழுத்துகளில் தாருங்கள். சனவரி 1 இல் நீங்கள் செய்த சோதனை (முதற்பக்கத்தில் வந்தும்) இரண்டு ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்திருக்கின்றது. முதற்பக்கத்தில் எழுதுவதை மிகக் கவனமாகக் கையாளுங்கள் என்பது மட்டுமே என்னால் கூற முடியும்.--Kanags \உரையாடுக 11:11, 24 நவம்பர் 2013 (UTC)Reply

மேலும் நீங்கள் சேர்க்கும் புதிய தகவல்களை அந்தந்த நாட்களின் கட்டுரைகளிலும் கட்டாயம் சேருங்கள்.--Kanags \உரையாடுக 11:12, 24 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி. கட்டுரையின் முக்கியத்துவம் கருதியே அவற்றைத் தடித்த எழுத்துகளில் கொடுத்தேன். மேலும், அந்த சோதனை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படமாட்டாது. அது வெவ்வேறு படங்களை ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்திக் கொள்ள அப்பக்கத்தைத் தொகுப்பவருக்கு உதவுவதற்காக மட்டுமே. Staging Area என்று கூறப்படும். அத்திட்டம் இது முடிந்ததும் மீண்டும் துவங்கப்படும். அது மேலும் தானியாக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு படங்கள் முன்னிலைப்படுத்துமாறு பார்த்துக்கொள்ளப்படும். கண்டிப்பாகச் சேர்க்கிறேன். ஒவ்வொரு வாரமாக அவ்வாறு சேர்க்கலாம் என்று இருந்தேன். நினைவூட்டியமைக்கு நன்றி கனக்ஸ் :) --Surya Prakash.S.A. (பேச்சு) 11:17, 24 நவம்பர் 2013 (UTC)Reply

உங்களுக்கான ஒரு செய்தி

தொகு

உங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம்!

  • பகுப்பு:வன்பொருள் (பொறிமுறை) என்பதனை உருவாக்கியதன் நோக்கம் - Category:Hardware (mechanical) என்பதற்கு இணையான பகுப்பு.
  • பகுப்பு:இயந்திரம் (பொறிமுறை) என்பதனை உருவாக்கியதன் நோக்கம் - Category:Machines என்பதற்கு இணையான பகுப்பு.
  • washer, nut, bolt, screw என்பன எல்லாம் Hardware என்பதும் நடைமுறையில் சரியானதே. இதற்குரிய ஆங்கிலக் கட்டுரைகளைப் பாருங்கள்.அவர்கள் செய்திருந்த பகுப்புமுறை ஏற்புடையதாகவே இருந்தது!
  • பகுப்பு:இயந்திரப் பொறியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்பதனை உருவாக்கியதன் நோக்கம் - பட்டியலைப் பெறுவதற்காக. ஆரம்பத்தில் குறுங்கட்டுரைகளை எழுதி, பின்னர் விரிவுபடுத்தும் நெடுங்காலத் திட்டம் என்னிடம் உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:41, 9 மார்ச் 2014 (UTC)
தங்கள் அக்கறை புரிகிறது சிவகுருநாதன். தற்போது நானும் குமாரும் இயந்திரவியல் தொடர்புடைய கட்டுரைகள் முதன்மையான கட்டுரைகள் அனைத்தையும் சரியாகப் பகுத்துத் தொகுத்துக் கொண்டுள்ளோம். எனவே, இது போன்ற தற்காலிக பகுப்பு நீக்கங்களும் புதிய பகுப்பாக்கங்களும் நடைபெறும். மேலும், இது தற்காலிகம் மட்டும் என்பதையும் தெரிவிக்கிறேன் :) எனவே, அது குறித்து வருத்தமேதும் பட வேண்டாம். இப்போதைக்கு தினமும் ஒவ்வொறு stream-ஆக (Manufacturing, Production, Thermal, Design) என்று வகுத்து அவை தொடர்பானவற்றை சீர்ப்படுத்தி வருகிறோம். இது சீர்பாடே ஒழிய வேறில்லை. தங்களுக்கு ஏதேனும் மனக்குறை ஏற்பட்டிருப்பின் பொருத்தருள்க. --Surya Prakash.S.A. (பேச்சு) 05:47, 9 மார்ச் 2014 (UTC)

வணக்கம்!

  • விக்கியில் எழுதப்படும் ஒவ்வொரு சொல்லும் தொடர்ந்து மேம்படுத்தப்படல் வேண்டும் என்பதுவே எனது விருப்பமும். எனக்கு மனக்குறை ஏற்படும் வாய்ப்பு இல்லை.
  • மேலே குறிப்பிடப்பட்ட பகுப்புகள், நன்கு ஆராயப்பட்ட பின்னரே உருவாக்கப்பட்டன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:00, 10 மார்ச் 2014 (UTC)

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தொகு
  வணக்கம் Surya Prakash.S.A. அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
 

-Vatsan34 (பேச்சு) 08:22, 23 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:30, 23 மார்ச் 2014 (UTC)
  விருப்பம் அண்ணாவுக்கு இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:54, 23 மார்ச் 2014 (UTC)
  விருப்பம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சூர்யபிரகாஷ் அண்ணா-- நி.மாதவன்  ( பேச்சு  ) 17:05, 23 மார்ச் 2014 (UTC)
சூர்யபிரகாஷ், எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 17:19, 23 மார்ச் 2014 (UTC)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா ! --மணியன் (பேச்சு) 03:29, 24 மார்ச் 2014 (UTC)

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் :) --Surya Prakash.S.A. (பேச்சு) 13:49, 24 மார்ச் 2014 (UTC)

புதிய பதக்கம்

தொகு

அண்ணா! இந்த பதக்கத்தை இணைக்க முடியுமா?-- நி.மாதவன்  ( பேச்சு  ) 14:16, 24 மார்ச் 2014 (UTC)

Wikimedians Speak

தொகு
      
 

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Surya Prakash.S.A.,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:38, 9 ஏப்ரல் 2014 (UTC)

மீண்டும் வருக

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெகுநாள் கழித்து வந்துள்ளீர்கள் என்பதினை அறிய மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை நல்கிட வாழ்த்துக்கள் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:02, 23 சூன் 2014 (UTC)Reply

  விருப்பம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பங்களியுங்கள் அண்ணா!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:38, 24 சூன் 2014 (UTC)Reply

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:50, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Surya Prakash.S.A.!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:18, 30 திசம்பர் 2014 (UTC)Reply
சூரியா, உங்கள் தேவாவையும் அழைத்துக் கொண்டு களத்தில் குதிக்க அழைக்கிறேன் :)--இரவி (பேச்சு) 15:04, 9 சனவரி 2015 (UTC)Reply

2015 சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்

தொகு

அன்புமிகு சூர்யா அண்ணா! 2015 சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை உங்களுக்கு உரித்தாக்குவதில் பெருமையடைகிறேன்! விக்கிப்பீடியாவில் நுட்பம் தொடர்பான என் பங்களிப்பிற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஊக்குவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:45, 22 சனவரி 2015 (UTC)Reply

Vote for Bengali People

தொகு

I got involved in an edit war with Bangladeshis in the picture collage of Bengali people . After that voting started to reach a consensus . Till now most voters are Bangladeshis .please vote here https://en.wikipedia.org/wiki/Talk:Bengali_people#List_of_People Subhash Chandra Bose , Mani Lal Bhaumik , Chaitanya Mahaprabhu , Gobar Guha , Meghnad Saha , Rash Behari Bose , Jagadish Chandra bose , Satyendra Nath Bose , Swami Vivekananda , Satyajit Ray , Sharadindu Bandyopadhyay needs few more votes . The names are not in Tamil WP , so they are appearing red. The voting may close after two three days. thanksCosmicEmperor (பேச்சு) 05:09, 6 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:51, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 8 சூலை 2015 (UTC)Reply

நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:10, 18 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:55, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

Help decide the future of Wikimania

தொகு
 

The Wikimedia Foundation is currently running a consultation on the value and planning process of Wikimania, and is open until 18 January 2016. The goals are to (1) build a shared understanding of the value of Wikimania to help guide conference planning and evaluation, and (2) gather broad community input on what new form(s) Wikimania could take (starting in 2018).

After reviewing the consultation, we'd like to hear your feedback on on this survey.

In addition, feel free to share any personal experiences you have had at at a Wikimedia movement conference, including Wikimania. We plan to compile and share back outcomes from this consultation in February.

With thanks,

I JethroBT (WMF) (talk), from Community Resources 21:32, 13 சனவரி 2016 (UTC)Reply

 

Last December, I invited you to share your views on the value of Wikimedia conferences and the planning process of Wikimania. We have completed analysis of these results and have prepared this report summarizing your feedback and important changes for Wikimania starting in 2018 as an experiment. Feedback and comments are welcome at the discussion page. Thank you so much for your participation. I JethroBT (WMF), Community Resources, 22:47, 8 பெப்ரவரி 2016 (UTC)

திருமலைராயன் ஆறு என்னும் தலைப்பை திருமலைராஜன் ஆறு என்று மாற்றவும்

தொகு

Hello admin Surya Prakash. i am in karaikal district. i knew the name of this river. but this has been changed as திருமலைரான் ஆறு. the real name of this river is confused with that of the town name from திருமலைராயன் பட்டினம். in both tamil wiki and english wiki it has been confused.

திருமலைராயன் ஆறு என்னும் தலைப்பை திருமலைராஜன் ஆறு என்று மாற்றவும்

தொகு

Hello admin Surya Prakash. i am in karaikal district. i knew the name of this river. but this has been changed as திருமலைரான் ஆறு. the real name of this river is confused with that of the town name from திருமலைராயன் பட்டினம். in both tamil wiki and english wiki it has been confused.--wiki tamil 100 14:54, 4 ஏப்ரல் 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 27 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:51, 8 திசம்பர் 2016 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.


உதவி தேவை

தொகு

புகைப்படங்களை பதிவேற்றுதல் தொடர்பாக விளக்கவும்..--TNSE VIJAYAKUMAR U DGL (பேச்சு) 10:06, 30 சூன் 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள சூர்யா,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:25, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம்

தொகு

நண்பருக்கு வணக்கம். தங்களால் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டியில் கலந்துகொள்ள இயலுமா?. தங்களைப் போன்ற வழமை தெரிந்த நபர்கள் பங்களித்தால் நலமாக இருக்கும். தற்போதைய நிலைமையில் பஞ்சாபியை விட 10 கட்டுரைகள் பின்தங்கியுள்ளோம். தங்களால் இயன்ற வரையில் பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். நன்றி.Dsesringp (பேச்சு) 03:39, 10 மே 2018 (UTC)Reply

அழைப்பிற்கு நன்றி. தற்போது நான் குவாண்டம் இயங்கியல் குறித்த கட்டுரைகளைத் தொகுப்பதிலும் உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளேன். அதனால், வேங்கைத் திட்டத்தில் தற்போதைக்கு பங்குபெற இயலாது. --Surya Prakash.S.A. (பேச்சு) 03:44, 10 மே 2018 (UTC)Reply

தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் நண்பரே. வாழ்க வளமுடன்Dsesringp (பேச்சு) 06:05, 10 மே 2018 (UTC)Reply

Your advanced permissions on ta.wikipedia

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:05, 7 பெப்ரவரி 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Surya_Prakash.S.A.&oldid=3184934" இலிருந்து மீள்விக்கப்பட்டது