பில்லி டிப்டன்

பில்லி டிப்டன் (Billy Tipton) ஓர் அமெரிக்க இசையமைப்பாளர். இவர் பிறப்பால் ஒரு பெண் ஆவார். ஆனால், இவர் இறக்கும் வரை தன்னை ஓர் ஆணாகவே காட்டிக் கொண்டார். மேலும் ஒரு பெண்ணை மணந்து, 3 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தும் வந்தார். இவர் இறக்கும் தருவாயில் செய்யப்பட்ட முதலுதவிகளின் போது இவர் ஒரு பெண் என்று தெரியவந்தது.

பில்லி டிப்டன்
Tipton portrait.jpg
பியானோவின் அருகில் டிப்டன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டொரோத்தி லுசில்லெ டிப்டன்
பிறப்புதிசம்பர் 29, 1914(1914-12-29)
ஒக்லகோமா நகரம், அமெரிக்கா
இறப்புசனவரி 21, 1989(1989-01-21) (அகவை 74)
{வாசிங்டன், அமெரிக்கா
இசை வடிவங்கள்ஜாஸ், ஸ்விங் இசை
தொழில்(கள்)கலைஞர்
இசைக்கருவி(கள்)பியானோ, சாக்சபோன்
இசைத்துறையில்1936 – 1970

வாழ்க்கைக் குறிப்புதொகு

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமாவில் பிறந்தவர். பில்லி டிப்டன். சிறு வயதிலேயே இசை மேல் அதீத ஆர்வம் கொண்டவர். அவருடைய பெற்றோர் மனக்கசப்பில் பிரிந்துவிட, உறவினர் ஒருவருடன் வளர்ந்தார். அதற்குப் பின் பெற்றோர் குறித்து அவரும் அதிகமாக கண்டுகொள்ளாமலிருந்தார்.

பில்லிக்கு ஓர் இசைக் குழுவை ஆரம்பிப்பதுதான் கனவாக இருந்தது. தன் கனவை நனவாக்க ஜாஸ் பயின்றார், சாக்ஸபோன், கீ‍‍‍‍ போர்டு கற்றார். ஊரில் உள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றார். கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின், பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்தார். சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மத்தியில் பில்லிக்கு மதிப்பு கூடியது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் (KFXR) என்னும் இசைக் குழுவை ஆரம்பித்தார்.[1]

டிப்டன் அவரது இசைவாழ்க்கையில் மட்டுமே முதலில் தன்னைப் பெண்ணாகக் காட்டிக் கொண்டார். ஆனால், 1940 வாக்கில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஓர் ஆணாகவே வாழத் தொடங்கினார்.[1] மேலும் தனது தந்தையின் பெயரிலிருந்த பில்லி என்ற பெயரைத் தன் பெயருக்கு முன் இணைத்துக் கொண்டார். மேலும் மார்புக் கவசம் போன்றவை மூலம் தனது பெண் தோற்றப்பாடு வெளிப்படுவதைத் தடுத்தார்.[1]

இவர் வில்லியம், ஜோன் கிளார்க், ஸ்காட் ஆகிய மூன்று மகன்களைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார். மேலும் பல பெண்களை மணந்து மணவிலக்கு செய்தார். தனது இறுதிநாட்களில் நகருமில்லங்களில் தனது நாட்களை மூன்று மகன்களுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் கழித்துவந்தார்.[2]

இறப்புக்குப் பின்தொகு

1989இல் எம்விசிமா (வளியூதல்) நோயின் அறிகுறிகள் தென்பட்டபோது மருத்துவரை அணுக மறுத்துவிட்டார். ஆனால், அவர் உண்மையாகவே குடற்புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது முதலுதவி செய்கையில் அவரது தத்துப்பிள்ளை வில்லியம் டிப்டன் உண்மையில் பெண் என்று கண்டுபிடித்தார். பின்னர் டிப்டன் வேலி பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். (Valley General Hospital). அவரது இறப்புக்கு அடுத்தநாள் பல நாளிதழ்களும் இதழ்களும் போட்டிபோட்டு அவரைப் பற்றி எழுதின. டிப்டனின் குடும்பம் அரட்டை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றது.[3]

டிப்டன் இரு உயில்களை விட்டுச்சென்றிருந்தார். ஒன்று கையால் எழுதப்பட்ட ஆனால் நொத்தாரிசு செய்யப்படாத உயில், அது அனைத்து சொத்துகளும் வில்லியமுக்குச் சொந்தம் என்றும், நொத்தாரிசு செய்யப்பட்ட மற்றொன்று அனைத்து சொத்துகளும் இன்னொரு தத்துப்பிள்ளை ஜோன் கிளார்க்குக்குச் சொந்தம் என்றும் கூறின.[4] நீதிமன்றம் முதல் உயிலை எடுத்துக் கொண்டு, வில்லியமுக்குக் கிட்டத்தட்ட அனைத்தையும், ஜோனும் மூன்றாவது தத்துப் பிள்ளையான ஸ்காட்டும் ஆளுக்கொரு டாலரும் பெறுவதாகத் தீர்ப்பளித்தது.[5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Blecha, Peter (2005-09-17). "Tipton, Billy (1914-1989): Spokane's Secretive Jazzman". HistoryLink. http://www.historylink.org/essays/output.cfm?file_id=7456. பார்த்த நாள்: 2007-02-01. 
  2. Adams, Cecil (1998-06-05). "What's the story on the female jazz musician who lived as a man?". The Straight Dope. http://www.straightdope.com/classics/a5_009.html. பார்த்த நாள்: 2007-02-01. 
  3. Lehrman, Sally (May/June 1997). "Billy Tipton: Self-Made Man". Stanford Today Online. http://www.stanford.edu/dept/news/stanfordtoday/ed/9705/9705fea601.shtml. பார்த்த நாள்: 2007-02-01. 
  4. Clark, Doug (1989-03-05). "Billy Tipton's Estate". Spokesman Review. http://www.spokesmanreview.com/breaking/story.asp?ID=15236. பார்த்த நாள்: 2008-12-09. 
  5. Brubach, Holly (1998-06-28). "Swing Time". The New York Times. http://www.nytimes.com/books/98/06/28/reviews/980628.28brub.html. பார்த்த நாள்: 2007-02-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_டிப்டன்&oldid=2916852" இருந்து மீள்விக்கப்பட்டது