பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு10
பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு
தொகுசூரியா, தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஏற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணிபுரிய இயலுமா? குறிப்பாக, சென்னையில் களத்தில் இருந்து கவனிக்க வேண்டிய பணிகளில் உதவி தேவை. நன்றி--இரவி (பேச்சு) 17:12, 23 ஆகத்து 2013 (UTC)
- இல்லை இரவி. பொறுப்பு எடுத்துக்கொண்டு களமிறங்கி வேலை செய்ய ஆர்வம்தான். ஆனால், இறுதியாண்டு திட்டப்பணிகளும், வளாக வேலைவாய்ப்பு போன்றவையும் உள்ளன. எனவே, முழு வீச்சாக என்னால் செயல்பட இயலாது. பொறுப்பெடுத்துக்கொண்டு தட்டிக்கழிக்க விரும்பவில்லை. எனவே, இந்த பொறுப்பு வேண்டாம். ஆனால், என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்கிறேன். கேட்கத் தயங்கவேண்டாம் :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 17:23, 23 ஆகத்து 2013 (UTC)
சரி, சூரியா. சென்னையில் ஒருங்கிணைப்பதில் ஏதேனும் கள உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன். இயன்றால் செய்து தாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:18, 24 ஆகத்து 2013 (UTC)
- கண்டிப்பாக. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 05:17, 25 ஆகத்து 2013 (UTC)
பள்ளியில் விக்கிபீடியா விழிப்புணர்வு பட்டறை
தொகுசூர்யா! எம் பள்ளியில் விழிப்புணர்வுப் பட்டறை நடத்தியமைக்கு முதலில் நன்றி. நிகழ்வின் படிமங்களை இங்கு [1] ஏற்றியுள்ளேன். த.வி.யில் உரிய இடத்தில் (ஆலமரத்தடியில் இடும் அளவிற்கு முக்கிய நிகழ்வா என்று தெரியவில்லை) பதிவேற்றுமாறு வேண்டுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 15:52, 26 ஆகத்து 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த யோசனைக்கான பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுச் சின்னத்தை நமது இலச்சினையாக இட்ட பிறகு தளத்துக்கே ஒரு களை வந்துள்ளது. திருமண வீட்டில் தோரணம் கட்டியது போல... சமயோசிதமான செயற்பாட்டுக்கு ஒரு பதக்கம் ! இரவி (பேச்சு) 19:57, 25 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம் --மணியன் (பேச்சு) 20:02, 25 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் --தாரிக் அஸீஸ் உரையாடுக 00:08, 26 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி! :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 01:18, 26 செப்டம்பர் 2013 (UTC)
விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:46, 30 செப்டம்பர் 2013 (UTC)
- தமிழ் விக்கியின் 'கலக்கல்' இளைஞர் சூர்யா (mech rocks always!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 2 அக்டோபர் 2013 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:12, 27 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:50, 27 செப்டம்பர் 2013 (UTC)
புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு
தொகுவணக்கம் நண்பரே,
விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:44, 30 செப்டம்பர் 2013 (UTC)
- அறிவிப்புக்கு நன்றி. அதனை தொடுப்பிணைப்பியில் இணைக்கிறேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 02:05, 1 அக்டோபர் 2013 (UTC)
- இந்த வார்ப்புருவுக்கு போதிய வரவேற்பில்லை நண்பரே. :-( தொடுப்பிணைப்பியில் பயனர்களின் பலுவினை குறைக்கும் வேறு வார்ப்புவுக்கு இடமளிக்கலாம்.நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:22, 6 அக்டோபர் 2013 (UTC)
இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை
தொகுவணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)
main module - under construction
தொகுசூரியா, ஜூன் 5 இல் நீங்கள் செய்த முன்னிலைப்படுத்தலில் இந்த வசதியும் சேர்ந்து நீங்கியுள்ளது. (வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புரு போட்டால் அந்த வார்ப்புரு முதல் பக்கத்தில் தோன்றாதிருக்கும் நிரல்). இது ஒழுங்காக வேலை செய்து கொண்டு தானே இருந்தது? தற்போது இது இல்லாததால் underconstruction வார்ப்புரு போடப்பட்டவை முதற் பக்கத்துக்குப் போய்விடுகின்றன. இதைக் கொஞ்சம் ஆராயவும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:04, 2 அக்டோபர் 2013 (UTC)
- இந்த வசதி சிறப்புப் படத்தில் இல்லாமையால் நான் அதைப்பற்றிக் கவலைகொள்ளாமல் இருந்துவிட்டேன். இப்பொழுது நிரலை மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் உ.தெ.-வை இற்றைப்படுத்திய பிறகும் அது முதற்பக்கத்தில் தோன்றாமலிருப்பதைத் தற்போது ஆய்ந்துகொண்டிருக்கிறேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 05:09, 2 அக்டோபர் 2013 (UTC)
நன்றி...
தொகுவணக்கம். கடந்த 4 நாட்களாக கணிப்பொறி அணுக்கம் இல்லாததால், 'உங்களுக்குத் தெரியுமா?' பகுதியை இற்றை செய்ய இயலவில்லை. முழுமையாக இற்றை செய்து உதவியதற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 2 அக்டோபர் 2013 (UTC)
- பரவாயில்லை. லுவா நிரலில் சில மாற்றங்களால்தான் இவ்வாறு ஏற்படுகிறது. சரி செய்யப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும், underconstruction வார்ப்புருவை இட்டுவைக்கவும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 07:36, 2 அக்டோபர் 2013 (UTC)
ஆகாஷ் ஏவுகணை குறித்த ஒரு தகவல் மே 1, 2013 அன்று ஏற்கனவே வெளியாகியுள்ளதால்... அக்னி (ஏவுகணை) குறித்த தகவலை இட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:34, 2 அக்டோபர் 2013 (UTC)
சிறப்பு படங்களை துறைவாரீயாக காட்சி செய்ய
தொகுவணக்கம் நண்பரே, விக்கிப்பீடியா:சிறப்புப் படங்கள் பகுதியில் சில படங்களை அதனுடைய துறை சார்ந்தாக அமைக்க வேண்டும். தற்போதைக்கு நான் பொதுவான சில படிமங்களை அவ்வாறு இணைத்துள்ளேன். முதற்பக்கத்தில் சிறப்பு படங்கள் பகுதியை தாங்கள் இயற்றை செய்து வருகின்றீர்கள் என்பதை ஆலமரத்தடியில் நிகழ்ந்த உரையாடல் மூலமாக அறிந்தேன். சரியான துறைகளுடன் ஒன்றிரண்டு படங்களை இயற்றை செய்ய உதவி தேவைப்படுகிறது. உதவுங்கள் நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:21, 6 அக்டோபர் 2013 (UTC)