Tharique
Joined 9 சனவரி 2011
ன்புடன் எனது பயனர் பக்கத்திற்கு தங்களை வரவேற்கின்றேன். முதலில் வணக்கம். நான், தாரிக் அஸீஸ். அரபுச் சொல்லான தாரிக் என்பதன் தமிழ் அர்த்தம் உதய தாரகை என்பதனால், அதனை எனது நிறம் வலைப்பதிவின் பதிவுகளில் பாவிக்கிறேன். நேரமிருந்தால் நிறம் வலைப்பக்கம் வந்து வணக்கம் சொல்லுங்கள். :) நுட்பங்கள் தொடர்பில் எனக்குள்ள அலாதிப்பிரியம், கணினியும் கணினி சார்ந்த விடயங்களின் பாலான எனது தேடலையும் கற்றலையும் வேகமாக்கியதெனலாம். மொழி, வரைகலை, வாழ்க்கை, செய்நிரலாக்கம் என பரந்து விரிந்த அத்தனை விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்கின்ற அதீத ஆர்வம் எப்போதுமுண்டு. தமிழ் மொழியில் அழகிய ஆக்கபூர்வமான யோசனைகள் பரவ வேண்டும் என்பதற்காய், TED சொற்பொழிவுகளை, தமிழாக்கம் செய்வதன் செயற்றிட்டத்தின் மொழி இணைப்பாளராகவும் பணி செய்கிறேன். திறந்தமூல செயற்பாடுகளில் ஆர்வமிருப்பதனால், திறந்தமூல பணிசெயல் முறைமைகளின் செய்நிரல்களின் மொழி மாற்றத்தில் பங்களிப்பதுமுண்டு. மகாகவி பாரதி சொன்ன பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை. விக்கிப்பீடியாவில் எண்ணற்ற அறிவு பொதிந்து கிடக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புகள் பற்றி நீங்கள் கீழே காணலாம். எந்தன் பயனர் பக்கம் வந்த நீங்கள் எனக்குத் தகவல் சொல்ல அல்லது வணக்கம் சொல்ல, எனது பேச்சுப் பக்கத்திற்கு வாருங்கள். நன்றி. அழகிய தமிழில் அறிவு சேர்ப்போம்! :) |
|
தொடங்கிய கட்டுரைகள்
தொகுவிரிவாக்கம் செய்த கட்டுரைகள்
தொகுபதக்கங்கள்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
சோடாபாட்டில்உரையாடுக 03:33, 27 சூன் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த படக்கலைஞர் பதக்கம் | ||
தமிழ் விக்கியூடகப் போட்டிக்காக அற்புதமான பதாகைகளை வடிவமைத்தற்காக இந்த பதக்கத்தை வழங்குகிறேன். வாழ்த்துக்கள்!! ஸ்ரீகாந்த் 09:42, 13 நவம்பர் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பயனர்வெளி பக்கங்கள்
தொகு
Tharique: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |