பொத்துவில்

இலங்கையில் உள்ள இடம்

பொத்துவில் (Pottuvil) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். இங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாகக் குடியிருக்கின்றனர். இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமான அறுகம் குடாவில் இருந்து வடக்கே 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை 33,625 ஆகும்[1].

பொத்துவில்
நகரம்
பொத்துவில் is located in இலங்கை
பொத்துவில்
பொத்துவில்
ஆள்கூறுகள்: 6°52′0″N 81°49′0″E / 6.86667°N 81.81667°E / 6.86667; 81.81667
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பி.செ. பிரிவுபொத்துவில்

அமைவிடம் தொகு

பொத்துவில் நகரத்தின், வடக்கே, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கேயும் மேற்கேயும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவும் அமைந்து காணப்படுகின்றன.

கிராம சேவகர் பிரிவுகள் தொகு

இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது[1]. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தின் கிராம சேவகர் பிரிவும் அதன் குறியீடும் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகிறது.

கிராமம் கிராம சேவகர் பிரிவு
பொத்துவில் அலகு 1 பீ/01
பொத்துவில் அலகு 2 பீ/02
பொத்துவில் அலகு 3 பீ/03
ஜலால்தீன் சதுக்கம் பீ/04
சர்வோதய புரம் பீ/05
சின்னப்புதுக்குடியிருப்பு பீ/06
பொத்துவில் 2 அலகு 2 பீ/07
பொத்துவில் 2 அலகு 2 பீ/08
குண்டுமடு பீ/09
இன்ஸ்பெக்டர் ஏற்றம் பீ/10
வட்டிவெளி பீ/11
பொத்துவில் நகரம் பீ/12
பாக்கியவத்தை 1 பீ/13
பாக்கியவத்தை 2 பீ/14
களப்புக்கட்டு பீ/15
விக்டர் தோட்டம் 1 பீ/16
விக்டர் தோட்டம் 2 பீ/17
சின்ன உல்லை பீ/18
பசறிச்சேனை பீ/19
ஹிதாயாபுரம் 1 பீ/20
ஹிதாயாபுரம் 2 பீ/21
சங்காமங்கண்டி பீ/22
கோமாரி 1 பீ/23
கோமாரி 2 பீ/24
கனகர் கிராமம் பீ/25
ஹிஜ்ரா நகரம் பீ/26
ரசாக் மௌலானா நகர் பீ/27

வாழ்வாதாரம் தொகு

பொத்துவில் நகரத்தின் அடிப்படையான பொருளாதார மார்க்கமாக காணப்படுவது, விவசாயமாகும். அத்தோடு, விலங்கு வேளாண்மை, கரையோர மற்றும் உள்ளக மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரம், சுற்றுலாத்துறை அத்தோடு வர்த்தகம் போன்ற வழிகளிலும் நகரத்தின் உள்ளக பொருளாதாரம் வலுப்படுத்தப்படுகிறது.

இயற்கை வளங்கள் தொகு

இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவது வெளிப்படையானதாகும். நெல் வயல்கள், காடு, அழகிய கடற்கரைகள், ரம்மியமான மலைகள் மற்றும் குளிர்மையான நீர் ஊற்றுக்கள், தேக்கங்கள் என்பன காணப்பட்டு இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன.

நெற்பயிர்ச் செய்கையே இந்தப் பிரதேசத்தில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இருந்த போதிலும், மரக்கறி, தென்னை மற்றும் பழங்கள் போன்றனவும் வளர்க்கப்பட்டு அவையும் உள்ளக வாழ்வாதாரத்தில் பங்களிப்பு செய்கின்றன. இதேவேளை, விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடி என்பனவும் குறிப்பிடத்தக்களவு பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்வதோடு, சுற்றுலாத் துறையானது, மிகவும் முக்கியமானதும், அபிவிருத்தி அடையக்கூடிய தகவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

இந்தப் பிரதேசம், கடற்கரை, ஆறு மற்றும் தேக்கங்களை தன்னகம் கொண்டுள்ளதால் இது மண் வளமிக்க பூமியாக சொல்லப்படுகிறது. தென்னைப் பயிர்ச்செய்கையானது, சிறிய பரிமாணத்தில், கோமாரி, மணற்சேனை, விக்டர் தோட்டம், ஹிதாயா புரம், ஊறணி, உல்லை ஆகிய கரையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு, மறக்கறிச் செய்கையில் பிரதானமாக மிளகாய் பயிரிடப்படுகிறது.

அழகிய கடற்கரைகளைக் கொண்டு காணப்படுவதோடு, உலகிலேயே நீர்ச் சறுக்கல் விளையாட்டுக்குப் பிரசித்தமான அறுகம் குடாவும் இந்த நகரத்திலேயே காணப்படுகிறது. அருகம் குடாவை அண்டிய கடற்கரைகள், உல்லை கடற்கரை என்றும் வழங்கப்படுவதுண்டு. 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இப்பிரதேசம் அதிகளவில் பாதிப்புக்களுக்கு உள்ளானது.

பிரசித்தமான இடங்கள் தொகு

இங்கு குறிப்பிடத்தக்களவு பிரசித்தம் பெற்ற சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்கின்ற பல இடங்கள் காணப்படுகின்றன. அவை,

  • அறுகம் குடா
  • பொத்துவில் முனை
  • பொத்துவில் மண்மலை
  • குடாக்கழி
  • கொட்டுக்கல்
  • நாவலாறு
  • செங்காமம்

பொத்துவிலில் குறிப்பிடத்தக்கோர் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்துவில்&oldid=3678345" இருந்து மீள்விக்கப்பட்டது