தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் நிலப்பரப்பு வயல் எனப்படும். அப்படி செய்யப்படும் தொழில் வேளாண்மை எனப்படும். தொன்றுதொட்டு நெல் முதலான உணவுப்பயிர்களையும், பருத்தி முதலான பணப்பயிர்களையும் வளர்க்கும் நிலப்பகுதிகளையே வயல் எனக்குறித்தனர். தற்காலத்தில் சில வகை எரிபொருள்களை உற்பத்தி செய்யும் இடங்களையும் வயல் என வழங்குகின்றனர்.

நெற்வயல்
நெற்வயல்

பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. விளைந்திருக்கும் பயிர்களுக்கு இடையே மாந்தர் நடந்து செல்வதற்கு பாதைகள் அமைக்கபட்டிருக்கும். அவற்றை வரப்புகள் என்றழைப்பர். சில வட்டாரங்களில் வயலைக் குறிக்கத் 'தோப்பு', 'தோட்டம்', 'காடு' போன்ற சொற்களையும் பயன்படுதுகிறார்கள். நன்கு செழித்து வளர்ந்த பயிர்களைக் கொண்ட வயல்கள் கண்களுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் உன்னதமான காட்சிகளாகும்.

வெவ்வேறு மண்ணுக்கு ஏற்றவாறு சிறப்புத் தொழிற்நுட்பங்களை உபயோகித்து நடவு வயல் தயாரிக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "நடவு வயல் தயாரித்தல்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்&oldid=1910299" இலிருந்து மீள்விக்கப்பட்டது