விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும்.

வேளாண் அறிவியல்தொகு

பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். அதுமட்டுமல்லாமல் நீர் நிலைகளில் நீரைத் தேக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குறு நீர்பிடிப்புகள்தொகு

சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5 என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மேலும் சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது. இவை மழைக்கலங்களில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.[1]

பயன்பாடுகள்தொகு

  • நில அளவை (தமிழ்நாடு) முறைகளிலும் வரப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
  • இவை நிலத்தில் மழை நீரையும் பாசன நீரையும் தேக்கி வைக்கவும், மேம்பட்ட விரைந்த நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன.
  • நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொழுது வயலை கடந்து செல்ல உதவும் பாதைகளாகவும் அண்டை நிலங்களுடன் எல்லையை வரையறுக்கவும் இவை பயன்படுகின்றன.
  • வரப்பில் வளரும் புல், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றது.
  • நிலத்தை பார்வையிடப் பயன்படும் ஓர் உயர்ந்த தளமாகவும் வரப்புகள் உதவுகின்றன.
  • உழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேலை செய்யும் ஆட்களுக்கு பயன்படுகிறது.

வரப்பினால் வரும் பிரச்சினைகள்தொகு

வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு.

ஔவையார் பாடல்தொகு

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்
என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியுள்ளார்

உசாத்துணைகள்தொகு

  1. http://agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_swc_watershed_develop_insitu_moisture_ta.html நீர் வடிப்பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் அறுவடை அமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரப்பு&oldid=3539029" இருந்து மீள்விக்கப்பட்டது