முதன்மை பட்டியைத் திறக்கவும்
Commons logo
தமிழ் விக்சனரியிலுள்ள விளக்கத்தையும் காண்க!
உலக மண்ணமைவுகள்

மண்ணியிலாளர்[1] உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர். இவ்வாறு அமைவதற்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன. இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்

உலக மண்ணமைவுகள்தொகு

இந்திய மண்ணமைவுகள்தொகு

உலகின் பரப்பளவில், இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது. இந்திய நாட்டின் பரப்பளவு 32,87,782 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இப்பரப்பளவில் ஏறத்தாழ 45 சதவீதம், வேளாண்மைக்குப் பயனாகிறது. உலகின் பெரும்பாலானப் பயிர்களை, இந்தியாவில் பயிரிடும் வகையில் இந்திய மண்ணின் தன்மையுள்ளது. ஏறத்தாழ அனைத்து வகை உலக மண்களும், இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.

மழைதொகு

இந்தியாவின் மழைப் பொழிவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்தியாவில், உலகிலேயே அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் சிரபுஞ்சி (வருடத்திற்கு 1000 செ.மீ.வரை) இருக்கிறது. இராஜஸ்தான் பாலைவனத்தில் மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவு(வருடத்திற்கு 10 செ.மீ.) இருக்கிறது. இவ்விதம் மழைப்பொழிவுகள் வேறுபடுவதால், மண்ணின் வளமும் வேறுபடுகின்றன.

வெப்பம்தொகு

இந்திய நாட்டின் வெப்பம் பரவலாக 48 டிகிரி சென்டிகிரேடிலிருந்து, -40 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுகிறது. இதனாலும், மண்ணின் தன்மையும், ஈரப்பசையும் வேறுபடுகின்றன.

இந்திய மண்ணின் வகைகள்தொகு

இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் 8 வகைகளாகப்பிரிக்கலாம். அவை வருமாறு;-

 1. செம்மண்
 2. மணற்பாங்கான மண்
 3. மணற்குறு மண்
 4. குறு மண்
 5. களி மண்
 6. கரிசல்மண்
 7. செம்புறை மண்
 8. வண்டல் மண் அல்லது அடை மண்.

தமிழக மண்ணமைவுகள்தொகு

சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 130 இலட்சம் எக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ 63 இலட்சம் வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழைப்பொழிகிறது. இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது.

உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும், தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர் உரைக்கின்றனர். தமிழகத்தின் மண்வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 1. செம்மண்
 2. செம்புறை மண்
 3. கரிசல் மண்
 4. வண்டல் மண்

மண்ணின் வளம்தொகு

பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது.[3] மண்பரிசோதனை மூலம் மண் வளத்தினைக் கண்டறியலாம். தாவரத்திற்கு மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது.[4]

மண்ணின் குறைகள்தொகு

மண்ணின் களர்த்தன்மை மற்றும் உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும். அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, அம்மண்ணின் வளத்தை மாற்றலாம். இரசாயன உரங்களை இடுவதினால், நல்லத் தரமான மண்ணின் இயல்பும் சீர் கெடுகிறது.

மண்ணடி உயிரிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. மண்ணியிலாளர் - Pedologist
 2. Ultisol - செம்மண்
 3. Chesworth, Edited by Ward (2008), Encyclopedia of soil science, Dordrecht, Netherland: Springer, xxiv, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1402039948 
 4. James A. Danoff-Burg, Columbia University The Terrestrial Influence: Geology and Soils

உயவுத்துணைதொகு

இதனையும் காண்கதொகு

இதர இணைய இணைப்புகள்தொகு

 • Wossac அனைத்துலக மண்ணைப் பற்றிய தகவல் இணையம்.
 • Estimating Soil Texture By Feel மண் தரத்தைக் கண்டறிதல்.
 • EUSOILS ஐரோப்பிய நாடுகளின் மண்ணைப் பற்றிய தகவல் இணையம்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்&oldid=2808476" இருந்து மீள்விக்கப்பட்டது