முதன்மை பட்டியைத் திறக்கவும்
42 நையோபியம்மாலிப்டினம்டெக்னேட்டியம்
Cr

Mo

W
Mo-TableImage.svg
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
மாலிப்டினம், Mo, 42
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
6, 5, d
தோற்றம் மழமழ சாம்பல்
Mo,42.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
95.94(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d5 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 13, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
10.28 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
9.33 g/cm³
உருகு
வெப்பநிலை
2896 K
(2623 °C, 4753 °F)
கொதி நிலை 4912 K
(4639 °C, 8382 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
37.48 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
617 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.06 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2742 2994 3312 3707 4212 4879
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், பருநடு
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4, 5, 6
(கடும் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.16 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 684.3 kJ/(mol
2nd: 1560 kJ/mol
3rd: 2618 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
190 pm
கூட்டிணைப்பு ஆரம் 145 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின் தடைமை (20 °C) 53.4 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 138
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 4.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) 5400 மீ/நொ
யங்கின் மட்டு 329 GPa
Shear modulus 20 GPa
அமுங்குமை 230 GPa
பாய்சான் விகிதம் 0.31
மோவின்(Moh's) உறுதி எண் 5.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1530 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1500 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7439-98-7
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: மாலிப்டினம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
92Mo 14.84% Mo ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
93Mo செயற்கை 4×103 y ε - 93Nb
94Mo 9.25% Mo ஆனது 52 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
95Mo 15.92% Mo ஆனது 53 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
96Mo 16.68% Mo ஆனது 54 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
97Mo 9.55% Mo ஆனது 55 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
98Mo 24.13% Mo ஆனது 56 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
99Mo செயற்கை 65.94 h β- 0.436, 1.214 99Tc
γ 0.74, 0.36,
0.14
-
100Mo 9.63% 7.8×1018 y β-β- 3.04 100Ru
மேற்கோள்கள்

மாலிப்டினம் ( Molybdenum) என்பது Mo என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு எண் 42 ஆகும். மாலிப்டினத்தின் அணுக்கருவில் 54 நியூட்ரான்கள் உள்ளன. பண்டைய கிரேக்க மொழியில் ஈயம் போன்றது என்ற பொருள் கொண்ட மாலிப்டாசு என்ற சொல்லிலிருந்து மாலிப்டினம் என்ற பெயர் தோன்றியது. மாலிப்டினத்தின் தாதுக்களும் ஈயத்தின் தாதுக்களும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பத்தை உண்டாக்கும் தன்மையுடயவையாகும்[1]. மாலிப்டினத்தின் தாதுக்கள் நீண்ட நெடுங்காலமாக அறியப்பட்டாலும் மாலிப்டினம் 1778 ஆம் ஆண்டு கார்ல் வில்லெம் சீலே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1781 ஆம் ஆண்டு முதன்முதலாக பீட்டர் யாக்கோபு எயெல்ம் என்பவரால் தனிமமாகத் தனித்துப் பிரித்து எடுக்கப்பட்டது.

மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை. பல்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில் கனிமங்களில் இது காணப்படுகிறது. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகும். பொதுவாகத் தூள் நிலையில் இது கிடைக்கிறது. எளிதில் இதை தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். எஃகை விட மிருதுவானதாக காணப்படுகிறது. தூய நிலையில் உள்ளபோது இதை பளபளப்பாக மாற்றமுடியும். வலிமையான இவ்வுலோகம் பாரா காந்தத்தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்து தனிமங்களிலும் இது ஆறாவது உயர்ந்த உருகுநிலையைக் கொண்ட தனிமமாக உள்ளது. மாலிப்டினம் உடனடியாக கடினமான மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட கார்பைடுகளாக மாறி கலப்புலோகங்களை உருவாக்குகிறது, இந்த காரணத்திற்காக உலகின் உற்பத்தியாகும் பெரும்பாலான மாலிப்டினத்தின் சுமார் 80% எஃகு உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கலப்புலோகங்களில் அதிக வலிமை கொண்ட உலோகக்கலவைகளும் மீவுயர் கலப்புலோகங்களும் அடங்கும்.

பெரும்பாலான மாலிப்டினம் சேர்மங்கள் தண்ணீரில் குறைந்த அளவே கரையக்கூடியனவாக உள்ளன. ஆனால் மாலிப்டினத்தை தாங்கியிருக்கும் தாதுக்கள் ஆக்சிசன் மற்றும் தண்ணீரைத் தொடர்பு கொள்ளும்போது உருவாகும் மாலிப்டேட்டு அயனி MoO2-4 மிகவும் நன்றாக கரையக்கூடியதாக உள்ளது. தொழிற்துறையில், உலக மாலிப்டினம் உற்பத்தியில் சுமார் 14% மாலிப்டினம் சேர்மங்கள் உயர் அழுத்த மற்றும் உயர் வெப்பநிலை பயன்பாடுகளில் நிறமிகள் மற்றும் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உயிரியலில் நைட்ரசன் நிலைநிறுத்தும் செயல்பாட்டில் வளிமண்டல மூலக்கூற்று நைட்ரசனில் இருக்கும் வேதிப் பிணைப்பை உடைப்பதற்கான மிகப்பொதுவான பாக்டீரியா வினையூக்கிகளுக்கு மாலிப்டினம் தாங்கும் நொதிகள் காரணமாக உள்ளன. குறைந்தபட்சம் 50 மாலிப்டினம் நொதிகள் இப்போது பாக்டீரியா, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் அறியப்படுகின்றன, இருப்பினும் பாக்டீரியா மற்றும் சயனோபாக்டீரியல் நொதிகள் நைட்ரசன் நிலை நிறுத்தலில் ஈடுபடுகின்றன. இந்த நைட்ரசனேசு நொதிகளைப் தன் வடிவத்தில் பெற்றிருக்கும் மாலிப்டினம் மற்ற மாலிப்டினம் நொதிகளிலிருந்து மாறுபட்டவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் மாலிப்டினம் இணைகாரணிகளில் முழுமையாக ஆக்சிசனேற்றப்பட்ட மாலிப்டினத்தைக் கொண்டிருக்கின்றன.

தோற்றமும் உற்பத்தியும்தொகு

மாலிப்டினம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை. பூமியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் பட்டியலில் 54 வது இடத்தைப் பிடிக்கிறது. அதே போல கடல்களில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் 25 வது இடத்தையும் மாலிடினம் பிடிக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாக சராசரியாக பில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் பூமியில் மாலிப்டினம் கிடைக்கிறது. பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் என்ற வரிசையில் வகைப்படுத்தினால் மாலிப்டினத்திற்கு 42 ஆவது இடமாகும்[2]. உருசியாவின் லூனா 24 விண்கலத் திட்டத்தில் நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பைராக்சின் துண்டில் மாலிப்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[3].

புவியில் மாலிப்டினம் மாலிப்டினைடு (MoS2), உல்பினைட்டு (PbMoO4)ம் பாவெலைட்டு (CaMoO4), மாலிப்டைட்டு (Fe2O3.MoO3.2H2O) என்ற தாதுக்கள் வடிவில் கிடைக்கிறது. பொதுவாக மாலிப்டினைட்டு என்ற தாதுவிலிருந்து மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் உலக மாலிப்டினம் உற்பத்தி 250000 டன்கள் ஆகும். சீனா (94000 டன்), அமெரிக்கா (64000டன்), சிலி (38000 டன்), பெரு (18000 டன்) மெக்சிகோ (12000 டன்) ஆகியவை மாலிப்டினத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 10 மில்லியன் டன் மாலிப்டினம் உலகில் இருப்பு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்விருப்பு சீனா (4.3 மில்லியன் டன்) அமெரிக்கா (2.7 மில்லியன் டன்), சிலி (1.2 மில்லியன் டன்) போன்ற நாடுகளில் காணப்படுகிறது. 93% மாலிப்டினம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி மாலிப்டினத்தை ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்கள் தயாரிக்கின்றன.

 
மாலிப்டினம் – உலக உற்பத்தி போக்கு

மாலிப்டினத் தாது நுண்ணிய தூளாக அரைக்கப்பட்டு நுரை மிதப்பு மிறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அடர்ப்பிக்கப்பட்ட தாது காற்றில் 700° செல்சியசு வெப்பநிலையில் நன்கு வறுக்கப்படுகிறது. மாலிப்டினம்(VI) ஆக்சைடும் வாயுநிலையில் உள்ள கந்தக டை ஆக்சைடும் உருவாகின்றன.

2 MoS2 + 7 O2 → 2 MoO3 + 4 SO2

மாசுடன் கூடிய மாலிப்டினம்(VI) ஆக்சைடு அமோனியாவில் கலக்கப்பட்டு அமோனியம் மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது.

MoO3 + 2 NH3 + H2O → (NH4)2(MoO4)

படிகமாக்கல் முறையில் அமோனியம் மாலிப்டேட்டு தூய்மை செய்யப்படுகிறது. இப்படிகங்களை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி தூய்மையான மாலிப்டினம்(VI) ஆக்சைடு தயார் செய்யப்படுகிறது.

மாலிப்டினைட்டு தாதுவுடன் கலந்துள்ள தாமிரம் அமோனியாவில் சிறிதளவே கரையும். முற்றிலுமாக அதை நீக்க தாதுவானது ஐதரசன் சல்பைடுடன் சேர்க்கப்பட்டு வீழ்படிவாக்கப்பட வேண்டும். அமோனியம் மாலிப்டேட்டு அமோனியம் டைமாலிப்டேட்டாக மாறுகிறது. இதைத் தனித்துப் பிரித்து வெப்பப்படுத்தினால் தூய்மையான மாலிப்டினம் டிரை ஆக்சைடு கிடைக்கிறது.

(NH4)2Mo2O7 → 2 MoO3 + 2 NH3 + H2O

இந்த மாலிப்டினம் டிரை ஆக்சைடு 1100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. மாலிப்டினம் டிரை ஆக்சைடு பதங்கமாதலுக்கு உள்ளாகி மேலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இதை ஒடுக்குதலுக்கு உட்படுத்தி தூமையான மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. ஒடுக்கும் முகவர்களாக ஐதரசன், கார்பன்ம் அலுமினியம், கால்சியம், துத்தநாகம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

MoO3 + 3 H2 → Mo + 3 H2O

MoO3 + 3 C → Mo + 3 CO

மேற்கூறப்பட்ட முறைகளில் தயாரிக்கப்படும் மாலிப்டினம் தூளாகக் கிடைக்கும். இதை ஐதரசன் வாயுச் சூழலில் அழுத்தத்திற்கு உட்படுத்தி சூடாக்கினால் திண்ம மாலிப்டினம் கிடைக்கும்.

எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான மாலிப்டினத்தை, இதனுடன் இரும்பைச் சேர்த்து அலுமினோவெப்பச் சிதைவு வினையின் மூலம் பெர்ரோமாலிப்டினமாகத் தயாரிக்கிறார்கள். பெர்ரோ மாலிப்டினத்தில் 60% மாலிப்டினம் கலந்துள்ளது[4][5].

இயற்பியல் பண்புகள்தொகு

தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகக் காணப்படுகிறது. மாலிப்டினத்தின் மோவின் கடினத்தன்மை எண் 5.5 ஆகும். இதனுடைய உருகுநிலை 2623° செல்சியசு ஆகும். இயற்லையாகத் தோன்றும் தனிமங்களில் தங்குதன், ஒசுமியம், இரேனியம், டாண்ட்டலம் மற்றும் கார்பன் போன்ற தனிமங்கள் மட்டுமே உயர்ந்த உருகுநிலை கொண்டவையாகும்[1]. மாலிப்டினத்தின் பலவீனமான ஆக்சிசனேற்றம் 300 ° செல்சியசு வெப்பநிலையில் தொடங்குகிறது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் உலோகங்கள் மத்தியில் வெப்ப விரிவாக்க குணகங்களில் குறைவான குணகம் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் [6]. மாலிப்டினம் கம்பிகளின் விட்டம் ~ 50-100 நானோமீட்டர் முதல் 10 நானோமீட்டர் வரை குறையும் போது அவற்றின் இழுவிசை வலிமை 10 முதல் 30 கிகாபாசுக்கல் வரை சுமார் 3 மடங்கு அதிகரிக்கிறது [7],

மாலிப்டினத்தின் பயன்கள்தொகு

 1. கலப்புலோக எஃகுத் தயாரிப்பில் பெர்ரோமாலிப்டினம் காலப்புலோகம் பெரிதும் பயன்படுகிறது.
 2. தோல் மற்றும் இரப்பர் பொருட்களுக்கு நிறமூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 3. அமோனியம் என்ற சேர்மத்தைத் தயாரிக்க மாலிப்டினம் பயன்படுகிறது, பாசுப்பேட்டு, ஆர்சனேட்டு உப்புகளைக் கண்டறிவதில் இச்சேர்மம் பெரிதும் உதவுகிறது.
 4. மாலிப்டினம் தூள் சில தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுகிறது.
 5. எக்சு கதிர் குழாய்களில் மாற்ரு மின்வாயாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.
 6. மாலிப்டினம்-தங்குதன் வெப்ப மின் இரட்டைகள் உயர் வெப்பநிலை அளவீடுகளுக்குப் பயனாகிறது.
 7. மாலிப்டினம் எஃகு பல்வேரு இயந்திர பாகங்கள் தயாரிக்க உதவுகிறது.
 8. மின் உலைகளில் பிளாட்டினத்திற்கு மாற்றாக மாலிப்டினம் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 Lide, David R., தொகுப்பாசிரியர் (1994). "Molybdenum". CRC Handbook of Chemistry and Physics. 4. Chemical Rubber Publishing Company. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0474-1. 
 2. Considine, Glenn D., தொகுப்பாசிரியர் (2005). "Molybdenum". Van Nostrand's Encyclopedia of Chemistry. New York: Wiley-Interscience. பக். 1038–1040. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-61525-5. 
 3. Jambor, J.L. (2002). "New mineral names". American Mineralogist 87: 181. http://www.minsocam.org/msa/AmMin/TOC/Abstracts/2002_Abstracts/Jan02_Abstracts/Jambor_p181_02.pdf. 
 4. Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). Lehrbuch der Anorganischen Chemie (91–100 ). Walter de Gruyter. பக். 1096–1104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-007511-3. 
 5. Gupta, C. K. (1992). Extractive Metallurgy of Molybdenum. CRC Press. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-4758-0. 
 6. Emsley, John (2001). Nature's Building Blocks. Oxford: Oxford University Press. பக். 262–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-850341-5. https://books.google.com/?id=j-Xu07p3cKwC&pg=PA265. 
 7. Shpak, Anatoly P.; Kotrechko, Sergiy O.; Mazilova, Tatjana I.; Mikhailovskij, Igor M. (2009). "Inherent tensile strength of molybdenum nanocrystals". Science and Technology of Advanced Materials 10 (4): 045004. doi:10.1088/1468-6996/10/4/045004. பப்மெட்:27877304. Bibcode: 2009STAdM..10d5004S. 

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்&oldid=2761057" இருந்து மீள்விக்கப்பட்டது