பிக்கோமீட்டர்

(பிமீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிக்கோமீட்டர் (picometre, பிமீ, pm) என்பது ஒரு மீட்டரின் ஒரு டிரில்லியனில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1/1,000,000,000,000 மீட்டர்.[2] இது அனைத்துலக முறை அலகுகள் முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10−12 மீ என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ என்றும் எழுதலாம். இவ்வலகு முன்னர் மைக்குரோமைக்குரோன், ஸ்டிக்மா, பைக்குரோன் எனவும் அழைக்கப்பட்டது.

62 பிக்கோமீட்டர் விட்டமுடைய ஈலியம் அணு[1]

இவ் அளவு, மைக்ரோ மீட்டர் என்னும் அளவில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். ஆங்ஸ்டிராம் என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோமீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது அனைத்துலக முறை அலகுகள் ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல.

பிக்கோமீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் அணுவின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் ஆரம் 25 முதல் 260 பிக்கோமீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் ஆரம் 135 பிக்கோமீட்டர் ஆகும், ஆனால் ஈலியம் அணுவின் விட்டம் 32 பிக்கோமீட்டர் இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Atomic radius". WebElements: the periodic table on the web.
  2. Deza, Elena; Deza, Michel Marie (2006). Dictionary of Distances. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-52087-2. http://books.google.com/books?id=I-PQH8gcOjUC&pg=PA347&dq=stigma+bicron. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கோமீட்டர்&oldid=2742577" இலிருந்து மீள்விக்கப்பட்டது