இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (ஒலிப்பு) (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.

SI அலகுகள்:

ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3}
m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg)
V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3)

நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம்.[1][2][3]

பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்:

பொருள்அடர்த்தி (கி.கி/மீ3)
திடம்
இரிடியம்22650
ஆஸ்மியம்22610
பிளாட்டினம்21450
தங்கம்19300
டங்க்ஸ்டன்19250
யுரேனியம்19050
பாதரசம்13580
பலேடியம்12023
ஈயம்11340
வெள்ளி10490
செப்பு   8960
இரும்பு   7870
வெள்ளீயம்   7310
டைட்டேனியம்   4507
வைரம்   3500
அலுமீனியம்   2700
மக்னீசியம்   1740
திரவம்
கடல் நீர்   1025
நீர்   1000
ஈத்தைல் ஆல்கஹால்   790
பெட்ரோல்   730
Aerogel   3.0
எடுத்துக்காட்டு காற்று   1.2
வளியின் அடர்த்திρ vs. வெப்பநிலை °C
T in °C ρ கிகி/மீ³ இல்
- 10 1.341
- 5 1.316
0 1.293
+ 5 1.269
+ 10 1.247
+ 15 1.225
+ 20 1.204
+ 25 1.184
+ 30 1.164

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The National Aeronautic and Atmospheric Administration's Glenn Research Center. "Gas Density Glenn research Center". grc.nasa.gov. Archived from the original on ஏப்பிரல் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 9, 2013.
  2. "Density definition in Oil Gas Glossary". Oilgasglossary.com. Archived from the original on August 5, 2010. பார்க்கப்பட்ட நாள் September 14, 2010.
  3. Archimedes, A Gold Thief and Buoyancy பரணிடப்பட்டது ஆகத்து 27, 2007 at the வந்தவழி இயந்திரம் – by Larry "Harris" Taylor, Ph.D.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடர்த்தி&oldid=3752076" இலிருந்து மீள்விக்கப்பட்டது