உலகம்
உலகம் (ஆங்கிலம்: World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.[2] பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.
மெய்யியல் உரைகளில் உலகம்:
சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
உலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.
உலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.
உலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.
உலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.
மேற் சான்றுகள்
தொகு- ↑ Jean Chevalier and Alain Gheerbrandt. The Penguin Dictionary of Symbols. Editions Robert Lafont S. A. et Editions Jupiter: Paris, 1982. Penguin Books: London, 1996. pp.142-145
- ↑ Merriam-webster.com
வெளி இணைப்புகள்
தொகு- World உலகத் தரவுநூலில் இருந்து