தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) என்பது தமிழ்நாடு மாநில அரசால் நடத்தப்படும் வேளாண்மை பல்கலைக்கழகமாகும். இதன் தலைமை அலுவலகம் கோயமுத்தூரில் அமைந்துள்ளது.
Tamil Nadu Agriculture University | |
பல்கலைகழக இலச்சினை | |
முந்தைய பெயர்கள் | மெட்ராஸ் வேளாண் பள்ளி, சைதாப்பேட்டை சென்னை (1868) |
---|---|
குறிக்கோளுரை | உழுவோம் உழைப்போம் உயர்வோம் |
வகை | பொது |
உருவாக்கம் | 1906 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | முனைவர் வி. கீதாலட்சுமி[2] |
மாணவர்கள் | 7501 |
அமைவிடம் | , , 11°00′53″N 76°55′53″E / 11.0148°N 76.9315°E |
சேர்ப்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) |
இணையதளம் | www.tnau.ac.in |
வரலாறு
தொகுஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வேளாண் வளத்தை கருத்தில் கொண்டு மெட்ராஸ் மாகாணத்தில் 1868இல் சைதாப்பேட்டையில் மெட்ராஸ் வேளாண் பள்ளி தொடங்கப்பட்டது. பின்பு 1909இல் இக்கல்லூரி கோயமுத்தூருக்கு மாற்றப்பட்டு, சர் ஆர்தர் லாலி (Sir Arthur Lawley) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1928இல் மெட்ராஸ் பல்கலைகழகத்தின் இணைவு பெற்று மிகப்பெரிய கல்லூரியாக உயர்ந்தது.
1946 வரை தென் இந்தியாவில் ஒரே ஒரு வேளாண் கல்லூரி மட்டுமே இருந்து. அதுவும் கோயம்புத்தூரில் தான் இருந்தது. 1957 வரை வெறும் இளங்கலை படிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் 1958இல் முதுகலை படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் இணைக்கப்பட்டன. பின்பு 1965இல் கோவையை அடுத்து மதுரையில் இரண்டாவது வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த இரண்டு கல்லூரிகளே தமிழகத்தில் வேளாண் கல்வி செழிக்க அடித்தலமாய் அமைந்தது. 1971இல் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வேளாண் பல்கலைகழகம் என்ற பெருமை பெற்றது. 1972இல் வேளாண் இளங்கலை படிப்பை போலவே தோட்டக்கலை படிப்பும் வேளாண் பொறியியல் படிப்பும் தொடங்கப்பட்டது.
1976இல் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் இணைவு பெற்றது. 1977இல் தூத்துக்குடியில் முதல் மீன் வளக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் 1989இல் கால்நடை பல்கலைக்கழகம் தனி பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. அதுபோலவே 2012இல் மீன்வலக்கல்லுரியும் டாக்டர் ஜே ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் என்ற பெயரில் தனித்து செயல்பட துவங்கியது.[3]
1980இல் மதுரை வேளாண் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உணவு அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்பு திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், கிள்ளிகுளம், தஞ்சை, திருவன்னாமலை, நாகை, கரூர், செட்டிநாடு, பையூர், குமுலூர் போன்ற இடங்களில் என, மொத்தம் 19 அரசு கல்லூரிகளும் 28 இணைவுபெற்ற தனியார் வேளாண்மை கல்லூரிகளும் இணைத்து இன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசு கல்லூரிகள்
தொகு- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்.
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
- அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர் கோட்டபட்டு, திருச்சி.
- வ. உ. சிதம்பரனார் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி.
- டாக்டர் ம.சா. சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை.
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, சிவகங்கை.
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர்
- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கீழ்வேளூர், நாகப்பட்டினம்.
- தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி.
- தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர் கோட்டபட்டு, திருச்சி
- தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி.
- வனக் கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்.
- சமூக அறிவியல் கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், மதுரை.
- வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்.
- வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர், திருச்சி.
- வேளாண் முதுகலை மற்றும் பட்டயப்படிப்பு கல்லூரி, கோயம்புத்தூர்.
- பெண்கள் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.
ஆராய்ச்சி நிலையங்கள்
தொகு- நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.
- கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாளத்தூர்.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம்,
- எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம்.
- மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருட்டிணகிரி மாவட்டம்.
- மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏதாப்பூர்.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்.
- காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர்.
- கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்.
- மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம்.
- பருத்தி ஆராய்ச்சி நிலையம், பெரம்பலூர்.
- கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி.
- கலப்பின அரிசி மதிப்பீட்டு மையம், கூடலூர்.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஊட்டி.
- தென்னை ஆராய்ச்சி நிலையம், அலியார் நகர்.
- சோளம் ஆராய்ச்சி நிலையம், வாகரை.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல்
- தேசிய தானிய ஆராய்ச்சி மையம், வம்பன்.
- தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை.
- மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.
- தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை.
- மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகை அணை.
- திராட்சை ஆராய்ச்சி நிலையம், தேனி.
- மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.
- பருத்தி ஆராய்ச்சி நிலையம், திருவில்லிபுத்தூர்.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி.
- கடலோர உவர்நீர் ஆராய்ச்சி நிலையம், ராமநாதபுரம்.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.
- எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், சங்கரன்கோவில்
- நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை.
- மலர் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், தோவாளை.
- வேளாண் ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தகவல் மற்றும் பயிற்சி மையம், சென்னை
- வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்
- வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், விறிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பூர் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், சிருகமணி, திருச்சி மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் மாவட்டம்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
இணைவு பெற்ற தனியார் கல்லூரிகள்
தொகுதமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இணைவு பெற்ற 28 தனியார் கல்லூரிகள் உள்ளன.
- வானவராயர் வேளாண் கல்லூரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்.
- வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, தேனி
- ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி, ராணிப்பேட்டை.
- ஆதிபராசக்தி தோட்டகலை கல்லூரி, ராணிப்பேட்டை
- தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி கல்லூரி, பெரம்பலூர்.
- தனலட்சுமி ஶ்ரீனிவாசன் வேளாண் கல்லூரி, பெரம்பலூர்.
- ச. தங்பழம் வேளாண்மை கல்லூரி, தென்காசி.
- குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஈரோடு.
- RVS பத்மாவதி வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்.
- RVS தோட்டக்கலை கல்லூரி, திண்டுக்கல்.
- இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருச்சி.
- PGP வேளாண்மை கல்லூரி, நாமக்கல்.
- JKK முணிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம், ஈரோடு.
- தொன் பாஸ்கோ வேளாண்மை கல்லூரி, அரக்கோணம், ராணிப்பேட்டை.
- SRS வேளாண்மை கல்லூரி, திண்டுக்கல்.
- JSA வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கடலூர்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தேவகோட்டை, சிவகங்கை.
- நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கமுதி, இராமநாதபுரம்.
- அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், சூளகிரி, கிருட்டிணகிரி.
- கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை.
- இந்தியன் வேளாண்மை கல்லூரி, திருநெல்வேலி.
- நாலந்தா வேளாண்மை கல்லூரி, சமயபுரம், திருச்சி.
- அரவிந்தர் வேளாண்மை கல்லூரி, திருவண்ணாமலை.
- பாலாறு வேளாண்மை கல்லூரி, வேலூர்.
- அன்னை தெரேசா வேளாண்மை கல்லூரி, புதுக்கோட்டை.
- புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை.
- MIT வேளாண்மை கல்லூரி, திருச்சி.
- ஜெயா வேளாண்மை கல்லூரி, திருத்தணி, திருவள்ளூர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2022/PR280322-1.pdf
- ↑ "Tamil Nadu Veterinary and Animal Sciences University", Wikipedia (in ஆங்கிலம்), 2024-09-27, பார்க்கப்பட்ட நாள் 2024-10-02
- ↑ "KVKs – Tamil Nadu Agricultural University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-03.