கரூர்

இது தமிழகத்தின் கரூர் மாவட்ட தலைமையிடமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.

கரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின், தமிழகத்திலுள்ள உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் நெசவு நகரம் என்றும் அழைப்பர்.

கரூர்
சிறப்பு நிலை நகராட்சி
City of karur.jpg
கரூர் is located in தமிழ் நாடு
கரூர்
கரூர்
கரூர் is located in இந்தியா
கரூர்
கரூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 10°57′N 78°05′E / 10.95°N 78.08°E / 10.95; 78.08ஆள்கூறுகள்: 10°57′N 78°05′E / 10.95°N 78.08°E / 10.95; 78.08
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
பகுதிகொங்கு நாடு, சோழ நாடு
அரசு
 • வகைசிறப்பு நிலை நகராட்சி
 • Bodyகரூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ஜோதிமணி
 • சட்டமன்ற உறுப்பினர்எம். ஆர். விஜயபாஸ்கர்
 • மாவட்ட ஆட்சியர்தி. அன்பழகன் இ. ஆ. ப.
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,34,506
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ் மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு639(xxx)
தொலைபேசி குறியீடு91-(0)4324
வாகனப் பதிவுTN 47
சென்னையிலிருந்து தொலைவு397 கி.மீ (246 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு78 கி.மீ (48 மைல்)
ஈரோட்டிலிருந்து தொலைவு66 கி.மீ (41 மைல்)
இணையதளம்karur

கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.

அமைவிடம்தொகு

கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 66 கி.மீ தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறுதொகு

2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர்.[சான்று தேவை] கரூர் காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடுதொகு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
91.41%
முஸ்லிம்கள்
5.62%
கிறிஸ்தவர்கள்
2.88%
சீக்கியர்கள்
0.01%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.07%
சமயமில்லாதவர்கள்
0.01%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் இந்துக்கள் 91.41%, முஸ்லிம்கள் 5.62%, கிறிஸ்தவர்கள் 2.88%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.07% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

போக்குவரத்துதொகு

கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது பல நகரங்களுடன் பேருந்துகள் இயங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 கரூர் வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் கேரளா, ஆந்திரா, கருநாடகம் போன்ற அண்டை மற்றும் பிற மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். விஜயபாஸ்கர்
மக்களவை உறுப்பினர் ஜோதிமணி

கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.

கரூர் நகராட்சியானது கரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த எம். ஆர். விஜயபாஸ்கர் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியை சேர்ந்த ஜோதிமணி வென்றார்.

கல்லூரிகள்தொகு

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்&oldid=2982655" இருந்து மீள்விக்கப்பட்டது