திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின் பெரிய மாநகராட்சிகளுள் மூன்றாவது பெரிய மாநகராட்சி ஆகும்.
(திருச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli அல்லது Trichinopoly[கு 1]), இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி (Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது. மற்றும் திருச்சிராப்பள்ளி பெறுநகர மாநகராட்சி என்று தரம் உயர்த்தி கூடிய விரைவில் அறிவிக்கபட இருக்கிறது.

திருச்சிராப்பள்ளி
திருச்சி
மேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில்:ஜம்புகேசுவரர் கோயில், அரங்கநாதசுவாமி கோயில், தூய லூர்து அன்னை கிறித்தவத் தேவாலயம், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளியை ஸ்ரீரங்கம் தீவிலிருந்து பிரிக்கும் காவிரி ஆறு, மேலணை
மேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில்:ஜம்புகேசுவரர் கோயில், அரங்கநாதசுவாமி கோயில், தூய லூர்து அன்னை கிறித்தவத் தேவாலயம், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளியை ஸ்ரீரங்கம் தீவிலிருந்து பிரிக்கும் காவிரி ஆறு, மேலணை
அடைபெயர்(கள்): மலைக்கோட்டை மாநகரம்
திருச்சிராப்பள்ளி is located in தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி is located in இந்தியா
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°47′25″N 78°42′17″E / 10.79028°N 78.70472°E / 10.79028; 78.70472
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்சு. திருநாவுக்கரசர்
 • சட்டமன்ற உறுப்பினர்இனிகோ எஸ். இருதயராஜ் (திருச்சி கிழக்கு)
கே. என். நேரு (திருச்சி மேற்கு)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்)
மொ. பழனியாண்டி (திருவரங்கம்)
 • மாநகர மேயர்திரு. அன்பழகன் திமுக
 • மாவட்ட ஆட்சியர்பிரதீப் குமார் , இ.ஆ.ப
பரப்பளவு
 • மாநகரம்167.23 km2 (64.57 sq mi)
 • மாநகரம்
211.51 km2 (81.66 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3
ஏற்றம்
105 m (344 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகரம்8,47,387
 • தரவரிசை4
 • அடர்த்தி5,100/km2 (13,000/sq mi)
 • பெருநகர்12,21,717
இனம்தமிழர்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
620 0xx & 621 0xx
தொலைபேசி குறியீடு0431
வாகனப் பதிவுTN-45, TN-48, TN-81
சென்னையிலிருந்து தொலைவு320 கி.மீ (207 மைல்)
இணையதளம்Trichy City Municipal Corporation

பெயர்க்காரணம்

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. "சிரா" துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.[2] 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்") எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.[3][4] வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.[3][5]

வரலாறு

 
கர்நாடகப்போரின் போது திருச்சி, 1751
 
திருச்சி,1955

முதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு பொ.ஊ.மு. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தையது.[6] முற்கால சோழர்களின் தலைநகராக, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்[7] தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[8][9][10][11] கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை [12][13] உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6-ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரைக் கோவில்களைக் கட்டினார்.[14][15][16][17] பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.[18] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார்.[19][20] மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் அரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால், அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது.[21] வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக்காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது.[22] முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது.[23].

திருச்சிராப்பள்ளியிலுள்ள அரண்மனை

மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
74.07%
முஸ்லிம்கள்
14.72%
கிறிஸ்தவர்கள்
10.89%
சைனர்கள்
0.07%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.22%
சமயமில்லாதவர்கள்
0.01%

இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரின் மக்கள்தொகை 8,47,387 ஆகும்.[30] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.38% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85% , பெண்களின் கல்வியறிவு 88.01% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியளவில் 51வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும்,[31] கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 10,22,518 ஆகவும் உள்ளது.[32] திருச்சிராப்பள்ளியில் 1,62,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[33]

மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும்[34] முசுலிம்களும் வாழ்கின்றனர்.[35] குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும்[36] சமணர்களும்[37] இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும்[38] கணிசமான மக்கள் தெலுங்கு,[39] சௌராட்டிர மொழி[40] மற்றும் கன்னட மொழி[41] பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[42] மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.[43] இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர்.[44]

புவியியலும் வானிலையும்

தட்பவெப்பநிலை வரைபடம்
திருச்சிராப்பள்ளி
பெமாமேஜூஜூ்செடி
 
 
14.3
 
30
20
 
 
5.4
 
33
21
 
 
9.5
 
35
23
 
 
50.5
 
37
26
 
 
65.2
 
37
26
 
 
34.9
 
37
27
 
 
60.6
 
36
26
 
 
85.5
 
35
26
 
 
146.6
 
35
25
 
 
191.5
 
32
24
 
 
131.8
 
30
23
 
 
84.4
 
29
21
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: இந்திய வானிலையியல் துறை[45]
வரைபட எளிமைக்காக, வரைபடத்திலுள்ள பொழிவு எண்கள்
1:10 அளவில் சுருக்கப்பட்டுள்ளன.
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.6
 
86
69
 
 
0.2
 
91
70
 
 
0.4
 
95
73
 
 
2
 
98
78
 
 
2.6
 
99
80
 
 
1.4
 
98
80
 
 
2.4
 
96
79
 
 
3.4
 
96
78
 
 
5.8
 
94
76
 
 
7.5
 
90
75
 
 
5.2
 
86
73
 
 
3.3
 
85
70
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
 
மலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம்

திருச்சிராப்பள்ளி 10°48′18″N 78°41′08″E / 10.8050°N 78.6856°E / 10.8050; 78.6856 என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[46] நகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள் (289 அடி) ஆகும்.[47] இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.[48][49] வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட 146.7 சதுர கிலோமீட்டர்கள் (56.6 sq mi) பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.[50] திருச்சியின் மேற்கே 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் காவிரியின் கழிமுகம் தொடங்குகிறது.[51] இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.[52]

காவேரி ஆற்றையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணைக் கொண்டு சேர்த்துள்ளன.[53] தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன.[53] வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.[54] வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன.[55] தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன.[48]

நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன.[49] நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன.[49] நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன.[49] கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.[56] ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.[57] தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச்சட்டம் 1974 இக்கு இணங்க ஏப்ரல் 5, 1974 இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.[58] காவேரி ஆற்றிலிருந்து நகரத்திற்கு 1,470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது.[33]

ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது.[59] மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது.[59][60] ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது.[59] பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம்.[59]

தட்பவெப்ப நிலைத் தகவல், திருச்சிராப்பள்ளி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.6
(96.1)
40.0
(104)
42.2
(108)
42.8
(109)
43.3
(109.9)
43.9
(111)
41.1
(106)
40.6
(105.1)
40.6
(105.1)
38.9
(102)
36.7
(98.1)
35.6
(96.1)
43.9
(111)
உயர் சராசரி °C (°F) 30.3
(86.5)
32.8
(91)
35.7
(96.3)
37.5
(99.5)
38.2
(100.8)
37.1
(98.8)
36.3
(97.3)
35.8
(96.4)
35.0
(95)
32.8
(91)
30.4
(86.7)
29.6
(85.3)
34.3
(93.7)
தாழ் சராசரி °C (°F) 20.6
(69.1)
21.5
(70.7)
23.5
(74.3)
26.1
(79)
26.8
(80.2)
26.6
(79.9)
26.1
(79)
25.7
(78.3)
24.9
(76.8)
24.2
(75.6)
22.8
(73)
21.2
(70.2)
24.2
(75.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14.4
(57.9)
13.9
(57)
15.6
(60.1)
18.3
(64.9)
19.4
(66.9)
18.0
(64.4)
20.1
(68.2)
20.6
(69.1)
20.6
(69.1)
18.9
(66)
16.7
(62.1)
14.4
(57.9)
13.9
(57)
மழைப்பொழிவுmm (inches) 13.3
(0.524)
3.6
(0.142)
5.3
(0.209)
29.6
(1.165)
67.0
(2.638)
38.3
(1.508)
60.5
(2.382)
69.9
(2.752)
153.4
(6.039)
153.9
(6.059)
168.0
(6.614)
81.4
(3.205)
844.2
(33.236)
ஈரப்பதம் 54 43 37 41 42 44 45 46 52 64 70 65 50
சராசரி மழை நாட்கள் 0.9 0.4 0.6 1.7 3.8 2.6 2.7 4.1 7.1 9.2 8.1 5.1 46.3
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத்துறை[61][62]

தலைநகராக்க முயற்சி

திருச்சிராப்பள்ளியின் காவிரி நதியையும், ஸ்ரீரங்கம் தீவையும் காட்டும் அகலப் பரப்பு புகைப்படம். (இப்புகைப்படத்தை முழுமையாக பார்க்க, இப்படத்தை வலமிருந்து, இடப்புறமாக இழுக்கவும்)
 
ஸ்ரீரங்கம் தீவின் வான்வழி புகைப்படம்

எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும் அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்குத் தெற்குபகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியைத் தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983 இல் திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.[63]

மாநகராட்சி நிர்வாகம்

 
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், துவாக்குடி, திருவெறும்பூர் என ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகள் (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.

பொருளாதாரம்

 
கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்குப் புகழ் பெற்றிருந்தது.[64] உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.[64] பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயின.[64] திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் [65][66][67] திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.[67][68] சுற்றுப்புற நகரான மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.[69]

இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகள் உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.[70] இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்[71] நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.[72] 1980 ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.[73]

திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக் (பொன்மலை) கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இஃது ஒன்றாகத் திகழ்கிறது.[74] இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.[75]

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965 இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது.[76][77] இதனைத் தொடர்ந்து 58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீட்டர்கள் (246,788 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[78] மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.[79] மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.[80] இங்கு தெளிந்த சாராவி,[80] அசிடால்டெஹைடு,[80] அசிட்டிக் காடி,[80] அசிடிக் அன்ஹைடிரைடு[81] மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.[82] திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.

இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் 26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.[83][84] திசம்பர் 9, 2010இல் 60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.[85][86] தமிழ்நாடு மின்னணுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.[86][87] இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.[88] திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி.[89]

திருச்சி மாநகர் பகுதிகள்

திருச்சி புறநகர் பகுதிகள்

சாலை மற்றும் பேருந்து போக்குவரத்து

 
மாநகர தொடர்பேருந்து, சத்திரம்பேருந்து நிலையம்
 
மத்திய பேருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக, இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் தொடங்கும் இடம் முடியும் இடம்
தேசிய நெடுஞ்சாலை 45 சென்னை - திருச்சி திருச்சி - திண்டுக்கல்
தேசிய நெடுஞ்சாலை 45பி திருச்சி தூத்துக்குடி
தேசிய நெடுஞ்சாலை 67 நாகப்பட்டினம் குண்டல்பேட்
தேசிய நெடுஞ்சாலை 210 திருச்சி இராமநாதபுரம்
தேசிய நெடுஞ்சாலை 227 திருச்சி சிதம்பரம்

பேருந்து நிலையங்கள்

 
மத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம்

திருச்சியைப் பொறுத்தவரை நான்கு முக்கிய நிலையைங்களாகவும் நகரில் பகுதி பேருந்து நிலையங்களாக மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.

  1. பஞ்சாப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்:இது நகரின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும்.
  2. மத்திய பேருந்து நிலையம்: இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக உள்ளது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், விமான நிலையமும் அருகாமையில் இருக்கிறது.
  3. சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது நகரப்பேருந்துகள் மற்றும் திருச்சியின் அண்மையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயங்கும் நிலையமாக உள்ளது.
  4. புதிய பேருந்து நிலையம் ஸ்ரீரங்கம்:இது வடக்கு பகுதியில் ஸ்ரீரங்கம் தீவில் இருக்கிறது ஸ்ரீரங்கம்அருகில் உள்ளது
  5. No. 1 Tollgate பேருந்து நிலையம் :இது கொள்ளிடம் ஆறு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
  6. திருவெறும்பூர் பேருந்து நிலையம்:இது மாநகர் கிழக்கு பகுதியில் அரியமங்கலம் கோட்டம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
  7. K.K நகர் பேருந்து நிலையம்: இது நகரின் தெற்கு பகுதியின் kk நகரில் அமைந்துள்ளது.
  8. சமயபுரம் பேருந்து நிலையம்  : நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
  9. துவாக்குடி பேருந்து நிலையம்:இது நகரின் கிழக்கு பகுதியில் துவாக்குடி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பேருந்து போக்குவரத்து மாற்றம்

திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும், மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.

அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மீ. இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.

பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்துச் செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப்படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும் (lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.

இரயில் போக்குவரத்து

 
திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு
  • திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம், ஸ்ரீ கங்காநகர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், புனே, வதோதரா, நாக்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், சிதம்பரம், ஈரோடு, ஹைதராபாத், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு.
  • தினசரி 37+ தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்குச் செல்கின்றன. இதில் சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து புறப்படுகிறது, மற்ற தொடருந்துகளான வைகை, பல்லவன், அனந்தபுரி மற்றும் இதர இரயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன.
  • மேலும் திருச்சியில் வழிதட இரயில் நிலையங்களான திருச்சிராப்பள்ளி டவுன் ஸ்டேசன் திருச்சிசென்னை வழிதடத்தில் மலைக்கோட்டை திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இரயில் நிலையத்தில் திருச்சி மாநகர பகுதியில் உள்ளவர்கள் சென்னை, விழுப்புரம், கடலூர், (திருப்பதி/ஆந்திர மாநிலம்), தெலுங்கானா மாநிலம்) மற்றும் வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு வசதியாக இந்த டவுன் ஸ்டேசன் இரயில் நிலையம் உதவியாக உள்ளது.
  • திருச்சியின் மைய நகர பகுதியில் திருச்சிஈரோடு வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி கோட்டை ஸ்டேசன் ஈரோடு, கோவை, சேலம் மற்றும் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் பிற வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு இந்த கோட்டை ஸ்டேசன் உதவியாக.

உள்ளது.

சந்திப்பு மற்றும் தொடர்ந்து நிலையங்கள்
  1. திருச்சிராப்பள்ளி சந்திப்பு.
  2. திருவரங்கம் தொடருந்து நிலையம்,
  3. கோட்டை தொடருந்து நிலையம்,
  4. திருவெறும்பூர் தொடருந்து நிலையம்,
  5. பொன்மலை தொடருந்து நிலையம்,
  6. டவுன் தொடருந்து நிலையம்,
  7. பாலக்கரை தொடருந்து நிலையம்
  8. மஞ்சுத்திடல் தொடருந்து நிலையம்
  9. முத்தாரசாநல்லூர் தொடருந்து நிலையம்
  10. பூங்குடி தொடருந்து நிலையம்
  11. பிச்சாண்டவர் கோவில் தொடருந்து நிலையம்
  12. உத்தமர் கோவில் தொடருந்து நிலையம்
  13. வாளடி தொடருந்து நிலையம்
  14. குமாரமங்கலம் தொடருந்து நிலையம்

தினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் [90].

வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
அனந்தபுரி விரைவு வண்டி 16724 திருவனந்தபுரம் சென்னை
பொதிகை அதிவிரைவு வண்டி 12662 செங்கோட்டை சென்னை
பல்லவன் அதிவிரைவு வண்டி 12606 காரைக்குடி சென்னை
வைகை அதிவிரைவு வண்டி 12636 மதுரை சென்னை
சேது அதிவிரைவு வண்டி 22661 இராமேசுவரம் சென்னை
குருவாயூர் விரைவு வண்டி 16127 குருவாயூர் சென்னை
சென்னை 06804 செங்கோட்டை சென்னை
மங்களூர் விரைவு வண்டி 16159 மங்களூர் சென்னை
மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி 16178 திருச்சிராப்பள்ளி சென்னை
திருச்செந்தூர் விரைவு வண்டி 16736 திருச்செந்தூர் சென்னை
நெல்லை அதிவேக விரைவு வண்டி 12632 திருநெல்வேலி சென்னை
கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி 12634 கன்னியாகுமரி சென்னை
முத்துநகர் (பேர்ல் சிட்டி) அதிவேக விரைவு வண்டி 12694 தூத்துக்குடி சென்னை
சோழன் விரைவு வண்டி 16854 திருச்சிராப்பள்ளி சென்னை
பாண்டியன் அதிவேக விரைவு வண்டி 12638 மதுரை சென்னை
போட்மெயில் விரைவு வண்டி 16851 இராமேசுவரம் சென்னை
மைசூர் விரைவு வண்டி 16231 மயிலாடுதுறை மைசூர்

மைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது.

விமான போக்குவரத்து

 
திருச்சி வானூர்தி நிலையம்

திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர், தோஹா, மஸ்கட் மற்றும் குவைத் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.

திருத்தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

ஆடிப்பெருக்கு விழா

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

கல்வி

கல்லூரிகள்

 
துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம்

திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

சட்டப் பல்கலைக்கழகம்/ கல்லூரிகள்

  • தமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.
  • அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

பொறியியல் கல்லூரிகள்

வேளாண்மைக் கல்லூரிகள்

  • அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
  • மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
  • வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சி.

கல்வியியல் கல்லூரிகள்

மருத்துவக் கல்லூரிகள்

பள்ளிகள்

  • திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • ஈ.ஆர். மேனிலைப் பள்ளி
  • பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி
  • ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி
  • புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி
  • புனித வளனார் மேனிலைப்பள்ளி
  • தேசிய மேனிலைப்பள்ளி
  • கேம்பியன் மேனிலைப்பள்ளி
  • ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி
  • காஜா மியான் மேனிலைப்பள்ளி
  • திரு இருதய மேல்நிலைப்பள்ளி
  • பொன்னையா மேல்நிலைப்பள்ளி
  • இரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை
  • புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ
  • இந்திய மேல்நிலைப்பள்ளி
  • அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி
  • படைக்கல தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி
  • கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T
  • கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P

விக்கிக்காட்சியகம்

குறிப்புகள்

  1. Trichinopoly என்று பிரித்தானிய வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Primary Census Abstract - Urban Agglomeration". Registrar General and Census Commissioner of India. Archived from the original (XLS) on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. ஆதி (7 சூன் 2017). "எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2017.
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hemingwayp2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hobsonjobson என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. Hemingway, Frederick Ricketts (1907). Madras District Gazetteers: Trichinopoly. Vol. 1. Government Press. Archived from the original on 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  6. Thani Nayagam, p 324
  7. Sastri, p 22
  8. Sastri, p 19
  9. Beck, p 40
  10. உறையூர் சோழர் தலைநகரம் - தி இந்து
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-02-08. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  13. பிரித்தானிகா கல்லணை கட்டப்பட்டது 2 ஆம் நூற்றாண்டு
  14. Kuppuram, p 105
  15. Sastri, p 105
  16. Beck, p 42
  17. Beck, p 92
  18. Sastri, p 438
  19. Aiyangar, p 99
  20. Lal, pp 251-252
  21. http://www.templenet.com/Tamilnadu/df001.html
  22. http://news.oneindia.in/2006/07/16/srirangam-temple-to-honour-tirupathi-temple-with-vasthirams-1153040574.html[தொடர்பிழந்த இணைப்பு]
  23. Sathianathaier, p 234
  24. Burn & Cotton 1908, ப. 43.
  25. Census of India 1941.
  26. Report 1966, ப. 226.
  27. Rajendran, Arumugam & Chandrasekaran 2002, ப. 3.
  28. Malayala Manorama 2007, ப. 707.
  29. "Proceedings of the Commissioner of Municipal Administration" (PDF). Commissionerate of Municipal Administration. 22 July 2014. p. 4. Archived (PDF) from the original on 2 October 2015. பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  30. "2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  31. "Table 2: Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals. Government of India. பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.
  32. "Table 3: Urban agglomerations having population 1 Lakh and above" (PDF). Provisional Population Totals. Government of India. பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.
  33. 33.0 33.1 Tiruchirappalli shows the way (PDF). Wateraid India. 2008. p. 4. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  34. Chockalingam, K. (1979). Census of India, 1971: Tamil Nadu. Government of India. p. 88.
  35. "Bakrid celebrated in Trichy with gaiety". The Hindu (India). 10 December 2008 இம் மூலத்தில் இருந்து 2008-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081214152149/http://www.hindu.com/2008/12/10/stories/2008121059380300.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  36. "Lt. Governor felicitated". The Hindu (India). 29 December 2010 இம் மூலத்தில் இருந்து 2011-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110103033615/http://www.hindu.com/2010/12/29/stories/2010122964040300.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  37. "Jain Sangh celebrates Mahaveer Jayanthi". The Hindu (India). 17 April 2011 இம் மூலத்தில் இருந்து 2011-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110423023500/http://www.hindu.com/2011/04/17/stories/2011041750960200.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  38. Sen, p 606
  39. Ramappa and Sudershan, p 116
  40. Ramesh, T. A. (15 January 2006). "The Unwritten History of the Saurashtrians of South India". boloji.com இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100114184221/http://boloji.com/history/039.htm. 
  41. Muthanna, Preface, p iii
  42. Thurston, Edgar (1913). Provincial Geographies of India Vol 4: The Madras Presidency with Mysore, Coorg and Associated States. Cambridge University. p. 123.
  43. "Sri Lankan Tamil refugees wish for Indian citizenship". The Hindu (India). 3 November 2009 இம் மூலத்தில் இருந்து 2012-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323011206/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article42734.ece. பார்த்த நாள்: 2011-05-11. 
  44. Deefholts, Glenn; Acharya, Quentine (2006). The way we were: Anglo-Indian chronicles. Calcutta Tiljallah Relief Inc. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9754639-3-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9754639-3-2.
  45. "Climatology of Tiruchirappalli". இந்திய வானிலையியல் துறை. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  46. "Tiruchirappalli". Falling Grain genomics Inc. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  47. "Weather data for Tiruchchirappalli, India". Canty and Associates LLC. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  48. 48.0 48.1 Imperial Gazetteer of India, Vol 24, p 26
  49. 49.0 49.1 49.2 49.3
  50. Abram, p 489
  51. Sharma, p 117
  52. Moore, p 61
  53. 53.0 53.1 Imperial Gazetteer of India, Vol 24, p 32
  54. Imperial Gazetteer of India, Vol 24, p 33
  55. Geological Survey of India, p 104
  56. Superintendent, Census Operations, p 215
  57. Ayyar, p 453
  58. "Tiruchirappalli Local Planning Authority – An organisation". Tiruchirappalli Local Planning Authority. பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.
  59. 59.0 59.1 59.2 59.3 Annesley, pp 62-64
  60. Moore, p 88
  61. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M204. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2020.
  62. "Station: Tiruchirapalli (A) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 745–746. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2020.
  63. தமிழகத்தின் புதிய தலைநகரம் "திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ
  64. 64.0 64.1 64.2 Imperial Gazetteer of India, Vol 24, p 36
  65. Saqaf, Syed Muthathar (28 December 2010). "Arrival of onions from Maharashtra stabilizes price". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 2010-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101231072338/http://www.hindu.com/2010/12/28/stories/2010122854770800.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  66. "Market to be shifted". The Hindu (India). 1 June 2010 இம் மூலத்தில் இருந்து 2010-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100606024606/http://www.hindu.com/2010/06/01/stories/2010060158570100.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  67. 67.0 67.1 "Trichy a land of tradition". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  68. Balaganessin, M. (4 May 2005). "Bitter fall in mango prices, thanks to huge arrivals". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 2005-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050507170630/http://www.hindu.com/2005/05/04/stories/2005050415600300.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  69. Ganesan, S. (17 October 2008). "Power holiday stifles output of rice mills". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2013-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023060049/http://www.hindu.com/2008/10/17/stories/2008101754900500.htm. பார்த்த நாள்: 2011-12-22. 
  70. "Indian Ordnance Factories: Ordnance Factory Tiruchirapalli". Ordnance Factory Board, Defence Ministry, Government of India. Archived from the original on 2011-04-23. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  71. "Indian Ordnance Factories: Heavy Alloy Penetrator Project". Ordnance Factory Board, Defence Ministry, Government of India. Archived from the original on 2011-05-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.
  72. Ramakrishnan, P. (2007). Powder metallurgy: processing for automotive, electrical/electronic and engineering industry ; [International Conference on Powder Metallurgy for Automotive and Engineering Industry ... at the Renaissance Mumbai Hotel and Convention Center during Feb. 3 – 6, 2005]. New Age International. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-2030-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-2030-2.
  73. Radhakrishnan, P. (2000). Cad/cam/cim. New Age International. p. 656. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1248-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1248-2.
  74. Caplan, Lionel (2003). Children of Colonialism: Anglo-Indians in a Postcolonial World. Berg Publishers. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85973-632-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-632-6.
  75. Rajaram, P. (11 April 2008). "Golden Rock railway workshop rolls out stainless steel wagon prototype". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 2008-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080414210046/http://www.hindu.com/2008/04/11/stories/2008041156540200.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  76. Srinivasan. "Bharat Heavy Electricals Limited". Case Studies In Marketing: The Indian Context 4Th Ed. PHI Learning Pvt. Ltd. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-203-3543-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-3543-1.
  77. Ahmad, Mohd Rizwan (2003). Inflation accounting practices in India's corporate sector. Atlantic Publishers & Distributors. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-269-0216-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0216-3.
  78. Maheshwari, R. C.; Chaturvedi, Pradeep (1997). Bio-energy for rural energisation: proceedings of the National Bio-Energy Convention-95 on Bio-Energy for Rural engergisation, organised by Bio-Energy Society of India, during December 4–15, 1995 at I.I.T. New Delhi. Concept Publishing Company. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-670-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-670-3.
  79. Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2). Superintendent, Government Press. 1998. p. 539.
  80. 80.0 80.1 80.2 80.3 Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2). Superintendent, Government Press. 1998. p. 553.
  81. Manufacture of Narcotic Drugs, Psychotropic Substances and Their Precursors. United Nations Publications. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-1-048082-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-048082-6.
  82. "Demand No. 37: Prohibition and Excise" (PDF). Home, Prohibition and Excise Department. 2007–08. p. 12. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12. {{cite web}}: Check date values in: |year= (help)
  83. Krishnamoorthy, R. (10 December 2010). "Software exports from Tiruchi set to rise". The Hindu. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/software-exports-from-tiruchi-set-to-rise/article943525.ece. பார்த்த நாள்: 21 November 2013. 
  84. "Trichy: IT infrastructure to pep up property prices". The Economic Times. 10 January 2010. http://economictimes.indiatimes.com/features/property/trichy-it-infrastructure-to-pep-up-property-prices/articleshow/5429292.cms. பார்த்த நாள்: 11 May 2011. 
  85. "Tiruchi IT Park commissioned". The Hindu (India). 10 December 2010 இம் மூலத்தில் இருந்து 2010-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101212220301/http://www.hindu.com/2010/12/10/stories/2010121061490100.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  86. 86.0 86.1 "Tiruchi gets IT park". The Hindu (India). 10 December 2010 இம் மூலத்தில் இருந்து 2010-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101213205513/http://www.hindu.com/2010/12/10/stories/2010121059100100.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  87. "Tamil Nadu / Tiruchi News : ELCOT to build 50,000 sq.ft. of office space in Tier II cities". The Hindu (India). 19 July 2008 இம் மூலத்தில் இருந்து 2008-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080725093732/http://www.hindu.com/2008/07/19/stories/2008071953840500.htm. பார்த்த நாள்: 2011-05-11. 
  88. "Infosys eyeing Tier-II cities for expansion". The Economic Times (India). 28 July 2009. http://articles.economictimes.indiatimes.com/2009-07-28/news/27653675_1_tier-ii-software-major-infosys-managing-director-s-gopalakrishnan. பார்த்த நாள்: 2011-05-11. 
  89. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 29 சூன் 2017. Archived from the original on 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
  90. கிளியர்டிரிப் தளத்தில் திருச்சி வழியாக சென்னை செல்லும் தொடருந்துகளை தேடும் பொழுது கிடைத்த முடிவுகள்[தொடர்பிழந்த இணைப்பு]
பிழை காட்டு: <ref> tag with name "FOOTNOTERajendranArumugamChandrasekaran20023" defined in <references> is not used in prior text.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சிராப்பள்ளி&oldid=4079176" இலிருந்து மீள்விக்கப்பட்டது