திருத்தணி

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம்

திருத்தணி (ஆங்கிலம்:Tiruttani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி வட்டத்தில் இருக்கும் ஓர் நகராட்சி ஆகும். இங்குள்ள முருகன் கோயில், ஆறுபடை வீடுகளுள் ஒன்று.

திருத்தணி
திருத்தணி
இருப்பிடம்: திருத்தணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E / 13.18; 79.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் திருத்தணி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர் திரு.சவுந்தர்ராஜன்
சட்டமன்றத் தொகுதி திருத்தணி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சந்திரன் (திமுக)

மக்கள் தொகை 44,781 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


76 மீட்டர்கள் (249 அடி)

குறியீடுகள்
இணையதளம் http://municipality.tn.gov.in/thiruthani/

அமைவிடம் தொகு

சென்னை - திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கிமீ தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் அரக்கோணம், நகரி, சோளிங்கர் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் எழுத்தறிவு 84.06% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] திருத்தணி நகரம், திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E / 13.18; 79.63 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து தொகு

திருத்தணி நகரில் பேருந்து சேவைகளின் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், வந்தவாசி, திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி, மதுரை, பழனி, திண்டுக்கல், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. Tiruttani Population Census 2011
  5. "Tiruttani". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Tiruttani.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தணி&oldid=3653816" இருந்து மீள்விக்கப்பட்டது