அரக்கோணம் (Arakonam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் வட்டம் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இங்கு அரக்கோணம் சந்திப்பு நிலையம் உள்ளது.

அரக்கோணம்
—  முதல் நிலை நகராட்சி  —
அரக்கோணம்
இருப்பிடம்: அரக்கோணம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°04′N 79°24′E / 13.06°N 79.4°E / 13.06; 79.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் அரக்கோணம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி அரக்கோணம்
சட்டமன்ற உறுப்பினர்

சு. ரவி (அதிமுக)

மக்கள் தொகை 78,395 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு

மக்கள் வகைப்பாடு

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 78,395 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.22%, இசுலாமியர்கள் 9.83%, கிறித்தவர்கள் 7.95%, தமிழ்ச் சமணர்கள் 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[3]

சிறப்புகள்

தொகு
  • இந்த நகரின் பழமை வாய்ந்த சி எஸ் ஐ ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
  • இந்தியக் கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் ராஜாளி விமான தளம் இங்கு அமைந்துள்ளது.
  • பிதாகரஸ் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் கணிதம் கற்றார். அவர் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கணித தேற்றங்களில் ஒன்று தான் பிதாகரஸ் தேற்றம்.[1][சான்று தேவை]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கோணம்&oldid=3855223" இலிருந்து மீள்விக்கப்பட்டது