இராணிப்பேட்டை மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.

இராணிப்பேட்டை (Ranipet District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[4][5] தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார். [6]

இராணிப்பேட்டை மாவட்டம்
RANIPET DISTRICT
மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தின் அமைவிடம்
இராணிப்பேட்டை மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
நிறுவிய நாள்28 நவம்பர் 2019 [1]
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
மண்டலம்தொண்டை நாடு
அரசு
 • வகைமாவட்டம்
 • Bodyஇராணிப்பேட்டை மாவட்டம்
 • பெரிய நகரம்அரக்கோணம்
 • மக்களவைத் தொகுதிகள்அரக்கோணம்
 • சட்டமன்றத் தொகுதிகள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.இராணிப்பேட்டை 4.சோளிங்கர்
 • மாவட்ட ஆட்சியர்திவ்யதர்ஷினி, இ.ஆ.ப.,[2]
 • வட்டங்கள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.நெமிலி 4.வாலாஜா 5.கலவை 6.சோளிங்கர்
பரப்பளவு[3]
 • மொத்தம்2,232.34 ச.கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,10,277
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 73
பிற பெரிய நகரங்கள்1.ஆற்காடு 2.வாலாசாபேட்டை
வருவாய் கோட்டங்கள்1.இராணிப்பேட்டை 2.அரக்கோணம்
நகராட்சிகள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.இராணிப்பேட்டை 4.வாலாஜாபேட்டை 5. மேல்விஷாரம்
காவல்துறை கண்காணிப்பாளர்திரு.மயில்வாகனண்
இணையதளம்https://ranipet.nic.in

மாவட்ட எல்லைகள்தொகு

இராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம்தொகு

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது. [7] [8]

வருவாய் வட்டங்கள்தொகு

 1. அரக்கோணம் வட்டம்
 2. வாலாஜா வட்டம்
 3. நெமிலி வட்டம்
 4. ஆற்காடு வட்டம்
 5. கலவை வட்டம்
 6. சோளிங்கர் வட்டம்

உள்ளாட்சி நிர்வாகம்தொகு

நகராட்சிகள்தொகு

 1. அரக்கோணம்
 2. ஆற்காடு
 3. இராணிப்பேட்டை
 4. வாலாஜாபேட்டை
 5. மேல்விஷாரம்

பேரூராட்சிகள்தொகு

 1. கலவை
 2. காவேரிப்பாக்கம்
 3. நெமிலி
 4. சோளிங்கர்
 5. திமிரி
 6. பனப்பாக்கம்
 7. தக்கோலம்
 8. விளாப்பாக்கம்

ஊராட்சி ஒன்றியங்கள்தொகு

 1. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்
 2. வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
 3. நெமிலி ஊராட்சி ஒன்றியம்
 4. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்
 5. திமிரி ஊராட்சி ஒன்றியம்
 6. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்
 7. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
 8. கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்

அரசியல்தொகு

இம்மாவட்டப் பகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் இம்மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிதொகு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு