காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் (ஆங்கில மொழி: Kaveripakkam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காவேரிப்பாக்கத்தில் உள்ளது.
காவேரிப்பாக்கம் | |
அமைவிடம் | 12°54′19″N 79°27′43″E / 12.9053°N 79.4620°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | நெமிலி |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | காவேரிப்பாக்கம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,583 (2011[update]) • 2,815/km2 (7,291/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi) • 165 மீட்டர்கள் (541 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/kaveripakkam |
அமைவிடம்
தொகுகாவேரிப்பாக்கம், வேலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையங்கள், 15 கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கர் மற்றும் 17 கி.மீ. தொலைவில் உள்ள 'வாலாஜாபேட்டை சாலை' ஆகும். இதன் கிழக்கில் காஞ்சிபுரம் 35 கி.மீ.; மேற்கில் வாலாசாபேட்டை 15 கி.மீ.; வடக்கில் அரக்கோணம் 40 கி.மீ. மற்றும் தெற்கில் செய்யாறு 50 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும்.[1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,323 வீடுகளும், 14,583 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.28% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
புகழ்பெற்ற வாசிகள்
தொகு- வாசுகி (பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன்னர்), தமிழ்ப் புலவர் வள்ளுவரின் மனைவி[3]
- அரியநாத முதலியார், விஜயநகர அரசின் அரசப் பிரதிநிதி[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ காவேரிப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Kaveripakkam Population Census 2011". Archived from the original on 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
- ↑ G. Devaneya Paavaanar (2017). திருக்குறள் [Tirukkural: Tamil Traditional Commentary] (4 ed.). Chennai: Sri Indhu Publications. pp. 32–33.