நெமிலி வட்டம்

நெமிலி வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் அரக்கோணம் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016-இல் நிறுவப்பட்டது. [1]இதன் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் நெமிலியில் இயங்குகிறது.

நெமிலி வட்டம் நெமிலி, காவேரிப்பாக்கம், பானாவரம் மற்றும் பனப்பாக்கம் என 4 குறு வட்டங்களையும், 77 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. [2]நெமிலி ஊராட்சி ஒன்றியம் மற்றும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/jan/20/நெமிலி-வட்டத்தில்-இரு-ஊராட்சிகளை-இணைக்கக்-கோரி-வட்டாட்சியரிடம்-மனு-2635042.html
  2. நெமிலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமிலி_வட்டம்&oldid=3859632" இலிருந்து மீள்விக்கப்பட்டது