டெல்லி கேட் (வேலூர்)

டெல்லி கேட் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள, ஆற்காடு நகரில் அமைந்துள்ளது. இது ஆற்காட்டில் அமைந்துள்ளதால், இதனை ஆற்காடு டெல்லி கேட் என்றும் அழைக்கின்றனர். வேலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் இந்த வாயிலும் ஒன்றாகும்.

டெல்லி கேட் (ஆற்காடு)

அமைவிடம்

தொகு

ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு புறவழிச் சாலையில் உள்ள ஒரு உயர்ந்த நுழைவுவாயில் டெல்லி கேட் என்றழைக்கப்படுகிறது. 1751இல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது.[1] இது ஆற்காட்டின் ஒரு பகுதியாகும். ஆற்காடு கோட்டையின் பிரதான நுழைவாயிலாக இது விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், முகலாய ஆளுநரான டாட் கான் பன்னியின் கட்டடத்தின் ஒரு பகுதியாக இந்த வாயில் இருந்தது.

அமைப்பு

தொகு

இந்த நுழைவாயில் இரண்டு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. கீழ்தளத்தில் உள்ள நுழைவாயில் இஸ்லாமிய வளைவு அமைப்பில் காணப்படுகிறது.[2][3][4][5][6] இந்த வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளன. நுழைவு வாயிலின் வெளிப்புறம் பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியிலும் சிறு சிறு அறைகள் இருந்ததற்கான தடயங்களும் உள்ளன. வாயிலின் மேல்தளத்தில் ஓர் அலங்கம் காணப்படுகிறது. எதிரிப் படைகள் வருவதை வேவுபார்க்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி கேட் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[7] ஆற்காடு முற்றுகையிடப்பட்டபோது, ராபர்ட் கிளைவ் செய்த மறக்கமுடியாத பாதுகாப்பின் தளமாக இருந்தது.

வரலாறு

தொகு

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைவதற்குக் காரணமான வெற்றியைக் கொண்டாடுகின்ற வகையில் வடக்கில் மொகலாய சாம்ராஜ்யம் அமைந்த டெல்லியை நோக்கி அதனைக் கைப்பற்றுவதுதற்கான ஒரு தொடக்கமாகக் காட்டுவதற்காக இந்த வாயில் அமைக்கப்பட்டது.[7] வரலாற்று ரீதியாக, இப்பகுதி போர்கள் பல நடக்கும் இடமாக இருந்தது. இந்தச் சூழல் ஆற்காட்டைச் சுற்றி கோட்டைகட்டும் நிலையை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் முகலாய நவாப் மராத்தியரிடம் இருந்து இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்.[எப்போது?][யார்?] தாட் கான் பன்னி என்பவர் 1698 இல் ஜுல்ப்காஹர் அலி கானால் (அவுரங்கசீப்பின் தளபதி) ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1710 ஆம் ஆண்டில், மொஹமட் ஸாயீத் கடைசி மொகலாய ஆளுநராக இருந்தார், இவர் கர்னாநாடக நவாபாக முதலாம் சாடடூல்லா கான் என்ற பட்டத்துடன் நியமிக்கப்பட்டார்.[8] இவர் தன் தலைநகரை செஞ்சியில் இருந்து ஆற்காடுக்கு மாற்றினார்.[9][ஏன்?]

ஆர்க்காட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்காக கொண்டுவர போராடிய வெவ்வேறு வம்சங்களுக்கிடையில் நீண்டகால மோதல்களால் இருந்ததால், ஆர்காடானது இடையில் வந்த பிரித்தானியர் மற்றும் பிரஞ்சுக்கார்கள் வசம் வந்தது. என்றாலும் பிரிட்டித்தானியர் மற்றும் பிரெஞ்சு படைகளுக்கு இடையே நடந்த போரானது தென்னிந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்துக்காக மட்டுமே இருந்தது. ஆர்காட்டைக் கைப்பற்ற இராபர்ட் கிளைவ் கட்டுப்பாட்டிலான பிரித்தானியப் படைகளின் போர் என்பது பிரித்தானியரால் நடத்தப்பட்ட மிக் குறிப்பிடத்தக்கப் போர்களில் ஒன்றாக இருந்தது. இந்த  முற்றுகை ஐம்பது நாட்கள் நீடித்தது, 15 நவம்பர் 1751 அன்று முடிவுக்கு வந்தது.

1783 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் ஆற்காட்டின் முதன்மை அரணாக இருந்த பழைய செங்கல் மதில் சுவர்கள் அழிக்கப்பட்டன, அதன் அடித்தளங்கள் இன்னும் காணப்படலாம்.   இன்று, முதலாம் சதாத்துல்லா கான் மற்றும் ஜமா மஸ்ஜித் கல்லறைகள் என்று அக்காலத்திய கட்டுமானங்கள் அக்காலத்தின் சாட்சியாக எஞ்சியுள்ளன.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர், வேலூர் சுற்றுலா
  2. "Expo at fort brings alive relics of past". இந்தியன் எக்சுபிரசு. 20 August 2013. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Expo-at-fort-brings-alive-relics-of-past/2013/08/20/article1742447.ece#.UyNB2tL7C8A. 
  3. "'Arcot' – The Reason We Speak English". Whostory.wordpress.com.
  4. "Delhi Gate Arcot Vellore". Focloc.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-06-16.
  5. "Robert Clive, 'Clive of India', wins the battle that is said to have begun British rule in India". Britishbattles.com.
  6. "The Delhi Gate: Arcot Vellore". Team BHP.com.
  7. 7.0 7.1 "இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட ஆற்காடு டெல்லிகேட், தினகரன், 26 மார்ச் 2017". Archived from the original on 2017-03-31. பார்க்கப்பட்ட நாள் 2017-06-14.
  8. Advanced Study in the History of Modern India 1707-1813 By Jaswant Lal Mehta. Sterling Publishers.
  9. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Palaniappa Brothers.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கேட்_(வேலூர்)&oldid=3729408" இலிருந்து மீள்விக்கப்பட்டது