முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆற்காடு (ஆங்கிலம்:Arcot), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டம் மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.

ஆற்காடு
—  முதல் நிலை நகராட்சி  —
ஆற்காடு
இருப்பிடம்: ஆற்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°54′N 79°20′E / 12.9°N 79.33°E / 12.9; 79.33ஆள்கூற்று: 12°54′N 79°20′E / 12.9°N 79.33°E / 12.9; 79.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் ஆற்காடு வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி ஆற்காடு
சட்டமன்ற உறுப்பினர்

ஈஸ்வரப்பன் (திமுக)

மக்கள் தொகை 70 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


164 மீட்டர்கள் (538 ft)

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°54′N 79°20′E / 12.9°N 79.33°E / 12.9; 79.33 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 164 மீட்டர் (538 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆற்காடு மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொருளாதாரம்தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

ஆற்காடு சுற்றியுள்ள இராணிப்பேட்டை நகரம் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும்.

கல்விதொகு

இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் ஆற்காடு சுற்றியுள்ள கல்வி பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

போக்குவரத்துதொகு

சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது.இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 46 ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 ராணிப்பேட்டை – சென்னை மற்றும் கடலூர் – சித்தூர் சாலைகளை இணைத்துச் செல்கிறது. சென்னையிலிருந்து ஆரணிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆற்காடு வழியாக தான் செல்ல முடியும்.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காட்லிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி, சேலம், சித்தூர், ஓசூர், நாகர்கோவில், கடலூர், கர்னூல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமாரி, ஆரணி, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கல்பாக்கம்,குடியாத்தம், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு,கிருஷ்ணகிரி, செஞ்சி மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு வேலூருடன் இணைக்கிறது.

சென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம் சென்னை, பெங்களூர், திருப்பதி மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள் இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன. விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ஷிரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்முதாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா இரயில் நிலையம்,புது தில்லி இரயில் நிலையம், கோயம்புத்தூர்,குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.

விமான நிலையம், இங்கிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 250 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "Arcot". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. "இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு&oldid=2814663" இருந்து மீள்விக்கப்பட்டது