கோழிக்கோடு
கோழிக்கோடு (மலையாளம்:കോഴിക്കോട്, ஆங்கிலம்:Kozhikode) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
கோழிக்கோடு மாநகராட்சி
കോഴിക്കോട് Kozhikode / Calicut கள்ளிக்கோட்டை | |
---|---|
மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): மசாலா நகரம், சிற்ப நகரம், சத்திய நகரம் | |
கோழிக்கோடு (கேரளா) | |
ஆள்கூறுகள்: 11°15′32″N 75°46′49″E / 11.2588°N 75.7804°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
அரசு | |
• மேயர் | வி.கே.சி. மம்மது கோயா[2] |
• ஆட்சித் தலைவர் | என். பிரசாந்த்[3] |
• இந்திய மக்களவை உறுப்பினர் | எம். கே. ராகவன் |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 128 km2 (49 sq mi) |
ஏற்றம் | 34.47 m (113.09 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 5,50,440[1] |
• பெருநகர் | 20,30,519 |
[5] | |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 6730xx |
தொலைபேசி குறியீடு | +91495xxxxxxx |
வாகனப் பதிவு | KL 11,KL 18,KL 56, KL 57, |
பாலினம் | 0.915 ♂/♀[5] |
கல்வியறிவு | 96.8%[5] |
இணையதளம் | www |
பெயர்க்காரணம்
தொகுகோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும் தமிழர்களால் கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பெற்றது. ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் பிறராலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர்.
புவியியல்
தொகுகடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 34.47 மீட்டர் (113.09 அடி) உயரத்தில், 11°15′32″N 75°46′49″E / 11.2588°N 75.7804°E[2] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 436,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கோழிக்கோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மலையாளமே இந்நகர மக்களின் தாய்மொழியும், ஆட்சிமொழியும் ஆகும். எனினும், பெரும்பான்மையானவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று அறியப்படுகிறது.
ஊடகம்
தொகுமுக்கிய மலையாள நாளிதழ்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அனைத்திந்திய வானொலி மற்றும் தனியார் வானொலிகளும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்களே.
கல்வி
தொகுஇங்குள்ள நூறு சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
தொகு- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW32C-01%20MDDS.XLS
- ↑ "Mammed Koya to be Kozhikode Mayor". தி இந்து (Chennai, India). 18 November 2015. http://www.thehindu.com/news/cities/kozhikode/mammed-koya-to-be-kozhikode-mayor/article7890473.ece. பார்த்த நாள்: 18 November 2015.
- ↑ "District Collectors/ADMs/SPs". கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2012.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ 5.0 5.1 5.2 "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)