2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

14வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
(இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (2001 Census of India) 1871 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பின் இது 14வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.[1]

14வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

← 1991
2011 →

பொதுத் தகவல்
நாடு இந்தியா
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை1,028,737,436 (21.5%)
அதிக மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்உத்தரப் பிரதேசம் (166,053,600)
குறைந்த மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்சிக்கிம் (541,902)

2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை 102,87,37,436 (நூற்றியிரண்டு கோடியே 87 இலட்சத்து முப்பத்தி ஏழாயிரத்தி நானூற்றி முப்பத்தி ஆறு) ஆகும். இதில் ஆண்கள் 53,22,23,090 ஆகவும், பெண்கள் 49,65,14,346 ஆகவும் இருந்தனர்.[2] 1991 - 2001 இடையே பத்தாண்டுகளில் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி 18,23,10,397 (21.5%) ஆக உயர்ந்துள்ளது.[3]

சமயவாரியாக மக்கள்தொகை

தொகு

2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்துக்கள் 82.75 கோடியாகவும் (80.45%) மற்றும் இசுலாமியர்கள் 13.8 கோடியாகவும் (13.4%) இருந்தனர்.[4][5] மேலும் இந்தியாவில் 108 சமயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.[6] 70 இலட்சம் மக்கள் சமயம் அற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.[7]

2001- பெரிய சமயங்களின் மக்கள்தொகை
சமயங்கள் மக்கள்தொகை
% 2001
இந்துக்கள் 80.45%
இசுலாமியர்கள் 13.4%
கிறித்தவர்கள் 2%
சீக்கியர்கள் 1.89%
பௌத்தர்கள் 0.74%
முன்னோர் வழிபாட்டினர் & பிறர் 0.43%
சமணர்கள் 0.46%

மொழிவாரியாக மக்கள்தொகை பரம்பல்

தொகு

வட இந்தியாவில் பெரும்பான்மையாக இந்தி மொழி பரவலாக பயிலப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் 53.6% இந்தி மொழி அறிந்திருந்தனர். 41% வட இந்திய மக்கள் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்டிருந்தனர்.[8][9][10] 12.5% மக்கள் ஆங்கில மொழி அறிவு கொண்டிருந்தனர்.[11] 25.50 கோடி மக்கள் (24.8%) இரண்டு மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர்.[12] இந்தியவில் 780 மொழிகளை தாய்மொழியாக மக்கள் பேசினர். இது உலக அரங்கில் பப்புவா நியூ கினியாவுக்கு (839) அடுத்து இரண்டாமிடம் ஆகும்.[13]

முதல், இரண்டு மற்றும் மூன்றாம் மொழிகள் பேசுபவர்கள்
மொழிகள் முதல் மொழி
பேசுபவர்கள்[14][15]
முதல் மொழி
பேசுவர்கள் % [16]
இரண்டாம் மொழி
பேசுபவர்கள்[15]
மூன்றாம் மொழி
பேசுபவர்கள் [15]
மொத்தம்[15][17] மொத்த மக்கள்தொகையில் மொழி பேசுபவர்கள் %[16]
இந்தி 422,048,642 41.03 98,207,180 31,160,696 551,416,518 53.60
ஆங்கிலம் 226,449 0.02 86,125,221 38,993,066 125,344,736 12.18
வங்காளம் 83,369,769 8.10 6,637,222 1,108,088 91,115,079 8.86
தெலுங்கு 74,002,856 7.19 9,723,626 1,266,019 84,992,501 8.26
மராத்தி 71,936,894 6.99 9,546,414 2,701,498 84,184,806 8.18
தமிழ் 60,793,814 5.91 4,992,253 956,335 66,742,402 6.49
உருது 51,536,111 5.01 6,535,489 1,007,912 59,079,512 5.74
கன்னடம் 37,924,011 3.69 11,455,287 1,396,428 50,775,726 4.94
குஜராத்தி 46,091,617 4.48 3,476,355 703,989 50,271,961 4.89
ஒடியா 33,017,446 3.21 3,272,151 319,525 36,609,122 3.56
மலையாளம் 33,066,392 3.21 499,188 195,885 33,761,465 3.28
சமசுகிருதம் 14,135 <0.01 1,234,931 3,742,223 4,991,289 0.49

புள்ளி விவரத் தொகுப்பு

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vijayanunni, M. (26–29 August 1998). "Planning for the 2001 Census of India based on the 1991 Census" (PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, USA: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original (PDF) on 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  2. "Home/Census Data 2001/India at a glance". New Delhi: Registrar General & Census Commissioner, India, Ministry of Home Affairs. 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  3. "Home/Census Data 2001/India at a glance". New Delhi: Registrar General & Census Commissioner, India, Ministry of Home Affairs. 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  4. Abantika Ghosh , Vijaita Singh (24 January 2015). "Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower". Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  5. "With current trends, it will take 220 years for India's Muslim population to equal Hindu numbers".
  6. "Fewer minor faiths in India now, finds Census; number of their adherents up".
  7. "Indian rationalism, Charvaka to Narendra Dabholkar".
  8. "These four charts break down India's complex relationship with Hindi".
  9. "Nearly 60% of Indians speak a language other than Hindi".
  10. 2001 census data
  11. 9 கோடி மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினர்."காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-05-14. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03., Issue 10, 2003, pp. 8–10, (Feature: Languages of West Bengal in Census and Surveys, Bilingualism and Trilingualism) and Tropf, Herbert S. 2004. India and its Languages பரணிடப்பட்டது 2008-03-08 at the வந்தவழி இயந்திரம். Siemens AG, Munich.)
  12. "Hindi migrants speaking Marathi rise to 60 lakh".
  13. "Seven decades after Independence, many small languages in India face extinction threat".
  14. ORGI. "Census of India: Comparative speaker's strength of Scheduled Languages-1971, 1981, 1991 and 2001".
  15. 15.0 15.1 15.2 15.3 S, Rukmini. "Sanskrit and English: there's no competition".
  16. 16.0 16.1 http://www.censusindia.gov.in/Census_Data_2001/India_at_glance/popu1.aspx
  17. "Indiaspeak: English is our 2nd language - Times of India".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Census of India, 2001
என்பதில் ஊடகங்கள் உள்ளன.