வட இந்தியா என்பது வரையறையற்ற வார்த்தைகளில் சொன்னால் இந்தியாவின் வடபகுதி. வட இந்தியா என்பதற்குப் பல வரையறைகள் சொல்லப்படுகின்றன.

வட இந்தியா
North India
இந்திய அரசின் வரையறைப்படி வடக்கு மற்றும் வட மத்திய பகுதிகளிலுள்ள மாநிலங்கள்
மக்கட்தொகை504,196,432
பரப்பளவு1,624,160 km2 (627,090 sq mi)
நேரவலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்டு, அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப்பிரதேசம், பீகார், சார்கண்ட், சத்தீசுக்கர் மற்றும் மத்தியப் பிரதேசம்
அதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2008)தில்லி, கான்பூர், லக்னௌ, செய்ப்பூர், பட்னா, சண்டிகர், & மீரட்
அலுவல் மொழிகள்ஆங்கிலம், இந்தி, உருது, காசுமீரி, தோக்ரி, பஞ்சாபி, போச்புரி, மைதிலி, சந்தாளி

இந்திய அரசின் வரையறை தொகு

இந்திய அரசு வட இந்திய கலாச்சாரப் பகுதி என்பது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், சண்டிகர் [1] ஆகியவை உள்ளடக்கியது. வடக்கு மத்திய இந்திய கலாச்சாரப் பகுதி என்பது மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், இராஜஸ்தான், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், தில்லி ஆகியவற்றை உள்ளடக்கியது.[2]

மொழியியல் வரையறை தொகு

இந்தோ-ஆரிய மொழிகள் புழங்கும் இடம் வட இந்தியா. இந்தி மற்றும் தொடர்புடைய மொழிகள் இங்கே பேசப்படுகின்றன.

விந்திய மலைக்கு வடக்கே தொகு

ஒரு காலத்தில், விந்திய மலைக்கு வடக்கே உள்ளது வட இந்தியா தெற்கே உள்ளது தென் இந்தியா என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்த வரையறை கைவிடப்பட்ட ஒன்று. அகத்திய முனிவர் கூற்று மற்றும் மனு ஸ்மிருதியிலும் விந்திய மலை வடக்கு தெற்கைப் பிரிப்பதாய்ச் சொல்லப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "North Zone Cultural Centre". North Zone Cultural Center, Sheesh Mahal, Patiala, Punjab. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
  2. "North Central Zone Cultural Centre". North Central Zone Cultural Center, Allahabad, Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_இந்தியா&oldid=3531310" இலிருந்து மீள்விக்கப்பட்டது