மைதிலி மொழி

மைதிலி மொழி (मैथिली) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், இந்திய-ஈரானிய மொழிகள் குழுவின் துணைக் குழுவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும், தெற்கு நேபாளத்தின் தெராய் பகுதியிலும் பேசப்படுகின்றது. மொழியியலாளர் இதனை ஒரு கிழக்கு இந்திய மொழியாகக் கருதுவதால், மத்திய இந்திய மொழியான இந்தி மொழியில் இருந்தும் இது வேறுபட்டது. இது இந்தி, வங்காளம் ஆகிய இரு மொழிகளினதுமே கிளை மொழியாகக் கருதப்பட்டு வந்தது. 2003 ல் மைதிலி மொழி, இந்தியாவில் தனி மொழித் தகுதியைப் பெற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இதற்கு அலுவல் மொழித் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான இயக்கத்தின் காரணமாக மைதிலி மொழிக்கு 2003 இல் இத் தகுதி வழங்கப்பட்டது.

மைதிலி மொழி
मैथिली / মৈথিনী
Maithili in Tirhuta script.svg
Maithili.svg
தற்போது தேவநாகரி எழுத்து முறை; முன்னர் திர்ஹுடா எழுத்து முறை
உச்சரிப்புவார்ப்புரு:IPA-mai
நாடு(கள்)இந்தியா மற்றும் நேபாளம்
பிராந்தியம்இந்தியாவின் பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள்;[1][2]நேபாள நாட்டின் மாநில எண் 2
இனம்மைதிலி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
33.9 மில்லியன்  (2000)e21
(only 13.58 million reported their languages as Maithili on the 2011 census of India,[3] as many consider it to be a variety of Hindi
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
 • இந்தோ-ஈரானிய மொழிகள்
  • இந்தோ-ஆரிய மொழிகள்
   • கிழக்கிந்திய மொழிகள்
    • பிகாரி மொழி
     • மைதிலி மொழி
பேச்சு வழக்கு
Central (Sotipura)
தெயித்தி
பஜ்ஜிகா[4][5] (Recognized as distinct language in Nepal)[6]
மாதூர்
ஜொலஹா
கிசான்
கோர்த்தா
திர்ஹுடா, (மைதிலி அக்சர்)
கைதி (மைதிலி பாணி) (முன்னர்)
தேவநாகரி (தற்போது)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (இந்திய அரசியலமைப்பின் 8-ஆம் அட்டவணையில், ஜார்கண்ட்)[7]
Regulated by
 • இந்தியாவில் சாகித்திய அகாதமி
  • பிகார் மைதிலி அகாதமி
  • தில்லி மைதிலி - போஜ்புரி அகாதமி
 • நேபாள அகாதமி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2mai
ISO 639-3mai
மொழிக் குறிப்புmait1250[8]
{{{mapalt}}}
மைதிலி மொழி பேசும் இந்திய-நேபாளப் பகுதிகள்

மைதிலி மொழி மரபு வழியாக மைதிலி எழுத்து முறையில் எழுதப்பட்டு வந்தது. வங்காள மொழி எழுத்துக்களை ஓரளவுக்கு ஒத்த இவ்வெழுத்தை, திர்ஹுத்தா அல்லது மிதிலக்ஷர் என்றும் குறிப்பிடுவது உண்டு. கைத்தி எழுத்து முறையிலும் இது எழுதப்படுவது உண்டாயினும், இன்று பெரும்பாலும் தேவநாகரி எழுத்து முறையே பயன்பாட்டில் உள்ளது. மரபு வழியான மைதிலி எழுத்து முறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மைதிலி என்ற பெயர் முற்காலத்தில் ஒரு தனி அரசாக இருந்த மிதிலா (மிதிலை) என்பதன் பெயரிலிருந்து பெறப்பட்டது. இதற்கு வளமான இலக்கியமும் உள்ளது.

குறிப்புகள்தொகு

 1. "मैथिली लिपि को बढ़ावा देने के लिए विशेषज्ञों की जल्द ही बैठक बुला सकते हैं प्रकाश जावड़ेकर". 21 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "मैथिली को भी मिलेगा दूसरी राजभाषा का दर्जा". Hindustan. 3 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. [1]
 4. "Maithili". 30 July 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Bajjika - MultiTree". multitree.org. 6 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. https://unstats.un.org/unsd/demographic-social/census/documents/Nepal/Nepal-Census-2011-Vol1.pdf
 7. "झारखंड : रघुवर कैबिनेट से मगही, भोजपुरी, मैथिली व अंगिका को द्वितीय भाषा का दर्जा". 21 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Maithili". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/mait1250. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_மொழி&oldid=3603008" இருந்து மீள்விக்கப்பட்டது