இந்திய-ஈரானிய மொழிகள்
இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது.
இந்தோ-ஈரானிய | |
---|---|
புவியியல் பரம்பல்: |
தெற்காசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் |
இன வகைப்பாடு: |
இந்தோ-ஐரோப்பிய இந்தோ-ஈரானிய |
துணைக் குழுக்கள்: |
முக்கிய இந்தோ-ஆரிய மொழிகள்:
- சமஸ்கிருதம்
- அஸ்ஸாமிய மொழி
- வங்காள மொழி
- குஜராத்தி மொழி
- ஹிந்தி மொழி
- மைதிலி மொழி
- மராட்டி மொழி
- நேபாளி மொழி
- ஒரியா மொழி
- பாளி
- பஞ்சாபி மொழி
- உரோமானி மொழி - ஜிப்சிகளின் மொழி
- சிந்தி மொழி
- திவெயி மொழி
- சிங்கள மொழி
- உருது
முக்கிய தார்டிக் மொழிகள்:
- தாமேலி மொழி
- தொமாக்கி மொழி
- கவார்-பாட்டி மொழி
- கலாசா மொழி
- காஷ்மீரி மொழி
- கோவார் மொழி
- கோஹிஸ்தானி மொழி
- நிங்கலாமி மொழி
- பஷாயி மொழி
- பலூரா மொழி
- ஷினா மொழி
- ஷுமாஸ்தி மொழி
முக்கிய நூரிஸ்தானி மொழிகள்:
- அஷ்குன் மொழி
- கம்விரி மொழி
- கதி மொழி (பஷ்காலி)
- பிரசுனி மொழி (வசி-வெரி)
- ட்ரெகாமி மொழி
- வைகாலி மொழி (கலஷா-ஆலா)
முக்கிய ஈரானிய மொழிகள்:
- பாரசீக மொழி
- அவெஸ்தான் மொழி (வழக்கொழிந்தது)
- பஹ்லவி மொழி - "மத்திய பாரசீகம்"
- பாஷ்தூ மொழி
- டாரி மொழி
- தாஜிக் மொழி
- ஒஸ்ஸிட்டிக் மொழி
- குர்தி மொழி
- பலூச்சி மொழி
- தாலிஷ் மொழி
- தாத் மொழி