சினா மொழி

(ஷினா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சினா மொழி, பாக்கித்தானின் வட பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். இதுவே பாக்கித்தானின் வட பகுதிகளில் பாசப்படும் மொழிகளுள் முக்கியமானது. இது இந்தியாவிலும் வடக்குக் காசுமீர் பகுதியில் பேசப்படுகின்றது. பாக்கித்தானில் இம் மொழி பேசுவோர் பெரும்பாலும் கில்கிட் மற்றும் தயமெர் மாவட்டங்களிலேயே வாழுகின்றனர். இவற்றைவிட பால்ட்டித்தான், கோகிசுத்தான் மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர்

சினா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3scl

இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

இம் மொழி குறித்த ஆய்வுகள் இதன் கிளை மொழிகளின் வேறுபாடுகள் குறித்து ஒத்த கருத்து உடையவையாக இல்லை. எனினும் இம் மொழியின் அடையாளத்தை நிறுவுவதிலும், இலக்கணத்தை உருவாக்குவதிலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 1980 ஆம் ஆண்டிலிருந்து லெயிட்னர் (Leitner), கிரியர்சன் (Grierson), லாரிமர் (Lorimer), பெய்லி (Bailey) ஆகியோர் இம் மொழி தொடர்பாகப் பல பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இவர்களுள் பெய்லியே இதன் இலக்கணம், ஒலியனியல் என்பவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் ஆவார். இவர் தனது ஆய்வுகள் மூலம் மூன்று வகையான சினா மொழிகளை அடையாளம் கண்டார். இவை கில்கிட்டி, கோகிசுத்தானி, அசிடன் என்பனவாகும்.

கில்கிட் மாவட்டத்தில் பேசப்படும் மொழியே பொது சினாவாகக் கொள்ளப்படுகின்றது. எனினும் இதனைப் பொது மொழியாக உயர்த்துவதற்கு நிறையச் செய்யவேண்டி இருக்கிறது. இப்பொழுதுதான் இக் கிளை மொழியில் இலக்கியங்கள் சில வரத் தொடங்குகின்றன. பாக்கித்தான் வானொலியும் சில நிகழ்ச்சிகளை இம்மொழியில் தயாரித்திருக்கிறது.

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினா_மொழி&oldid=3526712" இலிருந்து மீள்விக்கப்பட்டது