தாஜிக் மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும்.
தாஜிக் மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tg |
ISO 639-2 | tgk |
ISO 639-3 | tgk |
ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும்.