தாமேலி மொழி

தாமேலி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இப் பகுதி மிர்க்கானி கோட்டையிலிருந்து அரண்டு கணவாய்க்குச் செல்லும் பாதையில் தோர்ஷ் என்னுமிடத்திற்கு 10 மைல்கள் தெற்கே சித்ரால் ஆற்றின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இப் பகுப்பு மொழியியல் அடிப்படையிலன்றி புவியியல் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தாமேலி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-3dml

தாமேலி பேசப்படும் ஊர்களில் இது இன்னமும் முக்கிய மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களால் தொடர்ந்தும் பயிலப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோரில் வளர்ந்த ஆண்கள் பாஷ்தூ மொழியை இரண்டாவது மொழியாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் கோவார், உருது போன்ற மொழிகளையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். எனினும் தாமேலி மொழிப் பயன்பாட்டில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமேலி_மொழி&oldid=1396823" இலிருந்து மீள்விக்கப்பட்டது