2011 சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு
சமூகப் பொருளாதாராம் மற்றும் சமூகக் கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census 2011 (SECC) 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.[1][2][3][4][5][6][7][8][9][10]அனைத்து இந்திய மாநிலங்களிலும், நடுவண் ஒன்றியப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட, 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, திரட்டப்பட்ட இந்தியச் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பின் அறிக்கையை, இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 3 சூலை 2015 அன்று வெளியிட்டார்.[11][12][13]
2011 சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு | |
---|---|
நாடு | இந்தியா |
பிரதமர் | மன்மோகன் சிங் |
Ministry | கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் |
துவங்கியது | சங்கோலா கிராமம், மேற்கு திரிப்புரா மாவட்டம் |
சூலை 2015-இல் சாதிக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது
தொகு2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 46,73,034 வகைப்பட்ட சாதிகள், உட்சாதிகள், பல்வேறுபட்ட குலப்பெயர்கள், கோத்திரங்கள், இனக்குழுக்களின் பெயர்கள் கண்டறியப்பட்டது.[14][15][16][17][18][19]
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் 11.65 இலட்சம் மக்கள் வீட்டற்றவர்களாக அறியப்பட்டது. ஆனால் சமூகப் பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பின்படி, 6.1 இலட்சம் மக்கள் மட்டுமே வீடற்றவர்களாக அறியப்பட்டது.
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.46% (அல்லது 15.88 கோடி) மற்றும் 10.97% (9.27 கோடி), மற்றவர்கள் 68.52% மற்றும் சாதி, சமயமற்றவர்களின் எண்ணிக்கை 2.04% (36.57 இலட்சம்) ஆக இருந்தது.[20]
2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு அறிக்கை
தொகு- இந்தியாவின் 24.3 கோடி (243.9 மில்லியன்) குடியிருப்புகளில் 17.91 கோடி (179.1 மில்லியன்) குடியிருப்புகள் ஊரகப் பகுதிகளில் இருந்தது. அவைகளில் 10.69 கோடி குடியிருப்புகள் ஏழ்மை நிலையில் இருந்ததாக கண்டறியப்பட்டது.[21]
- 5.37 கோடி (29.97%) ஊரகக் குடியிருப்பாளர்களுக்கு சொந்த நிலம் இல்லை. மேலும் உடல் உழைப்புத் தொழிலால் மட்டுமே வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தனர்.
- 2.37 கோடி (13.25%) ஊரகக் குடியிருப்புகள் ஒற்றை அறை கொண்டதாக இருந்தது.
- ஊரகப் பகுதிகளில் உள்ள 3.86 கோடி (21.53%) குடியிருப்புகளில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினராகவே இருந்தனர்.
- 56% ஊரக குடியிருப்பினர்களுக்கு சொந்த வேளாண்மை நிலைம் இல்லை.[22][23]
- 884 மில்லியன் ஊரக மக்களில் 36% விழுக்காடினர் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருந்தனர்.[24]
- 64% ஊரக மக்கள் தொடக்கப் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தியர்களாக உள்ளனர்.
- 17.91 கோடி ஊரக குடியிருப்புகளில் 60% விழுக்காடு ஏழ்மை நிலையில் இருந்தது.[25]
- 35% நகரக் குடியிருப்புகள் ஏழ்மை நிலையில் இருந்தது.[26][27]
- 74.5% (13.34 கோடி) ஊரக குடியிருப்பாளர்களின் மாத வருமானம் ரூபாய் 5,000 என்பது அதிகபட்சமாக இருந்தது.[28][29]
- 5.4% ஊரக மக்கள் உயர்நிலை பள்ளிக் கல்வியை (பத்தாம் வகுப்பு) முடித்தவர்களாக உள்ளனர்.
- 3.4% ஊரக மக்களில் ஒருவர் மட்டுமே பட்டதாரியாக இருந்தார்.[30]
- ஊரக மக்களில் 4.6% மட்டுமே வருமான வரி கட்டினர்.
- ஊரக மக்களில் 14% மட்டுமே அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்த்தனர்.
- 1,80,657 ஊரக மக்கள் கழிவுகளை கையால் அள்ளும் பணியில் இருந்தனர். இதில் மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கையால் கழிவுகளை அல்லும் பணியாளர்கள் அதிகம் கொண்டிருந்தனர்.[31]
- ஊரக மக்கள்தொகையில் 48% மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.[32]
- 121.08 கோடி இந்திய மக்கள்தொகையில் 44.72 கோடி ஊரக மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.[33]
- ஊரக மக்கள்தொகையில் 0.1% விழுக்காடினர் திருநங்கைகள் ஆவார்.
- இராணுவம் மற்றும் துணைநிலை இராணுவப்படைகளில் ஊரகப் பகுதி மக்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள்.
- 1% ஊரக மக்கள் தரைவழி தொலைபேசி கொண்டுள்ளனர். 68.35% கைப்பேசிகள் வைத்துள்ளனர்.[34]
சமயங்களும், சமூகங்களும்
தொகுசமயம்/சாதி | பட்டியல் சமூகத்தினர் | பட்டியல் பழங்குடிகள் | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | முன்னேறிய வகுப்பினர்|பொதுப்பிரிவினர்|பிறர் |
---|---|---|---|---|
இந்து சமயம் | 22.2% | 9% | 42.8% | 26% |
இசுலாம் | 0.8% | 0.5% | 39.2% | 59.5% |
கிறித்தவம் | 9.0% | 32.8% | 24.8% | 33.3% |
சீக்கியம் | 30.7% | 0.9% | 22.4% | 46.1% |
சமணம் | 0.0% | 2.6% | 3.0% | 94.3% |
பௌத்தம் | 89.5% | 7.4% | 0.4% | 2.7% |
சொராட்டியம் | 0.0% | 15.9% | 13.7% | 70.4% |
பிறர் | 2.6% | 82.5% | 6.25 | 8.7% |
மொத்தம் | 19.7% | 8.5% | 41.1% | 30.8% |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Socio Economic and Caste Census for 2011 : Five key takeaways".
- ↑ Sabnavis, Madan. "The many shades of deprivation". @businessline.
- ↑ "Socio Economic Caste Census: In villages, one in three households in poverty; over a fifth SC/STs". 25 June 2015.
- ↑ "THE BIGGER PICTURE: How we can save the nation's farmers". Mail Online. 7 July 2015.
- ↑ Saumya Tewari, IndiaSpend com. "670 million people in rural India live on Rs 33 per day". Scroll.in.
- ↑ Vijayanunni, M. (15 July 2015). "Where is the caste data?" – via www.thehindu.com.
- ↑ "After Lalu and Nitish, Congress demands release of caste data in poll-bound Bihar | Patna News - Times of India". The Times of India.
- ↑ "Opinion: Modi Must Release Caste Survey Findings". NDTV.com.
- ↑ "7 in 10 homes rural, most live on less than Rs 200 a day, reveals new socio-economic census". 4 July 2015.
- ↑ "BJP may have second thoughts on caste census?". 28 May 2010 – via www.thehindu.com.
- ↑ "Govt releases socio-economic and caste census for better policy-making". Hindustan Times. 3 July 2015.
- ↑ Mehra, Puja (6 July 2015). "Jaitley: our priority is to eliminate deprivation" – via www.thehindu.com.
- ↑ Roche, Prashant K. Nanda,Anuja,Elizabeth (16 July 2015). "Arun Jaitley refutes charges of withholding caste census data". www.livemint.com.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Bureau, National (29 July 2015). "8 crore errors found in caste data: government" – via www.thehindu.com.
- ↑ "Cabinet meeting: Panagariya to head panel to 'classify' caste census data". 17 July 2015.
- ↑ "Classifying caste census data could be Panagariya's toughest job". Hindustan Times. 18 July 2015.
- ↑ "Socio-economic census 2011 reveals 46 lakh castes, sub-castes". Deccan Herald. 17 July 2015.
- ↑ http://www.abplive.in/india/2015/07/16/article652176.ece/Caste-census-data-to-be-released-Government
- ↑ "Into the caste cauldron". Mumbai Mirror.
- ↑ Yadav, Anumeha. "Before releasing caste numbers, the government needs to account for discrepancies in data". Scroll.in.
- ↑ "Census 2011 data released: 10 key highlights | India News - Times of India". The Times of India.
- ↑ "Twice as many: census springs landless surprise". www.telegraphindia.com.
- ↑ "Half of rural India still doesn't own agricultural land: SECC 2011". 9 September 2015 – via The Economic Times.
- ↑ Raghavan, Tca Sharad (4 July 2015). "Over a third of rural India still illiterate: Socio Economic Census" – via www.thehindu.com.
- ↑ "A Greek tragedy every which way". 12 July 2015.
- ↑ "35 per cent urban India is BPL, says unreleased data". 17 July 2015.
- ↑ "Urban, poor". 18 July 2015.
- ↑ "Letter from the Nirmalkars: The 90 per cent". 12 July 2015.
- ↑ S, Rukmini; Bansal, Samarth (3 July 2015). "8 Reality Checks from the SECC" – via www.thehindu.com.
- ↑ "Rural realities". 7 July 2015 – via www.thehindu.com.
- ↑ Venkat, Vidya (9 July 2015). "Manual scavenging still a reality" – via www.thehindu.com.
- ↑ Raghavan, Tca Sharad (4 July 2015). "Over 48 p.c. of rural population is female" – via www.thehindu.com.
- ↑ "37 lakh first-time voters in India are unlettered: Census | Lucknow News - Times of India". The Times of India.
- ↑ "Socio Economic & Caste Census 2011: A mobile in 2 of every 3 rural homes, a salaried job in 1 of 10". 6 July 2015.