அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல் துறையின் அஞ்சலக இருப்பிடக் குறியீடு

அஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN) அல்லது பின்கோடு இந்தியாவில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் இந்திய அஞ்சல் துறையினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை ஆகஸ்ட் 15, 1972 அன்று நடைமுறைக்கு வந்தது.[1][2][3]

குறியீட்டமைப்பு

தொகு
 
அஞ்சலகச் சுட்டு எண்ணின் அமைப்பு

இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டன. அஞ்சலகச் சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது. இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும், மூன்றாவது, வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.

இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின் மண்டலங்கள்:

முதல் இரு இலக்கங்கள் ISO 3166-2:IN அஞ்சல் வட்டம்
11 DL தில்லி
12 and 13 HR அரியானா
14 to 15 PB பஞ்சாப்
16 CH சண்டிகார்
17 HP இமாச்சலப் பிரதேசம்
18 to 19 JK, LA சம்மு & காசுமீர்
20 to 28 UP, UT உத்திரப் பிரதேசம்
30 to 34 RJ இராசத்தான்
36 to 39 GJ குசராத்
40 to 44 MH மகாராட்டிரம்
45 to 48 MP மத்தியப் பிரதேசம்
49 CT சத்தீஸ்கர்
50 TG தெலுங்கானா
51–53 AP ஆந்திரப் பிரதேசம்
56–59 KA கர்நாடகா
60–66 TN தமிழ்நாடு
605 PY புதுச்சேரி
67–69 KL கேரளா
682 LD லட்சத்தீவு
70–74 WB மேற்கு வங்காளம்
737 SK சிக்கிம்
744 AN அந்தமான் நிக்கோபார் தீவுகள்
75–77 OR ஒடிசா
78 AS அசாம்
790–792 AR அருணாச்சல பிரதேசம்
793–794 ML மேகாலயா
795 MN மணிப்பூர்
796 MZ மிசோரம்
80-85 BR, JH பீகார், சார்க்கண்டு
90-99 APS இராணுவ சேவை

சேவை வழி

தொகு

நான்காவது இலக்கமானது வரிசைப்படுத்தும் மாவட்டத்தில் வழங்கும் அலுவலகம் அமைந்துள்ள வழியைக் குறிக்கிறது.[4] வரிசைப்படுத்தும் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு இது 0 ஆகும்.

 
அஞ்சலக சுட்டு எண் (571120) என குறியிடப்பட்ட அஞ்சல்பெட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. India. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. 1974. p. 305. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013.
  2. "Mails section". Indian government postal department. Archived from the original on 23 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Using pincode, maps to trace address". timesofindia.com. Archived from the original on 2016-10-05.
  4. "Tamilnadu Postal Circle – Pincode". tamilnadupost.nic.in. Archived from the original on 2014-07-20.

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்_குறியீட்டு_எண்&oldid=4085485" இலிருந்து மீள்விக்கப்பட்டது