மிசோரம்

இந்திய மாநிலம்

மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 1,097,206 . இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது. நாட்டின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 91% காடுகள் உள்ளன.

மிசோரம்
அய்சால்

சின்னம்
இந்தியாவில் மிசோராம் காட்டும் படம்
இந்தியாவில் மிசோராம் காட்டும் படம்
நாடு இந்தியா
பகுதிவடகிழக்கு இந்தியா
ஒன்றியப் பகுதி21 சனவரி 1972
மாநிலம்20 பெப்பிரவரி 1987
தலைநகரம் மற்றும் பெரிய நகரம்அய்சால்
மாவட்டம்11
அரசு
 • நிர்வாகம்மிசோரம் அரசு
 • ஆளுனர்[1]ஹரி பாபு கம்பம்பதி
 • முதலமைச்சர்[2]சோரம்தாங்கா (மிசோ தேசிய முன்னணி)
 • சட்டவாக்கம்[3]மிசோரம் சட்டமன்றம் ஓரவை (40 உறுப்பினர்கள்)
 • மக்களவைத் தொகுதி1
 • உயர்நீதிமன்றம்குவஹாத்தி உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்21,081 km2 (8,139 sq mi)
 • பரப்பளவு தரவரிசை24வது
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,91,014
 • தரவரிசை27வது
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
மொழி
 • அலுவல்மொழிமிசோ மொழி[4], ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+05:30 (IST)
தொலைபேசி+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MZ
வாகனப் பதிவுMZ
HDI 0.790 (medium)
மனித வளர்ச்சிக் குறியீடு அடிப்படையில் தரவரிசைஇரண்டாவது (2005)
இந்தியாவில் கல்வியறிவு89.9% (இரண்டாவது)
இணையதளம்mizoram.gov.in
சின்னங்கள்
சின்னம்
மிசோரம் அரசு சின்னம்
விலங்குஇமயமலை செரோ (காப்ரிகார்னிசு தார்)
பறவைதிருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி (சிர்மாட்டிகசு ஹுமியா)
மீன்[[File:Semiplotus modestus Achilles 133.jpg |50px]]பர்மிய கிங்ஃபிஷ் (நாகவாங்) (செமிபிளோட்டஸ் மாடஸ்டஸ்)
மலர்ரெட் வந்தா (ரெனாந்தெரா இம்ஸ்கூட்டியானா)
மரம்நாகமரம் (மெசுவா ஃபெரியா)
இது மிசோரம் மாநில சட்டம், 1986 மூலம் முழு மாநிலமாக உயர்த்தப்பட்டது

அரசியல்

தொகு

மிசோரத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மிசோரம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,097,206 ஆக உள்ளது. அதில் பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,036,115 (95%) ஆக உள்ளது.[5][6] கிராமப்புறங்களில் 47.89% மக்களும், நகரப்புறங்களில் 52.11% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.48% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 555,339 ஆண்களும் மற்றும் 541,867 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். 21,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 52 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர்களின் எண்ணிக்கை 848,175 ஆக உள்ளது. சராசரி படிப்பறிவு 91.33 % ஆகவும், அதில் ஆண்களின் படிப்பறிவு 93.35 % ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 89.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,531 ஆக உள்ளது. [7]

சமயம்

தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 30,136 (2.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 14,832 (1.35 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 956,331 (87.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 376 (0.03 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 93,411 (8.51 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை ஆகவும் 286 (0.03 %) பிற சமயத்து மக்கள் தொகை 808 (0.07 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,026 (0.09 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன், இந்தி மொழி, மற்றும் மிசோ மொழி போன்ற வட்டார பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது.

திருவிழாக்கள்

தொகு
 • அந்தூரியம் திருவிழா
 • சப்சார் குட் திருவிழா

பயணம்

தொகு

மிசோரம் உள் நுழைவதற்கு ILP(Inner line Permit) எனும் அனுமதியை இம்மாநில அரசு வழங்குகிறது. ILP பெறாமல் அடுத்த மாநிலத்தவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. தரைவழி பயணிப்பவர்கள் கவுகாத்தியில் உள்ள மிசோரம் ஹவுஸிலும் (Miozram House), விமானம் வழியாக பயணிப்பவர்கள் லெங்க்புய் விமான நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அரசு வழங்கியுள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு புகைபடம் போதும்.

லெங்புய் விமான நிலையம் மிசோரம் மாநில தலைநகரான ஐசோலிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கல்கத்தா, டெல்லி, குவஹாத்தி மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு தினமும் விமான சேவை அளிக்கப்படுகிறது. மேலும் சம்பாய்,சைஹா மற்றும் கமலா நகர் ஆகிய மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையும் அளிக்கப் படுகிறது.

தரைவழியாக பயணிக்க விரும்புகிறவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி வரை ரயிலில் பயணம் செய்து அதற்கு பின் பேருந்து அல்லது சுமோ மூலமாக பயணத்தை தொடரலாம்.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

11 மாவட்டங்களுடன் கூடிய மிசோரம் மாநிலத்தின் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக சக்மா, லாய் மற்றும் மாரா என மூன்று தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்[8] மக்கள்
(2011)
அடர்த்தி
சதுர கிலோமீட்டருக்கு
அய்சால் மாவட்டம் 400,309 117
லுங்லேய் மாவட்டம் 161,428 35
சம்பாய் மாவட்டம் 125,745 37
லாங்தலாய் மாவட்டம் 117,894 39
மாமித் மாவட்டம் 86,364 29
கோலாசிப் மாவட்டம் 83,955 56
செர்ச்சிப் மாவட்டம் 64,937 47
சைஹா மாவட்டம் 56,574 52
அனத்தியால் மாவட்டம்
கௌசல் மாவட்டம்
சைத்துவல் மாவட்டம்

கல்வி

தொகு

இம்மாநிலத்தில் கிறிஸ்துவ சமய நிறுவனங்கள் இயக்கும் துவக்கப் பள்ளிகள் 1898 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1961-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 51% விழுக்காடாக இருந்தது.[9] 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கேரளா மாநிலத்திற்கு அடுத்து 92% விழுக்காட்டுடன், படிப்பறிவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.[10]

இம்மாநிலத்தில் 3,894 பள்ளிகள் உள்ளது. அதில் 42% பள்ளிகள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. 21% தனியார் பள்ளிகள் அரசு நிதியுதவி பெறுகிறது. அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகள் 28% ஆக உள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் துவக்கப்பள்ளிகளில் 1:20 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளில் 1:9 ஆகவும்; உயர்நிலைப் பள்ளிகளில் 1:13 ஆகவும், மேனிலைப் பள்ளிகளில் 1:15 ஆகவும் உள்ளது.

மிசோரம் பல்கலைக்கழகம் 35 வகையான துறைகளுடன் இயங்கிவருகிறது. இரண்டு தொழில் நுட்ப கல்லூரிகள் மிசோரம் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. மிசோரம் அரசு 22 கல்லூரிகளை கொண்டுள்ளது. முக்கிய கல்வி நிறுவனங்கள் மிசோரம் தேசிய தொழில் நுட்ப கழகம், அய்சால், செலிக், மிசோரம் பகுதிகளில் மூன்று கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புக் கல்லூரிகளும், அய்சாலில் ஒரு மண்டல செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பயிற்சி நிறுவனமும் உள்ளது.

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலை தகவல், அய்சாவல்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.4
(68.7)
21.7
(71.1)
25.2
(77.4)
26.8
(80.2)
26.3
(79.3)
25.5
(77.9)
25.3
(77.5)
25.5
(77.9)
25.7
(78.3)
24.7
(76.5)
23.0
(73.4)
21.0
(69.8)
24.26
(75.67)
தாழ் சராசரி °C (°F) 11.4
(52.5)
12.8
(55)
15.6
(60.1)
17.5
(63.5)
18.1
(64.6)
18.9
(66)
19.1
(66.4)
19.1
(66.4)
19.2
(66.6)
18.0
(64.4)
15.1
(59.2)
12.2
(54)
16.42
(61.55)
பொழிவு mm (inches) 13.4
(0.528)
23.4
(0.921)
73.4
(2.89)
167.7
(6.602)
289.0
(11.378)
406.1
(15.988)
320.4
(12.614)
320.6
(12.622)
305.2
(12.016)
183.7
(7.232)
43.2
(1.701)
15.3
(0.602)
2,161.4
(85.094)
ஆதாரம்: [11]

மேற்கோள்கள்

தொகு
 1. http://mizoram.nic.in/gov/governor.htm
 2. http://mizoram.nic.in/gov/cm.htm
 3. http://mizoram.nic.in/gov/mla.htm
 4. Commissioner, Linguistic Minorities, 41st report: July 2002 - June 2003, p. para 25.3, archived from the original on 24 February 2007, பார்க்கப்பட்ட நாள் 16 July 2007
 5. Demographic Status of Scheduled Tribe Population of India Table 1.1, Ministry of Tribal Affairs, Govt of India (2013)
 6. SCHEDULED TRIBES Chapter 4.2 பரணிடப்பட்டது 2015-06-16 at the வந்தவழி இயந்திரம் Planning Commission, Govt of India (2012)
 7. Mizoram Population Census data 2011
 8. Districts Government of Mizoram
 9. C. Nunthara (2002), Mizoram: Society and Polity, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173870590, pp 37-39
 10. India Gov. "India 2010 - A Reference Annual". India Gov Website. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
 11. "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901–2000 data" (PDF). India Meteorology Department. p. 8. பார்க்கப்பட்ட நாள் 20 June 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரம்&oldid=3635322" இலிருந்து மீள்விக்கப்பட்டது