ஐ. எசு. ஓ.3166-2என்பது ஐ.எசு.ஓ 3166இன் ஓர் அங்கமாகும். ஐ. எசு. ஓ. 3166-1 இல் குறியிடப்பட்டுள்ள உலகின் அனைத்து நாடுகளின் பிரதான உட்கோட்டங்களை (மாநிலங்கள்,ஆட்சிப்பகுதிகள்) அடையாளப் படுத்த பயன்படுத்தப்படும் சுருக்கக் குறிகளை பட்டியலிடும் சர்வதேச சீர்தர மொழிக் குறியீடுகளின் தொகுதியாகும். இதன் அலுவல்முறையான தலைப்பு:நாடுகளின் மற்றும் அவற்றின் உட்கோட்டங்களின் பெயர்களை அடையாளப்படுத்தும் சுருக்கக் குறிகள்;பகுதி 2:நாட்டு உட்கோட்டங்கள் குறிகள்.இவை 1998ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டன.

ஐ.எசு.ஓ 3166-2 வின் நோக்கம் அனைத்து நாடுகளின் நிர்வாக கோட்டங்களையும் சுருக்கமான மற்றும் தனித்துவமான எண்ணெழுத்துகளால் உலக சீர்தரமாக குறிக்கப்பட்டு முழு பெயரையும் பல குழப்பங்களுடன் குறிப்பதை தவிர்ப்பதே யாகும். ஒவ்வொரு ஐ.எசு.ஓ 3166-2 குறியும் கிடைக்கோடு பிரிக்க இரு பகுதிகளைக் கொண்டுள்ளன:

  • முதல் பகுதி நாட்டின் ஐ. எசு. ஓ 3166-1 ஆல்பா-2 குறி
  • இரண்டாம் பகுதி மூன்று எண்ணிக்கைக்குள் உள்ள எண் அல்லது எழுத்து கொண்ட குறித்தொடர்;இவை அந்நாட்டில் ஏற்கனவே பின்பற்றப்படும் குறியீடாக இருக்கலாம்,அல்லது அந்நாடு கொடுத்த தரவுகளாக இருக்கலாம் அல்லது ஐ.எசு.ஓ 3166 பராமரிப்பு குழுமம் வடிவமைத்தவையாக இருக்கலாம்.

இவ்வகையான முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறி ஒவ்வொன்றும் உலகின் எந்தவொரு நிலப்பகுதியையும் குழப்பம் எதுவும் இன்றி துல்லியமாக டையாளப்படுத்தும்.தற்போது 4200 குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.[1]

சில நாடுகளுக்கு, இரு நிலைகள் அல்லது மேலும் குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உயர்நிலை உட்கோட்டங்களுக்கு ஐ.எசு.ஓ.3166-1 ஆல்பா-2 குறிகள் இன்றி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக அவற்றினால் உலக அளவில் தனித்துவத்தை உறுதி செய்யவியலாது. இருப்பினும் ஆல்பா - 2 குறிகளுடன் அவை முழுமை பெறுகின்றன.[2]

நடப்பு குறிகள் தொகு

நாடுகள் வாரியாக ஒவ்வொரு நாட்டின் முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறிகள் பட்டியலுக்கு, பார்க்க ISO 3166-1.

வடிவம் தொகு

ஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீட்டின் வடிவமும் வெவ்வேறானது.அவை எழுத்துக்கள் மட்டும் கொண்டிருக்கலாம், எண்கள் மட்டும் கொண்டிருக்கலாம் அல்லது இரண்டும் கலந்தும் கொண்டிருக்கலாம்;தவிர அவற்றின் நீளமும் ஒரே அளவினதாக இருக்கலாம் அல்லது மாறும் நீளம் கொண்டதாக இருக்கலாம்.கீழே காணும் பட்டியலில் ஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீடுகளும் அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.(வரையறுக்கப்படாத நாடுகள் விடப்பட்டுள்ளன):

வரியுருக்களின் எண்ணிக்கை(இரண்டாம் பகுதி) எழுத்துக்கள் மட்டும் எண்கள் மட்டும் எழுத்து,எண்கள் கலந்து
ஒரே நீளம்
1 வரியுரு
AR, BO, EC, FJ, GM, KI, KM, LS, LU, MG, SL, ST, TG, TM, VE AT, GA, IS, NE, PA
ஒரே நீளம்
2 வரியுரு
AE, AM, AL, BI, BJ, BN, BR, BS, BW, BY, CA, CD, CH, CL, CM, CV, DE, DJ, ER, ET, FI, GE, GH, GQ, GT, GW, GY, HN, HT, HU, ID, IN, IQ, IT, JO, KW, LA, LB, LR, LT, LY, MD, MU, MW, NA, NG, NI, NL, NP, OM, PK, PL, QA, SB, SH, SK, SN, SO, SR, SV, SY, SZ, TJ, TL, US, UY, UZ, WS, YE, ZA, ZW AD, AG, BA, BB, BD, BG, BH, CI, CN, CU, CY, DK, DM, DO, DZ, EE, GD, HR, IR, JM, JP, KN, KR, LC, LI, LK, ME, MK, MM, MT, MY, NO, NR, PT, RS, RW, SA, SC, SD, SG, SM, TN, TO, TR, TZ, UA, UM, VC, VN, ZM BT, FR, GR
ஒரே நீளம்
3 வரியுரு
AF, AO, BE, BF, FM, GB, KP, KZ, MA, MH, MX, NZ, PE, PG, PH, TT, TV, TW, VU KE, PW, SI, UG CZ
மாறும் நீளம்
1 அல்லது 2 வரியுருக்கள்
CR, ES, GN, IE, IL, KG, RO, SE KH TH
மாறும் நீளம்
1 அல்லது 3 வரியுருக்கள்
MZ MN ML
மாறும் நீளம்
2 அல்லது 3 வரியுருக்கள்
AU, AZ, BZ, CF, CO, LV, RU, TD MR, MV
மாறும் நீளம்
1, 2, அல்லது 3 வரியுருக்கள்
EG CG, PY

குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள குறிகள் அந்த நாட்டின் அடிமட்ட ஆட்சிப்பகுதிக்கானது,அதாவது,சீர்தரத்தின் ஐ.எசு.ஓ 3166-1 ஆல்பா-2 குறிகள் முன்னொட்டு கொண்டவை ஆகும்.

ஐ.எசு.ஓ 3166-1இல் சேர்க்கப்பட்டுள்ள உட்கோட்டங்கள் தொகு

கீழ்வரும் நாடுகளுக்கு, ஐ.எசு.ஓ 3166-2வில் காணும் உட்கோட்டங்களுக்கு, ஐ.எசு.ஒ 3166-1 கீழ் தனிநாட்டிற்கான குறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. (பெரும்பாலானவை சார்பு மண்டலம்|சார்பு நிலப்பகுதிகளாக அந்நாடுகளில் உள்ளன).

ஆல்பா-2 நாட்டின் பெயர் ஐ.எசு.ஓ 3166-1 (ஆல்பா-2)வில் சேர்க்கப்பட்ட உட்கோட்டங்கள்
CN சீனா CN-91 Hong Kong (HK)
CN-92 Macao (MO)
CN-71 Taiwan (TW)[note 1]
FI பின்லாந்து FI-AL Åland Islands (AX)
FR பிரான்சு FR-GF French Guiana (GF)
FR-PF French Polynesia (PF)
FR-TF French Southern Territories (TF)
FR-GP குவாதலூப்பு (GP)
FR-MQ Martinique (MQ)
FR-YT Mayotte (YT)
FR-NC New Caledonia (NC)
FR-RE Réunion (RE)
FR-BL Saint Barthélemy (BL)
FR-MF Saint Martin (MF)
FR-PM Saint Pierre and Miquelon (PM)
FR-WF Wallis and Futuna (WF)
NO நார்வே NO-22 Jan Mayen (SJ)[note 2]
NO-21 Svalbard (SJ)[note 2]
US ஐக்கிய அமெரிக்கா US-AS American Samoa (AS)
US-GU குவாம் (GU)
US-MP Northern Mariana Islands (MP)
US-PR Puerto Rico (PR)
US-UM United States Minor Outlying Islands (UM)
US-VI Virgin Islands, U.S. (VI)
குறிப்பு
  1. தைவான் சீன மக்கள் குடியரசின் கீழுள்ள பகுதியாக இல்லாதிருப்பினும், ஐக்கிய நாடுகள் அதனை சீனாவின் பகுதியாகக் கருதுவதால்,தைவான் சீனாவின் உட்கோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.எசு.ஒ 3166-1இல் தைவான் ஐ.நாவின் அரசியல் நிலைப்படி சீனாவின் மாநிலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  2. 2.0 2.1 Svalbard மற்றும் Jan Mayen இரண்டிற்கும் கூட்டாக ஐ.எசு.ஓ 3166-1இல் நாட்டுக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பதிப்புகளும் திருத்தங்களும் தொகு

ஐ.எசு.ஓ 3166-2 இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. முதலாவது பதிப்பு (ஐ.எசு.ஓ 3166-2:1998) திசம்பர் 12,1998 அன்றும் இரண்டாம் பதிப்பு(ISO 3166-2:2007)திசம்பர் 13,2007 அன்றும் வெளியிடப்பட்டன.

இரு பதிப்புகளிடையே ஐ.எசு.ஓ 3166/பராமரிப்பு பேராணையம் திருத்தங்களை செய்திமடல்கள் மூலம் குறியீட்டுப்பட்டியலை இற்றைப்படுத்துகிறது.[3] பெரும்பாலானவை பெயரின் எழுத்துக்கோர்வை திருத்தங்கள், உட்கோட்டங்களின் சேர்க்கையும் விலக்கலும்,நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் என்பனவாகும்.

செய்திமடல் இற்றைப்படுத்தல் -ஐஎசுஓ 3166-2 (ஐஎசுஓ 3166-2:1998)
செய்திமடல் பதிப்பித்த நாள் மாறிய குறிகள்
I-1 2000-06-21 BY, CA, DO, ER, ES, IT, KR, NG, PL, RO, RU, TR, VN, YU
I-2 பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம் 2002-05-21 AE, AL, AO, AZ, BD, BG, BJ, CA, CD, CN, CV, CZ, ES, FR, GB, GE, GN, GT, HR, ID, IN, IR, KZ, LA, MA, MD, MW, NI, PH, TR, UZ, VN
I-3 2002-08-20 AE, CZ, IN, KZ, MD, MO, PS (புது சேர்க்கை), TP (மாற்றம் TL), UG
I-4 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் 2002-12-10 BI, CA, EC, ES, ET, GE, ID, IN, KG, KH, KP, KZ, LA, MD, MU, RO, SI, TJ, TM, TL, TW, UZ, VE, YE
I-5 2003-09-05 BW, CH, CZ, LY, MY, SN, TN, TZ, UG, VE, YU (மாற்றம் CS)
I-6 பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம் 2004-03-08 AF, AL, AU, CN, CO, ID, KP, MA, TN, ZA
I-7 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் 2005-09-13 AF, DJ, ID, RU, SI, VN
I-8 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் 2007-04-17 AD, AG, BB, BH, CI, DM, GB, GD, GG (புதிய சேர்க்கை), IM (புதிய சேர்க்கை), IR, IT, JE (புதிய சேர்க்கை), KN, LI, ME (புதிய சேர்க்கை), MK, NR, PW, RS (புதிய சேர்க்கை), RU, RW, SB, SC, SM, TD, TO, TV, VC, YU (நீக்கம்)
I-9 2007-11-28 BG, BL (புதிய சேர்க்கை), CZ, FR, GB, GE, LB, MF (புதிய சேர்க்கை), MK, MT, RU, SD, SG, UG, ZA
2ம் பதிப்பு 2007-12-13 இந்த மாற்றங்கள் ஐஎசுஓ 3166-2 இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டாலும்,செய்திமடல் எதுவும் வெளியிடப்படவில்லை:[4]
BA, DK, DO, EG, GN, HT, KE, KW, LC, LR, TV, YE
Newsletter updates on the 2nd edition of ISO 3166-2 (ISO 3166-2:2007)
செய்திமடல் பதிப்பித்த நாள் மாறிய குறிகள்
எதுவும் இல்லை

மேற்கோள்கள் தொகு

  1. "ISO 3166-2 State Codes". CommonDataHub.
  2. "Country sub-entity name code". GEFEG.FX.
  3. "Updates on ISO 3166". International Organization for Standardization (ISO).
  4. "Statoids Newsletter January 2008". Statoids.com.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எசு._ஓ.3166-2&oldid=3593955" இலிருந்து மீள்விக்கப்பட்டது