மணிப்பூர்

இந்திய மாநிலம்


மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.

মণিপুর
—  மாநிலம்  —
இருப்பிடம்: மணிப்பூர் இந்தியா
அமைவிடம் 24°49′01″N 93°57′00″E / 24.817°N 93.95°E / 24.817; 93.95ஆள்கூறுகள்: 24°49′01″N 93°57′00″E / 24.817°N 93.95°E / 24.817; 93.95
நாடு  இந்தியா
மாநிலம் மணிப்பூர்
மாவட்டங்கள் 9
நிறுவப்பட்ட நாள் சனவரி 21, 1972
தலைநகரம் இம்பால்
மிகப்பெரிய நகரம் இம்பால்
ஆளுநர் இல. கணேசன்[1]
முதலமைச்சர் ந. பீரேன் சிங்[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (60)
மக்களவைத் தொகுதி মণিপুর
மக்கள் தொகை 28,55,794 (22வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.707 (medium) (5வது)
கல்வியறிவு 76.94%% 
மொழிகள் மணிப்புரியம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
இணையதளம் [http://அதிகாரபூர்வ தளம் அதிகாரபூர்வ தளம்]

இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.

மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

ஆட்சிப் பிரிவுகள்தொகு

 
மணிப்பூர் மாவட்டங்கள்

மணிப்பூரில் 8 டிசம்பர் 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்கள் மட்டும் இருந்தது. பின்னர் 8 டிசம்பர் 2016-இல் 7 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டதால் தற்போது 16 மாவட்டங்கள் உள்ளது.[3]

வ எண் மாவட்டம் பரப்பளவு
(சதுர கி.மீ)
மக்கள் தலைநகரம் வரைபடக் குறியீடு
1 பிஷ்ணுபூர் மாவட்டம் 496 237,399 பிஷ்ணுபூர் BI
2 சுராசாந்துபூர் மாவட்டம் 4570 274,143 சுராசாந்துபூர் CC
3 சந்தேல் மாவட்டம் 3313 144,182 சந்தேல் CD
4 கிழக்கு இம்பால் மாவட்டம் 709 456,113 பொரோம்பாட் EI
5 மேற்கு இம்பால் மாவட்டம் 519 517,992 லம்பேல்பாட் WI
6 சேனாபதி மாவட்டம் 3271 193,744 சேனாபதி SE
7 தமெங்கலாங் மாவட்டம் 4391 140,651 தமெங்கலாங் TA
8 தவுபல் மாவட்டம் 514 422,168 தவுபல் TH
9 உக்ருல் மாவட்டம் 4544 183,998 உக்ருல் UK
10 ஜிரிபாம் மாவட்டம் 43,818 ஜிரிபாம்
11 காக்சிங் மாவட்டம் 1,35,481 காக்சிங் https://kakching.nic.in
12 காம்ஜோங் மாவட்டம் 45,616 காம்ஜோங்
13 காங்போக்பி மாவட்டம் காங்போக்பி
14 நோனி மாவட்டம் லாங்மாய்
15 தேங்க்னோவ்பல் மாவட்டம் தேங்க்னோவ்பல்
16 பெர்சவல் மாவட்டம் 2,285 47,250 பெர்சல் pherzawldistrict.com

கலை மற்றும் பண்பாடுதொகு

 
கிருஷ்ணரின் ராசலீலை காட்சிகளை விளக்கும் மணிப்புரி நடனமாடும் பெண்கள்
 
மணிப்பூரின் பண்டைய பெனா இசைக் கருவி

கிருஷ்ணன், ராதை மற்றும் கொபியர்களுடன் ஆடும் ராசலீலையை விளக்கும், மணிப்புரி நடனம் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த நடனக் கலையாகும். மணிப்புரி நடனத்தை பெண்களுடன் ஆண்களும் ஆடுகின்றனர்.

மக்கள் தொகையியல்தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,855,794 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.79% மக்களும், நகரப்புறங்களில் 29.21% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,438,586 ஆண்களும் மற்றும் 1,417,208 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். 22,327 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 128 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.94 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.58 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.26 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 375,357 ஆக உள்ளது. [4]

சமயம்தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,692 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,084 (0.25 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,527 (0.05 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 233,767 (8.19 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,969 (0.38 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்தொகு

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது.

பழங்குடிகள்தொகு

மீதெய் பழங்குடி மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மையின பழங்குடிகள் ஆவர். அதற்கு அடுத்து தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.[5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. New 7 Districts and talukas of Manipur State – Government Order
  4. Population Census data 2011
  5. S. R. Tohring (2010). Violence and identity in North-east India: Naga-Kuki conflict. Mittal Publications. பக். xv-xvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8324-344-5. https://books.google.com/books?id=zlaIRKRspYQC. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்பூர்&oldid=3223546" இருந்து மீள்விக்கப்பட்டது