இமாச்சலப் பிரதேசம்

இந்திய மாநிலம்

இமாசலப் பிரதேசம் (ஆங்கில மொழி: Himachal Pradesh) இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் ராம்போசி வசிக்கின்றனர்.

இமாச்சலப் பிரதேசம்
மேலிருந்து, இடமிருந்து வலமாக: கின்னர் கைலாஷ் மலைத்தொடரின் ஜோர்கண்டன் சிகரம், தோஷ் அருகே பார்வதி பள்ளத்தாக்கு; கஜ்ஜியார், ஸ்பிட்டியில் உள்ள முக்கிய மடாலயம்; தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் இருந்து பார்த்தது போல் தௌலாதர்கள்; சரஹானில் உள்ள பீமகாளி கோயில், கல்பா; இரவில் சிம்லா

சின்னம்
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
பகுதிவட இந்தியா
ஒன்றியப் பகுதி1 நவம்பர் 1956
மாநிலம்25 சனவரி 1971
தலைநகரம்சிம்லா (கோடைகாலம்) தரம்சாலா (குளிர்காலம்)
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்இமாச்சலப் பிரதேச அரசு
 • ஆளுநர்சிவ பிரதாப் சுக்லா
 • முதலமைச்சர்சுக்விந்தர் சிங் சுகு (காங்கிரஸ் கட்சி)
 • சட்டமன்றம்ஓரவை
இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் (68 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்55,673 km2 (21,495 sq mi)
 • பரப்பளவு தரவரிசை18வது
மக்கள்தொகை
 • மொத்தம்68,64,602
 • தரவரிசை21வது
 • அடர்த்தி120/km2 (320/sq mi)
மொழி
 • அலுவல்மொழிஇந்தி
 • கூடுதல் அலுவல்மொழிசமசுகிருதம்
 • பூர்வீகம்
  • மஹாசு பஹாரி
  • மண்டேலி
  • காங்கிரி
  • குல்லூயி
  • பிலாஸ்புரி
  • கின்னௌரி
  • லாஹுலி-ஸ்பிடி மொழிகள்
  • பட்டானி
  • சம்பேலி
  • மற்றும் பிற
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-HP
வாகனப் பதிவுHP
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2019)Increase0.725[2] (High) · 8வது
படிப்பறிவு86.06%
இணையதளம்himachal.nic.in
சின்னங்கள்
விலங்கு
பறவை
மீன்
கோல்டன் மஹ்சீர்[3]
மலர்
பிங்க் ரோடோடென்ட்ரான்
பழம்
மரம்
தியோடர் சிடார்
இது இமாச்சலப் பிரதேச மாநில சட்டம், 1970 மூலம் மாநில அந்தசதுக்கு உயர்த்தப்பட்டது

புவியியல்

தொகு

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55,658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்

தொகு
 
இமாச்சலப் பிரதேச மாவட்டங்கள்

இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்;

  1. உணா மாவட்டம்
  2. காங்ரா
  3. கினௌர்
  4. குல்லு
  5. சம்பா
  6. சிம்லா
  7. சிர்மௌர்
  8. சோலன்
  9. பிலாஸ்பூர்
  10. மண்டி
  11. லாஹௌஸ் & ஸ்பிதி
  12. ஹமீர்பூர்

முக்கிய நகரங்கள்

தொகு

நஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி, காங்கிரா மற்றும் தர்மசாலா ஆகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது.[4]

சமயம்

தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16%), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://himachal.nic.in/en-IN/at-a-glance.html
  2. "Sub-national HDI – Area Database". Global Data Lab. Institute for Management Research, Radboud University. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
  3. ICAR-National Bureau of Fish Genetic Resources (ICAR-NBFGR), State Fishes of India (PDF), Lucknow, Uttar Pradesh: Indian Council of Agricultural Research (ICAR)
  4. [1]

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேசம்&oldid=4169069" இலிருந்து மீள்விக்கப்பட்டது